கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2025
பார்வையிட்டோர்: 820 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குன்றின் பாதையிலே நடுவில் ஒரு பள்ளம். அக்கம் பக்கத்திலுள்ள பசிய இலைகளை நோக்கிக் கொண்டே செல்லும் ஆடுகள் அதை எவ்வாறு கவனிக்கும்? 

எல்லாவற்றிற்கும் முன்னே சென்ற ஆடு, கால் தவறிப் பள்ளத்தில் விழுந்தது. ‘இந்தப் பள்ளத்தில் ஏதோ ஒரு விசேஷம் இருக்கவேண்டும். நாம் முன்பின் பாராமல் இதில் விழுவதே சரி’ என்று நினைத்தன அதன் பின்னே வந்த ஆடுகள். 

ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு, ஐந்து… பள்ளம் நிரம்பிக்கொண்டே வந்தது. கடைசி ஆடு ஓடிவந்தது; ஆனால் பள்ளம் நிறைந்துவிட்டபடியால், அது மற்று முள்ள ஆடுகளின் மீது விழுந்து புரண்டுகொண்டே, பள்ளத்தைக் கடந்து அப்புறம் சென்றது. பின்னால் திரும்பி மற்ற ஆடுகளை நோக்கி, “மூடர்களே! வழி யிலுள்ள பள்ளங் கூடவா உங்கள் கண்ணில் பட வில்லை?” என்று அது கேட்டது.

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *