பா.ராமானுஜம் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதுபவர்; சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை இரண்டு மொழிகளிலும் செய்தவர். இவரது படைப்புகள் கணையாழி, ஆனந்த விகடன், சொல்வனம், திண்ணை ஆகிய தமிழ் இதழ்களிலும், ஸ்பான், இந்தியன் லிட்டரேச்சர் (சாஹித்ய அகாதெமி) தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியன் ரெவியூ, டெக்கன் க்ராநிக்கல் ஆகிய ஆங்கில இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
தெலுங்கு-ஆங்கிலம் மொழிபெயர்ப்புகளுக்கு (நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு) பதிப்பாசிரியராகவும், பல வருடங்கள் ஓர் ஆங்கில நாளிதழுக்கு பத்தியாளராகவும் இருந்திருக்கிறார்.
ஆங்கிலத்தில் 23 புத்தகங்களும், 500க்கும் மேற்பட்ட பத்திரிகைக் கட்டுரைகளும் ஏராளமான ஆராய்ச்சிக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
ஆந்திரா லயோலா கல்லாரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து 2013ல் ஒய்வு பெற்ற இவர், பதினோரு வருடங்களாக வேறு ஒரு கல்லூரியில் இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த நாற்பது வருடங்களாக விஜயவாடாவில் வசித்து வருகிறார்.
மின்னஞ்சல்: partharamanujam@gmail.com
வலையகம்: https://partharamanujam.weebly.com/