பவானி சச்சிதானந்தன்

பவானி சச்சிதானந்தன்
 

பெயர்:திருமதி பவானி சச்சிதானந்தன்
கொழும்பு, இலங்கை
Email: Satchubawani1@gmail.com
தொழில்:தையற்கலை நிபுணர், BS CREATIONS Director

கலை:எழுத்தாளர் கவிஞர்,கருத்தாளர்,நூல் ஆய்வாளர், கனடா தமிழாழி தொலைக்காட்சி “கவிக்களம்” நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆவேன்.

நான், கணவர் மகன் மகளுடன் சுய தொழிலுடன் இல்லத்தரசியாக வத்தளையில் வசிக்கின்றேன் .

இல 65 போலகல  வீதி ,வெரல்லகம ,கண்டி என்ற முகவரியில் திரு திருமதி துரைசாமி ராமாயி தம்பதியினருக்கு அன்பு மகளாய் பிறந்து உடன் பிறந்த ஆறு சகோதர சகோதர ர்கள் உடன் வளரந்து  கல்வி கற்றேன் என்பதை பெருமிதமாகக் கூறிக் கொண்டு தொடர்கிறேன் .

தாய் தந்தையினரின் ஆசீர்வாதத்தைப்  பெற்று பெருமையுடன் 1990 ல் எழுத்துத்துறையில் பிரவேசித்தேன் .

எனது முதல் சிறுகதை “சந்தேகம் “என்ற தலைப்பில் 08.07.1990 ல் சிந்தாமணி வார இதழில் வெளிவந்தது .

அதனை தொடர்ந்து வீரகேசரி ,தினகரன் பத்திரிகைகளிலும் எனது பலவாறான சிறுகதைகள் ,கட்டுரைகள் ,கவிதைகள் என்பவற்றை பிரசுரித்து ஊக்குவித்தனர் .

04.07.1999 ல் “வாழ நினைத்தால் “எனும் சிறுகதையை சிறந்த கதையாக தெரிவு செய்த தினகரன் வார மஞ்சரி பணத்தை பரிசாக வழங்கியது .

அதே போன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் பலவாறான நிகழ்ச்சிகளிலும் எனது ஆக்கங்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டன .குறிப்பாக “பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில்”  எனது பல கட்டுரை கவிதை சிறுகதை, விவாத ஆக்கம் என்பவற்றை வாசித்தார்கள் .

வானொலியில் குண்றின் குரல் நிகழ்ச்சியில் எனது பல நாடகங்கள் ஒலிபரப்பப் பட்டன.

அதன் பிறகு வத்தளையை வாழ்விடமாகக்   கொண்ட நான் நீண்ட காலமாக எழுத்துத் துறையில் பிரவேசிக்காமலேயே இருந்து விட்டேன்.

மீண்டும் தொடரலாம் என  ஆசைப்பட்டு விரும்பி ஐந்து வருட காலமாக எழுதுகிறேன். லண்டன்  மாதாந்த இதழான “சிறுகதை மஞ்சரி” யில் எனது கதைகள் வெளிவருவதோடு”பதவி “எனும் கதையை சிறப்பு கதையாக தெரிவு செய்ததில் மகிழ்ச்சியே.

இந்தியாவில்  “இனிய நந்தவனம் “இதழில் எனது கதைகள் வெளிவருகின்றன.
கனடாவில்”உதயன் ” பத்திரிகையில் எனது ஆக்கங்கள் வெளிவருகின்றன.  அதில் எனது சிறப்பு சிறுகதையுடன் இலங்கை சிறப்பிதழை நேரில் கையளிக்க   பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சியே.

அதே போன்று முகநூல் வாயிலாக இந்தியாவில் ரோசாக் கூட்டம்,  கவிதைச் சாரல்சங்கம், ஐந்திணை தமிழ்ச்  சங்கம்,கவிதைத் தளம்,தேன் மழைச் சாரல்,சிவப்புச் சூரியன் போன்ற பகுதிகளிலும் எனது ஐனூறுக்கும் மேலான ஆக்கங்களுக்கு வெற்றிச் சான்றதழ் பெற்றுள்ளேன்.

ரோசாக் கூட்டத்தில் “வாழ்நாள் சாதனையாளர் விருது” பெற்றதில் மகிழ்ச்சியடைகின்றேன் .

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையும் ஆக்கங்களைப் பதிவிட்டு வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கி பெருமைப் படுத்துகின்றது .

இது எல்லாமே எனது எழுத்துத் துறையை மேலும் மேம் படுத்திக் கொள்ள துணையாகவே உள்ளன .

தொடர்ந்து “வாழ்க்கை என்பது”என்ற சிறுகதை தொகுதியையும் “நதிகளின் ஓட்டம் கடலினிலே”என்ற கவிதை தொகுப்பையும் 03.11.2024ல் வெளியி ட்டுள்ளேன் .
வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்ற உண்மையில் வெற்றி கண்ட நான் இன்னும் இன்னும் புதிய படைப்புகளை படைத்திடவே முயல்கின்றேன் .

எனது  கணவர், மகன் அரிகேஷ்,மகள் கீர்த்தனா, பெற்றோர் சகோதர சகோதரிகள் நட்பு உள்ளங்கள் அனைவருக்கும்
நன்றி கூறுவதுடன்

நான் பல்வேறு வகையான விருதுகளைப் பெற்றுள்ளேன் அவைகளில் சில

இந்தியாவில்
*நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண் விருது
*நோபல் உலக சாதனை விருது
*கனடா விழித்தெழு பெண் விருது
*பாரதியார் விருது
*சாரளங்களின் வழியே கதை விருது
*மண்மனம் விருது
*எழுத்தாளர் சுஜாதா விருது
*காதல் தூவல் விருது
*BEST ARTIST Award என்பனவாகும்.

பல முகநூல் குழுமங்களில் நெறியாளராகவும் மணிப்புர கவிமகுட நிர்வாகக் குழுவிலும் அவ்வப்போது நடுவராகவும் பயணிக்கின்றேன்.
25.01.2024 ல் வகவம் கவிதா வட்டத்தில் தலைமையாக கலந்தேன்.

15.11.2023,
08.03.2024,
16.02.2024,
30.10.2024,
06.11 2024,
11.02.2024,
04.06.2024,
11.02.2025 ஆகிய திகதிகளில் நேத்ரா தொலைக்காட்சியில் நேர்காணலுக்காக  சென்றேன்.

25.01 2024,
08.03.2024,
16.02.2024 ஆகிய திகதிகளில் வீரகேசரி பத்திரிக்கையில் இணைய நேர்காணலுக்காக இணைந்தேன்.

12.01.2024 ல் தேனருவி வானொலியில் சிறப்பு கவிஞராக இணைந்தேன்.

06.11.2024ல் சக்தி தொலைக்காட்சியில் எனது நூல் வெளியீட்டு செய்தி ஒளிபரப்ப பட்டது.

கனடா உதயன், இலங்கை வீரகேசரி,தினகரன்,தமிழனின் தமிழ்முரசு ஆகிய பத்திரிக்கைகளும் வெளியீட்டுக்கு முன்னும் பின்னுமாக செய்திகளை பிரசுரித்தன.

25.10.2024 tamilleader.lk யிலும் நூல் வெளியீடு பற்றிய செய்தி வெளியானது.

20.02.2025 ஆதவன் தொலைக்காட்சியில் தமிழே வணக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.

06.03.2025 DAN TV நேர்காணலில் கலந்து மகிழ்ந்தேன்.

05.11.2023ல் நோபல் உலக சாதனையை நிறுவனத்தின் மூலமாக பெற்றேன்.

2024 ல் உலகளாவிய தமிழ் பாடல் எழுதும் போட்டியில் யேர்மனியில் அதிக புள்ளிகளைப் பெற்று எனது பாடல் தெரிவானது.

இவ்வாறாக எனது கலைப்பயணம் இறைவனின் ஆசியுடன் தொடர்கின்றது.

நன்றியுடன்
திருமதி பவானி சச்சிதானந்தன்
கொழும்பு
இலங்கை.
கைப்பேசி:
0773102111.
25.03.2025.