கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 29, 2024
பார்வையிட்டோர்: 8,908 
 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டக்..டக்…டக்” கதவைத் திறந்ததும் அதிர்ந்துபோய் நின்றான் கபாலி,

வாசலில் கைவிலங்கோடு நின்றார் இன்ஸ்பெக்டர் விக்ரம். ஸ்டேஷனுக்குக் கூட்டி வந்து, “எங்கடா செயின்?” என்றார். அறுத்துக் கொண்டு ஓடிவந்து பத்து நிமிடம் கூட ஆகவில்லை. எப்படிக் கண்டுபிடித்தது போலீஸ்? அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. செயினைப் பறி கொடுத்த பாக்கியலெட்சுமி கவலை தோய்ந்தவளாய் நின்றிருந்தாள்.

”என்னடா யோசனை…? எங்கே செயின்?”

”செயினா? என்ன செயின்? எனக்கெதுவும் தெரியா…” முடிக்கவில்லை. விக்ரம் ஒரு அறை விட, பேசாமல் ஒளித்து வைத்திருந்த செயினை எடுத்துக் கொடுத்தான். ஹும்… ! எப்படியும் பதினைந்து பவுனுக்குக் குறையாது. பாக்கியலெட்சுமி பக்கம் திரும்பி, “இதுதானே உங்க செயின்?” என்றார்.

“ஆமா சார். இருபது வருஷமா கஷ்டப்பட்டுச் சம்பாதிச்ச பணத்துல வாங்கினது. ரொம்ப நன்றிங்க!”

“நன்றிலாம் எதுக்குமா? உங்க புத்திசாலித்தனத்தால் கிடைச்சது!”

கபாலிக்கு இன்னும் ஆச்சர்யம் தீர வில்லை. அவன் நினைப்பைப் புரிந்து கொண்ட விக்ரம், “எப்படிக் கண்டு பிடிச்சோம்னுதானே நினைக்கறே…?” செயின் டாலரில் மூடி மாதிரி இருந்த பகுதியைத் திறந்தார். உள்ளே ‘மைக்ரோ சிப்’ இருந்தது. “பார்த்தாயா… தாலில் அரக்கு அல்லது போட்டோ வைக்கிறது அந்தக் காலம். இவங்க இந்தக் காலத்துப் பெண். மைக்ரோ சிப் இருந்த விவரத்தை எங்ககிட்ட சொன்னாங்க. அதை வைத்துத் நீ இருக்கற இடத்தைக் கண்டுபிடிச்சேன்-” என்றதும். ‘கப்… சிப்’ என்று போனான் கபாலி.

– மங்கையர் மலர், ஜூன் 15-30, 2013

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *