இன்பம்




(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீல வானிலே மேகங்கள் நீந்திக் கொண்டிருந்தன, காற்றில் அடிபட்ட வெண் நுரைக் கூட்டம் போல.
மண் விண்ணைப் பார்த்து நின்றது, வறண்ட சுடு மூச்சோடு. வாழ்க்கை வெயிலில் அடிபட்டுத் தளர்ந்த வர்களின் முகத்திலே காலம் கீறி விடுகிற ரேகைகளைப் போல், பூமிப் பரப்பின் நெடுகிலும் கீறல்கள் வெடித்துக் கிடந்தன. வளம் குன்றியிருந்தது. பசுமைக்குப் பஞ்சம் ஏற்பட்டிருந்தது.
வானத்திலே, மாவுக் குவியல்கள் போலவும், ஐஸ் கட்டிகள் போலவும், பஞ்சுத் திவலைகள் போலவும், கொட்டிக் குவித்த மல்லிகைப் பூத் தொகுப்புகள் போல வும், மேகங்கள் சிதறிக் கிடந்தன.
‘இம் மேகங்கள் சூலுண்டு மழையாகப் பொழியு மானால்!’ என்ற ஏக்கம் மண்ணின் பார்வையில் பொதிந்து கிடந்தது.
‘நாம் அங்கே போவோமா?’ என்று கேட்டது மேகங்களில் ஒரு மேகம்.
‘அங்கே போவதற்குள் நாமே இல்லாமல் போவோம். நம்மை நாமே இழந்து விடுவோம்’ என்றது, ஞானியின் தாடியைப் போல் வெள்ளை வெளேர் என்றிருந்த மேகம் ஒன்று.
அதில் இன்பம் உண்டு. கொடுப்பதிலே தனி இன்பம் இருக்கிறது. பிறருக்கு உதவுவதே பேரின்பம்’
என்றது மற்றொன்று.
நீலவானம் மோனமாய் சிரித்துச் சொன்னது: ‘உண் மை. உங்களுக்குக் கிடைத்துள்ள வாழ்க்கை அற்புத மானது, மக்களின் வாழ்க்கையைப் போல வாழ்வு சிறப்புறுவது ஈகையினால். அளிக்கும் போது மகிழ்வு பிறக்கிறது. அது பன்மடங்காய் பெருகிப் பரிணமிக் றது. எங்கும் இன்பம் மலர்கிறது. நாம் கொடுப்பது நமக்கே வந் து சேர்கிறது, ஏதேனும் ஒரு வகையிலே.’
கொக்குக் கூட்டங்கள் போலவும், சலவைத் துணிகள் போலவும், நீள் கடலின் வெண்மய அலைகள் போலவும் மிதந்த மேகங்கள் மௌனமா யி ன விண்ணின் குரல் அவற்றுக்குப் புரிந்ததோ என்னவோ! புரிந்து காண் டது போல் சில தோற்றம் காட்டின. பெருத்தன. கனத்தன. காருருப் பெற்றுத் தாழ்ந்து தாழ்ந்து இறங்கின. வியன் வான் முழுவதையும் வியாபித்துப் பரந்தன.
கண்ணாடிக் குண்டுகளைப் போலவும், வெள்ளிக் கம்பிகள் போலவும் நீர்ச்சரம் உகுத்தன மேகங்கள் தூறல் சிந்தி, பெறுந் தூறலாய் கனத்து, மழையாகப் பொழிந்தது.
எங்கும் நீர்….நீர்….நீரின் காடு!
மழை நின்றதும் வானம் நீலமாய் சிரித்தது. மேகத் தையே காணோம். எனினும் விண் வருந்தவில்லை.
பூமியின் உள்ளம் குளிர்ந்தது, வயிறாரச் சோறு உண்டவனின் அகத்தைப் போல், அதன் மேனி முழு வதும் மலர்ச்சியுற்றது. காலத்தின் வருடுதல் ஏற்று, எங்கும் பசுமையும் பன்னிறமும் வளமும் குலுங்கின.
நெடுகிலும் நீர் நிறைந்து கிடந்தது. விண் கணந் தோறும் மண்ணின் மாற்றத்தைக் மண்டு மகிழ்ந்து அழகுற்றுக் கொண்டு தானிருந்தது.
ஒளிக்கதிர் பவனி வரவர, விண்ணிலே மேகங்கள் பூத்தன. சிதறின. மிதந்தன. தென்றல் எடுத்துச் செல்லும் அன்னத்தின் மென்தூவிகள் போலவும், யாராரோ பறக்க விட்ட காற்றாடிகள் போலவும், மேகங்கள் நீந்தின.
இப்போது மண் விண்ணை நோக்கி அனல் மூச்சு எறியவில்லை.
– வல்லிக்கண்ணன் கதைகள், முதல் பதிப்பு: ஜூன் 1954, கயிலைப் பதிப்பகம், சென்னை.