சிறுவனின் பதில்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 3,157
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நம்மில் பலரிடமுள்ள பெரியகுறைபாடு யாதெ னில், ‘காத்திருந்து ஜெபிக்கப் பழகவில்லை’ என்பதாகும். நம் வீட்டுக் கடிகாரம் நாம் எவ்வளவு நேரம் காத்திருந்து வேண்டுதல் செய்கிறோம் என்று சாட்சி சொல்லும்.
மௌன ஜெபத்தில் சிந்தனை சிதறுமாகையால் மெதுவாக வார்த்தைகளைச் சொல்லி ஜெபிப்பதே நலம் என்பர். ஆயினும் அமைதியாக அமர்ந்திருந்து வேண்டுவதே மேலானதாகும்.
சிறுவன் ஒருவன் படுக்கைக்குப் போகுமுன் தனி ஜெபம் செய்கிறான். தாய் அடுத்த அறையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். ‘மகனே நீ ஜெபிக்கிற சத்தம் எனக்கு கேட்கவில்லையே?’ எனக் கேட்கிறாள் தாய்.
“ஏம்மா, நான் உன்கிட்டவா பேசுறேன்? பரலோகத்திலிருக்கிற பிதாவிடமல்லவா பேசுறேன்,” எனப் பட்டென்று சொன்னான்.
‘கடவுள் எங்குமிருக்கிறாரே, பரலோகத்திலிருக்கிற பிதாவே, என்று எப்படிச் சொல்லலாம்?’ பையனின் புத்தியைச் சோதிக்க தாய் இப்படிக் கேட்டாள்.
சிறுவன் சட்டென்று பதில் சொன்னான். பரலோகம் பரமபிதாவின் தலைமை அலுவலகம். தாயின் வாய் அடைத்துப் போயிற்று.
“என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபம் பண்ணினார்கள்”.. [11 நாளா 7:14]
“நீ கடவுளிடம் வேண்டுதல் செய்யும்போது உன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு, கண்ணுக்கு மறைவா யுள்ள உன் தந்தையாரை நோக்கி வேண்டுதல் செய்”. (மத்தேயு 6:6)
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
