காட்டுக்கு ராஜாவான குள்ள நரி
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 27, 2026
பார்வையிட்டோர்: 766
காட்டில் சுற்றிக் கொண்டிருந்த குள்ள நரி ஒன்று , அருகில் உள்ள நகரத்திற்குச் சென்றது.
ஆட்கள் யாரும் இல்லாமல் இடத்தில் அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்த குள்ள நரி , அங்கிருந்த நீலச் சாயம் உள்ள தொட்டியில் குதித்து விட்டது.
தொட்டியிலிருந்து வெளிப்பட்ட பின்னர், அதன் உடல் முழுவதும் நீலமாகி விட்டது.
நீல உருவத்துடன் வந்த குள்ள நரியைப் பாரத்து நரிகளும் பிற விலங்குகளும் அச்சம் அடைந்தன. அதனால் குள்ள நரி ‘இனிமேல் இந்தக் காட்டுக்கு ராஜா சிங்கம் இல்லை . நான்தான் ராஜா’ என்றது.
எந்த ஒரு விலங்கும் எதிர்க்கவில்லை . இப்படியாக மிடுக்காக காட்டில் குள்ள நரி உலா வந்து கொண்டிருந்த தருணத்தில் , ஒரு நாள் பகற்பொழுதில் வானம் இருண்டு மழை பொழிய, குள்ள நரியின் உடலில் இருந்த நீலச் சாயம் கலைந்து போயிற்று.
மழையில் நனைந்தபடி விலங்குகள் குள்ள நரியைத் துரத்த, அது பாதுகாப்பான மறைவிடத்தில் ஒளிந்து கொண்டது.
நீதி – யாரையும் ஏமாற்றக் கூடாது.
(நாட்டுப்புறக் கதைகளிலிருந்து. இந்தக் கதை, பாலு மகேந்திரா அவர்கள் இயக்கத்தில் கமல் ஶ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை திரைப்படத்தில் பாடலாக இடம் பெற்றது)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
