இப்படியும் ஒரு…




‘இன்றைக்கு ஏமாறாமல் இரண்டிலொன்று பார்க்க வேண்டும் !’ கதிர் மனதிற்குள் முடிவெடுத்துக்கொண்டு சட்டையை மாட்டினான்.
விளக்கை அனைத்து விட்டு வீட்டுக் கதவைச் சாத்தி பூட்டிக் கொண்டு வெளியே வந்தான்.
பதினைந்து நிமிட நேர கால் நடைப் பயணத்தில் ஒதுக்குப் புறமான புறநகர்ப் பகுதி. தனியே வீடு.
உள்ளே விளக்கெரிய கதவைத் தட்டினான்.
மாலா வந்து கதவைத் திறந்தாள்.
ஆளைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.
“வாங்க… உள்ளே…” அழைத்தாள் .
கதிர் உள்ளே சென்றதும் கதவை அடைத்தாள்.
“ஆடம்பரமில்லாம முடிக்கனும்…” அவள் இழைந்து கொண்டு அவன் அருகில் அமர்ந்தாள்.
இவன் தலையாட்டி… அவளைத் தொட்டான்.
“மொதல்ல.. .” மாலா கையை நீட்டினாள்.
“எவ்வளவு…?”
“என்ன புது ஆள் மாதிரி கேட்குறீங்க..? ஐநூறு …!”
“இந்தா புடி !” சட்டைப் பையிலிருந்து எடுத்து அவள் ஜாக்கெட்டில் திணித்தான்.
“ரொம்ப குறும்பு..!” செல்லமாக சொல்லி கொஞ்சியவள் பணத்தை எடுத்து கட்டில்
மெத்தைக்கடியில் வைத்து விட்டு புடவையை உருவி விட்டு மல்லாந்து படுத்தாள்.
கதிர் அவள் இடுப்பில் கை வைத்து அவள் உதட்டில் உதடு பொருத்தினான் .அடுத்த சில வினாடிகளில் மெல்ல… தன் உடலை அவள் மேல் கிடத்தினான்.
“உய்! உய்…!” வெளியே விசில்.
“ஐயோ போலீஸ்.!” மாலா பதறி அவனைப் புரட்டினாள்.
எதிர்ப்பார்த்த கதிர் ….
“பரவாயில்லே..!” எழுந்திருக்காமல் பிடியை இறுக்கிப் பிடித்தான்.
“ஐயோ..! இதென்ன முரண்டு..? நானும் மாட்டிக்குவேன். நீங்களும் மாட்டிப்பீங்க..”மாலா அதிகம் பதறி மூச்சு முட்ட புரட்டினாள்.
கதிர் இதற்கும் அசங்கவில்லை.
“பரவாயில்லே..!” இன்னும் இறுக்கினான்.
“ஐயோ… நீங்க…”பேச்சு பாதியில் நிற்க பலத்துடன் தள்ளினாள்.
ஆனாலும் அவன் முரட்டுப் பிடியை விடவில்லை.
“விடுங்க… விடுங்க…”துள்ளினாள்.
“உன் நாடகம் எனக்குத் தெரியும் மாலா..”
முரண்டியவள் நிறுத்தினாள் .
“என்ன…?” கேட்டாள்.
“விசில் சத்தம் போலீஸ் இல்லே. உன் செட்டப் ஆள் !”
“என்ன சொல்றீங்க…?!!!”
“எல்லாம் நாடகம். பாதி மானம் போனாலும் கற்பைக் காபந்து பண்ணிக்கிறே. வாடிக்கையாளர் தொட்டதும் உன் ஆளை விசில் ஊதவச்சி போலிஸ்ன்னு புளுகி வெளியே ஓட வைக்கிறே…”
உண்மை வெட்ட வெளிச்சமாக மாலா தளர்ந்தாள்.
“என்ன சரியா..?”
கதிர் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து பதில் இல்லை. மாறாக கண்ணீர்.
“ஏய் ! ஏன் அழறே..?”
“ஒன்னுமில்லே…”
“பொய் ! நிசத்தைச் சொல்..?”
“என்னை நம்பி இருக்கிற அம்மாவிற்கு குடல் வால். வலியால் துடிக்கிறாங்க. அறுவை சிகிச்சைக்குப் பத்தாயிரம் பணம் வேணும். யார்கிட்டேயும் கை ஏந்த மனம் வரலை. வேறு வழி இல்லாம இப்படி சம்பாதிக்கிறேன். கற்பை இழக்க விருப்பமில்லே. அதனால் ஒரு ஆளை செட்டப் செய்து….” விம்மினாள்.
அதிர்ந்த கதிர்….
“எழுந்து புடவையைக் கட்டிக்க” சொன்னான்.
மாலா திகைத்தாள்.
“உன் அம்மா அறுவை சிகிச்சைக்கு நான் பணம் தர்றேன். இன்னையிலிருந்து நீ என் மனைவி. நாளைக்கு நமக்குத் திருமணம். அதுக்கு அப்புறம்தான் இது, மற்றதெல்லாம். இப்போ உடனே உன் அம்மாவை மருத்துவ மனையில் சேர்க்கிறோம். அறுவை சிகிச்சை முடிக்கிறோம்.”சொல்லி கதிர் எழுந்தான்.
“அத்தான்…!” விம்மி மாலா அவன் மார்மீது சாய்ந்தாள்.