சிற்றறிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2025
பார்வையிட்டோர்: 218 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு புத்ல, ஒரு பாம்பும் – ஒரு எறும்பும் வாந்து வந்திச்சசு. ரெண்டுமே நல்ல முறையில பழகி வந்துச்சுக. பாம்பக் காட்டிலும், எறும்புக் குறைவானது என்ற ஒரு காம்ளெக்ஸ் எறும்புக்கு இருந்திச்சு. 

ஒருநா, அந்த வழியா, செத்த பொணத்தத் தூக்கிட்டுப் போனாங்க. போறபோது, அவஞ் செத்த விதத்தப் பத்திப் பேசிக்கிட்டுப் போனாங்க. பாவம்! நல்லவ, பாம்பு கடிச்சு, செத்துப் போனாண்டு பேசிக்கிட்டு, கூட்டம் போகுது. 

எறும்பு, புத்து மேட்ல நிண்டு பாத்துக்கிட்டிருக்கு. பாம்பு கடிச்சுத் செத்து போனாங்கற பேச்சக் கேட்டதும், இந்த எறும்புக்கு, ஒரு பொறாமை குணம் மனசுல வந்திருச்சு. எப்டியாவது நம்மளும், பாம்பப் போல, பேரு வாங்கணும்ண்டு நெனச்சு, கடவுள நோக்கி தவம் பண்ணுச்சு. 

நீண்டநா, தவத்துக்குப் பெறகு, கடவுள் எறும்புக்கு முன்னாடி வந்து நிண்டு, எறும்பே! உனக்கு வேண்டும்ண்டு கேட்டாரு. 

எனக்கு வேறொன்றும் வேண்டியதில்லை. நா…ங்- கடுச்சாச் சாகணும், எனக்கு அந்த வரம் வேணும்ண்டு கேட்டுச்சு. 

கடவுளு என்ன செஞ்சாரு. எறும்பு தவறாக் கேக்குதுண்டு நெனச்சு, எறும்பே! நல்லா யோசன பண்ணிக்கேளுண்டு சொன்னாரு. கடவுளு சொன்னத, காதுல வாங்கிக்காத எறும்பு நாங்க, கடுச்சா சாகணும்ண்டு மறுபடியும் கேட்டுச்சு. 

எறும்போட சிற்றறிவை எண்ணி வி யந்தவராய், எறும்புக்கு அது கேட்ட வரத்த குடுத்திட்டாரு. எறும்புக்கு ஒரு ஆச. கடவுள் குடுத்த வரத்த, சோதிச்சுப் பாக்க நெனச்சது.

தூரத்ல ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்ககிட்ட எறும்பு போச்சு. போன சோர்ல, ஒருத்த தொடையில நறுக்கென்று கடுச்சது. வலி தாங்க மாட்டாம, அவ, ஓங்கி, கடுச்ச எடத்ல கைய வச்சு அடிச்சர். அடி, எறும்பு மேல விழுந்து, எறும்பு சுக்கு நூறா ஒடஞ்சு செத்துப் போச்சு. அண்ணக்கிருந்துதா எறும்பு கடிச்சா, செத்துப் போகும். கடிச்சா அடிச்சுப்பிடுறோம்ல்ல, தன்னோட பலம் அறிந்து யாரும், செயல்படணும். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *