வாழ்க்கைக்குறிப்பு:
இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம்
புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி
காலம் : 15.08.1900 – 04.12.1976
ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர்.
எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
முதல் கவிதை : காதல் (1934)
முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி
சிறப்பு பெயர்கள்:
- சிறுகதையின் சாதனை
- புதுக்கவிதையின் பிதாமகன்
- புதுக்கவிதையின் முன்னோடி
- தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
- புதுக்கவிதையின் முதல்வர்
- புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
புனைப் பெயர்:
- ரேவத
- பிச்சு
- ந.பி
சிறுகதைகள்
- பதினெட்டாம் பெருக்கு
- ராகு கேது
- தாய்
- வானம்பாடி
- ஆராய்ச்சி
- மருதாணி விரலெங்கே? அழகெங்கே?
- விழிப்பு
- முள்ளும் ரோஜாவும்
- சொக்கு
- மீனி
- புருஷன் எழுதின கதை
- காபூலிக் குழந்தைகள்
- அடகு
- அரைப்பைத்தியம்
- மீனலோசனி
- ஜம்பரும் வேஷ்டியும்
- மோஹினி
- குடும்ப ரகசியம் (குறு நாவல்)
- மாங்காய் தலை
- இரட்டை விளக்கு
- காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்)
- வானம்பாடி
- தரிசனம்
- பலூன் பைத்தியம்
- நெருப்புக் கோழி
- புலியின் வரிகள்
- முதல் பிடில்
- காவல்
- வெறும் செருப்பு
- ஞானப்பால்
கவிதைகள்
- காட்டு வாத்து (1962)
- வழித்துணை (1964)
- குயிலின் சுருதி (1970)
நாவல்
- குடும்ப ரகசியம்
- கட்டுரைகள்
- மனநிழல் (1977)
- நாடகங்கள்
- காளி (1946)
பிற செய்திகள்
- 1935-ல் கலைமகள் பத்திரிக்கையில் “புதுமைப்பெண்” என்ற இவரது முதல் ஓரங்க நாடகம் வெளியானது.
- கலைமகள் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது – சிறுகதை முள்ளும் ரோசாவும்
- இவர் பணியாற்றிய இதழ்கள் – நவஇந்திய அனுமன்
- இவர் நடித்த படத்தின் பெயர் – ஸ்ரீராமானுஜர்
முன்னுரை – மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.
மணிக்கொடி காலத்தில், மணிக்கொடி களத்தில் சிறு கதைகளை படைத்தவர்கள் கட்டுரைத் துறையிலும் ஈடு பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் ந. பிச்சமூர்த்தி, ‘பிக்ஷ’ என்ற புனை பெயரில் ‘மன நிழல்’ என்ற தலைப்பில் அவர் கட்டுரைகள் எழுதி வந்தார். பிச்சமூர்த்தி எழுதிய கட்டுரைகளுக்கும் மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கும் வித்யாசம் இருந்தது. வித்யாசம் உருவத்தில் மட்டும் இல்லை. தொனி, நோக்கு, வெளியீடு இந்த தன்மைகளிலும் வித்யாசம் இருந்தது. கட்டுரை என்கிற “எஸ்ஸே” ‘ஸ்கெட்ச் ‘ஸ்கிட்’ என்ற ஆங்கிலப் பிரிவுகளின் குணங்கள் இவற்றில் காணப்பட்டாலும் இந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஒரு புதுமைப் பாங்கு இவற்றில் காண முடிகிறது. மன ஓட்டங் களையும் இயற்கை வர்ணனையையும் தத்துவ நோக்கையும் கதையம்சத்தையும் ஒன்றுகூட கலந்திருக்கும் இவை தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய ‘ஷெனர்’ (genre) என்கிறோமே உருவப்பிரிவை தந்திருக்கின்றன. வ. ரா. வின் புதிய உருவக் கண்டுபிடிப்புகளான ‘நடைச் சித்திரம்’ ‘ஆளுக்குள்ளே ஆளு’ முதலியவை போன்றதாகும். ஒரு சம்பவமோ காட்சியோ அவரது மன நிழல் வார்ப்பில் அகப்புற அநுபவத்தை, ஒரு அடிப்படைத் தத்துவ தரிசனத்தை, பேருண்மையை வெளிப்படுத்துவதை, உணர்த்துவதை நாம் உணர முடியும்,
பிச்சமூர்த்தி வாழ்ந்த நாட்களிலேயே இதை வெளியிட வேண்டும் என்று விரும்பினார். நானும் விரும்பினேன். நடக்க வில்லை. அவர் முன்னுரை எழுதி இருந்தால் என்ன எழுதி இருப்பாரோ?
இந்த மனநிழல் தற்கால தமிழ் இலக்கியத்துக்கு ஒரு அபூர்வ சேர்க்கை.
சி. சு. செல்லப்பா
1-4-77
சென்னை.