கல்வியே சிறப்பளிக்கும்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தண்டுறை என்னும் ஊரிலே, தம்பையா என்றும், தாயங்கண்ணன் என்றும் பெயருடைய இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களுடைய தந்தை கல்விப் பொருள், செல்வப் பொருள் ஆகிய இரண்டின் பெருமையையும் அறிய விரும்பினான். ஒருவனுக்குக் கல்வி கற்பிப்பதற்கும், மற்றவனுக்குத் தன்னுடைய செல்வம் முழுவதையும் கொடுப்பதற்கும் எண்ணினான். தன்னுடைய கருத்தை மக்களிருவருக்குந் தெரியப்படுத்தினான். யாருக்கு எதுவேண்டும் என்று கேட்டான்.
தம்பையாவாகிய மூத்தவன் தனக்குச் செல்வப் பொருளே வேண்டும் என்றான். தாயங்கண்ணனாகிய இளையவன் தான் கல்வி கற்பதற்கு விரும்புவதாகக் கூறினான். தாயங்கண்ணனைத் தக்க அறிஞரிடத் திலே ஒப்புவித்துக் கல்விப் பயிற்சி செய்வித்தான். பாதிச் செல்வத்தைப் பிரித்துத் தம்பையாவுக்குக் கொடுத்து வாணிகஞ் செய்யுமாறு கூறினான். தம் பையா வாணிகஞ் செய்தான். நல்ல ஊதியம் கிடைத் தது. பொருட்பேறு மிகுதியாதலைக் கண்ட அவன் செருக்கடைந்து நற்குணங்களைப் போக்கிவிட்டான்.
தாயங்கண்ணனோ அறிவு மிகுதிப்பட மிகுதிப் படச் சிறந்து விளங்கினான். தம்பையாவுக்குத் திடீரென்று வணிகத்துறையில் பெரும் பொருள் அழிவுண்டாயிற்று. அதனால் அவன் மிக எளிய நிலைமையை அடைந்தான். தாயங்கண்ணனோ அறிவித் சிறந்து விளங்கியபடியால் அரசனுடைய அவையிலே’ துறவியான மன்னன் முதல் அமைச்சனாக ஏற்படுத்தப் பெற்றான். தான் கல்விப் பொருளை விரும்பியதன் பலன் கிடைத்ததைக் கண்டு தாயங்கண்ணன் மிகுந்த களிப்படைந்தான்.
“வித்தை விரும்பு” (இ – ள்.) வித்தை – கல்விப் பொருளையே , விரும்பு – நீ விருப்பங்கொண்டு கற்பாயாக !
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955