கூடா நட்பு




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
உள்ளத்தில் கூடாது வெளியில் மட்டும் காட்டும் நட்பு
இந்தியாவின் தலைநகரம் டெல்லி. இந்நகரில் மகாத்துமாகாந்தி அவர்கள் பிரார்த்தனைக் கூட்டத் திற்குச் சென்றார்கள். செல்லும்போது இளஞ்சிறு வன் அவர்களை இரண்டு கையும் குவித்து வணங்கி னான். அவரும் அவனை வணங்கினார். வணங்கிய கையால் மறைத்து வைத்திருந்த கருவியால் அவ – ரைச் சுட்டான். அருகில் உள்ள மக்கள் வணங்கிய கையுடன் நின்ற இவன் இவ்விதம் சுட்டானே என்று வருந்தினார்கள். இதை வள்ளுவர் “மக்களுக்கு நீதி சொல்லும் முறையில் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பே பகைவர் கும்பிட்ட கையி லும் ஆயுதம் மறைந்திருக்கும், அதுபோல அழுத கண்ணீரிலும் மறைந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.
தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும்; ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. (62)
ஒன்னார் = (பகைவர் குறிப்பை அறிய வல்லார்க்குப்) பகைவர்
தொழுதகை யுள்ளும் = கும்பிட்ட கையுள்ளும்
படை = ஆயுதமானது
ஒடுங்கும் = மறைந்திருக்கும்
அழுத கண் நீரும் = அவர் அழுதவிழியில் இருந்து ஒழுகும் நீரும்
அனைத்து = அப்படியே தீயபடை மறைந்திருந்தற்குச் சமமாகும்.
கருத்து: பகைவர் தொழு தலையும், அழுதலையும் உண்மை என நம்புதல் கூடாது.
கேள்வி: ஒன்னார் அழுதகண்ணீரும் எதற்கு ஒப்பாகும்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.