சாரதாளின் காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 24, 2025
பார்வையிட்டோர்: 1,540 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காதலுக்கு ஜாதியென்றும், உயர்வு தாழ்வென்றும் உண்டா? இல் லவே இல்லை. நீங்கள் என்னைப் பார்த்தீர்கள். நான் உங்களைப் பார்த் தேன். காதல் கொண்டோம். அங்கு ஜாதி எங்கு வந்தது. 

“சாரதா, கலியாணமான பிறகாவது இதைச் சொல்லியிருக்கக்கூடாதா? அப்பொழுது எப்படியாவது சரி சரி யென்றிருந்திருப்பேனே. கிருஸ்துவ மதத்தில் சேர்ந்துகொண்டாயென்று தெரிந்த பின்பு நான் எப்படி மனமிசைந்து உன்னைக் கலியாணம் செய்து கொள்வது?” எனப் பலவாறு அருணாசலம் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் உட்கார்ந்திருக்கும் அறையில் ஒரே நிசப்தம். தை மாதத்து மூடுபனியைத் துரத்திவிட்டு சூரிய கிர கணங்கள் ஜன்னலின் வழியாக அறைக்குள் அரவ மில்லாமல்ப் புகுந்து நிலத்தில் ஒரு ஒளிப் பட லத்தை உண்டுபண்ணின. அருணாசலத்தின் எதிரில் அவன் தந்தை ராமசாமிப்பிள்ளை படுத்த படுக்கையாக கிடக்கிறார். பல வருஷங்களாக அவரை வாட்டிவந்த ஒருவித நோயால் இப்பொழுது அவர் மிகவும் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தார். இனிமேல் வெகுநாட்களுக்குப் பிழைத்திருக்கமுடியாது என்று வைத்தியர்கள் கூறிவிட்டபடியால், அவருடைய விருப்பத்தின்படி அருணாசலம் கல்லூரியிலிருந்து ஒரு வாரத்திற்கு ரஜா வாங்கிக்கொண்டு அங்கு வந்திருக்கிறான். 

புதுப்பாளையத்திற்கு வந்ததுமுதல் அருணாச லம் தன் தகப்பனுக்கு வைத்தியர் குறிப்பிட்டவேளை களில் மருந்து கொடுப்பது, ஆகாரம் கொடுப்பது முதலிய பணிவிடைகளைச் சிரத்தையோடு செய்து வந்தான். சதா அவர் படுக்கைக்குப் பக்கத் திலேயே இருப்பான். வைத்தியர் அவரைப் பேசா மலிருக்கும்படி கூறியிருந்த படியால் அவர் பேச வாயெடுத்தாலும் அருணா ணாசலம் பேசவேண்டா மென்று கேட்டுக்கொள்வான். “அப்பா, சௌக்கிய மான பிறகு அதெல்லாம் பேசிக்கொள்ளலாம், இப் பொழுது பேச வேண்டாம்” என்று வாஞ்சையுடன் வற்புறுத்துவான். தனது அருமைத் தந்தை எப்படி யாவது சுகப்படவேண்டுமென்று கடவுளைத் தியானிப் பான். அவனுக்குத் தன் தகப்பனைத்தவிர வேறு உறவினர்கள் அந்த ஊரிற் கிடையாது; வேறு இடங் களில் இருப்பார்களோ என்னவோ, பலர் ராமசாமிப் பிள்ளையுடன் நேசம் பாராட்டி வருவதுண்டு, ஆனால் சொந்தக்காரரென்று யாரும் வந்ததில்லை. 

ராமசாமி பிள்ளையின் நிலைமை நம்பிக்கைக்கிட மில்லாமல் இருந்ததோடு அவரும் குணப்பட்டு எழுந் திருக்க ஆவலுள்ளவராகக் காணப்படவில்லை. அதற்கு மாறாக அவர் யமனைச் சீக்கிரம் வரும்படி அழைப்ப வர்போல் தோன்றினார். சாகக்கிடக்கும் தந்தை யின் அருகில் தன்னந்தனியாகவிருக்கும் அருணாச லத்தின் மனதில் பல எண்ணங்கள் மறைந்கொண்டேயிருந்தன. ஐந்து மாதங்களுக்கு முன்பு சென்னை சென்று மாகாணக கல்லூரியில் எப்.ஏ. முதல் வருப்பில் சேர்ந்ததும், ஒரு நாள் அகஸ்மாத்தாக ராணி மேரி கல்லூரியிற் பயிலும் சாரதாளைச் சந்தித்ததும், அவள் புதுப்பாளையத்தில் முன்பு வாசித்து வந்த குமாரசாமிப் பிள்ளையின் மகள் என்பதை அறிந்ததும், பின்பு இருவரும் ஒருவரை யொருவர் காதலித்ததும், இப்படிச் சென்னையில் நிகழ்ந்த பல சம்பவங்களும் ஒவ்வொன்றாய்த் தெளி வாக அவன் மனக் கண்ணுக்குப் புலப்பட்டன. 

சாரதாளின் மின்னற்கொடிபோன்ற உருவம் அடிக்கடி அவன் முன்பு தோன்றிற்று. முழு நிலா தனது வெள்ளிய மதுக் கிரணங்களைப் பொழிந்து கொண்டிருந்த ஓரிரவு அவன் சாரதாளுடன் கடற் கரையில் தனிமையாகவிருந்து தன் காதலை வெளி யிட்டான். அப்பொழுது அவள்சந்திரிகையுடன் பூவு லகத்திற்கு வந்த ஒரு தேவதைபோல் விளங்கினாள். அவள் அவனை அடங்காத காதலுடன் அணைத்துக் கொண்டு செவிகளில், “என் உயிரே” என்று கூறி விட்டு மெளனமாக இருந்ததை அவனால் மறக்கவே முடியவில்லை. 

அருணாசலம் ஊர் வந்து மூன்று நாட்களான பின்பு சாரதாளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது அதைப் பார்க்கும் வரையில் அவன் தான் சாரதாளை முழுமனதுடன் காதலிப்பதாக எண்ணியிருந்தான். ஆனால் அக்கடிதத்தில் கண்ட விஷயங்கள் அவன் எண்ணத்தைக் குலைத்துவிட்டன. அதில், சார தாளின் தாய் தந்தையர் திடீரென்று காலராவில் இறந்துபோன பின்பு அவள் திக்கற்றவளானதும், அது சமயம் அவளுக்குப் படிப்புச் சொல்லிக்கொ டுத்த கிருஸ்துவப் பாதிரிப் பெண் கிருஸ்தவ மதத் தில் சேர்ந்துகொண்டால் மேல் படிப்புக்கு ஏற்பாடு செய்து ஏதாவது நல்ல உத்தியோகம வாங்கித் தருவதாகக் கூறியதும், கல்வியறிவில்லாத தனது உறவினர்களோடு அவர்களிச்சைப்படி வாழ இஷ்டமில்லாததாலும் வேறு வழியில்லாததலும் அப்பாதிரிப் பெண்ணின் விருப்பத்தின்படியே ரகஸ்யமாகக் கிருஸ்துவ மதத்திற் சேர்ந்துகொண்டு கல்லூரியில் சேர்ந்ததும் விபரமாக எழுகப்பட்டிருந்தன. “நான் அன்று கிருஸ்துவ மதத்தில பெரியதொரு நம்பிக்கை க கொண்டு சேரவில்லை, ஆனால் அதிற் சேர்ந்ததினா லேயே படிக்த முடிந்தது; சுயேச்சையாக வாழ முடிந்தது; இவற்றையெல்லாம்விட உங்களைப் பார்த் துக் காதலிக்கவும் சந்தர்ப்பம் வாய்த்தது. அருணா! உங்களுக்கு இந்தச் சாதிக்கட்டுகள் அர்த்தமற்றவை என்று நன்கு தெரிந்திருக்கும். இதைப்பற்றி நான் ஒன்றும் கூறவேண்டுவதேயில்லை. நமது காதலை எண்ணிப் பாருங்கள். அதற்கு முன் இந்த முட்டாள் தனமான பழங்கட்டுகளெல்லாம் ஒன்றுமில்லாமற் போகாதா? இக்காலத்தில் சீர்திருத்தமான முறையில் பல கலப்பு விவாகங்கள் நடைபெறுகின்றன” என்றிவ்வாறு சாரதா தனது காதலனிடம் பூரண நம்பிக்கையுடன் தனது குழந்தை உளளத்தில் தோன்றிய வற்றையெல்லாம் காதல் மொழிகளால் எழுதியிருக்கிறாள். 

இக்கடிதத்தை அருணாசலம் ஐந்தாவது முறை யாக இன்று வாசித்துப் பார்த்தான். படிக்குமபோ தெல்லாம் சாரதாளின் அழகிய ரோஜா ஹாரம் போன்ற அற்புத வடிவம் அவன முன்பு தோன்றி யது. அவளது பரந்த வரி படர்ந்த கண்கள் குழந்தைகளது கண்களைப்போலக் கபடற்றுப் பிரகாசித் தன. அருணாசலத்திற்கு என்ன முடிவுக்கு வருவ தென்று புலப்படவில்லை. 

அவன் சிறுவ்யது முகல் புதுப்பாளையத்திலே யே வாழ்ந்து வந்தவன். பத்தாவதுவரை அங்கிருந்து கொண்டே பக்கத்திலிருந்த ஒரு நகர ஹைஸ்கூலில் படித்து வந்தான். பள்ளியிற் கழியும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் அவன் பெரும் பாலும் மூடக்கொள்கைகளையும், வழக்கங்களையுமே கைக்கொண்டு வரும் கிராமவாசிகளுடனேயே பழகி வந்தான். அருணாசலம் தெய்வ பக்தியுடையவன். 

அவனுக்குத் தெய்வபக்தியை வளர்த்ததெல்லாம் புராணங்களே. அவற்றிலுள்ள ஆபாசங்களைத் தள்ளி விட்டு நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடிய அறிவு அவனுக்கு இன்னும் ஏற்படவில்லை. ஐந்து மாதங்கள் சென்னையில் அவன் வாழ்ந்திருந்தபோதி லும் அவன் அதிகமாக யாருடனும் பழக்கம் வை துக்கொள்ளவில்லை. நாட்டு நடவடிக்கைகளிலும் இயக்கங்களிலும் அவன் அதிக உற்சாகங்காட்டாம லிருந்தான். 

பொதுவாகக் கிராம மக்களில் பலர் அர்த்த மற்ற ஆசாரங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண் டிருப்பவர்கள். அதிலும் கொஞ்சம் தெய்வ பக்தி யுடையவர்களாக இருந்துவிட்டால் சொல்லவேண் டுவதேயில்லை. அவர்களுக்கு சாதி, ஆசாரம், உயர்வு தாழ்வு இவைகளே கடவுளிடம் செல்லப் புஷ்பக விமானங்களாகத் தோன்றும். 

ஆனால் ராமசாமிப் பிள்ளை இந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவரல்ல. அவரும் பக்தியுள்ளவரே; அதோடு பரந்த நோக்கமும் உடையவர். குருட்டு நம்பிக்கை களுக்கும் அவருக்கும் வெகுதூரம். இருந்தாலும் அவர் எப்பொழுதும் ஏக்கம் பிடித்தவர்போலக் காணப்பட்டார்; யாருடனும் அதிகமாகக் கலந்து கொள்ளமாட்டார். அருணாசலத்தைக் கண்டபோது தான் அவர் முகம் சிறிது பிரகாசமடையும். மற்றப் போதெல்லாம் மங்கி உள்ளத்தில் மறைந்து கிடந்த தீரா விசனத்தைக் காட்டுவதாகவிருக்கும். தனது மகனுக்கு அறிவு புகட்டுவதில் தானாகவே ஒருவிதக் கவலையும் எடுத்துக்கொள்ளவில்லை. அருணாசலம் பழைய கொள்கைகளிலேயே வளர்ந்துவந்தான். பட்டை பட்டையாக விபூதி தரித்துக்கொள்வது, மற்ற கல்லூரி மாணவர்களைப் போலக் குடுமியைக் கத்தரித்துக்கொள்ளாமலிருப்பது முதலியவைகளெல் லாம் தனது கடவுள் பக்திக்கும் ஜாதி ஆசாரத் திற்கும் அறி குறி என்று அவன் கருதியிருந்தான். 

இம்மாதிரி மனப்பாங்குடைய அருணாசலத் தைச் சாரதாளின் கடிதம் கலக்கிவிட்டது. அவ ளுடைய அழகும், காதலும் அவனை ஒரு புறம் வலி மையாக இழுத்தன. சென்னையிலேயே சாரதாள் கிருஸ்து மதத்தைச் சேர்ந்தது தெரிந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பானோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் ஊருக்கு வந்தது முதல் பழங் கொள்கைகளே பலமாக வேரூன்ற ஆரம்பித்தன. 

அன்று மத்தியானம் சாப்பிடுவதற்காகச் சமை யற் கட்டிற்குச் சென்றான். சாதம் போட்டுவிட்டு நின்றுகொண்டிருந்த சமையற்காரி, “அருணா, கேட் டயா, நம்ம வீரச் சக்கிலி குடும்பத்தோடு போய் விட்டான். என்னமோ கிருஸ்துவேதமாமே அதிலே சேந்துக்கிட்டானாம்” என்று சொன்னாள். அருணா சலத்திற்குச் சாரதாளின் நினைவு வந்தது. “சாரதாள் வீரச் சக்கிலி எல்லோரும் சமம். ஒரே அந்தஸ்து, ஒரே பந்தியில் சாப்பிடலாம்; இஸ்டப்பட்டால் கலியாணங்கூடச் செய்து கொள்ளலாம்” என்றிவ்வாறு அவன் மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டு மௌ னமாய் இருந்ததைக் கண்ட சமையற்காரி மறுபடியும் ஆரம்பித்தாள். ‘செத்த மாட்டைத் தின்கிற இவனோடு எல்லாரும் ஒண்ணா. கலக்டர் துரைகூட அவனோடு ஒண்ணாச் சாப்பிடுவாராமே! நம்பளைக் கண்டால் வந்து அவன் கும்பிடமாட்டானாம். திண்ணையில் உட்கார்ந்து கொள்வானாம். உம், காலங் கெட்டுப் போச்சு… அவள் மேலும் சொல்லிக் கொண்டே போனாள். 

அருணாலசத்திற்கு அவன் மனதில் நிகழு டோராட்டமே பெரியதாக இருந்தது. ஒன்றுமறி யாத அந்த வேலைக்காரியின் வார்த்தைகள் கடைசி யாகப் பழங்கொள்கைகளுக்கு வெற்றியளித்துவிட் டன. அன்றே அவன் சாரதாளுக்குத்தான் அவ ளைக் கலியாணம் செய்துகொள்ளமுடியாதென்று எழுதிவிட்டான். 

இரண்டு நாட்கள் கழிந்தன. ராமசாமிப் பிள்ளை யின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாய்க்கொண்டே வந்தது. மூன்றாம் நாள் சாரதாளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. 

“எனது ஆருயிர் அருணா, 

என்னைக்கைவிட்டுவிடாதீர், காதலா காதலா, கைவிட்டு விடாதீர். காதலுக்கு ஜாதியென்றும், உயர்வு தாழ்வென்றும் உண்டா? இல்லவே இல்லை. நீங்கள் என்னைப் பார்த்தீர்கள். நான் உங்களைப்பார்த்தேன். காதல் கொண்டோம். அங்கு ஜாதி எங்கு வந்தது? 

அருணா, நமது காதலுக்கு அழிவில்லையென்றி ருந்தேனே. எத்தனை தடவை அதன் உயர்வையும் வலிமையையும் பற்றிப் பேசி மகிழ்ந்திருக்கிறோம்!ஜாதி யென்ற உலகம் நகைக்கும் அர்த்தமற்ற கட்டுப்பாட் டை வைத்துக்கொண்டு அதைத் தள்ளிவிட்டீர்களே. நான் கிருஸ்துவ மதத்தைப்பின்பற்றுகிறேனென்றால் அது என்னையும் எங்கும் நிறைந்து விளங்கும் இறை வனையும் பொருத்தது. மதம் ஆத்ம சம்பந்தமானதல் லவா? பின் அதை ஏன் சமூக வாழ்க்கைக்குப் பேரி டைஞ்சலாகச் செய்யவேண்டும்? அருணா பழைய ஆபாசங்களுக்கு இடங்கொடுத்துவிடாதீர். 

அருணா. அன்பே, கைவிட்டு விடாதீர். 

காதல், காதல்,காதல். 

காதல் போயிற் காதல் போயிற் 

சாதல், சாதல், சாதல்’ 

தங்களையே எல்லாமென்றிருக்கும் 

சாரதாள்” 

காதற்பெருக்கால் வெளிவந்துள்ள இந்தக் கடிதம் அருணாசலத்தைக்கலங்கச்செய்தது. கொஞ்ச நேரம் அவனுக்குக் காதலைத் தவிர வேறு எவ்வித யோச னையுமில்லாத ஒரு இன்பகரமான உணர்ச்சி ஏற்பட் டது. ஆனால் அது நிலைபெற்று நிற்கவில்லை. சாரதா ளுக்கு யாதொரு பதிலுமளிக்காமல் மறுபடியும் தன் மனப்போராட்டத்திற் கிடங்கொடுக்கலானான். காதல் சில சமயங்களில் வெற்றிகொள்ளும்; பழங் கொள்கைகள் சில சமயங்களில் வெற்றிகொள்ளும். 

இவ்வாறு ஐந்து நாட்கள் சென்றன. ராமசாமிப் பிள்ளையின் தீராமனக்கவலை யெல்லாம் தீர்ந்தது; அவர் உயிர் துறந்துவிட்டார். தாள் எழுதிப் பத்திரமாகத் தன் மைந்தனிடம் கொடுத்துவிட்டார். சாகும்போது ‘ஆ, எனது அருமைக் கமலா இவ்வளவு நாட்கள் எனக்காகக் காத்திருந்தாய்; இதோ வந்துவிட்டேன்” இவைகள்தாம் அவர் கூறிய வார்த்தைகள். 

அருணாசலத்திற்கு உண்டான துக்கத்திற்கள வில்லை. தந்தையிறந்த பிறகு அவன் உலகத்தில் ஆ தரவற்றவனாகப் போய்விட்டான். தந்தையை அவ னிடமிருந்து பிரித்துவிட்ட கடவுளை நொந்துகொள் வான். தன்னைத் தண்டிக்கவே கடவுள் இவ்வாறு செய்திருப்பார் என்றும் நினைத்தான். ஜாதி சமயம் பாராமல் மணஞ்செய்துகொள்ள எத்தனித்த அவ னைக் கடவுள் சரியானபடி தண்டித்துவிட்டார் என்று அவனுக்குப் பட்டது. இந்த எண்ணம் தந்தையின் பிணம் சுடுகாடு சென்ற பிறகு பலப்படலாயிற்று. அவனுக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை. தாங்க முடியாத துக்தத்தால் மதி மயங்கிய அருணாசலம் அன்றே சாரதாளைத் தான் இனி நினைக்கவும் முடி யாது என்று அவளுக்கு எழுதியனுப்பிவிட்டான், 

மூன்றாம் நாள் மறுபடியும் சாரதாளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அருணாசலம் அசட்டையாக அதை மேசைமேலெறிந்து விட்டுக் கன்னத்திற்குக் கைகொடுத்து உட்கார்ந்திருந்தான். உலகமே அவ னுக்கு ஒரு பெரும் பாலைவனமாகத் தோன்றியது. என்னென்னமோ நினைவுகள் அவன் மன திலோடின அப்பொழுதுதான் அவனுக்குத் தன் தந்தை கொடுத் த கடிதத்தின் நினைவு வந்தது. துக்கத்தில் அதை இதுவரை மறந்துவிட்டான். அதை எடுத்து வாசிக்கலானான்:- 

“எனது அருமை அருணா, 

நான் இறந்த பிறகாவது என் மனதில் புதைந் து கிடக்கும் இவ்விஷயங்கள் உனக்குத் தெரிய வேண்டுமென்று இதை எழுதிவைக்கிறேன். 

நான் எனது அருமை மனையாளுடன் வாழ்ந்த தெல்லாம் ஆறு மாதத்தில் கொடிய வைசூரிநோய் அவளைக்கொள்ளை கொண்டு போய்விட்டது. அவளைப் பிரிந்து எனக்கு இவ்வுலகில் ஒரு இன்பமும் இருப்ப தாகத் தோன்றவில்லை. ஆனால் எப்படியோ நான் உயிர் வாழ்ந்து வந்தேன், எனக்கு ஊரிலிருக்கப் பிடிக்கவில்லை. (அப்பொழுது நான் வசித்து வந்தது திருநெல்வேலியில்) எனது ஜீவனிருக்கும் வரையில் பிறர்க்குபகாரமாக இருக்கவேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று ஆகையால் எனது ஆஸ்திதிகளையெல் லாம் விற்றுக்கிடைத்த ஒரு லக்ஷ்ம் ரூபாயையும் பாங்கியில் போட்டுவிட்டு ஊர் ஊராக அலைந்து திரிந் தேன். இயற்கையைக் கண்டு களிப்பதில் எனக்குப் பிரியம் உண்டு. இயற்கை வனப்பு மிக்க இடங்களுக் கெல்லாம் சென்றேன். இப்படிப்பல இடங்களில் சுற்றியதில் எனக்கு அர்த்தமற்ற கொள்கைகளிலிந்த மூடநம்பிக்கை களெல்லாம் மறைந்து விட்டன. நமது சமூகத்திலுள்ள பல ஊழல்கள் நன்கு புலப்பட் டன. ஆனால் எனது கமலத்தைப் பிரிந்த பிறகு அவற்றைப் பிறருக்குக் கூறவோ அல்லது ச சமூக சீர்திருத்தத்திற்காகப் பாடுபடவோ எனக்கு விருப் பமேயில்லை. நாட்களை எப்படியாவது கழிக்கவேண் டுமென்பதொன்றே எனது எண்ணமாயிருந்தது. 

ஒரு நாள் ஒரு தோட்டத்தின் வழியாகச் சென் றுகொண்டிருக்கும்பொழுது ஒரு சக்கிலியப்பெண் அங்கு வேலை செய்துகொண்டிருப்பதைக் கண்டேன். பக்கத்தில் மர நிழலில் ஒரு குழந்தை சிறு கந்தைத் துணியிற் படுத்திருந்தது. அந்தக் குழந்தை அழும் போதெல்லாம் அவள் அதற்குப் பாலூட்டி வரு வாள். பிறகு மறுபடியும் வேலைசெய்ய ஆரம்பிப் பாள். அவள் குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது அக்குழந்தையைத் தனக்கு அக் கஷ்ட திசை அருளிய கடவுளை நொந்துகொண்டிருந்தாள். அவள் நிலைமை எனக்குப் பரிதாபகரமாக விருந்தது எனக்குச் சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று. அவளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகக் கூறிப் பல வகைகளிலும் சமாதானஞ்சொல்லி அக்குழந்தை என்னிடம் கொடுத்துவிடும்படி செய்தேன். அவள் கணவன் கண்டிக்கு ஒடி விட்டானாம். மற்றப்படி அவளுடைய பந்துக்கள் இதைத் தடுக்கவில்லை. அவள் குழந்தையைப் பிரிந்த காட்சி கல்லையுங் கரைக்கக் கூடியதாகவிருந்தது. ‘கண்ணே நீ படிச்சு மேலுக்கு வருவாயென்று கொடுக்கிறேன். பாவி மகன் எங்கிருந்தாலென்ன? சுகமா இருந்தாப்போதும்” என்று குழந்தையை முத்தமிட்டுக் கண்களில் நீர்வடிய என் னிடம் கொடுத்தாள். அப்பொழுது அக்குழந்தைக் குச் சுமார் எட்டு மாதமாயிருக்கும்.நான் ஒரு தாயின் அன்போடு அதை வளர்த்தேன். அக் குழந்தைதான் நீ. 

உன்னை வளர்த்துக் கல்வி கற்பித்து மேன்மை யடையச் செய்யவேண்டுமென்ற எண்ணம் என்னை மறுபடியும் திருநெல்வேலிக்குப்போகச் செய்தது. அங்குள்ள என் பந்துக்கள் நான் ஊர், பேர் தெரியாத ஒரு குழந்தையை வளர்த்துவருவகைப்பற்றி ஆக்ஷே பம்செய்யலாயினர். அவர்களுக்குச் சமாதானங் றிக் கொண்டிருந்தால் உனக்குச் சரியான வயதும், அறி வும் வராதமுன்பே உனக்கிந்த ரகஸியத்தை வெளி யிடவேண்டியது நேரிடுமென்று கருதி நான்பேசாமல் இந்தஊருக்கு வந்து நிம்மதியாகக் காலங்கழிக்கலானேன். 

நமது சமூகத்திலுள்ள ஊழல்களை யெல்லாம் நீயே அறிந்துகொள்ளவேண்டுமென்பது என் விருப்பம்.  அதற்காகவே நான் உன்னைச் சென்னைக்கனுப்பினேன்.  கல்லூரிப் படிப்பில் நன்மையுண்டாகு மென்று நான் கருதவில்லை. ஆனால் அபிப்பிராயத் தைத் தெரிந்துகொள்ளவும் சமூக சீர்திருத்த இயக் சுங்களைக் கவனிக்கவும் இடமுண்டல்லவா? 

பிறகு நீ எப்பெண்மணியைக் காதல் கொண்டா லும் ஜாதிமத வேறுபாடுகளைக் கவனியாது மணந்து உலகில் பிறருக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ வேண்டுமென்பதே எனது பூரண விருப்பம். 

அருணா, பிறப்பைக் குறித்து நீ உன்னை இழிந்த வனென்று கருதுவாயானால் உன்னைப் போன்ற முட்டாள் உலகில் வேறு எவருமில்லை. உண்மையில் பிறப்பினால் உயர்வு தாழ்வு ஏற்படுவதேயில்லை. பழங் கொள்கைகளை இந்த விஷயத்தில் நம்பவேண்டாம். அவைகளெல்லாம் இந்த நூற்றாண்டுக்கு உதவா. 

எனது செல்வமனைத்தையும் உனக்கே எழுதி வைத்திருக்கிறேன். நீ காதலிக்கும் பெண்ணையே மணந்து தாய்நாட்டுச் சேவை செய்து வாழ்வாயாக. 

உனது, 
ராமசாமிப் பிள்ளை, 

படித்து முடித்தான். கையிலிருந்து அக்கடிதம் நழுவிக் கீழே விழுந்தது அந்தச் சமயத்தில் அவனது நிலைமை வார்த்தைக் கடங்காதபடியிருந்தது 

சாரதாளின் கடிதத்தை ஆவலுடன் பிரித்து பார்த்தான். அது கீழ்க்கண்டவாறிருந்தது. 

நீங்கள் கைவிட்ட பிறகு எனக்கு இவ்வுலகில் வேலையில்லை. தங்கள் வரவை எதிர்பார்த்து எந்த உலகில் இவ்விதக் கொடிய அர்த்த மற்ற பிரிவினைக ளெல்லாமில்லையோ அங்குவர ஆவலுடனிருப்பேன். 

தங்களைக் கடைசிவரையிலும் 

மறவாத, தங்கள், 
சாரதாள்.

– கவிக்குயில் நிலையக் கதைத்தொகுதி, முதற் பதிப்பு: ஏப்ரல் 1944, கவிக்குயில் நிலையம், கோட்டாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *