குறைப்பிறவிகள்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,632
ஒரு குழந்தை பிறந்தது. அது, குருடு! அழகிய காட்சியைப் பார்க்க முடியாது. மற்றொரு குழந்தை பிறந்தது! அது, உருவமற்ற பிண்டம். கை இல்லை . கால் இல்லை. கண் இல்லை. வாயும் கூட இல்லை. மற்றும் சில குழந்தைகள் பிறந்தன. அவை, கூன், குருடு, ஊமை, செவிடு, மா, மருள்…
எட்டுக் குழந்தைகளும் குறைப் பிறவிகள். அவை வாழ்ந்தும் பயன் என்ன? உலகில் உள்ள மனித உயிர்களுக்கு கை, கால், உண்டு. கண், வாய், மூக்கு, செவி வாய் வயிறு எல்லாம் பெற்ற நிறை பிறவிகள்தாம் அவை. ஆனால் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் நாடாத பிறவிகள் அவை. எட்டுக் குறைகளுடைய எச்சப் பிறவிகளிலும், கொச்சைப் பிறவிகள் அவை.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்