ஊக்கமுடைமை




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
மனதில் சோர்வற்ற கிளர்ச்சி உண்டாதல்
17-ம் நூற்றாண்டில் காசியை ஆண்ட முகம்ம திய அரசர், குமரகுருபரர் நேரில் சென்று பார்க்க அவரை மதிக்கவில்லை. அதனால் தம்மனத்தை அழித்து விடாமல் உள்ளம் ஊக்கம் கொள்ள, காளி தேவியையும், கலைமகளையும் வேண்டினார். கலைமகள் அருளால் இந்துஸ்தான் மொழியை ஓதாது ணர்ந்தார். காளிதேவியின் அருளால் சிங்கத்தின் மீது ஏறிச்சென்று அவ்வரசன் கேட்ட கேள்வி களுக்கெல்லாம் பதில் சொல்லி, அரசனது நட்பைப் பெற்றார். நட்பின் உதவியால் சைவம் தழைக்கும் படி, சுவாமிகள் குமாரசுவாமிகள் மடமும், கேதா ரேசுவரர் ஆலயமும் கட்டினார்கள். இவ்விதம் சைவ வளர்ச்சிப் பெருகும்படி செய்தது இவரின் மன ஊக்கமே ஆகும். இதைப் பின் வரும் குறளும் அறிவிக்கிறது.
உள்ளம் இலாதவர் எய்தார்; உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு. (44)
உள்ளம் இலாதவர் = மன ஊக்கம் இல்லாதவர்
உலகத்து = இவ்வுலத்தாருள்
வள்ளியம் என்னும் = யாம் கொடுத்தலை உடையோம் என்கின்ற
செருக்கு = கர்வத்தை
எய்தார் = அடையார்.
கருத்துரை: ஊக்கமில்லாத அரசர் கொடுத்தல் குணம் இல்லாதவர் ஆவார்.
கேள்வி: வள்ளியம் என்னும் செருக்கை அடைபவர் எவர் ?
விளக்கம்: ஊக்கத்தினால் முயற்சியும், முயற்சியால், பொருளும், பொருளால் கொடையும், கொடையால் செருக கும் முறையே வளருமாதலால் ஊக்கம் இல்லாமற் போனால் மற்றவையும் இலவாம்.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.