கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 4,315 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

முன்னுரை 

1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக. நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் வாழும் மீனவர் வாழ்க், கையை ஆராய்ந்து, ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடு பட்டிருந்தேன். அப்போது இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும், திறனாய்வாளருமாகிய மதிப்புக்குரிய நண்பர் திரு.சிட்டி (சுந்தரராஜன்) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் தூத்துக்குடியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்புடன் விசாரித்தார். அத்துடன் “நீங்கள் தூத்துக்குடிப் பகுதியில் இன்னும் ஓர் களத்தை ஆராய்ந்து நாவல் எழுத வேண்டும். மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் கூட உயிர்வாழ இன்றியமையாத ஓர் பொருள் உப்பு.நீர், காற்று, வெளிச்சம் போன்று இது இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கும் விலையின்றிக் கிடைக்க வேண்டும் என்று காந்தியடிகள் உப்பை முன்னிட்டு நாட்டு விடுதலைக்கான அறப்போரைத் துவக்கினார். நீங்கள் உப்பளங்களைச் சென்று பார்த்தும் ஓர் நாவல் புனைய வேண்டும்” என்று கூறினார். நான் ஒரு நாவலை எழுதி முடிக்குமுன் அநேகமாக இவ்விதமான தூண்டல்களுக்கான வாக்குகள் அடுத்த முயற்சியைத் துவக்க என் செவிகளில் விழுந்துவிடும். இம்முறை இது வெறும் வாக்கு என்று கூடச் சொல்ல மாட்டேன். மிகவும் அழுத்தமாகவே பதிந்து விட்டது. எனவே, ‘அலைவாய்க் கரையில்’ என்ற நாவலை முடித்த கையுடன் நான் தூத்துக்குடிக்குப் பயணமானேன். தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்ச விளைச்சலுக்குத் தேவையான ஈரப் பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்ப தால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் ‘உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். 

இதற்கு முன் நான் உப்பளங்களைக் கண்டிருந்திருக் கிறேன். வறட்சியான காற்றும் சூரியனின் வெம்மையும் இசைந்தே உப்புத் தொழிலை வளமாக்குகிறதென்ற உண் மையைப் உப்புப் பாத்திகளில் கரிப்பு மணிகள் கலகலக்கும் விந்தையில் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் இந்த வியப்புக்கப்பால் உப்புப் பாத்திகளில் உழைக்கும் தொழிலாளரைப் பற்றி எண்ணும் கருத்து அப்போது எனக்கு இருந்ததில்லை. இப்போது நான் அந்த மனிதர்களைத் தேடிக்கொண்டு உப்பளங்களுக்குச் சென்றேன். 

உப்புக் காலம் இறுதியை நோக்கிச் சென்று கொண்டி ருந்த புரட்டாசிக் கடைசியின் அந்த நாட்களிலேயே, உப்பளத்தின் அந்தப் பொசுக்கும் வெம்மையில் என்னால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நிற்க இயலவில்லை. கண் களுக்கெட்டிய தொலைவுக்குப் பசுமையற்ற – உயிர்ப்பின் வண்ணங்களற்ற வெண்மை பூத்துக் கிடந்தது. வெண்மை யாகப் பனி பூத்துக் கிடந்திருக்கும் மலைக்காட்சிகள் எனது நினைவுக்கு வந்தாலும் எரிக்கும் கதிரவனின் வெம்மை அந்த நினைப்பை உடனே அகற்றிவிட்டது. அங்கே காலையி லிருந்து மாலை வரையிலும், கந்தலும் கண் பீளையுமாக, உப்புப் பெட்டி சுமந்து அம்பாரம் குவிக்கும் சிறுவர் சிறுமி யரையும் பெண்களையும், பாத்திகளின் உப்பின் மேல் நின்று அதை வாரும் ஆண்களையும் கண்டேன். அப்போது எங்கோ ஃபிஜித் தீவினில் கரும்புத் தோட்டத் தொழிலாளர் நிலையை நினைந்துருகித் தன் கண்ணீரையும் பாக்களாக இசைத்த பாரதியின் வரிகள் என்னுள் மின்னின. அந்நியன் நாட்டை ஆளும் நாட்களல்ல இது. நாள்தோறும் எங்கெங்கெல்லாமோ பல மூலைகளிலும் மக்கள் உரிமைகளும், நியாயமான சலுகை களும், நியாயமல்லாத சலுகைகளும் கோரிக் கிளர்ச்சிகள் செய்வதும்,போராட்டங்கள், ஆர்ப்பாடங்கள் நிகழ்த்துவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாடிக் கட்டிடங்களில் குளிர்ச்சியான இதம் செய்யும் அறைகளில் அமர்ந்து கோப்புக் காகிதங்களில் கையெழுத்துச் செய்யும் அலுவலகக்காரர்கள், மருத்துவ வசதிகளும், ஏனைய பிற சலுகைளுமே மாதத்தில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் பெறுகின்றனர். சுதந்திர இந்தியாவில் மக்கட் குலத்துக்கு இன்றியமையாததோர் பொருளை உற்பத்திச் செய்வதற்கு உழைக்கும் மக்கள், உயிர் வாழ இன்றியமையாத நல்ல குடிநீருக்கும் திண்டாடும் நிலை யில் தவிப்பதைக் கண்ட போது எனக்கும் குற்ற உணர்வு முள்ளாய்க் குத்தியது. ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் சுட்டெரிக்கும் வெய்யலில் பணியெடுக்கும் இம் மக்களுக்கு, வாராந்திர ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளும் கூடக் கூலியுடன் கிடையாது. கிடைக்கும் கூலியோ உணவுப் பண்டங்களும்,எரிபொருளும் உச்சியிலேறி விற்கும் இந்த நாட்களில், இம்மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. எல்லாவற்றையும் விட மிகக் கொடுமையானதும் ஆனால் உண்மையானதுமானதென்ன வென்றால், உப்பளத் தொழிலாளி, இருபத்தைந்து ஆண்டுகள் பணியெடுத்திருந்தாலும், தனது வேலைக்கான நிச்சயமற்ற நிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறான் என்பதேயாகும். ஒரு சாதாரண குடிமகனுக்கு, ஒரு சுதந்திர நாட்டில் நியாய மாகக் கிடைக்க வேண்டிய எந்த வசதியையும் உப்பளத் தொழிலாளி பெற்றிருக்கவில்லை. வீட்டு வசதி, தொழிற் களத்தில் எரிக்கும் உப்புச் சூட்டிலும்கூடத், தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி ஒய்வுக்கான விடுப்பு நாட்கள், முதுமைக்கால காப்பீட்டுப் பொருள் வசதி, குழந்தைகள் கல்வி, உப்புத் தொழில் இல்லாத நாட்களில் வாழ்க்கைக்கான உபரித் தொழில் ஊதிய வசதிகள் எதுவுமே உப்பளத் தொழி லாளிக்கு இல்லை என்பது இந்த நாட்டில் நாகரிகமடைந்தவ ராகக் கருதும் ஒவ்வொருவரும் நினைத்து வெட்கப்பட வேண்டிய உண்மையாக நிலவுகிறது. உப்பளத்து வறட்சி ஒவ்வொரு தொழிலாளிக்கும் உடல் நலத்துக்கு ஊறு செய்கிறது. கை கால்களில் கொப்புளங்கள் வெடித்து நீர் வடிந்து புண்ணாகின்றன. கண்களைக் கூசச்செய்யும் வெண்மை, கண் பார்வையை மங்கச் செய்கிறது. பெண். களோ அவர்களுடைய உடலமைப்பு இயல்புக்கேற்ற வேறு பல உடற்கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். தூத்துக்குடி வட்டகையில் உப்பள நாட்கூலி பல தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்குப் பிறகு ஆண்களுக்கு ரூ 6-75. பெண்களுக்கு ரூ 4-40 சிறுவர் சிறுமியருக்கு ரூ.300 அல்லது 2-50 என்று பொதுவாக நிர்ணயித்திருக்கின்றனர். (அரசு நிர்ணய கூலி இதைவிடக் குறைவு என்று கேள்விப்பட்டேன் ஆனால் இந்த நிர்ணயக் கூலி பெரும்பாலான தொழிலாள ருக்கு முழுதாய் கிடைப்பதில்லை. ஏனெனில் தொழிலாளர் கங்காணி, அல்லது ‘காண்ட்ராக்ட்’ எனப்படும் இடை மனிதர் வாயிலாகவே ஊதியம் பெறுகின்றனர். பதிவுபெற்ற தொழிலாளிகள், அள நிர்வாகத்தினரிடம் நேரடி ஊதியம் பெறுபவர் மிகக் குறைவானர்கள்தாம். அநேகமாக எல்லாத் தொழிலாளரும் இடை மனிதன் வாயிலாகவே நிர்வாகித் தினரிடம் தொடர்பு பெறுகின்றனர். ஒரு நாள் ஒரு தொழிலாளி நேரம் சென்று அளத்துக்குப் போய்விட்டால் அன்று கூலி இல்லாமல் திரும்பி வருவதும்கூட வியப்பில்லை யாம்! குழந்தைகள் ஆண்டைக் கொண்டாடுகிறோம்.ஒரு. நாட்டின் எதிர்காலம் மழலைச் செல்வங்களின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது என்ற நோக்கில் பல முனைகளிலும் திட்டங்களும் பாதுகாப்புப் பணிகளும் துவங்கப் பெறு கின்றன. அடிப்படைத் தேவைகளுக்கே போராடும் வறியவர் களாகவே நாட்டு மக்கள் பெரும்பாலானவர் நிலைமை இருக்கும்போது சிறுவர் உழைப்பாளிகளாக்கப்படுவதைத் தடைசெய்வது சாத்தியமல்ல. உழைப்பாளிச் சிறுவருக்கு சத்துணவு மற்றும் கல்வி வசதிகளும் அளித்து உதவத் திட்டங்கள் பற்றி ஆராயப்படுகின்றன. இந்நோக்கில் சிறார். எந்தெந்தக் காலங்களில் உழைப்பாளிகளாகக் கூலி பெறு கின்றனர் என்ற விவரங்கள் இந்நாட்களில் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் உப்பளத்தில் கருகும் குழந்தை. களைப் பற்றி யாரும் குறிப்பிட்டிராதது குறையாக இருக்கிறது. இந்நிலை வெளிஉலகம் அறியாமல் கேட்பாருமற்று, உரைப்பாருமற்று அவலமாகவே தொடர்ந்து வந்திருக்கிறது. இச்சிறாருக்கு தனிப்பட்ட முறையில், அந்தத் தொழிற் களத்தில் அவர் ஈடாக்கும் உழைப்புக்குகந்த முறையில் உணவுப்பொருள், மருத்துவ. வசதி (மற்றும் கல்வி)யும் அளிக்க வழி செய்யப்படல் வேண்டும். 

ஒவ்வொரு நாளும் நான் நெஞ்சம் கனக்க, உப்பளத் தொழிலாளரிடையே உலவியபோது, நண்பர் ‘சிட்டி’ அவர்கள் வாக்கை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன். 

இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக் கொறிக்கும் சிறு தீனிகளாகிவிடக் கூடாது. அது. மக்களின் வாழ்வுக்கு இன்றியமையாத ஆரோக்கியமான சத்துணவைப் போல் சமுதாய் உணர்வை, மனிதாபிமானத்தை, மக்களிடையே டுவதாக இருக்கவேண்டும் என்ற நோக்கமே என்னைப் புதிது புதிதான களங்களுக்கு இட்டுச் செல்கிறது. 

இம்முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்து ஆர்வமும் ஆவலுமாக உதவிய நண்பர்கள் பலருக்கும் நான் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன். தூத்துக்குடி என்றாலே,நண்பர் திரு.ஆ.சிவசுப்பிரமணியனின் இல்லமே நினைவில் நிற்கிறது. வ.உ.சி.கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவருடைய நட்பு, இலக்கிய வாழ்வில் எனக்குக் கிடைத்த கொடை என்று மகிழ்கிறேன். எந்த நேரத்திலும் சென்று உதவி வேண்டி அவரை அசௌகரி யத்துக்குள்ளாக்கும் உரிமையை அவர் மனமுவந்து எனக்கு அளித்திருக்கிறார். இவரது இல்லம் என்றால், குடும்பம் மட்டுமல்ல. இக்குடும்பத்தில் பல மாணவர்கள் பேராசிரியர் கள் ஆகியோரும் இணைந்தவர்கள். அவர்களில் நானும் ஒருவராகி விட்டதால், உப்பள்த்து வெயிலில் நான் காய்ந்த போதும், தொழிலாளர் குடியிருப்புகளில் நான் சுற்றித் திரிந்த போதும் நான் தனியாகவே செல்ல நேர்ந்ததில்லை. மாணவ மணிகளான இளைஞர்கள் திரு. எட்வின் சாமுவேல், சிகாமணி ஆகியோர் நான் உப்பளத் தொழிலில் ஈடுபட்ட பலரைச் சந்தித்துச் செய்தி சேகரிக்க உதவியதை எந்நாளும் மறப்பதற்கில்லை. 

உப்பளத் தொழிலாளரில் எனக்குச் செய்தி கூறியவர் மிகப் பலர். வேலை முடித்து வந்து இரவு பத்து மணியா னாலும் தங்கள் உடல் அயரிவைப் பொருட்டாக்காமல் எனது கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து என்னைச் சந்தித்த தோழர்கள் திருவாளர் மாரிமுத்து, முனியாண்டி, கந்தசாமி, வேலுச்சாமி ஆகியோருக்கு நான் எனது நன்றியைப் புலப் படுத்திக் கொள்கிறேன். நான் நேரில் கண்ட உண்மைகளை யும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். 

எப்போதும் போல் எனது எழுத்துக்களை நல்ல முறையில் வெளியிட்டு எனக்கு ஊக்கமளிக்கும் தாகம் பதிப்பகத்தார் இதை நூல் வடிவில் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கும் நன்றி கூறி தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் எனக்கு ஆதரவு நல்கும் வாசகப் பெருமக்களின் முன் இதை வைக்கிறேன். 

ராஜம் கிருஷ்ணன் 


கரிப்பு மணிகள் 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

உத்திராயனத்துச் சூரியன் உச்சிக்கு நகர்ந்து செங்கதிர்க் குடை பிடிக்கிறான். தெற்குச் சீமையின் கடற் கரையோரங்களில் விரிந்து பரந்து கிடக்கும் உப்பளங் களில் இன்னோர் புத்தாண்டு துவக்கமாகி விட்டது. இட்ட தெய்வங்களின் மேலாடை களைந்து பரிமளதைலம் பூசி நீராட்டுவது போல் மண் அன்னையின் ‘அட்டு’ நீக்கி, “செய் பதமான களியும் மணலும் விரவி நீரைக்கூட்டி, நேர்த்தி’ செய்யும் கோலங்கள் டற்கரை நெடுகிலும் ஏக்கர் ஏக்கராக விரிந்த உப்பளங்களில் காட்சிகளாக விரிகின்றன. 

‘தைச்சீர்’ கழித்து, பொன்னின் கதிர்களறுத்துக் களத்து மேடுகளில் நெல்மணிகளை உழவர் பெருமக்கள் குவிக்கும் அக்காலத்தில், ஆற்றோரத்து விளைநிலங்களில் மண் அன்னை பிள்ளை பெற்ற தாயாக மகிழ்ந்து காட்சி யளிக்கிறாள். மீண்டும் மீண்டும் பசுமையில் பூரித்துக் கொழித்து இயற்கையில் மலரும் அன்னையாக உலகை உய்விப்பாள். 

ஆனால், இந்தக் கடற்கரை யோரங்களில், பூமித் தாயின் பசுமையை அழித்து, உலகெங்கும்,உயிர்க்குல மனைத்துக்கும் சாரமளிக்கும் கரிப்பு மணிகளை விளை விக்கச் செய்நேர்த்தி செய்கிறார்கள். வானின்று பொழி யும் காருக்குப் போட்டியாக, பூமிப்பெண்ணை என் லும் தாயாக்க இயலும் என்று கடலோன் பூமிப்பெண் ணின் உதரத்தில் தங்கி அவளை அன்னையாக்குகிறான். நல்லார் பொல்லாரென்ற சூதறியாத வானவனோ எல்லோருக்கும் பொதுவாக காய்ந்து, மண்ணை வெய்துயிர்க் கச் செய்கிறான். அவன் கொடையில் கரிப்பு மணிகள் கண் மலர்கின்றன. 

விரிந்து பரந்த பாத்திகளுக்குச் செய்நேர்த்தி செய்யும் கால்கள் அனைத்தும் மனிதக்கால்கள். நீரும் களியும் மண லும் குழம்பிக் குழம்பி மனித ஆற்றலின் வெம்மைகளும் மண்ணின் உட்சூடும் கொதித்து ஆவியாகிப்போகும் ‘செய் நத்து” கருவைக்காட்டு உப்பளத்திலும் நடக்கிறது. அந்தப் பாதங்கள் கறுத்துக் கன்றிப் புண்பட்டுத் தேய்ந் தாலும் இன்னும் ஆற்றலைக் கக்கும் இயக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். 

“செறுக்கி மவளுவ… அழுந்த மெறியுங்க…! சாமி யாரே? ஆவட்டும்…” 

கங்காணியின் விரட்டல் கசையடிபோல் விழுந்து கொண்டே இருக்கிறது. இந்த அதட்டல்கள் அவ்வப் போது விழுந்து கொண்டே இருக்கவேண்டும். ஏனெனில் அங்கே பாத்தி மிதித்துப் பண்பாடு செய்யும் மேனிகள் இரத்தமும் சதையும் துடிப்பும் துள்ளலுமாக இல்லை. அமாவாசைக் கடலைப் போன்று ஆற்றலை அவர்களால் கொட்ட முடியாது. இறைத்து இறைத்து ஊற்றுக்கண் வற்றிய கிணறு. மேல் மழையோ அற்பம். சுரண்டினால் சிறிது நீர் பொசிந்து வரும். பிறகு நின்று போகும். மீண் டும் வெட்டினால் சுருசுருவென்று நீர் ஊறிவரும். அந்தப் பாத்தியில் எட்டுப் பேர் மிதிக்கிறார்கள். 

மருதாம்பா, மாரி, சக்கி மூவரும் இளமையில் ஆளுகைக்கப்பால் அநுபவப்பாதையில் தேய்ந்து மெலிந்த வர்கள். இசக்கியின் மகளான பன்னிரண்டு பிராயத்தி முத்தம்மா, மாரியின் மகள் லெச்சுமி, பையன் கந்தவேலு கைக்குழந்தையை நிழலில் போட்டுவிட்டு, மூன்று பிராயத்து முதற்குழந்தையைக் காவலுக்கு வைத்துவிட்டு அடிக்கொரு முறை அழுகையொலி கேட்கிறதா என்று பார்த்துக்கொண்டே மிதிக்கும் ருக்குமணி, ஆகியோரைத் தவிர ஒரே முதிய ஆண்மகனான அங்கே ‘செய்நத்து’ செய்பவன், ‘சாமியார்” என்றழைக்கப் பெறும் கண்னு சாமிதான். அவன் மருதாம்பாளின் புருஷன். 

“ஏத்தா! இது ரிக்காடு டான்சில்ல குதிக்குறாளுவ… மெதிச்சுத் துவயிங்க! விருசா ஆவட்டும்! சாமியாரே, ஒமக்கு இது சரியல்ல. நீரு வாரும். ‘சிப்சம்’ எடுத்துப் போட…” என்று கங்காணி அவனை நிறுத்தித் தோளைப் பற்றி அழைத்துச் செல்கிறான். 

உட்சூடும் வெளிச்சூடும் சங்கமித்துக் கால்களில் நெருப்பைக் கக்குகின்றன. நெருப்புப் பந்தத்தில் நெருப்பு வளையத்தில் அவர்கள் நடக்கிறார்கள். நடப்பு இல்லை. மிதித்தல். பையன் வாளியில் நீரெடுத்து அவ்வப் போது மண்ணில் விசிறிக் கொட்டுகிறான். அந்த நீர், அவர்கள் காலடிகளில் பாயும் போதே ஆவியாகிவிட, தேய்ந்து வெண் குறுத்தாகிவிட்ட அவர்கள் அடிகளில் கொப்புளத்தைத் தோற்றுவிக்கும் கொதிப்பைக் கக்குகிறது. 

அழுத்தமும் சூடும் மண்ணை மெத்து மெத்தென்று வெண்ணையாக குழைத்த பிறகு கெட்டித்து இறுகச்செய்யும் நிணமும் சதையும், பூவின் மென்மையுமான பெண்மையின் துடிப்புக்களும் இறுகிக் கெட்டித்துக் காய்ந்து போகும் இந்தச் “செய்நேர்த்தி” தை, மாசி முழுதும் கூட நீண்டு போகும். 

மருதாம்பா, சற்றே தலைதூக்கி, கல்யாணி, தன் புருஷனை அழைத்துச் செல்வதைப் பார்க்கிறாள். சென்ற ஆண்டு வரையிலும் சாதாரணத் தொழிலாளியாக இருந்த சுப்பன் இப்போது கங்காணியாகி விரட்டுகிறான். மிஞ்சி னால் முப்பது வயசிருக்கும். கணக்கப் பிள்ளைக்கு அவ்வப் போது கையும் மனமும் நிறையக் காணிக்கை வைத்தி ருப்பான். கங்காணியாகி விட்டான். செய்நேர்த்திக் காலத்தில் நிர்ணயக்கூலி முழுவதையும் கொடுக்க மாட்டார்கள். உப்பெடுக்கத் தொடங்கி விட்டாலும் அந்த அளத்தின் இருநூறு ஏக்கரிலும் பண்பாட்டு வேலை முடியவில்லை என்று கூலியைக் குறைத்தே கொடுப்பார்கள். ஆணுடைய நிர்ணயக்கூலி பெண்ணுடைய கூலியை விட் அதிகம் என்பதால், தன் புருஷனை ஜிப்சம் சுமக்கத் தள்ளிப் போகிறான் என்றுணர்ந்து மருதாம்பா சில நிமிடங்கள் செய் லற்று நிற்கிறார்கள். கண்ணுசாமிக்குத் துல்லியமான கண் பார்வை போய் எத்தனையோ நாட்களாகி விட்டன. அவர் களைப் போன்ற உப்பளித் தொழிலாளிகள் யாருக்குமே தெளிவான கண்பார்வை கிடையாதுதான் என்றாலும், கண்ணுசாமிக்குக் கண்களில் நீர் வடிந்து நீர் வடிந்து, சென்ற ஆண்டிலிருந்து, கலத்திலிட்ட சோறுகூடத் தெரியாதபடி ஒளி மங்கிவிட்டது. 

“நீரு பெட்டக்கண்ண வச்சிட்டு வார்பலவைப் புடிச்சித் தொழில் செய்ய ஏலாது. *மெக்கிட்டு’க்கூலியா செய்நத் துக்கு இருந்துபோம்… அதும்கூட கணக்கவுள்ள கண்டாச் சண்டை போடுவா. ஆச்சி அளுகாண்டு எடுக்கே…” என்று வேலைக்குச் சேர்க்கும் போதே நிபந்தனை போட்டான் கங்காணி. 

பெண்களுக்கு நான்கு. ரூபாய் கூலி கொடுப்பான். அவர்களுடைய நிர்ணயக்கூலி நாலு ரூபாயும் நாற்பது பைசாவுமாகும். ஆண்களுக்கு நிர்ணயக்கூலி ஆறுரூவா யும் சொச்சமுமாகும். ஆனால் செய்நேர்த்திக் காலத்தில் முழுக்கூலியைக் கண்களால் பார்க்க இயலாது. நான்கு ரூபாய் கொடுப்பான் முன்பெல்லாம். செய்நேர்த்திப் பணிக்கு ஆண்களை மட்டுமே எடுப்பார்கள். பெண்கள் வரப்பில் குவிந்து உப்பைத் தட்டுமேட்டில் கொண்டுசேர்க் கும் பணியைத்தான் பெரும்பாலும் செய்வார்கள்.. இந் நாட்களிலோ, ஆடவருக்கு அதிகக்கூலி என்பதால், பெண் களையும், இரண்டு ரூபாய்க் கூலிக்கு வரும் சிறுவர் சிறுமி களையும் ‘பாத்திமிதிக்க’ச் செய்கிறார்கள். மிதித்து மிதித்து மண்ணைப் பண்படுத்த வேண்டும். காலால் அழுத்தினால் அடிபதியலாகாது. இவ்வாறு பண்படுத்தும் பாத்திகளே உப்பை விளைவிக்கும் ‘பெண்’ பாத்திகள். ஆண்டு தோறும் தவறாமல் இந்தப் பெண் பாத்திகளுக்குக் குறையாமல் சீரெடுக்கவேண்டும். இந்தப் பாத்திகளில் விளையும் உப்பு வெள்ளை வெளேரென்று, தும்பைப்பூ வண்ணத்தில் கற்கண்டைப்போல் தோன்றும். அவ்வளவும் தூத்துக்குடித் துறையிலிருந்து ஏற்றுமதியாகும் ‘கல்சுத்தா’ உப்பு. 

இந்த அளத்தில் கடலிலிருந்து நேராக நீரைக் கொண்டு வருவதில்லை. கிணறுகள் தோண்டி, அதிலிருந்து நீரை இறைவை இயந்திரத்தால் தெப்பம் என்று சொல்லப்பெறும் முதல் பாத்திகளில் பாய்ச்சுகிறார்கள். இப்பாத்திகளில் நீரின் அடர்த்தி கூடியதும், முதல் கசடுகளான சேறு, கீழே படிந்துவிடும். இவ்வாறு ஆண்டு முழுவதும் படிந்த சேறு தான் இறுகிக் காய்ந்து நட்சத்திரச் சில்கள் பதித்தாற் போன்று ஜிப்சம் எனப் பெறும் கூட்டுப் பொருளாகிறது. இதைப் பெயர்த்தெடுக்கத்தான் கங்காணி, கண்ணுசாமியைத் தள்ளிச், செல்கிறான். 

“லே செவந்தகனி, சாமியாருக்கும் ‘சிப்சம்’ பேத்துக் குடு…இங்கிட்டு நின்னு திருப்பிப்போடுவாரு…” 

“செவந்தகனியா?” என்று திருப்பிக் கேட்கும் கண்ணு சாமி எங்கோ ஓர் மூலையில் நோக்குகிறான். 

‘ஆமா,நாதா,மெக்கிட்டா, காண்டிராக்டா மாமா?” “மெக்கிட்டுன்னுதா சொன்னா. எனக்கு என்ன எளவு தெரியிது?…” 

சிவந்தகனி மருதம்பாளுக்குத் தம்பி முறையாகக் கூடியவன். அவன் ஒரு பாளத்தை வெட்டி, கண்ணுசாமியின் கைகளில் வைக்கிறான். கண்ணுக்கு எல்லாம் மொத்தையாக இருக்கிறது. போகும் தடம் தெளிவாகத் தெரியாமல் எங்கே கொண்டு எப்படிப் போடுவான்? கண் கனிலிருந்து இனி வடிவதற்கு நீருமில்லை. ‘பல் முனைத்துப்’ போன அந்தப்பாளம் கைகளைக் குத்தி அவனை வளையச் செய்கிறது. தடம் தெரியாமல் அதையும் போட்டுக் கொண்டு விழுகிறான். 

“…கீள வுழுந்திட்டாரே… அவரால் ஆவாது.பாவம்…” சிவந்தகனி அவரைத் தட்டித் தூக்குகிறான். “எதும் அடிபட்டிச்சா மாமா? பாவம், உம்மால இனி அளத்து வேல செய்ய முடியுமா?…” 

அவன் தூக்கிய பாளம் நொறுங்கி மண்ணும் சில்லுமாகக் கண்களில் விழுப்புழுதி பரவுகிறது. உச்சியில் வழுக்கை, காதோரங்களில் வெண்மையும் கருமையுமாகப் பிரிபிரியாக முடிக்கற்றை; சென்ற ஆண்டின் இறுதியிலிருந்தே வேலைக்குப் பாதி நாள் வரமுடியாமல் ஆசுபத்திரிக்கும் சென்று வந்தான். கண் பார்வை மீளுமென்ற நம்பிக்கை ல்லை. அதற்குப் பிறகுதான் அவன் முகச்சவரமும் செய்து கொள்ளவில்லை. பார்வை போனாலும் வயிற்றுப் பசி குறைகிறதா? 

“சாமியாரே! உன்னால எதும் ஆவாது! இது வரய்க்கும் செஞ்சதுக்கு ரெண்டு ரூவாக்கூலி தாரேன்… அம்புட்டுத்தா…” என்று கங்காணிச் சுப்பன் கோடு கிழித்துவிடுகிறான். 

ரெண்டு ரூபா… மருதாம்பாளுக்கு நான்கு ரூபாய் வரும். வீட்டில் நான்கு குழந்தைகள்…மழைக்காலம் முழுவதும் வேலை கிடையாது. அப்போது வாங்கித்தின்ற கடன், வீட்டு வாடகை, பழைய கடன், புதிய கடன், அரிசி,விறகு, செலவு சாமான்களின் விலைகள்…

மண்ணிலே விழுந்தவனால் எழுந்திருக்க இயலாத பாரங்கள் அழுத்துகின்றன. பகல் நேர உணவுக்கு மணி அடிக்கிறது. 

மருதாம்பா வந்து அவன் கையைப்பற்றி அழைக்கிறாள். 

“வுழுந்திட்டயளா, சிவந்தகனி சொன்னா. செவனேன்னு பாத்தி மிதிச்சிய. வேலையில்லேன்னா… போறா, நீரு வாரும்.” 

உணர்ச்சிகள் களரியாக மோதுகின்றன. வாலிபம் கிளர்ந்த காலத்தில் அவன் துறைமுகத்தில் தொழிலாளி யாக இருந்தான். முட்டையும், கறியும் தின்று வளர்த்த உடலில் நிமிர்ந்த ஆணவத்திமிர் இன்று கரைந்து, குத்துப் பட்டு வீழ்ந்து விட்டாலும், அந்தப் பழைய வடிவத்தை இன்னமும் நினைப்பூட்டும் உடலியல்பு மாறிவிடவில்லை. கருமை பாய்ந்து தடித்த நெற்றியும், நரம்புகள் புடைத்துத் தசைகள் ‘முறுகத்’ தெரியும் தோள்களும் கால்களும் தளர்ச்சியைக் காட்டவில்லை, மருதாம்பா அவன் கையைப் பற்றியிருக்கிறாள். அவள் கையிலும் நரம்புகள் புடைக்க, எலும்பு முட்டியிருக்கிறது. அந்தக் கை, ஒரு காலத்தில் எப்படி இருக்கும்? 

மடையோரம் செழித்து வளர்ந்த தாழையின் நடுவே பூத்த குலைபோல் இருப்பாள். அவளைக் கட்டியவன் ஒரு கிழவன், ஈர்க்குச்சி போல் கையும் காலுமாக ஒரு சீக்காளி பட்டாணி வறுக்கும் கடையில் வேலை செய்த அவன் கையில் கிடைத்ததைக் குடித்து விட்டும் வருவான். முதல் தாரத்துக்கு மூன்று வளர்ந்த பிள்ளைகள். 

மருதாம்பா துறைமுகத்தில் மூட்டை சுமக்க வந்த காலத்தில் அந்தக் கங்காணிக்கு இரையாகு முன் இவன் பார்வையில் உருகிப் போனாள். இவனுக்கும் அப்போது கல்யாணமாயிருந்தது. ஒரு மகளும் மகனுமாகக் குழந்தை களும் இருந்தார்கள். ஆனால் கட்டியவள் ஒரு முகடு. இவனுக்கு ஈடு கொடுக்கத் திராணியில்லாதவள். எனவே இவளை அவன் சேர்த்துக் கொண்டான். துறைமுகத்துத், தொழிலை விட்டு அந்நாளில் இவன் உப்பளத் தொழிலுக் குக் காண்டிராக்டாக வந்தான். கையில் காசு குலுங்கியது. ஆனால் இளமையும் எழிலும் நிறைந்த பெண்பிள்ளைக் குப் புருசன் உடன் இருந்தாலே, தொழிற்களங்களில் அவர்கள் வரப்போரத்து மலர்களாகக் கருதப்படுவார் கள். கண்ணுசாமி அவளுக்குப் புருசனுமில்லை. எனவே அவன் பிரமித்துப் போனாற் போல் உட்கார்ந்திருக்கிறான். 

”ஏன்ல…? கலியாணம் கட்டியிருக்கியா?” “இல்ல…” 

“ஏ? ஒரு தங்கச்சி இருந்து அதும் செத்திட்டுன்னு சொன்னாவ. பொறவு ஓ ஆத்தாக்குத்தா ஆரிருக்கா! காலத்துல ஒரு கலியாணம் கெட்டண்டாமா?” 

அப்போது பொன்னாச்சி வட்டக் கொப்பியில் கருப் பட்டிக் காபி எடுத்து வருகிறாள். 

செங்கமலம் அதை வாங்கி அவன் முன் வைக்கிறாள். 

“குடிச்சிக்கவே…” 

அவன் அதைப் பருகுகையில் பொன்னாச்சி வாயிற்படிக் கருகில் நின்று அவனைப் பார்க்கிறாள். மாலை குறுகும் அந்த நேரத்தில் அவளை மின்னற்கொடியே தழுவியிருப்பது போல் தோன்றுகிறது. 

“வெத்தில போடுவியால?” 

“போடுறதில்ல…” 

”உங்கய்யா வெத்தில இல்லாம ஒரு நேரம் இருக்க மாட்டா…” அவள் காம்பைக் கிழித்துச் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டு உதிர்க்கும் அந்தச் சொற்களில்… போகிற போக்கில் மருமங்கள் பற்களைத் திறந்து உட்புறம் காட்டி னாற்போல் அவன் குலுங்கிக் கொள்கிறான். அவன் ஏதும் வாய் திறக்குமுன் பேச்சு மாறி விடுகிறது. 

“இப்ப வூட்டுக்குத்தாம் போறியா? கொடைக்கிப் போவலியா?” 

“நம்ம கொட இப்ப பெரிசாயிருக்கு. மூணாந்தெருவில எதோ வூடிருக்குன்னாவ. வித்துமூடைத் தரகனார் வெள்ளச் சாமியிருக்காரில்ல? அவெ சொன்னா. இப்படீ வாரப்ப, இந்தத் தெருவளவுல் இந்தப்புள்ள இருக்கறதாச் சொன்ன நெனப்பு வந்தது. நொழஞ்ச…” 

“ஒங்கக்கு ரொம்ப சிநேவம் போலிருக்கு…”

அவன் மனம் மலர்ந்து சிரிப்பு பொங்குகிறது. 

இவள் நிமித்தமாக அந்தக் கணக்கப்பிள்ளைச் சுடலை மாடனிடம் மோத வேண்டியிருந்தது. அவன் சாய்கால் உள்ளவன். இவன் மீது கொலைக்குற்றம் சுமத்திச் சிறைக் கும் அனுப்பி வைத்தான். சிறையில் மூன்றாண்டுகள் கழித்துவிட்டுத் திரும்பி இவன் வந்த போது, மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிறந்தகம் சென்று விட்டாள். 

மருதாம்பாதான் இவனைக் கண்டு வீட்டுக்கழைத்துச் சென்றாள். அவள் கிழவனை விட்டு வந்துவிட்டாள். அந்தக் கணக்கப்பிள்ளை அளத்திலும் வேலை செய்ய வில்லை. இருவரும் அந்நாளிலிருந்து சேர்ந்து வாழ்கிறார் கள். இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களுமாகக் குழந்தைகள் குடும்பம். ‘தாலிக்கெட்டை’ப் பற்றிக் படாமல் வளர்ந்திருந்தாலும், தொழில் இத்தனை ஆண்டுகளில் அவர்களுடைய வண்மையைக் கூட்டியிருக்கவில்லை. உப்பளத் தொழில் அத்தகையது தான். எப்போதேனும் அந்த மணற்கரையில் பெய்யும் மழையைப் போன்ற அந்த அற்பக் கூலியினால் அவர்கள் பசித்தீயை முற்றிலும் அவித்து வறட்சியைத் தீர்க்க முடிவதில்லை. 

வழுக்கு மரமாகத் தெரிந்த வாழ்க்கையில் அவர்களால் ஏறவே முடியவில்லை. மருதாம்பா சட்டுவமாகத் தேய்ந்து போனாள். ஒவ்வொரு மழைக்காலமும் சோதனைக்காலம். இடையில் பத்துப் பதினைந்து நாட்கள் எங்கேனும் கூலி வேலை கிடைத்தாலே பெரிது. அந்தக் கண்டம் தப்பி புத்தாண்டென்று பாத்திப் பண்பாட்டுக்குத் தொழிலாளர் வரும்போது, அவர்களது அவல நிலையை உப்பளத்து முதலாளிமார் முற்றிலும் பயன்படுத்திக் கொள்கின் றனர் என்றால் தவறில்லை. ஐந்து ரூபாய் கூலி பேசிவிட்டு மூன்று ரூபாய் கொடுத்தாலும் மீறிச் சென்றுவிட இயலா மல் அவர்கள் பொருளாதார நிலை குழிபறித்து வைத்திருக்கிறது. 

பன ஓலை கொண்டு வேயப்பெற்ற அந்தக் கொட்ட கையில் உள்ளே சந்து சந்தாக வெய்யில் விழுந்து அவர்கள் உணவு கொள்வதைப் பார்க்கிறது. “மேல் வெயில்… தள்ளி ஒக்காரும்” என்று மருதாம்பா அவனை நகரச் செய்கிறாள். பிறகு உணவுப் பாத்திரத்தைத் திறந்து, ஒரு வெங்காயத் துண்டையும் பச்சை மிளகாய்த் துண்டையும் கேழ்வரகுக் களியின் உருண்டையையும் அவன் கையில் வைத்துக் கொடுக்கிறான். 

நசுக்கப் பெறும் உணர்வுகள் அலையலையாக உந்த, உள்ளத்து விம்மல் வெளிப்படுகிறது. “நீ தேடிச் சோறு போட ஒக்காந்திட்டேன் பாத்தியா?” என்று விம்முகிறான். 

“பேசாதிரிம்…” என்று இரகசியக் குரலில் கடிந்து கொள் கிறாள் மருதாம்பா. 

அங்கே வேலை செய்யும் அனைவருக்குமாக ஒரு பானை தண்ணீர்தான் குடிப்பதற்கு வைத்திருக்கிறார்கள். 

“ஏத்தா மொவத்தத் தொழில கழுவிக்கிறதுக்கென்ன…” என்று சிவந்தகனி யாரையோ சண்டை போடுகிறான். 

“நானென்ன சொம்பு தண்ணீயா எடுத்த? ஒரு கிளாசு, ஓங்காருவாரு தூள் பறக்கு….?” 

“இந்த அளத்துல தாவில! முன்ன பளஞ்சிபுர அளத்துல குடிக்க ஒரு சின்ன பக்கெட்டி தண்ணிதா வரும். அம்புட்டுப் பேரும் அத்தத்தா குடிக்கணும். ஒரு செறட்ட நீரு கெடய்க்காது செல நா. சித்திரக்கோடையில கெடந்து எரியுவம்….” என்று ஒரு கிழவி திருப்திப்படுகிறாள். 

கும்பியின் எரிச்சலைச் சோறு சற்றே தணித்தாலும், தண்ணீர்த் தாகம்…! 

“எல்லாம் குடிச்சிப் போடாதிய” என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தங்கள் தங்கள் தூக்குப் பாத்திரங்களில் சிறிது நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். சிவந்தகனிதான் பங்கீடு செய்கிறான். “ந்திரீ…ஊத்து….” என்று கிழவி குழிந்த மூடியை மீண்டும் நீட்டுகையில் அவன் கண்டிப்பாக மறுக்கிறான். “ருக்மணி, புள்ளக்கிப் பாலு கொடுக்கா அவக்கு வேணும்” என்று பானையின் அடியில் ஒரு தம்ளர் தானிருக்கிறதென்று காட்டுகிறான். 

வெற்றிலைச் சருகும் புகையிலையும் போடுகிறவர்களும், பீடி கொளுத்தி வைப்பவர்களும், ஏதேனும் கட்டை தேடித் தலைக்கு வைத்துக்கொண்டு தலையைச் சாய்ப்பவர்களுமாக, சோற்றுக்கடை முடிகிறது. 

“ஏத்தா, கங்காணிய பெரியாசுபத்திரில் கொண்டு காட்டல?… என்று மருதாம்பாளிடம் லெட்சுமி கேட் கிறாள். கண்ணுசாமி கங்காணி இல்லைதான். ஆனால் லெட்சுமிக்கு எல்லா டவர்களும் கங்காணி என்றே நினைப்பு. 

“பெரியாசுவத்திரில் தா டாக்டர் பாத்து ஆபிரசன் பண்ணமின்னா; ஆபுரசன் பண்ணா சுத்தமா கண்ணு தெரியாம போயிடுமிண்ணு சொல்றாவ. இப்ப சோலியெடுக்க முடியாம இல்ல கடையில போயி சாமானம் வாங்கிட்டு வருவா. எங்க வளவில் அவிய பாட்டுக்கு நடந்திட்டுத் தா போவா, இந்த உப்பளத்துச் சூடு தா அக்கினியாட்டமா கண்ணுக்கு ஆவுறதில்லே…” என்று கூறுகிறாள் மருதாம்பா; 

மீண்டும் மருதாம்பா பாத்தி மிதிக்கச் சென்று, மலை வாயில் கதிரவன் சாயும் வரையிலும் அவள் வேலை செய்யும் வரையிலும் கண்ணுசாமி அந்தக் கொட்டடியில் பிரும்மமாக. உட்கார்ந்திருக்கிறான். ஐந்தரை மணியோடு பாத்தி மிதிப்பு ஓய்கிறது. 

“வாரும் போவலாம்…!” 

அவர்கள் குடியிருக்கும் இடம் இரண்டு மைல் தொலைவு இருக்கிறது. எல்லோரும் கைகளில் தூக்குப் பாத்திரங்களுடன் நடக்கின்றனர். சிறுவர்கள் ஓடுகின்ற னர். பனை மரங்களினூடே செங்கதிரோன் இறுதியாகப் பிரியா விடை பெறும் ஒளியைப் பாய்ச்சுகிறான். நெருங்கி வரும் மருதாம்பா, அவன் செவிகளில் மட்டும் விழும்படியாகக் கேட்கிறாள். 

“ஏன் சவங்கிப் போயிட்டிய…?” 

“சவங்காம என்ன செய்ய? ரெண்டு ரூவாக் கூலிக்குக் கூட ஏலாமப் போயிட்டனில்லா…” 

அவனுடைய கை, வார் பலகைக் கம்பைப் பிடித்துப் பிய்த்துக் காய்த்துக் கடினமாகி விட்ட கை, அவள் மணிக் கட்டைப் பற்றி அந்த எலும்பு முழியை அழுத்துகிறது. 

“…நா…. நாத்திக்கிழம போயி அந்த வுள்ளயக் கூட்டிட்டு வார. 

“எந்த வுள்ள?” 

“அதா, ஒங்க வுள்ள பொன்னாச்சி பயலும் வரட்டும். ரெண்டோட ரெண்டா இருக்கட்டும். போன வருச மானோம்புக்குப் போனப்பவே செவந்தகனி பொஞ்சாதி சொன்னா. அவியளுக்கும் அஞ்சாறு வுள்ள; தம்பாட்டளத்துல ஒண்ணும் கண்டு முதலாவுறதில்ல. நெதவும் அடி யும் மிதியுந்தான்னா. இங்கு நாம கூட்டி வச்சிக்குவம். நாம் குடிக்கிற கஞ்சிய அதுங்கக்கும் ஊத்துவம்னு தோணிட்டே இருக்கி: என்னாந்தாலும் அவிய ஆத்தா அநுபவிக்கிற சொத்து, நா அவகரிச்சிற்ற….” 

இருளில் ஒலிக்கும் மந்திரச் சொற்களைப் போல அவன் செவிகளில் விழுகின்றன. அவன் ஆதரிக்கும் நெடு மரம் காய்ந்து பட்டுப்போகும் நிலையிலிருக்கிறான். தாயற்ற அந்தக் குழந்தைகளையும் கூட்டி வருவதாக அவள் சொல்கிறாள். 

இது… 

அவன் மெளனமாக நடக்கிறான். 

அத்தியாயம்-2

மருதாம்பா வாழ்க்கையின் மேடுபள்ளங்களுக்கிடையே யுள்ள முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்துவிட மாட்டாள். குடிகாரத் தந்தையும் அடிப்பட்டுப் பட்டினி கிடந்து நோவும் நொம்பரமும் அனுபவித்த தாயையும் விட்டு ஒரு கிழவனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டுப் பிழைக்க வந்த போதும், தனது இளமைக்கும் எழிலுக்கும் வேறு கிளைகளில் பயன்களுண்டு என்று அவள் வயிறு பிழைக்க வந்த களத்தில் உணர்த்தப்பட்டபோதும் அவள் விம்மி எழவுமில்லை; சுணங்கிச் சோர்ந்து விடவுமில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் இலட்சியங்களோ, பற்றுக் கோடுகளோ எதுவு மில்லை. வாழ்க்கை என்பதே பசியோடும், வேற அடிப் படைத் தேவைகளோடும், உடலுழைப்போடும் ஏற்படும் இடைவிடாத போராட்டம், அதற்காகவேதான் மனித பந்தங்கள்; பொருளாதாரத் ைேவகளின் அடிப்படையிலேயே கிளைக்கும் நெருக்கடிகளும் வாய்ப்புகளும்தான் அவளைப் போன்றோருக்கு வாழ்க்கையின் போக்கையே அமைக்கின்றன என்று தெரிந்தவள் அவள். 

தெப்பத்தில் ஒதுக்கப்பெறும் கடல்நீரைப்போல் அவர்கள் தங்கள் உடலுழைப்பை யாருக்காகவோ குவிக் கின்றனர். கடல்நீர் தனது சாரத்தைப் பாத்திகளில் மணி களாக ஈந்துவிட்டு *நஞ்சோடையாக வெளியேறும்போது யாரோ அதைக் கவனிக்கிறார்கள்! எங்கேனும் தறிகெட்டு ஓடி மணலோடையில் போய்ச்சேரும். அல்லது எங்கே னும் காட்டிலே போய்த் தேங்கி முடியும். அவர்களுடைய உரமும் அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக்கொள்ளும் முயற்சியிலேயே பாத்திக் லும் உருகிக் கரைகின் பயப்படாத நஞ்சோடை நீர்போல் ஒதுக்கப்படுகின்றனர். கண்ணுசாமியினால் காடுகளிலும், தட்டு மேடுகளி பின்னர் யாருக்கும் எதற்கும் அந்தக் குடும்பத்தைத் தாங்கும் முயற்சியில் இனி எதுவும் செய்ய முடியாது. மருதாம்பா அந்த ஞாயிற்றுக்கிழமையிலேயே அவனுடைய மகனையும் மகளையும் அழைத்து வருவதைத் தவிர வேறு வழி ஏது மில்லை என்று நிச்சயம் செய்துவிட்டாள். 

பெரியகடை வீதியில் மிட்டாய்க்கடையில் கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயும் சேவும் வாங்கிக் கொள்கிறாள். பொரிகடலை, பழம் எல்லாவற்றையும் ஒரு பைக்குள் வைத்துக்கொண்டு சிவந்தகனியுடன் திருச்செந்தூர் பஸ் போகும் மூலையில் வந்து நிற்கிறாள். சிவந்துகனியின் மனைவி தாய்வீட்டில் பிள்ளை பெற்றிருக்கிறாள். அவளுக்குச் சிறுகாயல்தான் ஊர். அதனால்தான் அவனுடன் கிளம்பி இருக்கிறாள். மச்சான் என்று கண்ணுசாமி மனைவியின் தமையனாரைக் கொண்டாடியதில்லை என்றாலும் அவர். மீது அவனுக்குப் பெருமதிப்பு உண்டு. அவர் வழியே தனி. கொஞ்சம் படிப்பு, உலக அநுபவம். அரசியலில் ஈடுபாடு எல்லாம் உடையவர். அவரும் சிறைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அது மிகவும் கௌரவத்தைக் கொடுக்கக் கூடியதோர் அனுபவமாக அவர் பெருமையைக் கூட்டியிருக்கிறது. 

மருதாம்பா, அவரைக் கண்ணுசாமி சிறைக்குச் சென்ற காலத்தில் அவர் வந்தபோது பார்த்திருக்கிறாள். முதல் மனைவி செவந்தியை அவர்தான் வந்து கூட்டிச் சென்றார் செவந்தியை அவருக்குத் தங்கை என்றே மதிப்பிடமுடியாது. மகள் என்று சொல்லலாம். அந்நாளிலே முடி நரைத்துச் சுருக்கங்கள் விழுந்து ஐம்பது வயசு மதிக்கத் தோற்றமளித் தார். செவந்தி இறந்துபோனபோது நல்லகண்ணு சிறையில் தான் இருந்தான். அப்போது சிவந்தகனி அங்கு பெண் கட்டியிருக்கவில்லை. வெகுநாட்கள் சென்ற பின்னரே அந்தச் செய்தி தெரிய வந்தது. பிறகு ஒரு நாள் அவர் பொன்னாச்சியையும் பையனையும் அழைத்துக்கொண்டு அவர்கள் இருப்பிடம் தேடி வந்ததாக அவளுக்குச் சேதிதான் தெரிந்தது. அந்நாள் புருஷன் பெண்சாதி இருவரும் இரவில் இரட்டை கூலி வருகிறதென்று உப்பு வாரச் சென்றிருந்தனர். பொன்னாச்சி வயசுக்கு வந்து நீராட்டு விழா எதுவும் கொண்டாடிக் கடிதம் வரவில்லை. ஆனால் சிவந்தகனியின் பெண்சாதி மாரியம்மா பெண் வயசுக்கு வந்துவிட்ட விவரம் தெரிவித்திருக்கிறாள். 

மணப்பாடு செல்லும் பஸ் வருகிறது, அது பதினைந்து நிமிடங்களில் அவர்களைக் கொண்டு வந்து மாதாகோயிலின் முன் இறக்கிவிடுகிறது. பரதவர் குடியிருக்கும் ஊர் அது. ஞாயிற்றுக்கிழமையாதலால் மாதாகோயிலில் பூசை நடந்து கொண்டிரு க்கிறது. வெயில் சுள்ளென்று விழுகிறது. பஸ் நிறுத்தத்தில், மொந்தன் பழக்குலை, கடலை மிட்டாய், பீடிக்கட்டு, சோப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட கடை ஒன்றும், புரூ காப்பி பொம்மை ஒட்டியதோர் விளம்பரத்துடன் சாக்குப்படுதா தொங்கும் டீக்கடை ஒன்றும் இருக்கின்றன. மண்ணில், உச்சி எண்ணெய் பளபளக்கச் சிறுவர் சிலர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அரையில் மட்டும் ஒரு சேலைத் துண்டைச் சுற்றிக்கொண்டு வெற்று டம்புடன் கூடிய ஒரு சிறுமி தன் இளம் இடுப்பில் மார்புக்கூடு பின்னித் தெரியும் ஒரு பிஞ்சுக் குழந்தையைச் சுமந்தவளாக பஸ்ஸிலிருந்து இறங்கிய அவர்களை வேடிக்கைப் பார்க்கிறாள். மாதா கோயிலைச் சுற்றியிருந்து தெருக்கள் பரதவர் குடியிருப்பு என்று துலங்குகிறது. வெயிலில் கிடக்கும் வலை களும், கருவாட்டு மீன்களைக் காவல் காத்தபடி குந்தி யிருந்து பேசும் பெண்களும் அவர்கள் செல்லுவதைப் பார்க்கின்றனர். 

பரதவர் குடியிருப்பைக் கடந்தால் பசுஞ்சோலைகளாகத் தன்னை, முருங்கை, ஆமணக்கு என்று மரங்களும், இடையே காரைக்கட்டு வீடுகளும் வருகின்றன. தென்னங்கிடுகுகளால் ஆன வேலிகளும், நித்திய மல்லிகைப் பூங்கொடியும் மஞ்சள் குங்கும வாயில் நிலைகளும் அந்த வீடுகளுக்குரியவர்கள் பொருளாதார நிலையில் சற்றே மேம்பட்டவர்கள் என்று உணர்த்துகின்றன. மாகாளியம்மன் கோயில் அங்கே நிலை பெற்றிருக்கிறது. 

அப்பால் பனஓலைக் கூரை வீடுகள் தெரிகின்றன. சுரைக்கொடி படர்ந்த கூரைகள், மண் சுவர்கள், குலுகுலு வென்று மணலில் விளையாடும் குழந்தைக் கூட்டம், கோழிகள்… மண்ணில் நிழல் கண் இடங்களில் குந்தி ஈருருவிக் கொண்டோ வம்பளந்து கொண்டோ இருக்கும் பெண்கள்…. 

“அதா ஒரு புள்ள ஒரல்ல குத்திக்கிட்டிருக்குப் பாரு. அந்தவூடுதா. எனக்கு இன்னும் மேக்கே ஒரு கல்லுப் போல போவணும். நா அஞ்சு மணி பஸ்ஸுக்குச் சரியா வாரேன். நீ கடத்தெருவில் வந்து நில்லு…” என்று கூறி சிவந்தகனி அவளைப் பையும் கையுமாக அங்கேயே விட்டுவிட்டுப் போகிறான். 

உரலில் கம்பு ‘துவைத்து’க் கொண்டிருக்கும் பொன் னாச்சி தங்களை நோக்கி வரும் பெண்பிள்ளை யாரோ என்று கூர்ந்து நோக்குகிறாள். அவளுடைய மாமி அப்போது அடுத்த வீட்டுக்காரியுடன் அவள் இறைத்த தீனியை அயல் வீட்டுக் கோழி வந்து பொறுக்கித் தின்று விடுவது கண்டு இரைந்து கொண்டிருக்கிறாள். 

“சவங்க… இங்கெ வந்து அம்புட்டியும் தின்னுதீக்கு. அவவ கோளிய அடுத்தூட்டுக்கு வெரட்டிக் கொளுக்கவய்க் கிறாளுவ… என்று மாமி இரைகையில், எட்டு வயசுள்ள குமரவேலு சிரித்துக் கொண்டு, “யம்மா, அந்தக் கறுப்பு கோளிய நாம ஒரு நா விருந்து வச்சிடுவம்…” என்று கூறுகிறான். 

“வாப்பீங்கலே! முளியத் தோண்டிப் போடுவ!” என்று அடுத்த வீட்டுச் சாக்குப்படுதாவுக்குள்ளிருந்து ஆகிரோஷ மான குரலுடன், அந்த வீட்டுக்குரியவள் வெளிப்படுகிறாள். 

இருபுறங்களிலும் நெருப்புப் பொறிகள் சீறும் நேரத்தில் மருதாம்பா போய்ச் சேருகிறாள். 

பொன்னாச்சியை மருதாம்பா பார்த்த மாத்திரத்தில் கண்டு கொள்கிறாள். மாநிறம்தான். அப்பனைப் போல் அகன்ற நெற்றி. வட்டமான கண்கள், முடி சுருண்டு அலையலையாக இருக்கிறது. 

குமரவேலு திரும்பிப் பார்க்கிறான். மூலையில் ஏழாங் காயாடிக் கொண்டிருக்கும் வள்ளியும் குஞ்சரியும் எழுந்து வந்து பார்க்கின்றனர். மாமியும் உற்றுப் பார்த்து, தன் கட்டைக் குரலால், “யாரு?” என்று கேட்டு விழிகளை உயர்த்துகிறாள். 

மருதாம்பா இடுப்பிலிருந்த பையைக் கீழே இறக்குகையில் அதில் பழமும் பனையோலைப் பெட்டியும் இருப்பது தெரி கின்றன. புன்னகை இதழ்களில் மலருகின்றன. 

“மயினி, என்னத் தெரியலியா? இது பொன்னாச்சிதான? நா, சின்னாச்சிதா வந்திருக்கிற.அவிய ஒடம்பு வாசியில்லாம இருக்காவ . சோலியெடுக்கவும் முடியல. நெதமும் பிள்ளை யளப் பார்க்கணும் கூட்டிட்டுவா, கூட்டிட்டு வாண்டு சொல்லிட்டே இருக்காவ… 

மாமி முகத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயமாகப் பார்க்கிறாள். அந்தத் தெருவே இந்த அதிசயத்தைக் கண்டு மலைக்கிறது. 

“ஆரு?… இவதா செவந்திக்குச் சக்களத்தியா?” என்று சருருவிக் கொண்டிருந்த கிழவி வந்து அவளை உற்றும் பார்க்கிறாள். 

“அப்பெ வந்திருக்கிறானோ?” 

“இல்ல…” என்று மருதாம்பா தலையசைக்கிறாள். 

மாமி சிதம்பர வடிவு கோழியைக் கூடையைப் 
போட்டு மூடிவிட்டு “உள்ளே வாரும்” என்றழைத்துச் செல்கிறாள். தட்டி கட்டிய திண்ணையை அடுத்த உள் வீட்டில் கம்போ கேழ்வரகோ புடைத்த தவிடு பரந்திருக்கிறது. 

துணிகள், அழுக்காகத் தொங்கும் கொடி. சுவரிலும் கிறுக்கல்களும் சுண்ணாம்புத் தீற்றலும் சிவந்தச் சாந்துக் கையின் தீற்றலும் நிறைந்திருக்கின்றன. ஐந்து வயசு மதிக்கக் கூடிய பையன் ஒருவன் காகிதத்தைச் சுருட்டி சோப்பைக் கரைத்துப் பின் தாழ்வரையில் ஏதோ முயற்சி செய்து கொண்டிருக்கிறான். 

சிதம்பர வடிவு ஓடிப்போய் அவன் முதுகில் இரண்டு வைக்கிறாள். அவன் கையிலிருந்து ஒரு நீல சோப்புத் துண்டை மீட்கிறாள். 

“கரியாப் போற பய, சோப்பைக் கரைக்கிறதே வேல!” என்று பின்னும் ஓர் அறை வைக்க, அவன் வாயைப் பிளந்து கொண்டு இயன்ற மட்டும் குரலெடுக்கிறான். 

“இங்க வால…’ ” என்று மருதாம்பா அழைப்பது கண்டு அவன் திறந்த வாயை மூடியும் மூடாமலும் திகைத்தவாறே கையிலிருக்கும் அவளுடைய பழத்தால் ஈர்க்கப்பட்டு வருகிறான். மிட்டாய்ப் பெட்டி, கடலை எல்லாம் வெளியாகின்றன. 

“பொன்னாச்சி மாமா ஊரில இல்ல. திர்நேலி போயிருக்கா. மாப்ளக்கி என்ன ஒடம்பு?” 

“போன வருஷம் நீர்க்கோவ வந்து காலு நீட்ட முடியாம இருந்தாவ. அப்பமே பாதி நா சோலி எடுக்க முடியாமதா இருந்தாவ. பொறவு என்னேய? – ரொம்பவும் மனத்தாவப் படுறாவ. நா எந்த மொவத்த வச்சிட்டுப் போவமின்னு. நாம போவம்னாலும் கேக்கல. அல்ல நீரு செவந்தனியக் கூட்டிட்டுப் போய் வாரும்னாலும் எப்பிடிப் போவமின்னு தாவப்படுறாவ. பிள்ளியளப் பாக்கணுமின்னும் மனசு அடிக்கி அந்த பிள்ளியளுக்கும் அப்பச்சி வந்து பாத்தாரா கொண்டாராண்டு மனசில இருக்காதா? நேத்து நா சோலி யெடுத்திட்டு வாரயில பிள்ளயளப் பாக்கணுமின்னு கெடந்து கரயிறா. நாயித்துக்கௌம, கூட்டிட்டுவாரமின்னு வந்தே…” 

பொன்னாச்சியின் உள்ளம் பௌர்ணமைக் கடலாக எழும்புகிறது. மாமி என்ன சொல்வாளோ என்று பார்க்கிறாள். 

“ஒங்க மக்கள நீங்க கூட்டிட்டுப் போகத்தா வந்திருக்கிய. ஆனா, அவிய ஊருல இல்லாதப்ப கூட்டிட்டு போறதுன்னா எப்பிடின்னு பாக்கேன்…” 

மருதாம்பா உள்ளே வந்த குமரவேலு, வள்ளி, குஞ்சரி எல்லோருக்கும் கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயையும் சேவை யும் எடுத்துக் கொடுத்துவிட்டுப் பெட்டியை அப்படியே சாமி கையில் கொடுக்கிறாள். 

பொன்னாச்சி உரலில் துவைத்துக் கொண்டிருந்த கம்புக் குருணையை வட்டச்சுளகில் வாரிக் கொண்டுவந்து வைக் கிறாள். உள்ளே தாழ்வரை அடுப்பில் பாணையில் நீர் கொதிக்கிறது. 

மாமி பொன்னாச்சியை அழைத்து, “கடையிலே போயி கருப்பட்டியும் காப்பித்தூளும் வாங்கிட்டுவா, அப்பச்சி வந்ததும் காசு தாரன்னு சொல்லு” என்று அனுப்புகிறாள். 

பதினெட்டைக் கடந்துவிட்ட பொன்னாச்சிக்குச் சிறு குழந்தையாகி விட்டாற் போலிருக்கிறது. மாமி ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து பொழுது போகும் வரையிலும் அவளுக்கும் தம்பிக்கும் அவர்களைத் தவிர யாருமில்லை என்று குத்திக் காட்டிக் கொண்டிருக்கிறாள். தங்கள் குடும்பத்துக்கே வருவாய் போதாமல் தத்தளித்துக் கொண்டி ருக்கையில் நாத்தி மக்கள் இருவருக்கும் சோறோ, கஞ்சியோ பங்குவைக்க வேண்டியிருக்கிறது; அவர்களை வைத்துக் கொண்டிருப்பது தேவையில்லாதது என்பது அவள் கருத்து. 

பொன்னாச்சி எத்தனை நாட்கள் பட்டினியுடன் கண் ணீர் வடித்திருக்கிறாள்! மகாகாளியம்மனை அவள் வேண்டாத நாளில்லை. வீட்டுக்குத் தண்ணீர் கொண்டு வருவ தும், குத்துவதும் தீட்டுவதும் பெருக்குவதும் மெழுகுவதும் ஆக்குவதும் கழுவுவதும் அவள்தான். மாமி யாரையேனும் எப்போதும் ஏசிக் கொண்டிருப்பாள். நிரந்தரமாக அதற்கு உரியவர்கள் காலஞ்சென்ற நாத்தி, அவள் கண்காணாக் கணவன், பாரமாகிவிட்ட மக்கள், பிறகு, பிறரிடம் நிரந்தரக் கூலிக்குப் போகமாட்டேன் என்று தன் பட்டாளத்தைக் கட்டிக் கொண்டு மூட்டை உப்பு முக்கால் ரூபாய்க்கேனும் போகுமோ என்று அவதியுறும் அசட்டுப் புருசனை ஏசுவாள். மாமாவுக்குத் திருச்செந்தூர் வேலனிடம் அளப்பரிய பக்தி உண்டு. எனவே ஐந்து மக்களுக்கும் அவன் பெயரையே வைத்திருக்கிறார். பெரியவன் சக்திவேல் திருநெல்வேலியில், ல்லூரியில் இரண்டாண்டுகளாகப் படிக்கிறான். இரண்டாவது குழந்தை பிறந்ததும் இறந்து விட்டது. அடுத்து வள்ளி; அவளுக்குப் பன்னிரண்டு வயசாகிறது. இன்னும் வயசுக்கு வரவில்லை. பிறகு குஞ்சரி, குமரவேல், அடுத்தவன், ஞானவேல் கடைக்குட்டி, மாமி தூத்துக்குடி, ஆஸ்பத்திரியில் அவனைப் பெற்றதும் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்து கொண்டு விட்டாள். அதனால் உடலுழைக்கக் கூடாது என்ற கருத்தில் வீட்டுப் பணிகள் ஏதும் செய்ய மாட்டாள். 

கடைவாயிலில் மூன்றாம் வீட்டு இசக்கி குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு நிற்கிறாள். 

“ஆரு வந்திருக்கிறாவ?” என்று விசாரிக்கிறாள்.

“என்னக்த சின்னாச்சி. அப்பச்சி ரெண்டாந்தாரம் கெட்டல? அவ, என்னையும் தம்பியையும் கூட்டியாச் சொல்லி அனுப்பியிருக்கா.” பொன்னாச்சிக்கு முகத்தில் பெருமை பொங்குகிறது. 

“நீங்க போகப் போறியளா? தூத்துக்குடிக்கா?” 

ஒரு புதுமையுமில்லாத இந்தக் கிராமத்தை விட்டு நீங்கள் தூத்துக்குடிப் பட்டணத்துக்குப் போகப் போகி றீர்களா என்ற வியப்பில் இசக்கி கண்களை அகல விரிக்கிறாள். 

“பொறவு இங்க இனி என்ன சோலி? அப்பச்சிக்கு. ஒடம்பு முடியலியா, அப்ப நாம போயிப் பாக்கண்டா?” 

“மாமி அனுப்பிச்சிக் குடுப்பாவளா?” 

“குடுக்காம? குடுத்துத்தானே ஆவணும், நாங்க போயிடு வோம். பச்சையப்பய எங்கேன்னு தெரியல. எங்க போனா? நீ பாத்தியர்?”

“அதா, அந்தால ஜேம்சுகூடப் போனா…” 

“பரவப் பிள்ளியகூடப் போய்த் தொலையிறா குடியப் பழகிக்குடுத்திடுவா. போட்டும் தூத்துக்குடிக்குப் போயிட் டா அங்ஙன இந்தச் சல்லிய மெல்லாம் இல்ல…’ என்று எண்ணிக் கொண்டு கடைக்காரரிடம் காபித்தூளும் கஞ் பட்டியும் மாமி கூறியபடி கடனுக்குக் கேட்கிறாள். 

கடைக்காரன் கடனுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. அவள் நேராக முன்சீஃப் ஐயா வீட்டுச் சந்து வழிச் சென்று பின், முற்றத்தில் வந்து நிற்கிறாள். 

“ஆச்சி…!” என்று அவள் குரல் கொடுக்கையில் சந்து வழியாக உப்புப்பெட்டியும் கையுமாக வரும் தங்கபாண்டி “ஆரு? பொன்னாச்சியா…?” என்று கண்களை அகல விரிக் கிறான். அவள் தள்ளி நிற்கிறாள். 

“ஆச்சி இல்லையே? ஆறுமுவனேரி போயிருக்காவி காலமே சொல்லிட்டுப் போனாவ…” என்று கொட்டிலில் உள்ள திண்ணையில் உப்புப் பெட்டியை அவள் வைக்கிறாள். 

“ஆச்சிக்கு இப்ப என்ன…?” 

ஒரு விஷமச் சிரிப்பை நெளிய விட்டவாறு அவளை ஏற இறங்க அவன் பார்க்கிறான். 

வண்டியை ஓட்டிக்கொண்டு வரும் தங்கபாண்டி தன் பட்டாளத்து உப்பை எல்லாம் சேகரித்துக் கொண்டு சென்று மூட்டைக்காரர்களுக்கு விற்பான். உள்ளூரிலும் சிறு வியாபாரம் செய்வான், 

பொன்னாச்சிக்கு அவனிடம் சொல்லவும் விருப்பமில்லை. சொல்லாமல் வெறுங்கையுடன் திரும்பவும், மனமில்லை. 

“மாமா திர்நேலி போயிருக்கியா, வீட்ட சின்னாச்சி வந்திருக்காவ. மாமி மாமா வந்ததும் தரதாச் சொல்லி கடயில கருப்பட்டியும் காபித்தூளும் வாங்கியாரச் சொன்னா அரருவாத் துட்டு வேணும்…” 

தங்கபாண்டி ஒரு உல்லாசப் பாரிவையுடன் தனது இடுப்பிலிருந்து ஒரு ரூபாய்த்தாளை எடுத்து அவள் விரலைத் தீண்டியபடி வைக்கிறான். 

அந்தத் துட்டனை எரித்து விடுபவள் போல பார்த்து விட்டு, கையை உதறினாற்போல் நோட்டை எடுத்துக் கொண்டு அவள் கடைக்கு விரைந்து வருகிறாள். அவன் அவளைக் காணும்போதெல்லாம் இப்படித்தான் சாடைகள், சைகைகள் செய்கிறான். சவம், இனி அவன்தான் இந்த ஊரில் இருக்கப் போவதில்லையே! 

அவள் காபித்தூளும் கருப்பட்டியுமாக வீட்டை நெருங்கு கையில், மாமி வந்தவளிடம் ஒரு பாட்டம் ‘ஆவலாதி’ பாடிக் கொண்டிருக்கிறாள். 

“அன்னாடக் கஞ்சிக்கே வாரதில்லே. போன வருசம் பாதி நாளும் ஏலேலோ கௌங்குதா அவிச்சிக் கஞ்சி குடிச் சோம். மாசம் ரெண்டு நட கெணறு செப்பம் செய்யாம ஏலாது.” 

“லாரி வரப்பாதையில்லேண்ணா உப்புக்கு ஏதுவெலடி ஓடைக்கு மறுகரயில லாரி வரும். வண்டிக்கார உப் பள்ளிட்டுப்போயி அவங்கிட்ட விக்கியா. நமக்குக் குடுப்பது மூடைக்கி முக்கா ரூவாதா. மூடை மூணுக்கு வித்தாலும், அஞ்சுக்கு வித்தாலும் முக்கா ரூவாக்கி மேல நமக்கு ஒண்ணு மில்ல. நூறுநூறான சங்கத்து ஏக்கரில் இவியளப் போல நம்பாட்டளமிண்ணு இந்தத் தொழிலக் கட்டிட்டுருப்பவ ஆருமில்ல. அவயவிய கன்டிராட்டு, அது இதுண்ணு அங்கங்க பொழக்கப் போயிட்டாவ. இவிய என்னியோ கெனா கண்டிட்டு ஆனவாடும்படுறா. கண்டவனயும் கூட்டிட்டு வந்து பிளசர் வச்சடிச்சி அம்புட்டு ரூவாயும் செலவு: பண்ணதுதா மிச்சம். எங்க ஆம்பிளக்கி ஒரு சூதுவாது தெரியாது.” மாமி மூச்சுவிடாமல் பொரிந்து தள்ளுகிறாள். 

பொன்னாச்சி கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு இறுத்துக் கருப்பட்டியும் சேர்த்து ‘கிளாசில்’ ஊற்றிக் கொண்டு வருகிறாள். 

“கையோடு கூட்டிட்டு வந்திடுண்ணுதா அனுப்பிச்சி ருக்காவ. தலைப் பொண்ணு இத, இவளாட்டம இருக்கும். ‘பாஞ்சாலி’ன்னு பேரு. தண்ணி தூக்கியாரும்; வீட்டுக்கார ஆச்சிக்கு ஒத்தாசையா எனுமேஞ்செய்யும். சோறோ கஞ்சியோ போட்டு அவியளே வச்சிருக்காவ. ஒரு பையன் பள்ளிக்கொடம் போறா. பொன்னாச்சி தம்பிய எங்க காணம்? பச்சமுத்துன்னு பேரில்ல?” 

“ஆமா எங்க பெரிய பையனுக்கும் அவனுக்கும் ஒரு வருசம் அஞ்சு மாதந்தா வித்தியாசம். இந்த மாதா கோயில் ஸ்கூல்ல படிச்சிட்டு திருச்செந்தூர் போயிப் படிச்சு பத்து பாசாயி, இப்ப காலேஜில படிய்க்கியா. இந்தப் பயலையும் படிபடின்னுதான் முட்டிட்டாவ. படிப்பு ஏறலியே? பரவப் பயலுவளோடு கடக்கரயில் திரியுவா, இத வராம் பாரும்!” 

பையன்  பொன்னாச்சியைப்போல் அப்பன் சாயலாக கிள்ளி சிவப்பாக, கழுத்து மட்டும் உயர்ந்து, இல்லை. எடுக்கச் சதையில்லாமல், பின்னிய மார்க்கூடுடன் விளங்கு கிறான். பதினைந்து பதினாறு வயதுப் பையனாகவே மதிக்க இயலாது. குச்சிகுச்சியான முடி. அரையில் ஒரு கறுப்பு அரைச்சராய் மட்டுமே போட்டிருக்கிறான். மேனியில் ஒன்றுமில்லை. 

மாமி அவன் கையில் ஒரு பழத்தையும் சிறிது மிட்டா யையும் எடுத்துக் கொடுக்கிறாள். “ஒங்க சின்னாச்சிலே அப்பச்சி ஒன்னயும் அக்காளையும் தூத்தூடிக்கிக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காராம்…!” என்று தெரிவிக்கிறாள். 

பையன் எதுவுமே பேசாமல் மிட்டாயையும் பழத்தையும் அவசரமாக விழுங்குகிறான். 

“மீன் பரவப் பயலுவளோடு சேந்திட்டுப் போறானா? குடிக்கக் கத்துக்கிடுவானோண்ணு பயமாயிருக்கி. இங்ஙன அம்புட்டு ஆளுவளும் அதே எங்க ஆம்பிள அந்த நாள்ள கள்ளுக்கடைக்குத் தீவச்சு செயிலுக்கும் போனாவ. இவனப் பத்தி எனக்கு இதே கவல. ஊரா புள்ள, நாம நாளக்கு ஆரும் என்னமேஞ் சொல்லுதாப்பல வச்சுக்கலாமா?” 

“பின்ன இல்லியா மயினி? நீரு எம்புட்டு நா வச்சி சோறு போட்டாலும், அவ அப்புன் எம்புள்ளியண்டு தானே உருகா?” 

மாமன் இல்லை என்பது வெறும் சாக்குத்தான் மாமிக்கு. அவர்களை அனுப்பிவிடுவதுதான் குறி என்று பொன்னாச்சி உணர்ந்து கொள்ளுகிறாள். சின்னாச்சியும் அவர்களை அழைத்துப் போய்விட வேண்டும் என்ற தீவிரத்துடன் வந்திருப்பது கண்டு மனம் மகிழ்ச்சி கொள்கிறது. 

மாமிதான் வந்தவளிடம் எப்படி நடக்கிறாள்! உண்மை யில் மாமன் திடீரென்று எதிர்பாராமல் புறப்பட்டு வந்து விட்டால் அவர்கள் பயணத்தை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார். உண்மையில் வேலு தைப்பொங்கல் கழித்துத்தான் கல்லூரி விடுதிக்குச் சென்றிருந்தான். திடீரென்று முதல் நாள் கல்லூரியில் ஏதோ பையன்களிடையே சண்டை. வகுப்புக்கள் நடக்கவில்லை போலீசு வந்ததென்று முன்சீஃப் வீட்டுக்குத் தெரிந்த ஆசிரியர் செய்தி அனுப்பி இருக்கிறார். உடனே மாமா ஓடியிருக்கிறார். மாமியிடம் வேலுவைக் குறித்து அவர் கத்த, மாமி அழ, இங்கும் ஒரே கலவரமாக இருந்தது. பணம் கூட யாரிடமோ கடன் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார். 

“ஏலே, முடியில கொஞ்சம் எண்ணெய் தொட்டா என்ன?” என்று மாமி கரிசனத்துடன் கேட்டு, எண்ணெய் புரட்டச் சொல்கிறாள். பெட்டியிலிருக்கும் நல்ல சராயையும், சட்டையையும் எடுத்துக் கொடுத்து அவனை அணியச் சொல் கிறாள். 

“இவன் போயிட்டா எனக்குக் கையொடிஞ்ச மாருதி யாயிரும். நா பெத்த பயலுவவுட இவம் மேலதா எனக்கு உசுரு. துலாவில பாத்திக்குத் தண்ணி எறய்ப்பா. எங்க ஆம்பிள அங்ஙன இங்ஙன போயிட்டேயிருப்பா. சுசய்ட் டின்னும் சங்கம்னும் அவியளுக்கு சோலி. உப்பு எறங்கி யிருக்கு மாமின்னு வந்து சொல்லுவா. நானும் அவனுமே வாரி வய்ப்பம். ஒரு நா இரு பரவங்களோடு வள்ளத்தி லேறிப் போயிருக்கா. நா காணாம தவிச்சிப் போனே. பொன்னாச்சியும் அப்படித்தே. அவ முடி சீவிச் சட போடலீன்னா எனக்கு ஒறக்கம் புடிக்காது….” என்றெல்லாம் மாமி அருமை பெருமைகளை வாரி விடுகிறாள். 

குத்தியக் கம்பைப் போட்டுக் கிண்டி இறக்கிவிட்டு, மாமி நீன்கண்டம் வாங்கி வந்து குழம்பு வைக்கிறாள். 

பொன்னாச்சிக்கு இது கனவா, நினைவா என்று புரிய வில்லை. எல்லாம் சுரவேகத்தில் நடப்பது போலிருக்கிறது. என்றாலும் அன்பான மாமனுக்குத் தெரியாமல் சொல்லாமல் இத்தனை நாள் வளர்ந்த இடத்தைவிட்டுப் போகலாமா? 

“மாமா என்னமே நெனச்சுக்க மாட்டாளா…” 

“என்னேய பின்னே? அப்பச்சி ஒடம்பு சொகமில் லாம், கூட்டிட்டு வாரும்னு அனுப்பிச்சிக் கொடுத்திருக் கயில நாமும் போகண்டாமா? மாமா வந்தாச் சொல்ற. வந்து பாக்கச் சொல்றே, அவியவிய சொத்த அவியவிய கிட்ட ஒப்படய்கிறதுதான மொறை?” 

இந்த நியாய வார்த்தைகளுக்குமேல் பேச்சுக்கு இடமேது? 

பொன்னாச்சியுடன் தானும் புறப்பட வேண்டும். என்று ஞானம் அழுகுறான். குஞ்சரி அவளுக்கு அம்மா வைத்துப் பின்னியிருக்கும் ரோஸ் நாடாவையும், அவள் உடுத்தியிருக்கும் ரோஸ் சேலையையும் தொட்டுப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். 

பொன்னாச்சி எல்லோரிடமும் விடை பெற்றுக் கொள் கிறான். தெருவே அவர்களை வழியனுப்புகிறது. முன்சீஃப் வீட்டு ஆச்சி இல்லை. கோயில்காரர் வீடு, கொல்லாசாரி வீட்டு ஆச்சி எல்லோரிடமும் பொன்னாச்சி சுருக்கமாக விடை பெற்றுக் கொள்கிறாள். 

மாகாளி அம்மன் கோயிலில் கும்பிட்டு வேண்டிக் கொள் கிறாள். மாலை வெயில் மஞ்சள் முலாம் பூசத் தொடங்கு கிறது. சிவந்தகனி பஸ் நிறுத்தத்தில் ஏற்கெனவே வந்து நிற்கிறான். பொன்னாச்சியை அவன் வியப்புடன் பார்த்த வண்ணம், “இது தாமவளா?” என்று கேட்கிறான். 

“ஆமா, அது பய்யன்…” 

மருதாம்பா சொல்லி முடிக்கு முன் பஸ் ஒன்று வருகிறது. இசக்கி இப்போதும் இடுப்பில் தங்கச்சியுடன் நிற்கிறது. “பொன்னாச்சி அக்கா, தூத்தூடிக்கா போற?” என்று விழிகள் விரிய அவள் கேட்கையிலேயே அவர்கள் வண்டிக்குள் ஏறிக்கொள்கின்றனர். பொன்னாச்சி நின்ற வண்ணம் அவளுக்குக் கையை அசைக்கிறாள். 

பஸ் கிளம்பி விடுகிறது. 

அத்தியாயம்-3

மூன்பு மருதாம்பாள் பஸ் ஏறிய இடத்திலேயே இறங்கி விடுகிறாள். அப்போது முகங்கள் தெளிவாகத் தெரியாமல் மங்கும் நேரம். அவர்கள் லாரிகளும் பஸ்களும் போகும். கடைத் தெருவைத் தாண்டி நடக்கின்றனர். அவர்கள் ஊர் மாதா கோயிலைவிடப் பெரிதாக ஒரு மாதாகோயில் உச்சியில் விளக்கொளிரத் தெரிகிறது. 

மருதாம்பா கடையில் பொட்டுக்கடலையும் மொந்தன் பழமும் வாங்கிக் கொள்கிறாள். அந்தத் தெருக்களைத் தாண்டி, மணலும் முட்செடிகளுமான பரப்பைக் கடந்து வேறு தெருக்கள் வழியே நடக்கின்றனர். ஒழுங்கில்லாத. வீடுகள். சில வீடுகள் மஞ்சள் வண்ணச்சுவர்களும், மூங்கில் பிளாச்சு ‘கேட்டு’ மாகப் புதியவை என்று பறை சாற்று கின்றன. இடை இடையே சாக்கடை, குப்பை மேடு, கடை, ஓட்டுவில்லை வீடுகள், தென்னங்கிடுகுகளான தடுப்புக்கள்.. இடைவிடாது எதிரே குறுக்கிடும் சைக்கிள் ஒலிகள் ஆகிய காட்சிகளை வியப்புடன் பார்த்துக் கொண்டு அவர்கள் நடக்கின்றனர். 

பொன்னாச்சி தனது இரண்டொரு துணிகளையும், தம்பியின் சராயையும் ஒரு கித்தான், பைக்குள் வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் சிறுமியாகத் தாயுடன் தூத்துக்குடியில் வாழ்ந்த காலத்து வீட்டை நினைவுக்குக் கொண்டுவர முயலுகிறாள். அதை கோல்டன்புரம் என்று சொல்வார்கள். எதிரே முட்செடிக் காடாக இருக்கும். அவள் வீட்டு வாயிலில் தம்பியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவள் அம்மா தண்ணீர் கொண்டு வரப் போவாள். லாரி வாசலில் வரும். லாரியில் இருந்து. தலையில் துவாலை கட்டிக் கொண்டு ஒருவர் வந்து உள்ளே யிருந்து மண்வெட்டியையும், கூடையையும் எடுத்துப் போவார். அவர் அப்பச்சி அவரிடம் அவளுக்கு மிகவும் பயம். அவருடைய கண்கள் சிவப்பாக இருக்கும். பெரிய மீசை வைத்திருப்பார். கட்டம் போட்ட லுங்கி உடுத்தியிருப்பார். அம்மாவை அடிப்பார். அவளையும் கூட அவர் அடித்து வெளியே தள்ளினார். ஒருநாள் இரவு, அந்த முட்செடியி லிருந்து தலைவிருச்சிப் பிசாசு ஒன்று துரத்தி வருவது போல் அவள் பயந்துபோய் அம்மாவைக் கட்டிக் கொண்டாள். 

அந்த அப்பச்சி….அவரை அவள் பாரிக்கப் போகிறாள். அவர் உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறார். 

“சவத்துமாடன். அவனொரு மாப்பிள்ளை, இந்த வீட்டுக்கு!” என்று மாமியின் நாவில் அடிக்கடி வசைக்கு ஆளாகும் அப்பச்சியை அவள் பார்க்கப் போகிறாள். “அவ தளுக்கும், மின்னுக்கும் கண்டிராக்டானாலும், கணக்கவுள்ள யானாலும் சீலயவுக்குறவ….” என்ற ஏச்சுக்காளாகும் பெண் பிள்ளையான சின்னாச்சி இன்று மாமியிடம் மரியாதைக்குரிய வளாக வந்து கூட்டிப் போகிறாள். 

அவள் உண்மையில் அப்படித் தளுக்கு மினுக்காகவே யில்லை. முடியை எண்ணெய் தொட்டுக் கோதிச் செருகி யிருக்கிறாள். புதுமை மங்கிய நிலச்சேலை, வெண்மையாகத் தான் பிறப்பெடுத்திருந்தேன் என்று சொல்லும் ரவிக்கை முகத்தில் எலும்பு முட்டிக் கண்கள் குழியில் இடுங்கிக் கிடக்கின்றன. எப்படியிருந்தாலும் இடைவிடாத மாமியின் இடிச்சொற்களிலிருந்து அவர்களை விடுவித்திருக்கிறாள் அவள். 

அவர்கள் வீடு வெளியிலிருந்து பார்க்கக் காரைக்கட்டுச் சுற்றுச் சுவரும் வாயிலுமாக இருக்கிறது. வாயிலும் நுழைந்து எதிரே தெரியும் வீட்டைச்சுற்றி அவர்கள் செல் கின்றனர். அந்த முற்றத்தில் ஒரு முட்டைச் சிம்னி விளக்கை வைத்துக் கொண்டு ஒரு பெண் பிள்ளை கல்லுரலில் உளுந்து ஆட்டிக் கொண்டிருக்கிறாள். திண்ணை போன்ற மேட்டில் ஒரு ஆண் காலோடு தலை போர்த்த வண்ணம் உட்கார்ந்து இருமிக் கொண்டிருக்கிறான். அங்கேயே சில குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். வரிசையாக உள்ள வாயில் கதவுகளில் ஒன்று பூட்டிக் கிடக்கிறது. நேர் எதிரே உள்ள மூன்றாவது வாயிலை நோக்கி மருதாம்பா வருகிறாள். 

“அப்ப நா வாரனக்கா?” என்று கூறியவனாகச் சிவந்த கனி அங்கேயே விடைபெற்றுத் திரும்பிப் போகிறான். 

திண்ணையில் இங்கேயும் காலோடு தலை போர்த்த உருவம் ஒன்று உட்கார்ந்திருப்பதைப் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். 

சின்னம்மா வெறுமே சாத்தியிருக்கும் வாயிற்கதவைத் திறந்து சிம்னி விளக்கைத் தேடி ஏற்ற ஐந்து நிமிடங்களா கின்றன. 

“பிள்ளிய வந்திருக்காவ, எதே… ஒங்கப்பச்சி கும்பிடுக…” 

பொன்னாச்சி, அந்தச் சிம்னி விளக்கொளியில் தந்தை யைப் பார்த்துக் குழம்பியவளாக நிற்கிறாள்.தாடியும், நார் பறந்தாற் போன்ற முடியுமாக, அழுக்குத் துணியால் மேலும் கீழும் போர்த்திக் கொண்டு கும்பலாக அமர்ந்திருக்கும் 
இவரா அப்பச்சி…? 

கால்களைத் தொட்டுப் பணிவுடன் கும்பிடுகிறாள். பச்சையையும் கும்பிடச் சொல்கிறாள். 

“எங்க இந்தப் பிள்ளயவ? ஏட்டி, பாஞ்சாலி? சரசி பானயில் பொட்டுத் தண்ணி இல்ல. குடி தண்ணியுமில்ல, கொடத்துல.ஏலே நல்லகண்ணு? அக்காசௌங்கேலே?” 

ஆடிக்கொண்டிருந்த பையன் வருகிறான். “பாஞ்சாலி ஆச்சிகூட சினிமாவுக்குப் போயிட்டு வந்தா. எனக்கு மிட்டாய் வாங்கித் தாரன்னியே?…” என்று அவள் சேலையைப் பிடித்து இழுக்கிறான். 

“தம்பியக் கூப்பிடு; இதப்பாரு பொன்னாச்சிக்கா,  இது அண்ணெ….” என்று கூறிப் பொட்டுக் கடலையும் பழமும் கொடுக்கிறாள். அப்போது சரசி பிரிந்த தலையும் கிழிந்த பாவாடையுமாக வெளியிலிருந்து ஓடி வருகிறாள். 

“பாஞ்சாலி வந்தா கூப்பிடுடீ? பொட்டுத் தண்ணியில்ல… கேணிலேந்து ஒரு நடை தண்ணி கொண்டாரச் சொல்லுடி? ” கயிற்றையும் வாளியையும், பானையையும் பாஞ்சாலி வந்து தூக்கிக் கொண்டு சென்றதும் உள்ளே விளக்குடன் நுழைகிறாள் மருதாம்பா. சற்றைக்கெல்லாம் திடுக்கிட்டவளாக அவள், “ஏளா, உள்ளாற யாரு வந்தது? நா நேத்துதான் வெறவு வாங்கிப் போட்டுப் போன ? ஒத்தக் குச்சியக் கூடக் காணம்?” என்று கூக்குரலிடுகிறாள். ஆனால் அந்த ஓலம் எந்த எதிரொலியையும் கிளப்பவில்லை. கொடக் கொடக்கென்று. உளுந்துதான் மசிந்து கொண்டிருக்கிறது. பாறையில் முட்டி மோதி எதிரொலிக்கும் கடலலைபோல் அவள் மீண்டும் மீண்டும் ஒலமிடுவாள். அப்பன் எதுவுமே பேசவில்லை மருதாம்பா. சரசியின் முதுகிலும் நல்லகண்ணு வின் முதுகிலும் ஆளுக்கு இரண்டடி வைக்கிறாள். 

“கதவைப் பூட்டிட்டுப்போன்னு சொன்னேனில்ல? முதி தெருவுல ஆடப்போயிடறா! தொறந்த வீடுன்னா எந்த. நாயும், களுதையும் எச்சிப் பொறுக்கவரும்…. சவங்க…” என்று வசை பாடத் தொடங்குகிறாள். 

அவளுடைய சந்தேகத்துக்கு, அயல் பக்கத்துக்காரிகள் ஆளாகிறார்கள். அவள் சாடைமாடையாகச் சொன்ன பிறகும் மாவாட்டுபவள் சும்மா இருப்பாளா? மாவை வழித்து விட்டு வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறாள் பொன்னாச்சி. இத்தகைய விறகுச் சண்டைகளைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போனவள். ஒளிமயமான கனவு களைச் சரேலென்று மேகங்கள் மூடினாற்போல் ஒரு சோர்வு ஆட்கொள்ளுகிறது. அவளுடைய அப்பச்சியை இவ்வாறு செயலிழந்து துணிச் சுருளாக அவள் கற்பனை செய்திருக்க வில்லை. 

இரவு மருதாம்பா ஏதும் சமைக்கவில்லை. விறகு பறி போய்விட்டது. ஆற்றாமையில் திண்ணையிலிருந்த புருசனையும், பொறுப்பில்லாத குழந்தைகளையும் திட்டி ஓய வில்லை. மழை அடித்து ஓய்ந்தாலும் நினைத்து நினைத் துச் சாரல் அடிக்கக் காற்று வீசுவதைப்போல் கிளம்புகிறது. 

முன் வாசலுக்கு நேராக உள்ள வீட்டிலிருந்து ரேடியோப் பாட்டு ஒலிக்கிறது. பச்சை அந்தப் பக்கம் செல் கிறான். இந்த முற்றத்தின் பக்கமாக உள்ள சன்னலின் அருகே நின்று அங்கே பார்க்கிறான், ஒரு ஆச்சி, டிரான்ஸிஸ்டர் பெட்டியைத் திருகி, பாட்டு வைக்கிறாள். அவனைக் கண்டதும், “இப்படி வாலே,ஒம்பேரென்ன? என்று அவள் அழைக்கிறாள். 

பச்சை நாணிக் கோணிக் கொண்டு உள்ளே செல்கிறான். அந்த முன்னறையில் ஒரு பனநார்க்கட்டிலில் ஆச்சி அமர்ந் திருக்கிறாள். அங்கே இன்னொரு பெரிய பெஞ்சி இருக்கிறது. ஒருபுறம் சுவரில் புத்தகங்கள் நோட்டுக்கள் தெரியும் ஷெல்ஃப்; அதன்மேல், சுவரில் உயரே ஒரு படம் இருக்கிறது. படத்தில் இளையவனாக, அரும்புமீசையும் நேர்ப்பார்வையு மாக ஒரு பிள்ளை விளங்குகிறான். அந்தப் படத்துக்கு மஞ்சளும் நீலமும் கலந்த பட்டு நூல் மாலை போட்டிருக்கிறார்கள். 

பச்சை அந்தப் படத்தையே பார்க்கையில், ஆச்சி அவனிடம் “படிக்கிறியாலே?” என்று கேட்கிறாள். ரேடியோவில் பாட்டு இல்லை. பேச்சு வருகிறது. அதை அணைத்துவிட்டு, ஒரு காகிதப்பையில் இருந்து வேர்க் கடலையை எடுத்து உரித்துத் தின்கிறாள். 

அவனிடமும் இரண்டு கடலையைப் போட்டவாறே மீண்டும்,”படிக்கிறியாலே? கேட்டதுக்கு வதில் சொல்லு?” என்று கேட்கிறாள். 

“படிச்சேன், இப்ப நிறுத்திட்டே…” 

“ஏ…? சோலிக்குப் போறியா?”

“மாமன் அளத்துல சோலி எடுப்பே. தம்பாட்டளம்.” 

“எம்புட்டு?” 

“ரெண்டேக்கரு…” 

அவள் உதட்டைப் பிதுக்குகிறாள். “அக்காளும் சோலிக்குப் போகுமா?” 

“இல்லே…வீட்டுவேல எல்லாம் செய்யும். எப்பன்னாலும், உப்புவாரிப் போடவரும்.” 

“இங்கேயே இருக்கப்போறியளா?” 

பையன் தெரியாது என்று தலையசைக்கிறான். 

இதற்குள் அடுத்த வீட்டுக்காரி பெருங்குரலெடுத்து ஏசுவது செவியில் விழுகிறது. பையன் முற்றத்துக்கு வருகிறான். பொன்னாச்சியும் அங்கு நிற்கிறாள். பாஞ்சாலி தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு வாயிற்படியிலேயே நிற்கிறாள். குஞ்சுகளைப் பின்தள்ளிவிட்டு இரண்டு பெட்டிகள் ஒன்றை யொன்று தாக்கிக் கொள்வது போல் இருவரும் வாய்ச் சண்டை போடுசின்றனர். 

ஒருவழியாக ஓய்ந்து எல்லோரும் முடங்குகின்றனர். குழந்தைகள் எல்லோரும் பொட்டுக்கடலை, பழத்துடன் உறங்கிவிட்டனர். உள்ளே சின்னம்மாவும் படுத்து உறங்கி விட்டாள்; 

பொன்னாச்சிக்கு உறக்கம் வரவில்லை. அன்று பகலே அவள் சரியாக உணவு கொள்ளவில்லை. பசி, குடைகிறது. அவளுக்குப் பல நாட்களில் இப்படித்தான் எதேனும் தின்ன வேண்டும் போல் பசி கிண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு திரும்பித் திரும்பிப் படுத்து உறங்க முயலுகிறாள். 

பொழுது விடிந்தால் அடுப்புக்கு வைக்க ஒரு குச்சி இல்லை. மருதாம்பாவுக்குச் சோறு எதுவும் பொங்க நேர மில்லை. பொன்னாச்சியை எழுப்பி, “ஏத்தா ஒங்கையில் இருக்கிற துட்டுல ரெண்டு வெறவும் அரிசியும் வாங்கி ஒல போட்டு பொங்கிக்கோ. நா அளத்துக்குப் போவணும், கங்காணியிட்டக் கேட்டு எதினாச்சிம் துட்டு வாங்கி வார நேராச்சி இப்ப” என்று கிளம்ப ஆயத்தமாகிறாள். பொன்னாச்சி திகைத்து விழிக்கிறாள். 

மாமி, மூன்று ரூபாய் கோயில்காரர் வீட்டிலிருந்து கடன் வாங்கிவந்து அவளுக்குக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறாள். சின்னம்மாவின் சொரூபம் வெளியாகிறது! 

இந்தப் புதிய இடத்தில் அவள் எங்கிருந்து விறகு வாங்குவாள்? 

“அரிசி…?” 

“பாஞ்சாலி வரும். அவ. வாங்கிக் குடுப்பா. தம்பி இருக்கானே? பின்னால் கிணறு காட்டிக் குடுக்கும். ஒண்ணே முக்கா ரூவாக்கு அரிசி வாங்கிப் பொங்கு. இந்தப் பிள்ளங் களுக்கும் போடு. நா வார. ஒரு சுடு தண்ணி வைக்கக்கூட லாவன்னா இல்லை…” பொன்னாச்சி மலைத்து நிற்கை யிலேயே கூரையில் செருகியிருக்கும் பன ஓலையைக் கையில லெடுத்து காலுக்கு ஒரு மிதியடி பின்னக் கிழித்தவாறு நடந்து செல்கிறாள். திகைப்பிலிருந்து விடுபட, பொன்னாச்சிக்கு வெகு நேரமாகிறது. அந்த வீட்டுக்காரி இட்டிலிக் கடை போடுபவ போலிருக்கிறது. விடியலிலேயே எங்கிருந்தோ நீர் கொண்டு வருகிறாள். அவள் புருசன் இருமிக் கொண்டே இருக்கிறான். வள்ளியோடொத்த மகளை எழுப்பி அமர்த்தி உரலில் அரைக்க பணிக்கிறாள். இன்னொரு. வீட்டுக் கதவு பூட்டுத் திறந்து உட்பக்கம் சாத்தியிருக்கிறது. அதற்குரியவரை அவள் இன்னும் பார்க்கவில்லை. 

அவள் செய்வதறியாமல் முற்றத்தில் நின்று கொண்டி ருக்கையில் வீட்டுக்கார ஆச்சி,பல்லைச் சாம்பலால் துலக்கிக் கொண்டு அங்கு வருகிறாள். நல்ல உயரம்; பறங்கிப் பழமாய்ச் சிவப்பு. தீர்க்கமான மூக்கும் கண்களுமாக ஒரு காலத்தில் நல்ல அழகாக இருந்திருப்பாள். எள்ளும் அரிசியு மாய்ப் போன் கூந்தலை அள்ளிச் செருகியிருக்கிறாள். வளர்த்த காதுகளில் பொன்னகையில்லை. மேல் காதில் மட்டும் வாளியும் முருகும் இருக்கின்றன. நெற்றியில் நீளமாகப் பச்சைக்கோடு, துலங்குகிறது. இடது புறங் கையில் கோலமும், இன்னும் ஏதோ பச்சைக் குத்தும் தெரிகின்றன. மினுமினுக்கும் ஆரஞ்சு வண்ணச் சேலையும் வெண்மையான ரவிக்கையும் அணிந்திருக்கும் அவள் பொன்னாச்சியைப் பார்ப்பதற்காகவே அங்கு வந்திருக் கிறாள் என்று தோன்றுகிறது. 

குண்டு முகத்தில் கண்களால் அவளைப் வியப்புடன் பொன்னாச்சியும் பார்க்கிறாள். முதல் நாளிரவே பாவாடை ரோஸ் சேலை, ஜாக்கெட் செட்டைப் பத்திரமாக அவிழ்த்து வைத்து விட்டுப் பழைய சேலையைப் பின் கொசுவம் வைத்து உடுத்தியிருக்கிறாள். அந்த ஒரு செட் ஆடைகளே அவளுக்குப் புதுமையாக, முழுதாக இருக் கின்றன. அவளுக்கு மூன்றாண்டுகளுக்கு முன் மங்கல நீராட்டுக்கென்று மாமன் வாங்கித் தந்த சேவை அது. திருச்செந்தூர்க் கடையில் எழுபது ரூபாய்க்கு வாங்கி வந்தார். 

பிறகு, ஒரே ஒரு பழைய பாவாடையும் பாடியும் தான் உள்ளாடைகள்! சாதாரண நாட்களில் அவள் முழுச் சேலையை முரட்டுச் சேலையைத்தான் பின் கொசுவம் வைத்து உடுத்துவது வழக்கம். மூக்குத் துளைகளில் ஈர்க்கு களும், காதுத்துளைகளில் சன்னமாகச் சீவிய நெட்டியும் தான் அணிகள், அவளுக்குக் கைகளில் முழியே கிடையாது. போட்டிருக்கும் பிளாஸ்டிக் வளையல்கள் இரண்டும் மொழு மொழுத்த கைகளில் பதிந்து இருக்கின்றன. 

“சின்னாச்சி அளத்துக்குப் போயிட்டாளா?” என்று விசாரிக்கிறாள். 

“ஆமா…!”

“தண்ணிகிண்ணி வச்சாளா? சோறாக்கினாளா? ராவுல வறவக் காணமின்னு சொக்குவும் அவளும் சண்ட போட்டாவளே?”

பொன்னாச்சிக்குத் திகில் பிடித்துக் கொள்கிறது. 

வாயைக் கிளறி வம்புக் கிழுக்கிறாளா? இவளிடம் எப்படிப் பேசுவது? ஊரிலும் இவ்வாறு வாயைக் கிளறுபவர்கள் உண்டு. அவள் ஏதேனும் பேசிவிட்டால் மாமி நார் நாராகக் கிழித்தெறிந்து விடுவாள். 

எனவே மெளனமாக நிற்கிறாள். 

“ஏட்டி பாஞ்சாலி? ரெண்டு வெறவு கொண்டு ஒங்கக்காளுக்குக் குடு! அடுப்புப் பத்துவய்க்கட்டும்!” என்றவள் குரலை மிக மிகத் தாழ்த்தி, “ஒங்கப்ப எடுத்துக் குடுத்து அதுக்கு வார காசுக்கு என்னமேந் தின்னிடுவா. குடிய்க்கவுஞ் செய்வா. இது ஒள்ளதுதே!…” என்று தெரிவிக்கிறாள். பாஞ்சாலி இரண்டு விறகை எடுத்துக் கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் வைக்கிறாள். 

பொன்னாச்சிக்கு நா எழவில்லை. 

“ஏட்டி, அரிசி இல்லேன்னா, மூலக்கடையிலே வாங்கிக்குடு!” என்றும் உத்தரவிடுகிறாள். “பயஒற் தம்பியா? சோலிக்குப் போவனா?” 

“போவணும்… 

“சின்னாச்சி கங்காணியிடம் சொல்றன்னிச்சா?” 

‘ஒண்ணுஞ் சொல்லல. அவசரமாப் போயிட்டாவ…”

ஆமா காலமே அதிகப்படி எதுவானாலும் அட்டுச் சொமக்கக் கூலி கெடய்க்குமேண்ணு போயிருப்பா! அவாத என்னவே? ஒன்னப்பச்சிக்குக் கண்ணு சுத்தமாத் தெரியல. அன்னிக்கு அளத்துள சோலியெடுக்கையில் கீழவுழுந்திட்டா ராம். பொறவுதா ஒங்களக் கூட்டி வர்ரமின்னு போனா… 

மருமம் துலங்கிவிட்டது. ஆனால் என்னம்மா வேலை யற்றி எதுவும் சொல்லவில்லையே? 

“தம்பிக்குன்னாலும் எதானும் கூலிவேலை கெடச்சாத் தேவலை….” 

பொன்னாச்சியின் கண்கள் ஒளிருகின்றன. ‘ஒங்களால முடியுமா…’ என்று கேட்கும் ஆவல் அது. 

“ஆமா. பய இல்லாட்டி இங்ஙன கவுத்து புளியமுத்து டப்போயிருவா! கெட்ட சகவாசமெல்லாஞ் சேந்திடும்…” என்றவள் பாஞ்சாலியைத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி மூலையில் வாய் கொப்ளிக்கிறாள். காரிக் காரி உமிழ்கிறாள். 

“நீங்க ஏதானும் சோலி வாங்கிச் குடுத்தா, ரொம்ப தயவா இருக்கும். ஆச்சி, சின்னம்மாவுக்கு நாங்க பாரமா இருக்கண்டா…”. ஆச்சி சேலை முன்றானையை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். 

“சோலி இப்ப கெடக்காம இல்ல. “பனஞ்சோல அளத்துலியே சொல்லி வாங்கித்தார. அறவக் கொட்டடி யிலோ. எங்கோ தம்பிக்கும், ஒனக்கும் கூடக் கெடய்க்கும், பனஞ்சோல அளத்துல வேல கெடக்கிறது செரமம். அங்க கங்காணி மொறயில்ல. கண்ட்ராக்டு, ஓங்க சின்னாச்சி, அப்பன் சோலியெடுத்த அளம் சின்னது. கங்காணிமாரு கெடுபிடி ரொம்ப இருக்கும், நிர்ணயக் கூலின்னு சொல்லுவா. ஆனா கங்காணி வாரத்துக்கு ஒருரூபா புடிச்சிட்டுத்தா குடுப்பா. பொறவு அட்வான்சு, போனசு ஒண்ணு கெடையாது. அப்புசி மழை விழுந்திட்டா வேலயு மில்ல. வேல நேரம்னு கண்டிப்புக் கெடையாது. ஏ. குடிக்கத் தண்ணிகூடக் கெடையாது. பனஞ்சோல அளம் அப்பிடில்ல, பெரீ…சு மூவாயிரம் ஏக்கர். வேலக்கி எடுக்கையில அட்வான்சு குடுப்பா பொறவு தீவாளி சமயத்தில நிக்றகப்ப சேலயொண்ணு போனசாத்திருவா. ஒரு கலியாணப் காச் சின்னா, அளத்துல சோலியெடுக்குற புள்ளக்கி இருநூத்தம் பது ரூபா குடுக்கா…” 

பொன்னாச்சிக்குக் கேட்க கேட்க உள்ளம் துள்ளுகிறது. இருளாகக் கவிந்திருக்கும் எதிர்கால வாழ்வில் ஒளியிழை களை அல்லவோ ஆச்சி காட்டுகிறாள்? 

“ஆச்சி. ஒங்கக்கு ரொம்பப் புண்ணியமுண்டு. அந்த அளத்துல எனக்கும் தம்பிக்கும் வேல வாங்கித்தாரும் நாங்க எங்க மாமன் அளத்துல வாருபலவை போட்டு உப்பு வாருறதுதா, என்ன வேலன்னாலும் முசிக்காம செய்யிவம்…”

ஆச்சி கண்களை இடுக்குக் கொண்டு சிறிது நேரம் யோசனை செய்கிறாள். பிறகு நீண்டதோர் சுவாசத்தை. வெளியாக்குகிறாள். 

“இங்கெல்லாம் ‘லோக்கல்’ உப்பில்ல, கல்கத்தா அளம். வரி உப்பு வாருவாக. அதெல்லாம் ஆம்பிளதா வாருபலவை போடுவா. 

“பொம்பிளக்கிப் பண்பாட்டு சோலியும். பொட்டி செமக்கிற சோலியுந்தா, என்னைப்போல பொண்டுவ. ராவுல உப்பு அறவக்கொட்டடியிலும் வேலக்கிப் போவாக. நாளொண்ணுக்கு எனக்கு நாலு நாலரை வரை வரும். தம்பிக்கு ரெண்டரை மூனு வரும். இப்ப ரேட் ஒசத்தியிருக்காண்ணு சொன்னா…” 

பொன்னாச்சிக்கு அந்தக் கணத்திலேயே பனஞ்சோலை. அளத்துக்குப் பறந்து போய்விட வேண்டும் போலிருக்கிறது. ஒரு நாளைக்கு அவளுக்கும் தம்பிக்குமாக ஆறுரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் கூட மாசத்தில் நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் வரும். மாமாவின் அளத்தில் மொத்த மாகக்கூட அவ்வளவு தேறாது மாமிக்கு அவளை எங்கேனும் அளத்தில் வேலைக்கு சேர்க்கலாம் என்ற யோசனை இருந்தாலும்கூட மாமா அதற்கு இடம் கொடுத்ததில்லை# அங்கிருந்து ராமக்காவும் கமலமும் கண்ணாடிக்காரர் அளத்துக்குப் போவார்கள். அவர்களுடன் அனுப்பி வைக்க லாம் என்று மாமி கருத்து தெரிவித்ததுண்டு. ஆனால் மாமா மிகவும் கண்டிப்பானவர். அவள் இங்கே வந்து அளத்தில் வேலை செய்கிறாள் என்று தெரிந்தால்கூடப் புறப்பட்டு வந்து கூட்டிப் போனாலும் ஆச்சரியமில்லை. 

ஆனால்…மாசத்தில் நூற்றைம்பது வருமானம்! பொழுது விடிந்து நிதமும் கம்புக்கும் கேழ்வரகுக்கும் மிளகாய்க்கும் பீராயப் போகவேண்டாம். 

கடன் சொல்லிக் கடையில் சாமான் வாங்க வேண்டாம். தீபாவளிக்குப் புதிய சேலை போனஸ்… பிறகு கல்யாணம். அவளுடைய கண்களில் நீர்த்துளித்து விடுகிறது. 

கல்யாணம் என்ற ஒன்றைப்பற்றி நினைக்கக்கூட முடியாத நிலை, அளத்தில் அவள் வேலை செய்கையில் அங்கேயே சோலி எடுக்கும் ஒரு ஆம்பிள்ளையைக் கட்டினால் இரண்டு பேருக்கும் பணம் கிடைக்குமோ?… 

நினைக்கும்போது நெஞ்சு குழையும் நாணம் மேலிட்டு முகம் சிவக்கிறது. 

பாஞ்சாலியும் பச்சையும் சென்று அரிசியும் மிளகாய் புளியும் வாங்கி வருகின்றனர். 

அப்பன் எழுந்து மெள்ளப் பின்புறத்துக்கு நடக்கிறார். 

அவள் கையைப் பற்றிக்கொள்ளச் செல்கிறாள். 

“எனக்குப் பழக்கம் தாவுள்ள, நீ போ! வெறவு செவத்தாச்சி குடுத்திச்சா?”

“ஆமா” 

“அந்தாச்சி ரொம்பத் தங்கமானவுக முந்நூறு ரூவா னிருக்கு அவியக்கிட்ட, எப்படிக் குடுக்கப் போறம்…!” என்று பெருமூச்சு விட்டவாறே நடந்து செல்கிறான். சரசி அப்பனின் கைக்குச்சியை எடுத்துக் கொடுக்கிறாள். 

பொன்னாச்சி வறுமை அறியாதவளல்ல. ஆனால், இங்கு அடுப்பும்கூட இடிந்திருக்கிறது. நீர்ப்பானையும் கூடக் துணியைச் சுருட்டி கழுத்தில் ஓட்டையாக இருக்கிறது. அடைத்திருக்கிறார்கள். பித்தளை என்பது மாதிரிக்குக் கூடக் கிடையாது. அலுமினியம் குண்டான் ஒன்றைத் தவிர உருப்படியாக அப்பச்சியும் சின்னம்மாவும் சாப்பாடு கொண்டு செல்லும் அலுமினியம் தூக்குப் பாத்திரங்கள்தாம் இருக்கின்றன. தண்ணீர் குடிக்கக்கூடப் பித்தளையிலோ வெள்ளோட்டிலோ ஒரு சிளாசு இல்லை. பிளாஸ்டிக் தம்னர்கள் இரண்டுதாம் அழுக்கேறிக் கிடக்கின்றன. 

வாளியும் ஒழுகுகிறது. துணிக்கந்தையால் அடைத்திருக்கிறார்கள். அவர்கள் வதியும் அறையும், சமையல் செய்யும் பின் தாழ்வரையும் ஒட்டுக் கட்டிடங்களானாலும் மிகப் பழைய நாளையக் கட்டிடமாக, பந்தல் போல் வெளிச்சத்தை ஒழுக விடுகிறது. 

பொன்னாச்சி வீட்டை ஒட்டடை தட்டிப் பெருக்கி மண்குழைத்துப் பூசி அடுப்பைச் சீராக்குகிறாள். ஒரு சோறு பொங்கி, குழம்பு வைத்து, குழந்தைகளுக்கும் அப்பனுக்கும் போடுகிறாள். பிறகு நல்லகண்ணு, மருது, சரசி எல்லோ ருக்கும் எண்ணெய் தொட்டு முடிசீவி, அழுக்குத் துணிகளை நீர் கொண்டுவந்து கசக்கிப் போடுகிறாள். தம்பி சிவத்த விடம் சிநேகம் புடித்து விட்டான். அவனை எங்கோ கூட்டிச் சென்று பன ஓலை வாங்கி வருகிறாள் ஆச்சி. 

அவளுக்குப் பெட்டி முடையத் தெரியும் போலிருக்கிறது. நாரைக் கிழிப்பதைப் பொன்னாச்சி வேடிக்கை பார்க்கிறாள். 

அப்போது “ஆச்சி இருக்காவளா?” என்ற குரலொலி கேட்கிறது. 

கரேலென்று குண்டாக, காதில் வயிரக்கடுக்கன்கள் மின்ன, மேலே வெள்ளைவெளேரென்று சட்டையும் உரு மாலும் அணிந்து ஒரு பெரியவர் வந்திருக்கிறார். தலை முன் புறம் வழுக்கையாகி, காதோரங்களில் வெண்மையாக நரைத்திருக்கிறது. 

வாயிற்படிக்கு நேராக முற்றத்தில் பொன்னாச்சி தான் நிற்கிறாள். அவளைப் பார்த்துத்தான் அவர் கேட்டிருக். கிறார். அவள் சரேலென்று விலகிக் கொள்கிறாள்.  ஆள் ஒருவன் ஒரு சாக்கை (பத்துப்படி அரிசியோ தானியமோ இருக்கும் என்று தோன்றுகிறது) கொண்டு வந்து முன்புறம் இறக்குகிறான். 

“ஆரு இவிய? புதுசா இருக்கு?” என்று கேட்டவாறு அவர் மெத்தை நாற்காலியில் அமர்ந்து ஆச்சி கொடுக்கும் விசிறியால் விசிறிக் கொள்கிறார். 

“கண்ணுசாமி இல்ல அவன் பிள்ளியதா. ஊரிலேந்து நேத்து கூட்டியாந்தா. அவனுக்குத்தா கண்னு தெரியல. சோலியுமில்லே…” 

“அப்பிடியா?” 

“ஆமா நா நெனச்சிட்ட நாச்சப்பங்கிட்டியோ, ஆறுமுவங்கிட்டியோ கூலி எழுதிக்கிடச் சொல்லணுமின்னு. நீரே வந்தீரு…” 

“முத்தன் அரிசி குத்தி வந்திருக்குன்னா. அன்னியே நீ சொன்னியே, சம்பா அரிசி வேணுமின்னு, சரி எடுத்திட்டு வருவமின்னு வந்த அளத்துக் கோயில்ல கிருத்திக பூசைக்கு இன்னக்கிப் பெரியவிய போவணுமின்னா அதும் சொல் லிட்டு இப்பிடி வந்தே. கோயில்ல முன் மண்டபம் கட்டிய பெறவு நீ பார்க்கலியே? பெரிய மண்டபம் ட்யூப் லைட் டெல்லாம் போட்டு, வள்ளி கல்யாண சித்திர மெழுதியிருக்கா. அளத்துக்காரவ ஒரு கலியாணம் காச்சின்னு திருச்செந்தூர் போகண்டா….” 

அவள் எங்கோ பார்த்துக் கொண்டு ஓலை கிழிக்கிறாள். 

“தா பாஞ்சாலி? செம்பில நல்ல தண்ணி கொண்டா” 

அவள் தண்ணீர் கொண்டு வந்ததும் வாயிலிருக்கும் சக்கைகளை முற்றத்து மூலையில் சுவரில் வாரியடிக்கத் துப்பு கிறார். பிறகு தண்ணீரால் வாயை அலசிக் கழுவிக் கொப்புளிக்கிறார் – மீண்டும் போய் உட்காருகிறார். 

“பெரியவிய ஒடம்பு ரொம்பத் தளந்து போச்சி. ஆரு வந்து கலியாணம் காச்சின்னாலும், சாவு செலவுண்ணாலும் கோயில் காரியம்னாலும் ஏன்னு கேக்குறதேயில்ல. பத்து இருவது தூக்கிக்கொடுக்கா. நேத்து கேட்டாவ. “செந்தி லாண்டவங் கோயிலுக்கு மண்டபம் கட்டிய பெறகு செங்கமலம் வந்தாளா’ண்ணு. வரலான்னா ஏன் கூட்டி வந்து காட்டலேம்பாக, அதான் சொல்லிட்டுப் போலாமின்னு வந்தே. நாளக்கிக் கிருத்திகைப் பூசை. அதோடு பால் குளத்தாச்சி இறந்துபோன நாளு. அம்மங் கோயிலிலும் பூசயுண்டு, காரு அனுப்பிச்சிக் குடுக்கவா?”

“நா ஒரு கோயிலுக்கும் அளத்துல ஒரு கூலி போட்டுக் கொடுக்கணும்…” 

“அதுக்கென்ன? நாச்சப்பங்கிட்டச் சொல்லிவிட்டுப் போற காலம அளத்துக்குப் போனா எடுத்துக்கறா. பொறவு எப்ப வார, நீ?” 

“எனக்குச் சாமியே இல்ல. என் சாமி செத்துப் போச்சு. எனக்குக் கோயிலுமில்லே…” 

“அது சரி, சாமி செத்துப் போச்சுண்ணா மறுபேச்சு என்ன இருக்கு…?” 

பொன்னாச்சி சன்னலில் தெரியாத வண்ணம் பின்னே முற்றத்தில்தான் நிற்கிறாள். அவர் எழுந்து போகிறார். வாயிலில் ரிக்ஷா அதுகாறும் நின்றிருப்பதை அறிவித்துக் கொண்டு அது திரும்பிப் போகிறது. 

“ஏட்டி, பாஞ்சாலி? ஒங்கக்காளக் கூப்பிடுடீ?” 

அவள் அழைக்கவேண்டிய அவசியமே இருக்கவில்லை. பொன்னாச்சியே உள்ளே செல்கிறாள். 

“ஒனக்கு அதிட்டந்தா. இவ பழைய கணக்கவுள்ள, கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்தாப்பில வந்தா. நாளக்கு சின்னாச்சிய பொழுதோடு கூட்டிட்டுப் போயி. அட்வான்ச வாங்கிக்கிங்க…இருவத்தஞ்சும் இருவத்தஞ்சும் அம்பது ரூவா குடுப்பா…” 

பொன்னாச்சிக்கு அந்த அம்மைக்கு எப்படி நன்றி கூறுவ தென்று புரியவில்லை. அந்தக் கணக்கப்பிள்ளை இவளுக்கு உறவு போலும்! 

மலர்க் குவியல் பூரித்தாற் போல் முகம் உவகையால் பொங்குகிறது. 

வாயில் திண்ணையில் சாய்ந்திருக்கும் தந்தையைத் தொட்டு, “அப்பாச்சி, அந்த ஆச்சி எனக்கும் தம்பிக்கும் யனஞ்சோலை அளத்துல வேலக்கிச் சொல்லிருக்கா. நாளக்கிச் சின்னாச்சியக் கூட்டிட்டுப்போயி அட்வான்சு வாங்கிக்குமின்னு சொல்றாவ. அம்பது ரூவா குடுப்பாவ ளாம்…” என்று பூரிக்கிறாள். 

அப்பச்சியின் கண்டத்திலிருந்து கொப்புளம் உடைந் தாற் போல் விம்மல் ஒலிக்கிறது. அவள் தலையைக் காய்த் துப்போன கையால் தடவுகிறார். பேச்சு எழவில்லை. 

அவள் மாகாளியம்மனை நினைத்துக் கொள்கிறாள்; திருச்செந்தூர் ஆண்டவனை நினைக்கிறாள். “மாமன் வந்து சண்டையொன்றும் போட்டுவிடக் கூடாதே…” என்ற நினைப்பும் ஓடி மறைகிறது. முதல் கூலியில் ஒவ்வொரு ரூபாய் எடுத்து வைக்க வேண்டும். 

சின்னம்மா வீடு திரும்பும்போது நன்றாக இருட்டி விடுகிறது ஒரு பெட்டியில் அரிசியும், விறகுக் கட்டுமாக அவள் வருகிறாள். 

கண்கள் ஆழத்தில் இருக்கின்றன. சுமையை இறக்கி விட்டு நீர் வாங்கிக் குடிக்கிறாள். 

“எனக்குந் தம்பிக்கும் பனஞ்சோலை அளத்துல வேலைக்குச் சொல்லியிருக்கா அந்தாச்சி. நாளாக்கிக் கூட்டிப் போகச் சொன்னாவ. அட்வான்ஸ் தருவாகளாம்?” 

“ஆரு வந்திருந்தா?” 

“ஒரு கரத்த ஆளு. கடுக்கன் போட்டிருந்தா…” 

“சரித்தா முத்திருளாண்டி…” 

“அந்த அளம் நீங்க போறதாவுலதா இருக்கா சின்னம்மா” 

“இல்ல அன்னிக்கு பஸ்ஸில வந்தமில்ல? அங்கிட்டுப் போயி வடக்க திரும்பணும். அந்த அளத்துக்கு செவந்தியா புரம், சோலக்குளம் ஆளுவதா நெரயப் போவா. இங்கேந்து ஆருபோறான்னு பார்க்கணும்…”

வாழ்க்கை வண்ணமயமான கனவுகளுடன் பொன் வாச்சியை அழைப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் கனவு களுடன் உறங்கிப் போகிறாள்.

– தொடரும்…

– கரிப்பு மணிகள் (சமூக நாவல்), முதற்பதிப்பு: ஏப்ரல் 1979, தாகம், சென்னை.

ராஜம் கிருஷ்ணன் ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *