
ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன்
1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது ‘ஊசியும் உணர்வும்’ என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.
1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது ‘பெண்குரல்’ நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது ‘மலர்கள்’ நாவல் முதல் பரிசைப் பெற்றது.
1973-ம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதை ‘வேருக்கு நீர்’ நாவலுக்காக இவர் பெற்றார்.
1975-ல் சோவியத்லாந்து நேரு பரிசை கோவா விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் இவரது ‘வளைக்கரம்’ நாவல் பெற்றது.
1980-ல் இலக்கியச் சிந்தனையின் பரிசை இவரது ‘கரிப்புமணிகள்’ நாவல் பெற்றது.
1982-ல் இலக்கியச் சிந்தனைப் பரிசையும் பாரதீய பாஷா பரிஷத் பரிசையும் பெற்றது இவரது ‘சேற்றில் மனிதர்கள் நாவல்.
1987-க்கான தமிழக அரசின் பரிசை தமது ‘சுழலில் மிதக்கும் தீபங்கள்’ நாவலுக்காகப் பெற்றார்.
1991-ல் தமிழக அரசின் திரு.வி.க. விருதைப் பெற்றார் இவர். 1994-ல் சாஸ்வதி பரிசை இவரது ‘அவள்’ சிறுகதைத் தொகுப்பு பெற்றது.
1995-ல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க விருதைப் பெற்றார்.
1996-க்கான ‘அக்னி’யின் அட்ஷர விருதைப் பெற்றார்.
திருச்சி மாவட்டத்தில் 5.11.1925-ல் பிறந்த இவர், ஒரு நாவலுக்கான பொருளை முன்பே திட்டமிட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்து மக்களின் வாழ்வைக் கண்டறிய அங்கேயே தங்கி உய்த்துணர்ந்த பின்னரே நாவலை எழுதுகிறார்; இதுவே இவரது தனிச் சிறப்பாகும்.
– கரிப்பு மணிகள் (சமூக நாவல்), முதற்பதிப்பு: ஏப்ரல் 1979, தாகம், சென்னை.
இந்த நாவல் பற்றி…
Graphic Stories portraying the tribulations of industrial workers are few and those that concern the dumb agricultural labourers are fewer still. Strangely no one seems to be even aware of the existence of a large disorganised chunk of working class toiling in sub-human conditions in the salt-pan belt of the South East Coastal Regions of Tamil Nadu, perpetually exploited by a hoard of heartless Capitalists, contractors and middlemen exposed to total starvation, intense heat; and lurking voilence all their lives..
The author has put out her message absolutely clearly and one who reads this novel will grant that we are not a civilised peole if these conditions still persisits.
The Hindu : 26.6.79
S.R. Govindarajan
உப்பு அளங்களை அணுஅணுவாய் அளந்து, அங்கே உலவும் நெஞ்சங்களை உணர்ந்து, இயற்கையின் சீற்றங்களோடு இயைந்து, ஏற்றங்களைப் போற்றிப் படைத்திருக்கிறார் ஆசிரியர். புதிய வேட்கையோடு எல்லாப் பக்கங்களையும் அறிந்து கொள்ளும்படி கதை தொய்வின்றிச் செல்கிறது. திட்டம். 25.6.79
மன்னர் மன்னன்