இழப்பு வரும், இதயமும் இறைவனாகும்
வாழ்க்கையின் முடிவு இழப்பாகவே இருக்கிறது. இழப்பு என்பது வெறும் உடற் சங்கதி. உடலும் உடலுமாய் கூடுகின்ற உறவே ஒரு மாயத் தோற்றம் இதன் பொருட்டே வாழ்க்கையும் நடைபெறுகிறது , இதையெல்லாம் அனுபவமாக உணர முடியாமல், போன பேதமை நிலையிலேயே, , கங்காவின் அந்தக் கல்யாணம் நடைபெற இருந்தது இதுவரை அவள் உலகமே வேறு வறுமையின் சுவடே அறியாத ஒருநடுத்திரக் குடும்பத்தில், பிறந்து வளர்ந்த, அவளுக்கு கல்யாணமான, புதிதில் எல்லாமே திசை மாறிப் போன மாதிரி, இருட்டு வந்து கவ்விக் கொண்டது அது என்னவகையான இருட்டு? அவளுக்கு புரியவில்லை உடம்பு நிறைய நகைகளின் சுமை அழுத்த, அதிகாலை வேளையில் மணமகள் வேடமிட்டு, காருக்குள் அவள் அமர்ந்திருக்க பக்கத்தில் மிக அருகாமையில் உடலைதொட்டு வருடி, ஸ்பரிசித்துக் கொண்டு, மணமகனாக புதிதாய் வந்து சேர்ந்த அவன் பார்த்திபன் செய்த சேஷ்டைகளெல்லாம் அவளை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லவல்ல நரகத்தில் தள்ளி வேடிக்கை பார்க்கவே, சூடேறிய இருப்பு நிலை அவனுக்கு உடலே தகிக்கிறது. அவன் நிலை இவ்வாறு இருக்கையில் அவளுக்கோ, பெருந் தூக்கம் கண்களை மூடி, காட்சி உலகமே, மறந்து போன மாதிரி, அவள் நிஷ்டை கூடி இருந்தாள் அவர்கள் கல்யாணமே நடுச் சாமத்தில் தான் நடந்தேறியது புகுந்தவீடு வர விடிந்திடும்போலிருந்தது..
அவனுக்கென்ன பகல் இரவேவிட்டுப் போன மாதிரி, உடல் கூடிக் களிக்கும் பரவச மயக்கம் அவனுக்கு விட்டால் காருக்குள்ளேயே முதல் இரவை முடித்து விடுவான் போலிருந்தது உணர்ச்சி திடுக்கிட்டு அவள் விழிக்கும் போதெல்லாம் அவன் தீயாக எரிந்து கொண்டிருக்கும் காட்சியே கண்களை நிறைத்தது. எனினும் அவள் அசையவில்லை நித்ரா தேவியின் மடியில் அவள். வாழ்க்கையின் நாடகம் அரங்கேற இருந்த நேரம். இரவும் பகலுமாய் துரித கதியில் இந்த வாழ்க்கை நாடகம் நடை பெறத் தொடங்கிய நேரம் அவன் என்ன அவளும் கூட வேஷதரியாகவே இருக்க நேர்ந்தது இந்த வேடநாடகம் எப்போது முடியுமென்று தெரியவில்லை முடிந்தால் இழப்புத் தான் மரணம் தான் இதை நினைக்காத வரை வாழ்க்கையும் சவால், தான் இது வரை அவள்கனவும் காட்சி உலகமும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்கிற மாதிரியே அவள் இருந்தாள். அவள் கண் முன்னால் ஒருமாசுபடாத பளிங்கு வானமே நிறை காட்சியாகத் தெரிந்தது. இதற்கு ஓர் அருமையான ஆதார புருஷனாக மட்டுமல்ல ஆதர்ஸ் நாயகனாகவும் அவனைக் கற்பனையில், கண்டு, அவள் தேர் ஓடி மகிழ்ந்ததென்னவோ உண்மை தான் ஒரு உன்னதமான தெய்வீக வரமாகவே அது அவளுக்கு கிடைத்திருக்க வேண்டும். இப்போது அவனைப் பார்க்கையில் அவளுக்கு தலை தெறித்து விடும் போலிருந்தது.தடம் புரண்டு போகும், நிலை தடுமாறிய அவன் உணர்ச்சி வெறியைப் பார்த்தவுடனேயே, அவளுக்கு நினைக்கத் தோன்றியது. இந்த மாய விளையாட்டில், இப்பேர்ப்பட்ட அவனிடம், சரணாகதி அடைந்தாலே, எனக்கு இது ஒரு பாவ விழுக்காடாகவே, அமைந்து விடக் கூடும் காடு வெறித்த அந்த மண்ணில் முதன்முதலாக கால் வைக்கவே, அவளுக்கு மனம் கூசியது.
அவர்கள் அங்கே வந்து சேரும் போது. பொழுது நன்றாக விடிந்து விட்டது ஆனால் இது அவளி ன் விடியலின் ஆரம்பமல்ல. இது வரைஅதற்காகக் காத்துக்கிடந்த அபலையுமல்ல அவள். ஏனென்றால் அவள் இன்றுவரைஅவள் வாழ்ந்து கழித்த யுகம் மண்ணோடு போகக் கூடியஒன்றல்ல அது ஒரு சந்தோஷ சகாப்தம் நெருப்பில் வீழ்ந்து மறைந்து போகவேஅந்தக் காட்டு உலகத்தின் கை விலங்கு அவளுக்கு அவள் அங்கு வரும் போது நிலைமைசாதகமாக இல்லை. வறுமையில் சீரழியும் அதன் முகத்தில் விழிக்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது, இப்படித் தொடங்கியது தான் அவள் வாழ்க்கை. அவளுக்கு அதை, நினைகக மனம் கனத்தது..
அவனுக்கு விசுவாசமாக அன்பைக் கட்டிக் காத்ததில், பலன் பூஜ்யம் தான் . அவன் நெருப்பு. காமத்தில் மட்டுமல்ல குணவிகாரம் கொண்ட ஒரு நெருப்பு மனிதனாகவே, அவன் இருக்க நேர்ந்தது விதி விட்ட தவறா? வேதம் கற்றுக் கொள்ள வந்த பாடமா இந்த வாழ்க்கையும் மனிதர்களும் ? அவனது , இலட்சியம் வேறு ஒரு குறிக்கோளோடு இயங்கிக் கொண்டிருப்பதாய் அவள் உணர்ந்தாள், அது வேறொன்றுமில்லை.அவன் நினைவு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது அந்த அவர்களுடைய, வீடு ஒன்று மட்டும் தான் அதுவும் மிகப் பெரிய குடும்பம் அதைக் கட்டிக் காத்து வளர்த்து விடுமளவுக்கு ஐயா அப்படியொன்று, நல்ல மனம் படைத்தவரோ தர்மம் காப்பவரஓ கும் அல்ல மாறாக சுருட்டுத் தொழில் செய்து பிழைக்கும் பெருங் குடிகாரன் , குடித்து விட்டு வீட்டில் எந்நேரமும் சண்டை தான் அதிலும் பத்துப் பிள்ளைகள் இவர்களை சுமக்கிற பெரும் பொறுப்பு பார்த்திபனுக்கு அதனால், அதைத் தவிர வேறு உலகமேயில்லை அவனுக்கு.அவள் உலகம் இன்னொரு துருவத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகவே அவன் நினைப்பு. அவனின் உணர்ச்சிகளைத் தீர்க்க வந்த ஒரு வடிகாலாகவே அவள் இருக்க நேர்ந்தது.
அவளை ஒரு உணர்ச்சியுள்ள ஒரு பெண்ணாக என்றைக் அவன் நினைத்துப் பார்த்தில்லை.அவன் நினைப்பில் மட்டுமல்ல, அங்குள்ள அனைவர்க்குமே அவள் வெறும் சடம்தான் இந்த சடம் வெறித்த சாலையில் அவள் மீது விழுந்த கல்லெறிகள் மிகக் கொடூரமானவை இதைப் பற்றி விபரிக்கப் போனால், இழப்பு வாழ்க்கையின் உண்மை நிலை தான் அரங்கேறி, உயிர் பதற அழ வைக்கும் அழுகை எனும் மகா நதிக்கு முன், அவள்உயிர் எம் மாத்திரம்? இதை யாரும் கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.
இந்தக் கொடுமைகளுக்கு துணை போன அவனே, இப்போது மறை பொருளாகி விட்டிருந்தான். துருவத்தில் அவனைக் காண முடியாமால், போன தனிமைத் துன்பம் அவளுக்கு. இது கூடி வரும் வேளையில் தான், ஐயா பார்த்திபனைப் பெற்றுப் போட்ட புண்ணியவானோடு அவள் தர்மம் காக்க, நின்று நிலைத்து போரிட நேர்ந்தது அவள் இருள் கனத்த யுகத்தின் முதற்களம் இழப்பு வாழ்க்கயின் கோரப் பிடிக்குள் அகப்பட்டே, அணு அணு வாக அவள் சாகத் தொடங்கிய தருணம். பார்த்திபனும் அப்போது வீட்டில் தான் இருந்தான்.
அன்று அவனுக்கு விடுமுறைநாள். அதிலும் வேலையில் அவன் மகா உத்தமன் அந்த வீட்டின் சுபீட்சமான , வருங்கால வெற்றிகளை முன்னிறுத்தித்தான் அவன் அவ்வாறு அர்ப்பணிப்புடன் உழைக்க நேர்ந்தது. இது அவளுக்கும் தெரியும் அவனை பொறுத்தவரை , அவள் மூன்றாம் மனுஷி தான் அதனால் தான் ஐயாவின் இந்த நகர்வை, ஒரு வேடிக்கை போல அவன் பார்த்துக் கொண்டிருக்க அவர் சொன்னார் தம்பியின் படிப்புக்குக் கொஞ்சம் காசு தேவைவைப் படுகுது. உமது, நெக்லெஸை தாரும் அடகு வைச்சிட்டு அவன் படிச்சு வந்த பிறகு, திருப்பித் தாறன் அவள் அதைக்க் கேட்டு முகம் கறுத்தாள் அதைப் பார்த்து விட்டு குரலை உயர்த்தி ஏளானமாக, பார்த்திபன் சொன்னான், உதின்ரை வாழைக்காய் மூஞ்சிக்கு எதுவும விடியாது, என்றானே பார்க்க.லாம். உடம்பின் ருசியை யை அறிந்து வைத்திருக்கிற அவன் சொல்கிறான்.
இதைக் குறித்து தர்க்கம் செய்து வாதாடி வெல்கிற, மன நிலையின்றி, சகஜமாக குரலை உயர்த்தி அவள் சொன்னாள் இழப்பைக் கண்டு நான் அஞ்சேலை. இப்படி இழப்புகளே தொடர்ந்தால், நானல்ல என் இதயம்ம் அப்பழுக்கற்ற சூரியனாய் மாறவும் கூடும் எனக்கொன்றும் நகையைத் தருவதில் ஆட்சேபணையில்லை. ஏனென்றால் நானே தங்கம் . அவன் அவளை மேலும் கீழுமாய் பார்த்து விட்டு அவளின் பரிபாஷை பிடிபடாமல், மல் நிலை குலைந்து போனான் நான் பார்த்துக் கல்லெறிந்தது, இவள் வாழைக்காய் மூஞ்சியை மட்டும் தான் இவள் தங்கம் என்பதை, நான் காணும் வரைகசினாலும் எதிர்வினைஆற்றாமல் இவள் இப்படி நின்று கொண்டிருப்பது கூட அந்த சொக்கதங்கத்தின் விளைவு தான் என்ற உண்மை, பிடிபடாத மயக்கத்தில் இருள் வெறித்த அவன் முகம் கூட அவள் கண்களூக்கு எட்டவில்லை இப்படி முகம் தொல முகம் தொலைந்து போய் வாழப் பழகியவர்கள் முன்னிலையில்லையில் அவள் ஒரு பிரசன்ன தேவதையாக மட்டுமல்ல, கடவுளாகவும் நிற்க நேர்ந்தது. அவள் இழப்பு வாழ்க்கையின் உச்ச கட்ட பலனும் அதுவாகவே இன்னும் தொடரும்.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 2,747
