ஒரு துண்டு உண்மை





சாத்தானும் நண்பனும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்தான்.

நண்பன் கேட்டான்: “அந்த மனிதன் எதையோ எடுத்திருக்கிறானே,… என்ன அது?”
சாத்தான் சொன்னான்: “அது ஒரு துண்டு உண்மை.”
“மனிதன் உண்மையைக் கையில் எடுத்திருக்கிறான்; உனக்குக் கவலையாக இல்லையா?”
சாத்தான் புன்னகைத்தபடி சொன்னான்: “அவன் அந்த ஒரு துண்டு உண்மையை வைத்துக்கொண்டு, புதிதாக வேறு ஒன்றும் செய்யப்போவதில்லை. வழக்கம் போல அவனும் ஒரு மதத்தை உருவாக்கி, முழுமையான உண்மையிலிருந்து மக்களைப் பிரித்து, திசை திருப்பிச் செல்வான். அதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை. பிறகு நான் ஏன் கவலைப்பட வேண்டும்?”
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |