காதல் நன் மரம்




புலவர் மோசிசாத்தனார் தன் வழியே சென்று கொண்டிருந்தார். வழியின் இருமருங்கும் நொச்சி மரங்கள். கொஞ்ச தூரம்தான் போயிருப்பார். இளமங்கை யொருத்தி ஓடிவந்து நொச்சிப் பூவைக் காதலுடன் பறிப்பதைக் கண்டார். பறித்து இடையில் சொருகிக் கொண்டு சிட்டுப்போல் பறந்து விட்டாள்.
மேலும் சிறிது தூரம்தான் சென்றிருப்பார். வீரன் ஒருவன் தலைதெறிக்க ஓடிவந்தான். ஆவலோடு நொச்சிப்பூவைப் பறித்து கண்ணியாகக் கட்டித் தலையில் சூடினான். கச்சை கட்டி யிருந்தான். கையில் வில்லும் இருந்தது கோட்டைக் காவலை மேற்கொண்ட வீரன். பகைவர் தன் நகரைப் பற்றாதபடி நகரைக் காக்கும் பணியில்
ஈடுபட்டவன். “நொச்சியே, மங்கையர் மட்டுமல்ல மாபெரும் வீரரும் காதலிக்கும் காதல் நன் மரமானாய் ” என்று வாழ்த்திக் கொண்டே சென்றார்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்