(1993ல் வெளியான பதிவு, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மோகவாசல் – ரஞ்சகுமார் – பின்னுரை
…தமிழில் சிறுகதை பெறும் மேலுமொரு பரிமாணம் (வளர்ச்சி) பற்றி, ரஞ்சகுமாரின் மோகவாசல் தொகுதி வழியாக எழும் சிந்தனைகள் சிலவற்றின் பிராரம்பப் பதிவு.
இந்தக் குறிப்பு 1989இல் எழுதப்பட்டிருக்க வேண்டியது. பதினாறு மைல் தூரம் கடந்து வெளியீட்டு விழாவுக்கு செல்ல முடியாத ஒரு ஒரு படைக் கெடுபிடி நிகழ்ச்சி காரணமாக அன்று நிறைவேற்றப்படாத ‘கடன்’ இன்று கொழும்பில் இயைபுடை இல்லாமை, விளக்க வாசிப்புக்கான பின்புல மூலங்கள் நூல்கள் இல்லாமை, ஆகிய தடங்கல்களுக்கு இடையே நிறைவேறுகின்றது. விவரண விளக்கங்களற்ற சிந்தனையோட்ட மாகவே இந்தக் குறிப்பு மன்னிப்பைக் கோர வேண்டியுள்ளது. அமைகின்றமைக்கான (தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் – 1966) எனது நூலின் கால எல்லைக்கு அப்பால் ஏற்பட்ட தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக் கட்டங்களுள் (ஜெயகாந்தனுக்குப் பின் வந்த வளர்ச்சிகளுள் (Post – Jayakantan period) ஒன்று பற்றிய சில அவதானிப்புகளாகவும் இந்தக் குறிப்பு அமையும்.
‘இலக்கிய வரலாறுகள்,’ இலக்கியங்களின் ‘பின்னரே’ எழமுடியுமாதலால், இந்தக் குறிப்பையும் தொகுதியின் பிற்சேர்க்கையாக இணைக்கும்படி கூறியுள்ளேன். ரஞ்சகுமாரிடம்
விமர்சனங்கள், சிலர் நினைப்பதும் பயப்படுவதும் போன்று நியம விதிப்புக்கள் (Prescriptions) அன்று; அவை ஆய்வுவழி அறிக்கைகளே (Diagnosis)
I
தமிழ்ச் சிறுகதை இன்று பெருமாற்றமடைந்துள்ள ஒரு இலக்கிய வடிவமாகும்.உலகச் சிறுகதைகளில் 1950-60கள் முதல் ஏற்பட்டு வந்தமாற்றம் இப்பொழுது தமிழ்ச் சிறுகதைக்கும் வந்துவிட்டது.
இந்த மாற்றத்தின் மாற்றத்தின் பிரதான அம்சம் கதை ‘சொல்லப்படும்’ முறையில் (Narrative; Narrativial forms) ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான். ‘தொடக்கம்’, ‘உச்சம்’. ‘முடிவு’ என்ற அரிஸ்ரோட்டிலீய நியம விதிப்பு நடைமுறை உத்தியுடன் சிதையத் புனைகதையில் தொடங்கியது. இப்பொழுது முற்றிலும் தகர்ந்துள்ளது நாடகத்திலேயே இன்று அரிஸ்ரோற்றலீய எதிர்ப்புவாதம் (anti-aristotelianism) வந்துவிட்டது.”நன்கமைக்கப் பட்ட கதை” என ஒன்று இருக்க முடியாதென்பது, உளவியல், மெய்யியற் சிந்தனை வளர்ச்சிகளினால் வற்புறுத்தப்படும் ஓர் உண்மையாகும். இந்த மாற்றங்கள், எழுத்தாளர்களின் கதைகள் மனப்பதிவு செய்துகொள்ளப்படும் முறையிலும் (in the manner percieved) முறையிலும் அறிந்துகொள்ளப்படும் (Cognition) BULL மாற்றங்களாகும். அமைப்பியல் வாதத்தையே (Structuiralism) இன்னும் சரியாக உள்வாங்கிக் கொள்ளாத ஓர் எழுத்துப் பண்பாட்டினுள், அமைப்பியல் வாதத்துக்குப் பிந்திய (Post-Structuralist) சிந்தனைகளின் முக்கியத்துவத்தை, அறிவதும், அவை கூறும் பொருள்களைத் தமிழில் இனங்கண்டறிவதும் சிரமம் தான்.
இந்தக் ‘கதை கூறு முறைமை’ (narrative) மாற்றம் என்பது மூன்று மாற்றங்களை உள்ளடக்கியது.
(1) கதைகளில் ஏற்பட்ட மாற்றம். அதாவது எவையெவை கதையாகும், எப்பொழுது கதை யாகும் என்பனவற்றில் ஏற்பட்ட மாற்றம்; இது சமூக நிலைப்பட்டது.
(2) “கதைகளை” உணர்ந்து கொள்வதில் ஏற்பட் டுள்ள மாற்றம். அதாவது இது உணர்திறன் முறைமையில் (Sensibility) ஏற்பட்ட மாற்ற மாகும். இது முக்கியமானது. இதனாலேயே முதலாவது மாற்றமும் ஏற்படுகின்றது. சமூகத்தின் உணர்திறன்கள் மாறும் பொழுது கலை, இலக்கிய வடிவங்களில் முக்கிய மாற்றங்கள் நிச்சயமாகப் ‘பாணி’ (Style) மாற் றங்கள் ஏற்படும்.
(III) எடுத்துக் கூறப்படும் “மொழி”யில் ஏற்படும் மாற்றம். இது இரண்டாவது மாற்றத்தின் தவிர்க்க முடியாத பலன்; அத்துடன் இந்த மாற்றங்களின் “வெளிப்பாட்டு” வாயிலும் இதுதான்.
ஆசிரியர் / எழுத்தாளர் நிலைப்பட்ட இவை காரணமாகப் புனைகதையின் (அதாவது சிறுகதை, நாவல் இரண்டினதும்) ‘பாடம்” (Text) மாறியுள்ளது.
ஆனால் இந்த மாற்றம் வெறுமனே ஆசிரியர் மட்டத்தில் மாத்திரம் ஏற்பட்டுள்ள ஒன்றன்று. வாசகர் மட்டத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். மாற்றங்கள், அறிகை முறை மாற்றங்கள் (Changes in அனுபவ experience and cognition) மிக முக்கியமானவை.
வாசக மாற்றங்கள் ஏற்பட்டதனாலே தான் தொடர்பு (Communication) வலுவும் சுவாரசிய முடைய தாகின்றது.
இந்த மாற்றங்களை ஒட்டுமொத்தமாக சூழ்வு சந்தர்ப்பங்களிலும் (Context) ‘பாடத்திலும்’ (text). ஏற்பட்ட, காரண-காரியத் தொடர்புடைய மாற்ற மெனலாம்.
இந்த மாற்றங்கள் தமிழின் புனைகதை புதிய எல்லைகளைத் தொட உதவியுள்ளது. தமிழ்ப் புனை கதை வரலாற்றின் நிலை நின்று கூறினால், ராஜநாரா யணனின் கதைகள் கோலமானது, புதுமைப்பித்தன், கு. ப. ரா, ஆகியோரின் கதைகள் மரபுகளுடன் இணைந்த பொழுது, தமிழுக்கு புதிய “கதை நூல் முறைமை”கள் மேற்கிளம்பின எனலாம்.
இந்த மாற்றத்தின் எடுத்துக்காட்டாகவும். சமிக்ஞை களாகவும், அமைந்துள்ள புனைகதை எழுத்தாளர்களாக கோணங்கி, ஜெயமோகன், தோப்பில் முகம்மது மீரான் முதலியோர் எடுத்துப் பேசப்படுகின்றனர்.
இந்த மாற்றம் முற்றிலும் தமிழ்நாடு நிலைப்பட்டது அல்ல. அது இலங்கையிலும் காணப்படுகிறது என்ப தைக் காட்டி நிற்பவர் எண்பதுகளில் தமிழிலக்கியத்துக்கு அறிமுகமான இருவர். ஒருவர் உ.மா. வரதராஜன், மற்றவர் இந்தச் சிறுகதைத் தொகுதியின் ஆசிரியரான ரஞ்சகுமார்.
இந்தக் குறிப்பு. ரஞ்சகுமார் உதாரணப்படுத்தி நிற்கும் இலங்கை நிலை மாற்றங்கள் யாவை. அந்த மாற்றங்கள் சற்று முன்னர் எடுத்துப் பேசப்பட்ட கதை சொல் முறைமை, இலக்கிய உணர்திறன் ஆகிய விடயங் களுடன் எவ்வாறு தொடர்பு பட்டு நிற்கின்றது என்பது பற்றி பேசுதல் வேண்டும்,
II
ரஞ்சகுமார் வழியாகத் தெரியும் இலக்கிய உணர் முறைமை மாற்றத்தைப் பற்றிப் பேசத் தொடங்குமுன், இலக்கிய வரலாற்று புராணத்துவத்துக்காக ஒரு விடயம் பற்றி குறிப்பிடல் அவசியமாகின்றது.
1980களில் ஏற்பட்ட புதிய உணர்வு முறைமை, புதிய சிந்தனைக் கூட்டு (problematic) எழுச்சி ஆகியவற் றினூடாக வரும். படைப்பாளியாக ரஞ்சகுமாரை கொள்ளும் அதே 70களிலிருந்தே வேளையில் 1960, எழுதிக்கொண்டு வருபவர்கள் 80களின் பிற்பகுதியிலும் 90களிலும் எவ்வாறு பரிணமித்துள்ளனர் என்பது சுவையான ஒரு நிலையாகும்.
இந்த அறுவடைத் தொடர்ச்சி மிக முக்கியமானதாகும்.
கவிதைத் துறையில் சேரன், புதிய முறையின் எடுத்துக்காட்டு என்றால், முந்தி வந்தவர்கள் இந்தப் புதிய நிலையை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்ப தற்கு முருகையன், வ.ஐ.ச.ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை ஆகியோர் முக்கியமானவர்களாகின்றனர். அவர்களின் தொடர்ச்சியில், அந்தத் தொடர்ச்சியினூடே பளிச்சிடும் மாற்றங்களில் அவர்களின் திறமையும், பிரச்னைகளின் உக்கிரத் தன்மையும் குத்திட்டு நிற்கின்றன.
சிறுகதைத் துறையில் இவ்வகையில் முக்கியமானவர்கள் சட்டநாதன், தெணியான், சாந்தன் முதலியோராவார். சிறுகதைத் துறையில் இன்னொருவரையும் மிக முக்கியமாக எடுத்துக் கூறல் வேண்டும். 1970களிலே எழுதத்தொடங்கி இலைமறைகாயாக இருந்துவிட்டு இப்பொழுது 90களில் “மக்கத்து சால்வை” என்னும் சிறு கதை தொகுதியுடன் இலக்கிய கவனத்தை ஈர்த்துள்ள எஸ்.எல்.எம்.ஹனிபாவின் ஆழமான மனிதாயதம் அவரது சிறுகதைகளில் நன்கு தெரிகின்றது.
இங்கு, இந்தக் குறிப்பில், அதிகாரப்பட்டு நிற்பது மாற்றங்களும், 1980களில் ஏற்படும் உணர்முறைமை அவற்றை ரஞ்சகுமார் சித்தரிக்கும் முறைமையுமாகும்.
III
சரித்திரம் என்பது சாகாத் தொடர்கதை. கால கட்டங்கள் என்பவை வகுத்தற் சுகத்துக்காக செய்யப்படுபவையே. அவற்றுக்கான வருட நிர்ணயம் என்பது ஒரு சைகையே. இலங்கையின் வரலாற்றின் அத்தகைய ஒரு சைகை (sign) யாகவிருப்பது 1983 (1970 களில்லாமல் 80கள் வலுத்துவிடவில்லை. அது 60களுடன் நின்று விடவு மில்லை) இந்த 1983 பலவகைகளில் இலங்கையின் வர லாற்றில் ஒரு முக்கிய கோடு ஆகும். அதற்கு முன் பின் என்று பிரிக்கலாம்.
இலங்கையில் விடயங்கள் நோக்கப்படும் முறையிலும் உணரப்படும் முறையிலும் 1983 ஒரு பிரிகோடுதான்.ஒரு காலக்கோட்டுக்குப் பின் வருகின்ற புதிய உணர்திறன் முறைமையை எழுத்தில் வடித்தல் என்பது மிகச்சிக்கலான ஒரு விடயமாகும். அந்தக் காலக் கோட்டுக்கு முந்திய வர்கள், பிந்தியதைப் பார்ப்பதிலுள்ள முறைமைக்கும், அந்தக் காலக் கோட்டுக்குப் பின் ‘சமூக பிரக்ஞை’ நிலைக்கு வந்தவர்கள் அதனைப் பார்ப்பதற்கும் வேறு பாடு உண்டு. தொடர்ச்சிகள் பற்றிப் பேசிவிட்டோம்.
புதிய தலைமுறையின் உணர்திறன் வெளிப்பாடு கவிதையில், மற்றைய இலக்கிய வடிவங்களிலே தெரியப் படுவதற்கு முன்னர் தெரியவருவது இயல்பே. அது கவிதையின் அடிப்படையான பண்பு; உணர்ச்சிகள் தம்மை இனங்காட்டிக் கொள்வதில் பெரிதும் பின்தங்கு வது இல்லை.
ஈழத்துத் தமிழிலக்கியத்தில் கவிதைத்துறையில் புதிய தலைமுறையினரின் உணர்திறன் முறைமை புதுமையைச் சேரனின் கவிதைகள் எடுத்துக் காட்டின. அதற்குப்பின் வந்த புலம்பெயர் இலக்கியங்களும் (கவிதைகளும்) போராளிகளின் கவிதைகளும் (குறிப்பாக போராளிப் பெண்களின் உணர்முறைமை வெளிப்பாடுகளும்) இந்தப் புதிய உணர்திறனை ஆழப்படுத்தின.
புனைகதை வித்தியாசமான ஒரு கலை வடிவம், எவ்வளவுதான் அது மனித உணர்ச்சிகளை எடுத்துக் கூறுவதென்றாலும், தளத்தில் அது ஒரு பகுப்பாய்வு வடிவம் (analytical form). மனித உறவுகள் அவற்றின் மாறுதல்கள், வெளிப்பாடுகள் ஆகியவற்றினை நுணுக்க மாக சித்தரிப்பது. கதைக்குள் ஒரு நோக்கு இருக்கும். அந்த நோக்கு என்பது அந்த விடயத்தினாலும், அதனைப் பார்ப்பவனாலும் தீர்மானிக்கப்படுவது. ‘உலக வழக்கி” லுள்ள ஒரு நிகழ்ச்சியை அல்லது நிகழ்ச்சிகளை “புனை கதை இலக்கிய வழக்குப் படுத்தும்பொழுது ஒரு கட்ட மைப்பு அல்லது சட்டகம் தேவைப்படுகின்றது. அந்த ஒழுங்கமைப்புத்தான் (organization of the material in fiction) புனை கதையினை முக்கியத்துவப்படுத்துவது.
புனைகதையுள்ளும் தருக்கப்படி இந்தப்புதிய உணர் முறைமை நாவலிலும் பார்க்க சிறுகதையிலேயே தெரிய வரும்.
இந்த வருகையின் தன்மைகள் பற்றியும், பற்றியும், இதன் வழியாக வந்த ஆரம்ப அறுவடைகள் சிலவற்றின் இலக்கியத் தரம் பற்றியும் நான் ஏற்கெனவே “உயிர்ப்பு” (1987) எனும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய “பின்னுரை”யிற் கூறியுள்ளேன்.
சிறுகதைத் துறையில் 1983இல் ஏற்பட்ட புதிய உணர்முறையைச் சித்தரித்த புதிய தலைமுறையினருள் ரஞ்சகுமாருக்கு ஒரு முக்கிய இடமுண்டு.
ஈழத்து தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் ரஞ்சகுமார் பெறும் முக்கியத்துவத்துக்கான காரணம், அவர் இலங்கையில் 1983 உடனும் அதன் பின்னும் வரும் அனுபவங்களுக்கு வழக்கில் உள்ள இலக்கிய அமைவு ஆகும். இந்த இலக்கிய அமைவினுள் ஒரு புதிய தலைமுறையின் உணர்முறைமை, நோக்கு முறைமை ஆகியன பளிச்சிட்டு நிற்கின்றன.
பலர் எழுதத் தொடங்குவதும், சிலர் பிரச்சார வாடைப்பட எழுதுவதுமான இளைஞர். தீவிரவாத எழுச்சியை ரஞ்சகுமார் இலக்கியமாக்கியுள்ள முறைமை அற்புதமானது. இங்கு “ஆக்கியுள்ள முறைமை நன்கு” என்று கூறுவதே பொருத்தமற்ற சொற்றேர்வு ஆகும். உண்மையில் அது “இளைஞர் தீவிரவாதம் ரஞ்சகுமார் என்ற இளம் எழுத்தாளனின் புலப்பதிவுகள் வழியாக வெளிப்படும் முறைமை” என்றே எழுதப்படல் வேண்டும்.
‘காலம் உனக்கொரு பாட்டெழுதும்’, ‘கோசலை” ‘கோளறு பதிகம்” என்பன இளைஞர் தீவிரவாதம். யாழ்ப்பாண மண்ணில் வேரூன்றியுள்ள முறைமையினை யும் அதன் வழியாகத் தோன்றியுள்ள சாதக, பாதக அமிசங்களையும் அமரத்துவமுடைய இலக்கியப் பொருளாக்கியுள்ளன
இவற்றுள் ‘கோசலை” மிகச்சிறந்த காலப்பதிவான படைப்பு ஆகும்.
யாழ்ப்பாணத்தின் மிகமிகச் சாதாரணமான, ஒரு குடும்பத்தின் நிகழ்ச்சிகளினூடே, அந்தச் சமூகத்தில் மேற்கிளம்பிக் கொண்டிருக்கும் ஒரு புதிய சமூக இயக்கத். தின் முழுப்பரிமாணத்தையும் இந்தக் கதையிற் காண லாம். யார் யாரெல்லாம் இயச்கங்களிற் சேருகிறார் கள், ஏன் சேருகிறார்கள், அவ்வாறு சேர்வது குடும்ப அலகை எவ்வாறு பாதிக்கின்றது, இவற்றுக்கிடையே காணப்படும் மனித அவலம் ஆகியன எல்லாம் மனதை விட்டகலாத முறையிலே எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
1983ஐத் தொடர்ந்து ஏற்பட்ட இந்தச் சமூக அசைவி யக்கத்தை ரஞ்சகுமார் எவ்வாறு நோக்கின்றார் என்பது தான் முக்கியம்.
அடுத்த நேரச் சாப்பாட்டுக்கு வழியில்லாத விதவைத் தாய் இங்கு ‘கோசலை’ ஆகிறான். அவளின் சொந்தப் பெயரே கதையில் வரவில்லை. ராமனின் தாய் பெயர் அவள் பெயராகிறது.
ராமனையும், சீலனையும் ஒப்பிடும் இடம் (கதையின் இறுதிப்பகுதி) இளைஞர் தீவிரவாதத்தின் சமூக முக்கியத்துவத்தை வற்புறுத்துகின்றது. போராளிப்பையன் ராமன் ஆனால் தான் அவனது தாய் கோசலை ஆக முடியும். ரஞ்சகுமார் அந்தத் தாயை கோசலையாகவே காணுகிறான்.
இது அந்தக் கதையின் ஒரு பரிமாணமே. இன்னும் பல பரிமாணங்கள் இந்தக் கதைக்கு உள்ளன. இளைஞர் தீவிரவாதம் ஆரம்பத்தில் வளர்ந்த முறைமை, இந்த இளைஞர் தீவிரவாதத்தினுட் சிறுவர் என்ற முறைமை, அக்காலத்தில் நிலவிய பயம், திகில் ஆகியனவும், அதே வேளையில் ஒரு கிராமத்தின் ஏழைக்குடும்பம் வாழ்ந்த தன்னிறைவான வறுமையிற் செம்மையான வாழ்க்கை, அத்தகைய குடும்பங்களிலே நிலவிய மனதைக் கவ்வும் அந்நியோந்நியமான அன்புப் பிணைப்புக்கள் ஆகியன சிலிர்க்க வைக்கின்றன.
”கோசலை” என்னும் நாணயத்தின் மறுபுறமாக அமைகின்றது, “கோளறு பதிகம்” இயக்கங்களினூடே காணப்படும் ஒற்றுமையின்மைகள், அவை காரணமாக ஏற்படுத்தும் ஆபத்துக்கள் ஆகியன கோளறு பதிகத்தி னூடே ஒருவிதத் திகிலுணர்வுடன் வெளிவருகின்றன.
இந்த இளைஞர்களின் தியாகம் “காலம் உனக்கொரு பாட்டெழுதும் வழியாக நமது மூச்சைத் திணற வைக்கின்றது.
ரஞ்சகுமாரின் சாதனைகள் இரண்டு என்று கருது கின்றேன் – ஒன்று இளைஞர் இயக்கங்களின் எழுச்சியை, ஆரம்ப காலச் செயற்பாடுகளை சமூக உறவுகளின் உணர்ச்சிப் பின்புலத்தில் தருவது; மற்றது இவ்வாறு சமூக உறவுகளை உணர்ச்சிப் பின்புலத்திலே ‘தரும்’ பொழுது, அவற்றை நம் பண்பாட்டுக் குறியீடுகள் மூலம், அந்தக் குறியீடுகளினூடாக தெரிய வைப்பது. திறமை யுள்ள எழுத்தாளன் முதலாவதைச் செய்வது சுலபம். ஆனால் இரண்டாவதைச் சாதிப்பதற்கு அசாதாரண திறமை வேண்டும். அந்தப் பண்பாட்டினுள்ளே நின்று அதனைச் சித்தரித்தல் வேண்டும். இதற்கு அகப் புறப் பார்வைச் செம்மை வேண்டும்.
ரஞ்சகுமாரின் திறன் இந்தச்சித்தரிப்பு ஆற்றலுக்குள்ளே தங்கி நிற்கின்றது.
யாழ்ப்பாணத்தின் தோற்றத்தையே மாற்றிவிட்ட தமிழ் இளைஞர் இயக்கத்தை மாத்திரமல்லாது, இலங்கையின் சிங்களப் பிரதேசங்களின் சமூக வாழ்க்கைமுறை யையே மாற்றி அமைத்து விட்ட ஜே.வி.பி. இயக்கத்தின ரின் (ஜனதா விமுக்திப் பெரமுன – மக்கள் விமோசன முன்னணி) செயற்பாடுகளை ரஞ்சகுமார் தந்துள்ள முறைமை, பண்பாட்டுக் குறியீடுகளை அவர் பயன்படுத்தும் ஆற்றலைக் காட்டுகின்றது. “கபற் கொயா” எனும் ஊர்வன வகையைச் சேர்ந்த ஜந்து ஏற்படுத்தும் பயம், அருவருப்பு, திகில் என்பன அந்தப் பண்பாட்டை அறிந்தவர்களுக்குத்தான் புரியும். ஜே.வி.பி. இயக்கத்தின் தோற்றம், செயற்பாட்டைக் குறிக்கும் தொடர்பு வன்மை யுடைய இந்தச் சிறுகதையைப் போல, சிங்களத்திற்கூட எத்தனை சிறுகதைகள் இருக்க முடியும். நிச்சயமாக அதிகம் இருக்க முடியாது.
ரஞ்சகுமாரின் உணர்முறைமையை அவரது உரை நடை மிகத்துல்லியமாகக் காட்டுகின்றது. பொருட்களை. இடங்களை, மனிதர்களை. விடயங்களை விவரிக்கும் முறைமையிலும், குறிப்பாக ஒவ்வொரு சிறுகதையையும் முடிக்கும் முறையிலும் ரஞ்சகுமாரின் மொழி ஆற்றல் தெரிகின்றது. (கோசலை, கோளறு பதிகம்).
உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தன்வயமாக்கி கொண்ட ஒருவர், தனது புலப்பதிவு நிலையில் எவ்வாறு மற்றயவற்றைப் பார்க்கின்றார். அவற்றையெல்லாம் தானே எவ்வாறு உணர்ந்து கொள்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதாக அவரது உரைநடை அமைந் துள்ளது. “கோசலை” சிறுகதையின் முடிவும் கோளறு பதிகத்தின் முடிவும் இதனை நன்கு காட்டுகின்றன.
இந்த இடத்திலேயே ரஞ்சகுமார் தமிழகத்தின் இன்றைய முக்கிய சிறுகதை எழுத்தாளர்களான கோணங்கி. பிரபஞ்சன், ஜெயமோகன் ஆகியோருடன் ஒப்பிட வேண்டியவராகின்றார்.
இவர்கள் யாவருமே தமது மொழி நடையால், தமிழ் சிறுகதையின் உணர்ச்சிச் சித்தரிப்பு பாங்கினை மாற்றிய வர்கள். இவர்களது மொழிநடை, இவர்களது ஆளுமை அவ்வவ் ஊறிப்போய் களுக்குள் ஆளுமைகளின்தும் உணர்வு ஆழத்தினதும் பிரத்தியேகமான அதே வேளை பண்பாட்டுச் சுகந்தம் மாறாத மொழிநடையாகும்.
இது உண்மையில் வெறுமனே மொழிநடை பற்றிய ஒரு விடயமல்ல. அது பார்வை முறைமை பற்றியது, ‘புலப்பதிவு” (Perception) பற்றியது. ஆழமாகப் பார்த்தால் கருத்து நிலைகளின் ஆழமான மனப்பதிவுகள் பற்றியது.
இந்த நடை, பேச்சு வழக்கையும், செந்தமிழ் வீச்சையும் பிரித்துப்பார்க்க முடியாதபடி இணைப்பது. இந்த நடையில் செந்நெறி விடயங்களும் எழுதப் படலாம், கிராமியக் எழுதப்படலாம். கதைகளும் ஜெயமோகன் போன்றோர் அதைச் சாதித்துள்ளனர். (2-ம் திசைகளின் நடுவே) ‘மோகவாசல்” சிறுகதையில்: ரஞ்சகுமாரும் இதனையே எத்தனித்துள்ளார்.
தமிழ்ச் சிறுகதையின் சமகால வளர்ச்சியில் நேற்றைய இந்தத் துளிர்கள் இன்று கிளைகளாகப் பிரிகின்றன.
தமிழ் புனைகதை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படத் தொடங்கியுள்ளது.
திறந்த பொருளாதாரத்தின் சர்வதேசியச் சந்தைமயப்பாட்டுக்குக்கூடவே இந்தச் செல்நெறி ஒரு முக்கியமான வளர்ச்சிப் போக்கினைக் காட்டுகின்றது.
தமிழின் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு. எமது நன்றிகள்.
கொழும்பு
27-8-1993
கார்த்திகேசு சிவத்தம்பி
– மோகவாசல், முதற் பதிப்பு: ஏப்ரல் 1995, தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.