எல்லாருக்குள்ளும் இருக்கிறான் இரண்யன்!





எல்லா மனிதர்களும் இரட்டை வேடம்தான் போடுகிறோம். என்ன ஒரு விஷயம் பிடித்தவர்களிடம் நல்லவர்களாக!., பிடிக்காதவர்களிடம் கெட்டவர்காளாக!. ஒருவரைப் பிடிக்காமல் போவதற்கு ஓராயிரம் காரணம் இருக்கலாம். ஆனால்,. வட்டத்திற்கு ஒரே புள்ளிதான் ஆரம்பம். அதுபோல, பிடிக்காமல் போக அவர்களின் செயல்பாடுதான் அதி முக்கிய காரணம்.

அந்த அண்ணாச்சியை ஆதர்ஷுக்கு அவ்வளவாய்ப் பிடிக்காது. காரணம் அண்ணாச்சி, நாகரீம்னா என்னன்னு மருந்துக்குக்கூட தெரிஞ்சு வச்சுக்காதவன். அவன், நடத்தை குறைபாடுகளுக்கெல்லாம் அவன் சின்னவயதில் நசுக்கப்பட்டதுதான் காரணம். எல்லாருக்கும் பணிஞ்சு, பணிஞ்சே வளர்ந்தவன், தான் வளர்ந்ததும், தனக்கு எல்லாரும் கீழ்னு நெனைக்க ஆரம்பிச்சுட்டான். போலீஸ்ட்டயும் வாத்யார்ட்டயும் படிக்காம அடிவாங்கி அடிவாங்கிக் காயப்பட்டவன்தான் அதி தீவிரவாதியாகிறான். மற்றவர்களைக் கடைசி காலத்தில் காயப்படுத்தி மகிழ்கிறான்.
அண்ணாச்சி, எதாவது ‘விசேஷ காலங்களில் சாப்பிட அழைத்தால் கூட, ‘ஆடு’ மேய்க்கிறவன் மாதிரிதான் ‘ட்ட்ட்ரூஉஊ…!’ ஹே..! ஹே.!. னு’ கையை ஆட்டி ‘வாங்கன்னுதான்’ சாப்பிட அழைப்பான் பாவம் அவனுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.
யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. அவர்களுக்குள்ளும் இரண்யன் தலைதூக்காமல் இருந்தவரை! இரண்யன் தலை எடுத்துவிட்டால்.. ‘எங்கடா உன் ஹாரின்னு..’ தூணை வெட்ட, யார் எப்போது அவனோடு மல்லுக்கு நிற்பார்களோ தெரியவில்லை!
அன்று அப்படித்தான் நடந்தது. ஆதர்ஷ் ஒண்ணும் கட்டைமண் அல்ல! அந்த அண்ணாச்சி வழக்கம்போல் எதற்கோ ஆடு ஓட்ட, நரசிம்ம வடிவெடுத்தான் ஆதர்ஷ்!. தூணைப் பிளந்து வெளியே வந்து தனக்குள்ளிருந்த இரண்ய (நரசிம்ம) சொரூபத்தைக் காட்டி இரண்டு படுத்திவிட்டான் அந்த அண்ணாச்சியை!. அண்ணாச்சி பாவம் அதல பாதாளத்தில் விழுந்தான்.
இரண்ய ஸ்வரூபத்தை பிரகலாதனாக பூட்டிக்காக்க பொறுமை வேண்டும். விஸ்வரூபமெடுத்து நரிசிம்மனாய்க் கீறிக் கொல்ல அதிக நேரமாகாது.
ஆனால், எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது உலகத்தில். யாரும் உங்களைக் கோபப்படுத்திவிட முடியாது. நீங்கள் கோபத்தை ஆயுதமாக்கும் ஹரி என்பதை அவர்கள் உணராத வரை.
நீங்கள்தான் கோபத்தை ஆயுதமாக்கிகிறீர்கள். கொல்ல விஷம் கொடுத்த இரண்யனைக்கூட மன்னித்த மாண்பு தானே பிர்கலாத மண்பு! நீங்கள் பிரகலாதனா?. பிளக்கும் நரசிம்மனா.. உங்களுக்குள் இருக்கும் இரண்யனோ பிரகலாதனோ பிறந்தால் தெரிந்துகொள்ளப்போகிறது பிரபஞ்சம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |