காரணம் – ஒரு பக்க கதை
ஆரஞ்சு பழம் இருக்கு கீதா…
கொஞ்சம் ஜூஸ் போட்டு கொடு… வெளியே என்ன வெயில்… என்றபடி ரமேஷ் உள்ளே வர , ஆதித்யாவும்,
அம்மாம் அம்மா வெரி ஹாட் எனக்குப் பசி வேற என்று ஓடினான்…
பழங்களை எடுத்து சாறு பிழிந்த போது மனதுக்குள் ஒரே சஞ்சலம்…
சே இவர் ஏன் இப்படி இருக்கிறார் .. 2 மணி நேரம் பிள்ளைய கூட்டிட்டு இந்த வெயில ..சந்தைய சுற்றி வந்து அது இதுன்னு வாங்கி இருக்கார் …வழியில் பிள்ளைக்கு ஜூஸ் இல்லை டிபன் வாங்கி கொடுத்து இருக்கலாமே …அவன் குழந்தை தானே … யாருக்காக இப்படி சேர்க்கிறார்…பணத்தை செலவழிக்காம்மல் கொட்டி வச்சி என்ன பயன் என்று மனதுக்குள் குமைந்தாள்….
எங்க எங்கெல்லாம் போயிட்டு வந்திங்க வழில எதாவது சாப்பிட்டிருக்கலமே ?…என்றபடி ஜூசை நிட்டினாள்…
கடன் வாங்க தான் போன்னேன் கீதா … அடுத்த வாரம் புது கம்பெனி ஒண்ணு மெட்டல் பாக்ஸ் லாஞ்ச பண்ணுது ….6 லட்சம் டெபாசிட் பண்ணனும் …. நானா சேட்கிட்ட வாங்கினேன் …..
என்ன ?!!!! அவள் திடுகிட்டாள்…
கடன் வாங்க எதுக்கு பையனை அழைச்சிட்டு போனிங்க…
அவனுக்கு கஷ்டம் நஷ்டம் தெரியனும் கீதா …பணம் என்கிறது பாடுபட்டு தேடுற விஷயம்னு புரியணும் ….. கார் இருந்தாலும் பஸ், ஸ்கூட்டர்ன்னு, அழைச்சிட்டு போறேனே ஏன்? பணம் இருந்தாலும் இல்லைனாலும் அவன் நம்பிக்கையுடன் வாழ வேண்டும் … போராட கத்துக்கணும் என்ற கணவனை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள்…