சிற்றூரும் சிறுவர்களும்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் அறிஞர் ஒரு சிற்றூருக்குச் சென்றார். அவ் வூரிலே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளி யிலே இரண்டே சிறுவர்கள் கல்வி பயின்று கொண் டிருந்தார்கள். பள்ளிக்கூடத்தில் இருந்த இடமோ நூறுபிள்ளைகட்குமேல் அமர்ந்து கல்வி பயில்வதற்கு ஏற்றதாக இருந்தது. அறிஞர் கணக்காயரைப் பார்த்து, “இரண்டே சிறுவர்கட்காக ஒரு பள்ளிக்கூட மேன்?” என்று உசாவினார்.
கணக்காயர் அறிஞரைப் பார்த்து, “இவ்வூரிலே நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதில்லை. மாடு மேய்த்தல், விறகு பொறுக்குதல், வயலுக்குப் போதல் முதலிய வீட்டு வேலைக்குப் போய்விடுகிறார்கள். அச் சிறுவர்களுடைய பெற்றோர்களும் அவர் களை ஒழுங்காகப் பள்ளிக்கு அனுப்பிவைப்பதில்லை. அதனால் சிறுவர்கள் அறிவற்ற தடியர்களாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊரிலே பெரிய மனிதர்களே நன்கு படிக்கத் தெரியாதவர்கள். ஒரு சிலர் பல தவறுகளுடன் கையெழுத்துப் போடுவார் கள். மற்றவர்கள் அதுவுந் தெரியாமல் விரற்கோட்டு அடையாளம் வைத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் இவ்வாறிருப்பதனால் தான் பிள்ளைகளுக்கும் கல்வி கற்பிப்பதிலே முயற்சி அற்றவர்களாகித் தங்களைப் போல அறிவற்றவர்களாக ஆக்குகிறார்கள். ‘மகனறிவு தந்தையறிவு’ என்பது பெரியோர் வாக்கன்றோ?” என்று கூறினார்.
கணக்காயர் கழறியவைகளைக் கேட்ட அறிஞர் ஊராரின் அறிவற்ற போக்கைக் குறித்து மிகவும் வருந்தினார். அவர் ஊரார்களை யெல்லாம் ஒருங்கு கூட்டி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அச் சொற் பொழிவிலே, மக்களுக்கு அறிவுக்கண் இல்லாவிட் டால் அவர்களுடைய புறக்கண்ணாலே எத்தகைய பயனும் ஏற்படமாட்டாதென்றும்; கல்வி கற்காத கயவர்களுக்கும் விலங்கினங்கட்கும் எத்தகைய வேற் றுமையும் இராதென்றும்; கல்வி கற்றவர்கள் தாம் மனிதர்கள் என்றும் கல்வி கற்காதவர்கள் விலங்கு கள் என்றும்; கல்வியறிவற்ற கீழ்மக்கள் இவ் வுல கிலே இருப்பதைவிட இறந்துபடுதலே மேல் என்றும், மிகக் கடுமையாகப் பேசினார். அறிஞரின் சொற் பொழிவு கன்னத்தில் அறைவதைப் போன்றிருந்தது ஊரார்கட்கு. அவர்கள் அன்று முதல் தங்கள் சிறு வர்களை ஒழுங்காகப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பத்
தருமசாமியும் சிறுவர்களும் தொடங்கியதுடன் தாங்களும் கல்வி கற்று அறிவுடை யவர்களாகத் தொடங்கினார்கள்.
“பேதைமை அகற்று” (இ-ள்.) பேதைமை – அறிவின்மையை ; அகற்று – போக்கு.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955