தந்திரம் – ஒரு பக்கக் கதை






நந்தினி எதற்கெடுத்தாலும் சிடுசிடு வென்றிருந்தாள்.
வெளியே அழைத்துச் சென்றாலும் அதே சிடுசிடு. படுக்கையிலும் அதே.
புரிந்தது. தனிக்குடித்தனத்திற்கு. …
“அம்மா நாங்க வேற வீடு பார்த்துக்கறம்’ என்றான் அம்மாவிடம்.
“ஒரு தந்திரம் பண்ணியிருக்கேம்மா. நான் வீடு பார்த்திருக்கற ஏரியாவில் எப்பவும் கொலை, கொள்ளை நடக்கற இடம், வீட்ல தனியா இருக்கற பொண்ணுங்களுக்கு ஆபத்தான இடம்’
“புரியலைபபா..’
சிரித்துக் கொண்டு வந்த நான்…
“புது ஏரியாவில் கொலை கொள்ளை பயத்தினால் தனியாக இருக்க பயந்துகொண்டு நம் அப்பா அம்மாவை அழைத்து வரச் சொல்லி விடுவாள்’ நினைத்த மாதிரியே ஆயிற்று.
“என்னங்க இங்க தனியே இருக்க என்னவோ மாதிரி இருக்குங்க… பெரியவங்க இல்லாத வீடு சுபிட்சமா இல்லாத மாதிரி இருக்கு. அதனால…’
“அதனால…’
“எங்க அப்பாம்மாவை வரச்சொல்லி இருக்கேங்க. இனிமே அவங்க நம்ம கூடவே இருக்கட்டும்’
– ஏப்ரல் 2014