உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 20, 2024
பார்வையிட்டோர்: 2,393 
 
 

அந்தப்பாட்டைக் கேட்கும்போதெல்லாம் ஆனந்தனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வரும்! ‘பாட்டிலொன்றும் தப்புஇல்லை. அதை அவரவர் பாடம் பண்ணிக் கொள்வதில்தான் தப்பு! ‘உன்னை றிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்., உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்!’ இதுதான் ஆனந்தனுக்கு எரிச்சல்.

உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்கிறதே பாட்டு. நான் என்னை அறிவதற்கே போராடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அறியய் முடியவில்லை…! அப்புறம் எங்கே உலகில் போராடுவது?!

என்ன விசித்திரம் என்றால்…?!… என்னை நான் அறியவில்லை.,! ஆனால் என்னை எவரெவரோ நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அதென்ன மாயமோ தெரியவில்லை., அடுத்தவன் தன்னையும் அறிந்து என்னையும் அறிந்து வைத்திருக்கிறானே?! எப்படி?! எனக்கும் கைப்பிடி அளவுதான் இதயம். அவனுக்கும் அப்படித்தானே?!

ஒரு வேளை மூளை அளவுதான் பெரிதாக இருக்குமோ?!. அது என் மூளை அளவைவிட மற்றவர்களுக்கு ரொம்ப பெரிதாய் இருக்குமோ?!

நாம் கவிழாமலிருக்க எத்தனை பிரயத்தனப்ப்டுகிறோமோ அதில் பாதிகூட இல்லாமல் நம்மைக் கவிழ்த்துவிடுகிறார்கள் மற்றவர்கள். எப்படி??!! ஆனந்தனுக்கு மட்டுமல்ல நம்மில் பலருக்கும் இதுதான் ஒரே பிரச்சனை,. நம் நிறையும் நமக்குத் தெரிவதில்லை. குறையும் தெரிவதில்லை. ஆனால், நம்மைக் கவிழ்ப்பவனுக்கோ நம் நிறையைவிட குறையைக் கணிப்பதே குறிக்கோளாயிருக்கிறது. அது தெரிகிறது., ஆனால் அதைத் தவிப்பதுதான் நமக்குத் தெரியவில்லை.

பாட்டு பதிவு செய்வதைப் பலரும் உன்னை அறிந்தால் என்பது நம்பலத்தை அறிவது என்று எண்ணுகிறார்கள். ஆனால்… பலவீனத்தைத்தான் அறியணும். அதுதான் வெற்றிக்கு வழி வகுக்கும். ஆனந்தனுக்கு ஒன்று சொன்னால் நல்லது! ‘நீ உன் நண்பனைச் சொல்

நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்னு ஒரு வாசகம் உண்டே…?! அதுமாதிரி ஒவ்வொருத்தருக்கும் பலவீனம்தான் நண்பன் பலமும் திறமையும்தான் எதிரிகள். நம் பலவீன நண்பனை மற்றவர்கள் எளிதில் தெரிந்து கொண்டுதான் நம்மை இவன் இன்னார் என்று அறிந்துவிடுகிறார்கள். நம் பலத்தைப் பற்றி. அடுத்தவனுக்கு என்ன கவலை?! அதைச் சரியாய்ப் பயன்படுத்தாவிட்டால் நாமே விழுந்துவிடுவோமே?!.

நம்மை அறியவும் உலகில் உயரவும் பலவீன நண்பனின் பல்ஸை அடுத்தவன் அறிந்து கொள்ளும்முன் நாமே அறிவோம்! இது ஆனந்தன் அறிந்தால் ஆனந்தம்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *