ஒளவையார் திருமண வாழ்த்து
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 3,524
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சொற்கள் மிகுதிப்படாமல் சுருக்கமாகவே பேசு தல் வேண்டும். அவ்வாறு பேசுவது தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். ஒளவையார் சுருக்கமாகவும் விளக்கமாகவும் பேசுவதில் மிகவும் கெட்டிக்காரர். அஃது அவர் இயற்றிய நூல்களால் இனிது புலனாகும்.
சோழ மன்னனுக்கு முடிசூட்டு விழா இனிது நடைபெற்றது. புலவர் பெருமக்கள் திரண்டு வந்து பல செய்யுட்களால் அரசனுக்கு வாழ்த்துரை கூறினார் கள். அவர்களுடைய வாழ்த்துரைகள் மிக நீளமாகக் கேட்பதற்குத் தலைவலியுண்டாக்குபவைகளாக இருந் தன. அவைகளையெல்லாம் கேட்டு அலுத்துப்போன ஒளவையார் ‘வரப்புயர’ என்று தமது வாழ்த்துரை யைக் கூறினார். ஒளவையாருஞ் சில செய்யுட்கள் பாடுவார் என்று எதிர்பார்த்த அரசன் இவ் வாழ்த் துரையைக் கேட்டு வியப்படைந்தான். அதன் பொருள் யாது என்று ஒட்டக்கூத்தரைப் பார்த்துக் கேட்டான்.
ஒட்டக்கூத்தர் அச் சொல்லுக்குப் பொருள் விரிக்கத் தொடங்கினார். ‘வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும். இவ்வாறு அரசன் சிறந்து விளங்குவான் என்பது ஒளவையாருடைய சொல்லுக்குப் பொருள்’ என்று ஒட்டக்கூத்தர் உரைத்தார்.
ஒட்டக்கூத்தரின் உரையைக் கேட்டோர் மட் டிலாக் களிப்படைந்தனர். ‘இவ்வாறு இரத்தினச் சுருக்கமாக வாழ்த்துரை கூறுதல் யாராலும் முடி யாது’ என்று கூறி ஒளவையாரைப் போற்றினர்.
“மிகைபடச் சொல்லேல்” (இ – ள்.) மிகைப்பட – சொற்கள் மிகுதிப் படும்படியாகச் சொல்லேல் – நீ பேசாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955
தொடர்புள்ள சிறுகதைகள்
அறிவு அற்றங் காக்கும் கருவி!
வளர்கவி
May 31, 2026
திருடாதே! பாப்பா திருடாதே!
வளர்கவி
May 25, 2026
வாக்கும் போக்கும்..!
வளர்கவி
May 13, 2026