ஓரு சோறு சிந்தினால்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2024
பார்வையிட்டோர்: 4,289 
 
 

‘ஒரு சோறு சிந்தினால் ஒன்பதுநாள் பட்டினி’ என்றுஅன்றைய நாட்களில் அம்மா நான் சாப்பிட உட்காரும் போதெல்லாம் சொல்வாள். என்னமோ அந்தக் காலத்தில் வள்ளுவர் சாப்பிட உட்கார்ந்தால், ஒரு தம்ளரில் தண்ணியும், ஒரு ஊசியும் அருகே வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். சிந்தும் பருக்கைகளை ஊசி கொண்டு குத்தி எடுத்து டம்ளர் தண்ணீரில் அலசிக் கழுவி வாயில் போட்டுக் கொள்வாரென்று சொல்வாள்.

உணவை வீணாக்கக்கூடாது என்னும் அவளுடை எண்ணம் புரிந்தது. அது அன்னம் கடவுள் என்று கருத வைத்தது. இன்றைக்கு என்மகள் தன்மகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள் இப்படி..’குட்டிமா கீழே சிந்தினா அது ‘டஸ்ட்’ அசிங்கம், அதை எடுக்கக் கூடாது. ‘ என்று.

அம்மா சொன்னது கரெக்டா? இல்லை என் மகள் தன்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது கரெக்டா? புரியவில்லை எனக்கு.

அந்தக் காலத்து நடத்தைகள் ஆராதிக்கப்பட்டது ஒருகாலம். அதுவே அநாகரீகமாகி விட்டது இந்தக் காலம்.. நாகரீகம் வளர்ந்து என்ன மிச்சம்? என்று கேட்கிற என் மனக் கேள்விக்கு…

ஊசியும் ஒரு தம்ளர் தண்ணியும்தான்..! வேறென்ன சொல்ல?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *