கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 3,423 
 
 

(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடற் பறவைகள் தாழப்பறந்து மீன் வேட்டையாடின. 

பச்சை இரத்த வாடை வீச, புழுவுடன் தூண்டில் நீரிடையே துடித்தன. 

“வேண்டாம்….. வேண்டாம்….. எங்களை வாழவிடுங்கள்’ 

-மீன்கள் அலறின. 

“உங்களை வாழவிட்டால்….. எங்கள் வாழ்வு…?கடற் பறவைகள் எக்காளமிட்டுச் சிரித்தன. 

மீன்கள் ஒன்று திரண்டன. “இவர்களுக்கு இரையாகி அழிந்து போவதைவிட எதிர்த்து நின்று இவர்களில் சிலரையாவது கென்றழித்துவிட்டுச் சாவது மேல்….” புரட்சிக்குரல் எழுந்தது எப்படி….? நீரின் மேல் துள்ளி விழுந்த வெள்ளி மீனொன்று கடற்பறவைக்கு ஆசை காட்டியவாறு தூண்டிலை நெருங்கியது. “விர்” ரென்று கடற்பறவையும் நீரைக் கிழித்துக்கொண்டு நெருங்கியது. 

“கடக்” தூண்டில் சுண்டியிழுக்கப்பட்டது. 

தூண்டில் முள்ளில், மீனுடன் கடற்பறவையும் துடித்தது.

– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்

– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *