என்றைக்குத்தான் புரியுமோ!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 1,871 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பவித்ரா அலுப்புப் போகக் குளித்துவிட்டு வந்தாள். அழுந்தத் துடைத்த கன்னங்கள் பளபளத்தன.

“இப்போ எதுக்குக் குளியல்? விருந்தாளிங்க வர்றதுக்குள்ளே தலை காயுமா?” முடியோடு கன்னத்தையும் தடவினான் சுதர்சன்.

“உம்ம்.. போதுமே.”

முடிகளை நீவிப் பிரித்துக் கோதினாள். பன்னீர் போல முசுத்தில் சிதறிய தீர்த்துளிகள் சிலிர்ப்பூட்டின. வாசனை சிகைத்தூளின் மணம் சிறக்கியது. அப்படியே மனைவியைத் தன் மீது சாய்த்துக் கொண்டாள்.

“வர்றவங்கதான் புதுத் தம்பதிங்க… நாமில்லை” ஒய்யாரமாய்ச் சிரித்தாள்.

“தாம்பத்தியத்தில் போகப்போகத்தான் சுவை கூடுது பவி. ‘மோகம் முப்பது நாள், ஆசை அறுபதுநாள்’ என்று யாரோ… சொன்னது…” – புருவஞ் சுருக்கி யோசித்தாள்,

“நல்லவேளை… மறந்திடுச்சு” கூந்தலைத் தட்டி உதறினாள்.

“ஆங்… நினைவு வந்திடுச்சு கேளு. மோகம் மூப்பதினால்; ஆசை அலுப்பதினால்… என்ன புரியுதா?”

“மோகம் மூப்பு அடைவதாலும் ஆசை அலுப்பதாயிலும் நீங்கும். சரியா?”

“உம்ம்… கெட்டிக்காரி நீ! அந்த உணர்வுகள் தேய்ந்தாலும் அன்பு… அது மட்டும் நாள் செல்லச்செல்லத்தான் வளர்ந்து…”

“அப்படியொன்றும் நாம வெள்ளிவிழா கொண்டாடிவிடலை ஐயா! இரண்டே ஆண்டுதான் ஆச்சு!”

“உன் அழகும் கூடியிருக்கு தெரியுமா?”

முறுவலுடன் மின்காற்றில் சற்றே உலர்ந்த கூந்தலைப் பூப்பின்னல் இட்டு அடக்கினாள்.

“இன்னும் லலியைக் காணுமேப்பா?” கவலைப்பட்டாள்.

நேற்றிலிருந்து இன்றைய விருந்துக்காகத் தேங்காய்ப்பால் பிழிந்து, வெங்காயம் அரிந்து, பூண்டு உரித்து சிரமப்பட்டவளாயிற்றே!

சென்றவாரம் பழைய பள்ளித்தோழி லலிதாவை நாலைந்து ஆண்டு கழித்து சந்தித்ததில் மகிழ்ந்த பவித்ரா,

“ஏங்க… சமீபத்தில்தான் அவங்க திருமணம்கூட முடிஞ்சதாம். விருந்துக்கு அழைக்கலாமா?” என்று நாளும் குறித்து கணவனை அழைக்கச் செய்திருந்தாள்.

“மணி ஒன்றைத் தாண்டியாச்சு. நல்ல பசி. உன் கைமணத்தில் அப்போது இருந்து எச்சில் வேறு ஊறித் தவிக்கிறேன். குளுகுளுன்னு…” தாபமாய் நெருங்கினான்.

“எலுமிச்சைச் சாறு பிழிந்து ஐஸ் போட்டு வைச்சிருக்கேன். ஊற்றித் தரேன்”. நாசூக்காய் விலகி உள்ளே போனவள் கண்ணாடிக் குவளைகளுடன் சடபுடக்க, சுதர்சன் குரல் தந்தான்.

“அவங்க வந்தாச்சு பவி. கூட ரெண்டு குவளை ஊத்தி எடுத்து வா..”

அவள் பரபரத்த பூரிப்புடன் எட்டிப் பார்த்தாள்.

“வாங்க… வா… லலி… நேரமாச்சா… பயந்துட்டேன்.”

“என்ன பயம்? உன் அழைப்பை மறப்பேனா…? காலையிலே கடைக்குப் போய் வந்தேன். வந்தபிறகு கணக்குப் பார்த்தால் நூறு ரூபாய்போல குறையுது… அந்தக் குடைச்சல்… அதான்.”

“உட்கார் முதல்ல. ஜூஸ் எடுத்துக்கோ.”

“உம்ம்… வெயிலுக்கு இதமாயிருக்கு. இன்னைக்கு மட்டும் உன் அழைப்பு இல்லேன்னா இதே யோசனையில் கிறுக்காகியிருப்பேன்.”

”பள்ளி நாளிலேயே லலிக்கு ‘அம்மாமி’ பட்டம் உண்டு. ‘கவனமாய்ச் செய். பார்த்துப் போ’ன்னு எங்களுக்கு நூறு எச்சரிக்கைத் தருவாள். நீ எப்படித் தவறவிட்டே, லலி?”

“அதான் மன உளைச்சல். நான் மட்டுமாவது காலையிலேயே உன் வீட்டிற்கு வந்திடணும்ன்னு திட்டம் போட்டிருந்தோம். பேசியபடி உனக்கு சமையலில் உதவியிருப்பேன். இவரு மதியம் வந்து சேர்ந்திருப்பார்.”

“பதினொரு மணியில் இருந்து ‘ஐயோ பணம் குறையுதே’ங்கற புலம்பல்தாங்க” என்றாள் அவள் கணவன் பாவமாய்.

ஆண்களுக்குள் அதிக பரிச்சயம் இல்லாததாலே அனைவரும் ஒன்றாகவே அமர்ந்திருந்தனர். ஆனாலும் பெண்கள் சற்றே குரலைத் தழைத்து ஓயாது பேசினர்.

“கொண்டு வந்த காகிதப் பை அத்தனையிலும் பார்த்தியா லலி?”

“கவிழ்த்து, சாமான்களைப் பிரிச்சே அடுக்கிட்டேன். கடையிலே கவனக்குறைவாய் இருந்தேனா – இல்லை வரும் வழியிலான்னு தெரியலை.”

“பேருந்தில் அதிக நெரிசல்ன்னா… ” மீண்டும் பாவமாய் இடை புகுந்தான் அவள் கணவன்.

“சரி விடு லலி”

*’அதிகத் தொகை இல்லைதான். ஆனா, இப்படி தவறவிட்டுட்டேனே என்கிற அரிப்பு.”

“தெரியுமே. வகுப்பில் உன்னைவிட வேறு யாருக்காவது நாலு மதிப்பெண் அதிகம் வந்திட்டாலே ‘உனக்கு எதிலே போச்சு’ன்னு குடைஞ்சு ஆராய்வியே!”

பழைய நினைவுகளில் லலிதாவின் முகத்தில் சற்றுத் தெளிவு.

***

எல்லாருக்கும் அரைகுறை உறக்கம்.

விழித்து எட்டிப் பார்த்த போது பெண்கள் முகம் கழுவி, தலைவாரி, பின்னலிட்டு மொட்டாய் மல்லிகை சூடி இருந்தனர்.

மகிழ்வுடன் பேசிய பூரிப்பு கன்னங்களில் மிச்சமிருந்தது.

“இந்தாங்க காபி..”

சில நிமிடத்தில் லளிதாவின் கணவனும் வர, இவன் விருந்தோம்பலில் உலுக்க, சிரித்துப் பேசி மகிழ்வித்தான்.

சிற்றுண்டியுடன் அவர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.

விருந்தினர்களை அனுப்பிய கையோடு அவன் சிரிப்பு அணைந்து விட்டது.

“ஏங்க… இன்னுமா தலவலி மிச்சமிருக்குது? நெற்றியை நீவிவிட்டபடி கேட்டாள் பவித்ரா.

”இப்பத்தான் ரொம்பத் தலை வலிக்குது.”

“என் மீது ஏதாவது கோபமா?”

“விடு. அதெல்லாம் ஒரு பொருட்டா? தொலைந்த ஐந்நூறைப் போலப் போகட்டும் விடு.”

நிமிர்ந்து அவனை ஆழமாக நோக்கினாள்.

”உங்களுக்குப் புரிந்துருக்கும்ன்னு நினைச்சேன். அதற்கு இன்னும் சில மாதமாகும் போல.”

அவன் இறுகிய அமைதியோடு நின்றான்.

“லலிதா இழப்புத் தாங்காதவள். தொலைப்பு எல்லாருக்கும் அவ்வப்போது நேரிடுவதுதான்… இயல்பானதுதான்னு அவளுக்கு உணர்த்த முயன்றேன். அவளது பதட்டம், நான் தடவியதை… அந்தப் பொய்”

நிதானித்துப் பூரித்தபோது அசட்டுப் புள்ளகையுடன் அவன் அவளை ஏறிட..

அவள் பார்வையில்,

எரிச்சல்!

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *