குறை ஒன்றும் இல்லை..!




தங்கவயல் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார் ஒரு பெரியவர். மக்களை உற்சாகப் படுத்தும் வகையில் பேசுவார். கோயில் மண்டபத்தில் அவரது பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நேரத்தில் பேசத் -தொடங்கினார் -பெரியவர். அங்கு வந்திருந்த சிறுவர், சிறுமிகள்கூட அவரது பேச்சை உன்னிப்பாகக் கேட்டார்கள்.
கொஞ்ச நேரம் பக்திக் கதைகளை கூறியவர், பிறகு மைதாஸ் கதையைச் சொன்னார். ‘‘தொட்ட-தல்லாம் -பொன்னாகும் வரத்தைப் பெற்றான் மைதாஸ். அவன் மகளே தங்கச்சிலை ஆனவுடன் மனம் உடைந்தான். பேராசை கூடாது என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது இல்லையா? லட்சியங்கள் உயர்வாக இருக்கலாம். அதை அடைய முயற்சிகளும் தேவைதான். அதேசமயம் நம்மிடம் இல்லாததை எண்ணியே வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கக்கூடாது” இப்படிச் -சொன்ன -பெரியவர், டக்-கென்று ஒரு கேள்வியை வீசினார். “சிறுவர் & சிறுமிகளே, உங்களில் குறையே இல்லாதவர்கள் கையைத் தூ-க்குங்கள், பார்க்கலாம்’’ என்றார்.
குமாருக்கு தன் அப்பா தனக்கு புதிய சட்டை வாங்கித்தர வில்லையே என்ற குறை. புவனாவுக்கு போன விடு முறையில் -சென்னையில் வசிக்கும் சித்தப்பா வீட்டுக்குப் போக முடியவில்லையே என்ற குறை. மணியனுக்கு சைக்கிள் இல்லையே என்ற குறை. கோமதிக்கு அம்மா தனக்கு வளையல் வாங்கித் தரவில்லை என்றகுறை.ஆனாலும் எல் லோரும் குறையில்லை என்று கையைத் தூ-க்கினார்கள். ‘குறை இல்லாமல்இருக்கவேண்டும் என்று இப்போதுதானே -பெரியவர் சொன்னார். குறை உண்டு என்று காட்டிக்-கொண்டால் அவமானம் ஆயிற்றே’ என்று நினைத்துத்தான் எல்லோரும் கையைத் தூ-க்கினார்கள்.
ஒரு சிறுவன் மட்டும் கையைத் தூக்கவில்லை. அவன் நாதன்.
பெரியவர் நாதனை பார்த்துப் புன்னகைத்தார். “உனக்கு என்ன குறை?” என்று கேட்டார். இருந்த இடத்தில் இருந்தே நாதன் பதில் கூறினான். ஆரம்பிக்கும்போதே அழுகை எட்டிப் பார்க்க, அவனால் -தெளிவாகப் பேச முடியவில்லை.
“இப்படி கிட்டே வந்து உன் குறையைச் சொல்” என்றார் -பெரியவர். நாதன் தயக்கத்துடன் அருகில் வந்தான். ஒரு காலில் அவனுக்கு ஊனம். விந்தி விந்தி நடந்தான்.
-பெரியவர் புரிந்து -கொண்டார். “உனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது?” என்று கேட்டார்.
அதற்கு வேறு சில சிறுவர்கள் “அவன் மிக நிறைய மதிப்-பெண்கள் எடுப்பான். அழகாக ஓவியம் வரைவான். வீட்டுக்குத் தேவையான சாமான்களை எல்லாம் அவன்தான் கடைக்குச் சென்று வாங்கிவருவான்” என்று குரல் -கொடுத்தார்கள்.
-பெரியவர் சொன்னார். “அப்படியானால் உன்னிடம் எந்தக் குறையும் இல்லை”. -பெரியவர்இடத்தில் திருவள்ளுவர் இருந்தால் என்ன கூறியிருப்பார்?
சந்தேகமே வேண்டாம், பெரியவர் சொன்னதை அப்படியே ஒப்புக்கொண்டிருப்பார். உடல் ஊனம் குறையல்ல. முயற்சி இல்லாமல் சோம்பலாக இருப்பதே குறை என்று கூறியவர் அவர்.
‘-பொறியின்மை யார்க்கும் பழியன்று & அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி’’
(ஆள்வினை உடைமை)
– வெளியான தேதி: 01 மே 2006