என் வாழ்க்கை குறிப்புக்கள்
தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் தென்காசியில் சாதாரண குடும்பத்தில் 6.4.1958ல் பிறந்து அதே ஊரில் உயர் நிலைக்கல்வியை முடித்தேன். ஆங்கிலத்தில் தட்டெழுத்து பயிற்சி பெற்று முதல் வகுப்பில் வெற்றி பெற்றேன்.
இயற்கையை மிகவும் நேசித்து ரசித்து வளர்ந்தேன். அதே நேரத்தில் பல புத்தகங்கள் நாவல்களை தொடர்ந்து படித்தேன்.
டாக்டர் மு. வரதராசனார், அகிலன், நா. பார்த்தசாரதி, டாக்டர் லட்சுமி, சாண்டில்யன் ஜே.எம்.சாலி, சிவசங்கரி ஆகியோரின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
அப்போதே எனக்கு எழுத ஆர்வம் ஏற்பட்டு எனக்குள் எழுதி வைத்தேன்.
1980ல் திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூர் வந்து கடந்த 26 வருடங்களாக சிங்கைவாசியாக வாழ்கிறேன்.
என் கணவர் தனியார் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக பணிபுரிகிறார். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
1987ம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் வானொலியில் என் படைப்புகள், சிறுகதைகள், கட்டுரைகள், சிறுவர் நாடகங்கள், காட்சியும் கானமும், இசையும் கதையும் என தொடர்ந்து எழுதினேன்.
அதே நேரத்தில் சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிக்கையிலும் நிறைய சிறுகதைகள் எழுதி வெளிவந்துள்ளன.
இதுவரை 1 உண்மைக்கதை, 30 சிறுகதைகள், 30 சிறுவர் நாடகங்கள், 18 கட்டுரைகள், 5 சமூக நாடகங்கள், 25 கவிதைகள் எழுதியுள்ளேன். வானொலியில் எனக்கு பல முறை பரிசு கிடைத்துள்ளது.
1990லிருந்து 1992 வரை சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கத்தில் உறுப்பினராக செயலாற்றியுள்ளேன். சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். சிங்கப்பூரில் வாகனம் ஓட்டும் உரிமை பெற்றுள்ளேன்.
மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுக பயணம் சென்று வந்துள்ளேன். நிறைய படிக்கிறேன். எழுதுகிறேன்.
வாசிப்பது எனக்கு சுவாசிப்பது போல. தமிழ், ஆங்கிலம், எனக்கு தெரிந்த மொழிகள் ஆகும். சிங்கப்பூர் எழுத்தாளர் கட உறுப்பினராக உள்ளேன்.
- புதிய பாதை: கவிதைத் தொகுப்பு
- வேத வாக்கு: சிறுகதைச் சரம்
- பிரகாசம்: சிறுகதை தொகுப்பு
அன்புடன்,
பீரம்மாள்
BLK 67 # 07-506
Bedok South Ave 3
Singapore 460067
தொலைபேசி : 4412667
’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்