இதயம் ஒரு கோயில்…!





ஒண்ணுமே புரியலை., இதே ஆள்தான் டவுன்ல பழமுதிர் நிலையம் கடை வச்சிருக்கார். அங்க பழம் வாங்கப்போனா… கறாரா பணத்தைக் கறந்துட்டுத்தான் விடறார். அவரே திங்கள் கிழமை கிராமச் சந்தைக்கு வந்தா அதே பழங்களை அத்தனைக் குறைவாக் கொடுக்கிறார். ஏன்னு புரியலை! பழம் ஒண்ணுதான். இடம்தான் வேறே..! விக்கிறவர் ஒண்ணு., விலையில் மட்டும் ஏன் மாற்றாம்?! புரியலை!

‘என்ன கந்தசாமி, இப்படி வித்யாசமா விக்கறீங்க?! புரியாமத்தான் கேக்கறேன். ஏன் இப்படி மாற்றம்?. இதில் ஏதும் பிசினஸ் சீக்ரெட் உண்டா?!’
அவர் ஏற இறங்கப் பார்த்தார். ‘இருக்குல்லா… !’ என்றார். சிறு இடைவெளிக்குப் பிறகு, ஏற இறங்கப் பார்த்தார்.
‘என்ன சீக்ரெட் அண்ணாச்சி?! சொன்னா கேட்டுக்கறேன். என்றதும். ‘நீங்க கேட்டுக்கத்தான் முடியும்! எனக்கு எதிரா பிசியனஸா பண்ணப் போறீங்க?! எல்லாரும் பிசினஸ் பண்ண முடியுமா என்ன?!’ பீடிகை போட்டார். பதிலேதும் பேசாமல் அவர் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்க,
‘டவுன்ல ‘பர்ஸ் நிறைய’ பணத்தோட வர்றவங்க, ‘இந்த பணத்துக்கு எதையாவது வாங்கிடணும்னு பழக்கடைக்குள்ள வர்றங்க. அவங்களுக்கு ஒரு ரேட்!. கிராமத்துல, ஏழை சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துட்டு, ‘இருக்கற இதுக்கு எதையாவது வாங்கீட்டுப் போய் குழந்தை குஞ்சுகளுக்குக் கொடுக்கணும்னு தவிக்கிறான்! அதனால அவனுக்கு ஒரு ரேட்!.’ என்றார். கறார் கந்தசாமி
‘இதுக்கு எதாவது வாங்க நினைப்பவனுக்கும்’, ‘இருக்கறதுக்கு எதையாவது வாங்க நினைப்பவனுக்கும்’ ஒரு வித்யாசம் காட்ட வேண்டாமா? இதயம் ஒரு கோயில் இல்லையா? அதில் இருப்பது இரக்கம் எனும் கடவுள் இல்லையா?! என்றார்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |