கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்!






அன்று வாரமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது. ஆயிரம்தான் மெமூ ரயிலுகளிலும், வந்தே பாரத் ரயில்களிலும் பயணம் செய்திருந்தாலும் மால்களில் பயணிக்கும் அந்த மாலைச் சுற்றிப் பார்க்க உதவும் ‘டாய் ரயிலில்’ குட்டிகளை அமர வைத்து கூட, பயணிக்கும் சுகம் தனிதான்!.
அடுகடுக்காய் மாடிகள் இருந்த மாலில் ஏறி இறங்கப் படி இருந்தாலும் பதட்டத்தோடு பயணித்தாலும் பக்காவாய் சுகம் கொடுக்கிற ‘எஸ்கலேட்டரில்’ பயணிப்பது பயம் கலந்த சுகத்தைத் தராமலில்லை!.
அருகருகே இரு எஸ்கலேட்டர்கள் இருந்தன!. ஒன்று மேலே ஏற, அடுத்து அருகிலேயே இருந்தது ஃபோரின் கீழே இறங்க ஒன்று.
எல்லோரும் ஒன்றை உதாசீனப்படுத்தி, ஒன்றை மட்டுமே உபயோகப் படுத்தினார்கள் . ஏற உபயோகப்படுத்தும் எஸ்கலேட்டரைப் போல் இறங்ககும் எஸ்கலேட்டர் அதிகமாய் யாராலும் பயன்படுத்தப் படவில்லை!
ஏன்?
ஏறுவது சிரமம். மூச்சு வாங்கும் என்பதால்தான்! ஏறும் எஸ்கலேட்டர்கள் எல்லாராலும் பயன்படுத்தப் படுகின்றனவா? ஏறும் அளவு இறங்குவது சிரமமில்லை என்று இறங்கும் எஸ்கலேட்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லையா?!
ஒலித்த ஏணிப்படிகள் பாட்டு ஒன்றை உறுதி செய்தது.
வாழ்க்கையில் மேலே ஏற, யாராவது ஒருவர் எஸ்கலேட்டராய் துணையிருந்தால் தான் மேலே போவது… உயர்வது எளிது!. அதேசமயம் கீழே இறங்க, இறங்க என்ன?! வாழ்க்கையில் விழ.. யாரும் தேவையில்லை!.. நாமே நம் வீழ்ச்சியை அமைத்துக் கொள்ளகிறோம் என்பதுதானே உண்மை!?
‘கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம். அன்புமிக்க ஒரு மனம், நல்லவர்க்கு ஒரு குணம்!
நல்லவர்கள் வல்லவர்களாய் வளர, அன்புமிக்கவர் குணத்தை ஆதரவாய்ப் பற்றிக் கொள்கிறார்கள். வீழக்கூடியவர்களோ.. தங்கள் மமதை என்ற குணத்தால் தாமே வீழ்ந்து போகிறார்கள்!.
என்ன ஒன்று, இரு எஸ்கலேட்டர்களிலும் இரண்டும் நிகழ்த்தத் தாங்கள் தயார் என்பதை பச்சைவிளக்காலே பறை சாற்றுகின்றன. எதை ஏற்கிறோம் என்பது இறைவன் தீர்ப்பைப்பொறுத்தது!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |