சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 6,391 
 
 

அன்று தனக்கான பிறந்த நாளைத் தன் பேத்தி சென்னையில் கொண்டாடுவதை செல்லில் கண்டு சிலாகித்துக் கொண்டிருந்தாள் பாட்டி சினேகா. சினேகா என்றாலே சின்ன வயசுதானா? சினேகா பாட்டியாகக் கூடாது என்று சட்டமா என்ன?

அந்தக் குழந்தை கேக்கை வெட்டியது…! பாட்டிக்கு பர்த் டே வாழ்த்துப் பாட்டுப் பாடு!’ என்று சுற்றியிருந்தவர்கள் சொல்ல, அது பாடியது. வாய் பாடியது., கையும் மனசும் அதற்குக் கேக் வெட்டுவதிலேயே இருந்தன.

ஆச்சு! வெட்டின துண்டை எங்கோ இருக்கும் பாட்டிக்கு ஊட்டவா முடியும்?!

பாட்டி சார்பாக தானே வெட்டித் தானே தன் வாயில் இட்டுக் கொள்ள இந்தப் பக்கம் செல்லில் பார்த்துக் கொண்டிருந்த பாட்டியின் விழிகளில் வடிந்தன ஆனந்தக் கண்ணீர்!

தரை தொட்ட கண்ணீர் அனைவருக்கும் ஒரு தத்துவத்தைச் சொன்னது.

கேக்கை பாட்டி தான் வெட்ட வில்லை! தான் உண்ணவில்லை! ஆனால், சுவையில் ஆனந்தக் கண்ணீர் வடிகிறதே எப்படி?! அது எதைச் சொல்கிறது?!

‘மகிழ்ச்சி’ மற்றவர்கள் ஊட்டுவதால் வருவதல்ல..! உணர்வதால் வருவது! நம் மகிழ்ச்சிக்கு நாம்தான் காரணம்!

‘கிச்சுகிச்சு’ மூட்டிச் சிரிக்க வைப்பது…காலாவதியான கவர்ச்சி போல..!

அதால் யாருக்கென்ன லாபம்?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *