இன்பமும் துன்பமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 93 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருவர் தம் மனைவியிடம், ‘இன்று நம் வீட்டிற்கு இரு கண்களும் தெரியாத கபோதக நண்பர் வருகிறார்: அவருக்கு நல்ல விருந்து ஆயத்தம் செய்யவேண்டும் என்றார்.

உத்தமியான அவர் மனைவி, “இரு கண்களும் தெரியாதவரானால் அவருக்கு வழிகாட்ட இன்னொருவர் வரவேண்டும்” என்றெண்ணி இருவருக்கு விருந்து தபார் செய்து வைத்தார்.

அந்த இரண்டு பேர் யார்?

அவர்களே இன்பமும், துன்பமும். இருவரும் இணைபிரியா நண்பர்கள்.

“உலகில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” என்று சொன்ன நம் இரட்சா பெருமான் “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” என்றும் கூறி இருக்கிறார்.

“நீங்கள் துக்கப்படுவீர்கள்” என்று சொன்ன கிறிஸ்துபெருமான்தானே “உங்கள் துக்கம் சந்தோஷ மாக மாறும்” என்றும் விளம்பியுள்ளாரே.

ஆண்டவரின் பிள்ளைகளாகிய நமக்கு இரவும்- பகலும்போல இன்பமும் துன்பமும் உண்டு. இரண் டையும் சமமாகக் கருதுவதே இனிய வாழ்வாகும்.

“நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்:” (சங். 34:19)

“நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.” (பிலிப்பியர் 4:11)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *