எழுத்தாளன் பாடும் கீதம்




(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
[20-2-1990, சாகித்ய அகாதெமி விருது விழாவில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்]
எழுத்தாளர்களும், இலக்கிய விற்பன்னர்களும் கூடி யிருக்கும் இந்த மகத்தான சன்னிதானத்தின் முன் நிற்க எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு அகாதெமிக்கு என் நன்றி. இவர்கள் நம் நாட்டுப் பண்பாட்டின் பல்வேறு முகங்கள் அதேசமயம் பாரதத்தின் பாரம்பர்ய ஒருமைப்பாடின் நிதரிசனமாக தரிசனம் தருகிறார்கள்.

இந்த விருளை வழங்கியதற்கு அகாதெமிக்கு என் வந்தனம். ஆனால், நான் வந்திருக்கும் தேசத்தின் பகுதி யில் ஒருமனதான அபிப்பிராயம், விருது என்னை மிகத் தாமதமாக அடைந்திருக்கிறது என்பது. குறைந்தபட்சம் இருபது வருடத் தாமதம்.
ஆனால், வராமலேயே போவதற்கு, இந்தமட்டுக்கும் வந்ததே, அதுமேல் அல்லவா? இப்படி சந்தர்ப்பங்களில் வழக்கமாகச் சொல்லிச் சொல்லிச் ‘சப்பிட்டுப் போன பாஷை என்றாலும் எவ்வளவு உண்மை! ஐம்பது வருடங் களுக்கு மேற்பட்டுச் சிருஷ்டி எழுத்து ஈடுபாடின் நிறைவாய இந்தத் தருணத்தை ருசிக்க ஆண்டவன் அவனுடைய பரம கருணையில் என்னை விட்டு வைத்திருப்பதற்கு இன்புறு கிறேன். குற்றம் சொல்ல எண்ணமில்லை. ஆனால் இந்த சமயம் வேறுவிதமாகவும் அமைந்திருக்கக்கூடும். அப்படி நேர்ந்திருப்பின் என் வயதில் அது ஆச்சரியமுமில்லை.
ஆனால் உண்மையில். இந்த சமயம் என் பெற்றோர் களைச் சேர்ந்தது என்று பணிவுடன் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். எப்பவுமே அது அவர்களுடையதுதான். னெனில் பெற்றவர்களின் ஆயிரம் ஆசைகளின் ஆவாஹன மாகக் குழந்தை விளங்குகிறது. அந்த முறையில் மனிதனின் லக்ஷியமாக நிறைவேறாத அவன் லக்ஷியங்களின் தொடர்பாக மகன் விளங்குகிறான்.
யாவற்றிற்கும் மேலாக விருதுக்கு சிந்தா நதியைத் தேர்ந்தெடுத்தமைக்கு அகாதெமிக்கு என் பாராட்டுக்கள்.
மக்களிடையே விருது வாங்கியவர் உள்பட பரவலாக ஒரு அபிப்பிராயம் நிலவி வருகிறது. மிகையான தாமதத்தின் அதன் காரணமாக எழுத்தாளன் தன் சிருஷ்டி சக்தி சிகரத்தை எட்டி இறங்கிவிட்ட பின்னர் எழுதிய புத்தகத் துக்கே விருது வழங்கப்படுகிறது என்று ஆனால் ‘சிந்தா நதி’ விஷயத்தில் அப்படி நேரவில்லை. இந்த நூல் என் எழுத்து அடைந்திருக்கும் மெருகில் உள்ளடக்கம், உத்தி நடை அம்சங்களில் என முதிர்ச்சிப் பக்குவத்தின் சிறப்பில் என்னைக் காட்டுகிறது. நான் மட்டும் இப்படிச் சொல்ல வில்லை. என் விசுவாசிகளின் கருத்தையும் பிரதிபலிக் கிறேன். காத்திருந்தது வீணாகவில்லை.
விருதின் சேதி வெளியானபோது சிந்தாநதி, சுய வரலாற்றுக் கட்டுரைத் தொகுதி என்று விவரிக்கப்பட்டது. ஆனால் அப்படி அன்று.
சிந்தா நதி: நினைவுப்ரவாகம். மக்கள், சம்பவங்கள் புழுக்கங்கள், ஏக்கங்கள், உருவங்கள், உருவகங்கள், ஸ்தூலங் கள். அரூபங்கள் நினைப்புக்கு வழுக்கிய அதீத அனுமானங் கள், சொல்லப்படும் சம்பவங்கள், மேம்பாட்டுக்குச் சொல்ப மாய், நலுங்கலாய் – ஏன் கட்டடங்கூட இலாது படினும் அவைகளின் அதிசூக்ஷமமான
கோடி காட்டலில்,
அடித்வனிகளில்,
ஏதோ தரிசன சாத்ய சாயை காட்டி,
சமயங்களில் மந்த்ரோச்சாடனம் போன்ற சப்த நயங் களில் ஸாஹஸம் புரிந்துகொண்டு,
வாசகனுள் உறங்கிக் கிடக்கும் சுயப்ரக்ஞையைத் தட்டி எழுப்பி (உயிரின் ஒருமையை, தேடலில் ஆத்மாவின் தனிமையை உணரச் செய்து) கட்டடங்களில் சொல் வேகம் கவிதை நயத்தை, உபநிஷத் கதைத் தன்மையை அடைந்து
- இதுதான் சிந்தாநதி.
சிந்தாநதியெனும் சிருஷ்டி சொல்லும் பாணியிலும், பாஷையிலும் செய்த சாதகம் மாத்திரம் இல்லை. அதையும் மீறியது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மெனக்கெட்டு என்னைத் தேடி வந்திருக்கிறார்கள். புத்தகத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் இங்கே ஒரு வரி, அங்கே ஒரு சொல் அவர் கள் பட்டுக்கொண்டிருக்கும் சோதனைக்கு. துயரத்துக்கு ஆறுதலாய் புண்ணுக்கு ஒளஷதமாய் அமைந்திருந்ததைச் சொல்லிக்கொள்ள, கண்களிலிருந்து செதிள்கள் உதிர்ந்து இதுகாறும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றிக்கொண்டிருந்த நோக்குக்குப் புதுப் பரிணாமம் தந்ததை என்னோடு பங்கிட்டுக்கொள்ள அதில் அவர்களுக்கு ஓர் ஆறுதல். இப்படி என்னிடம் அவர்கள் மனம் திறக்கையில் அதற்குச் சாக்ஷி நிற்பது பயம் தருகிறது. ஆனால் அவர்கள் சுமை இளக என் சொல் உதவிற்று என்பதை நினைக்கையில், நான் எழுதியது வீணில்லை என்ற நிறைவு பெறுகிறேன்.
சதிகொண்டு மனிதனுக்கு மனிதன் பகை மூட்டும் அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.
என்னுடைய பொருட்டு. மனிதனின் நம்பிக்கை, கடவுளிடம் நம்பிக்கை, காலக்ரமத்தில் தன்மேல் நம்பிக்கையில் தெளிவடைகிறது.
மனித ஆவேசம், உத்வேகம் (THE SPIRIT OF MAN) இத்துடன்தான் எனக்குச் சம்பந்தம். அடங்காது, அஞ்சாது, முன்னேறிக்கொண்டு மேலும் மேலும் – மனிதச்சுவடு படாத ஸ்தலத்தில் இன்னமும் கணிக்காத சிந்தனைக் கடல்களில்…
வாழ்க்கையின் ரஹஸ்யத்தைப் புரிந்துகொள்ள அதன் வ்யவஸ்தையைச் சோதித்து, கிளறி அதற்கு நாம் கற்பிக்கும் அர்த்தம் தவிர வேறு இல்லை என்று அறிந்த பின்னரும் தன் கம்பீரத்தில், துணிச்சலில் கற்பிக்கும் சக்தியில் உயிரின் யாத்திரைக்கு நோக்கம் உண்டாக்கி, தலைவிதியை மனிதனின் மஹாஸங்கல்பமாக மாற்றி அமைக்கும் ஆவேசம் (THE SPIRIT OF MAN) இதுதான் என்னுடைய பொருட்டு,
என்பாடு மனித குடும்பத்துடன் – அவன், அவனுடைய ஸ்திரீ, மகவு என வாழ்க்கையின் தர்மமே ஆகிய குடும்ப மெனும் மும்மூர்த்தம்.
குடும்பப் பாசம், அதன் படிப்படியான விரிவில் மனித வர்க்கத்தின் மேலேயே அன்பாக முதிர்ந்து, பிறகு அதுவும் முறையாக, எல்லையற்ற விதவிதங்களில் சௌந்தர்யம் கொண்ட ஜீவராசிமேல் பரிவாக மாறும் மானிடத்துடன் தான் என் பாடு.
சுருங்கச் சொல்லின் (THE SONG OF THE SPIRIT OF MAN) மானிடத்தின் கீதத்தில்தான் எனக்கு இழைவு
உங்களுக்கு நான் சொல்கிறேன்: எழுத்தாளன் மானிடத் தின் கீதத்தின் பித்துப் பிடித்தவன். ராமகிருஷ்ண பரம்ஹம்ஸரைக் கடவுளின் பித்துப் பிடித்தவர் என்று ரொமெயின் ரோலந்த் விவரிக்கிறார். அதுபோல் கீதம் அவனுக்குச் சொந்தமாயிருந்து நிலை மாறி அவனே அதற்குச் சொந்த மாகிவிடும்போது எழுத்தாளனால் பாடாமல் முடியாது காலத்தினால், மனிதனால், எதனாலும்,யாராலும்,என்ன இடை யூறானாலும் அதை மீறி எழுத்தாளனையும் மீறி கீதம் ஒலித்துக்கொண்டிருக்கும். அதுவே அவன் சோதனை (சிலுவை: CROSS) அவனுடையB சோதனையில்தான் அவனுடைய மஹத்தான பெருமையே.
– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.