குற்றம் கடிதல்




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
குற்றங்களைப் போக்குதல்
முதல் பராந்தகன் என்ற அநபாயன் சோழ நாட்டு மக்களிடம் மிகவும் அன்பாக நடந்து வந் தான்; தான் அரசன் என்ற கர்வம் இல்லாதவனாய் வாழ்ந்தான். இழிந்த செயல் எதையும் தன்னிடம் உண்டாகாமல் தடுத்து வாழ்ந்தவன். இவைகளைக் கண்டு மக்கள் இவனிடம் அன்பு கொண்டு நடந்த னர். இவன் மக்கள் அன்போடு அரசு செய்துவரும் காலத்தில் இராசசிம்ம பாண்டியனும், ஈழத்துக் காசியபனும், மண் ஆசையால் இவனிடம் கோபங் கொண்டு போருக்கு வந்தனர். “பராந்தகன் மீது சண்டைக்கு வந்தார்கள்” என்றதைக் கேட்டதும் மக்கள் யாவரும் திரண்டு கிளம்பிப் போர் செய்து இரு அரசர்களையும் வென்று அந்நாட்டைத் தம் மன்னனுக்கு அடிமை நாடாக ஆக்கித் தந்தனர். அங்குள்ள செல்வம் அனைத்தும் தம் அரசனுக்கு உரியதாக எடுத்துவந்து அளித்தனர். அளித்த பொன்னைப்பெற்ற சோழர், அப்பொன்னைச் சிதம் பரத்தில் உள்ள சிற்றம்பலத்தின் பொன் வேயும் பொருட்டு அளித்தார். இவ்விதம், அதிகார அகங் காரமும், கோபமும், இழிவான ஒழுக்கமும் இல்லா மல் அன்போடு உள்ள நமது அரசர் தமக்குக் கிடைத்த செல்வத்தை யாவரும் புகழும்படி சிற்றம் பலத்திற்கு அளித்ததைக் கண்டு உலக மக்கள் யாவரும் புகழ்ந்தனர்.
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
செருக்கும் = செல்வக் களிப்பும்
சினமும் = கோபமும்
சிறுமையும் = இழிவான நடத்தையும்
இல்லார் = இல்லா தவருடைய
பெருக்கம் = செல்வம்
பெருமிதநீர்த்து = யாவராலும் மதிக்கப்படும் தன்மையுடையது.
கருத்து: மேன்மைக்குணமுடையவருடைய செல்வம் யாவராலும் மதிக்கப்படும்.
கேள்வி: எல்லாரும் மதிக்கப்படும் செல்வமுடையவர் எவர்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.