இடைவெளி





(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விஜயதசமி காலையில் எல்லோருமாகக் கோயிலுக்குப் போய் அக்காவின் பிள்ளைக்கு ஏடு தொடக்கிக் கொண்டு வந்தார்கள். கோவிலில் வாழை வெட்டு முடிவடைந்த பின், பிள்ளையார் வாசலில் இந்தச் சடங்கு நடைபெற்றது. எல்லாமாக ஐம்பதுக்கு மேல் குழந்தைகள். அந்த அரும்புகளின் முதலாவது வகுப்புப்போல அது இருந் தது. அரி ஓம் நம’ சொல்லி, ‘குரு வாழ்க’ என்று சொல்லி, குருக்கள் குழந் தையின் கையைப் பிடித்து ‘ஆனா’ என்று எழுதுவித்தார்.

இதையொட்டி, மருமகனுக்கு நல்ல பரிசொன்று கொடுக்க வேண்டுமென்றிருந் தது. ஒரு நல்ல சிலேற்றும் பென்சிலும். பார்த்து வாங்கலாமென்று பட்டணம் போனான்.
இரண்டு கடைகளில் இல்லையென்று விட்டார்கள். மூன்றாவது கடைக்காரர் கொஞ்சம் நல்லவராய் இருக்க வேண்டும். கூடுதலாக ஒரு விஷயத்தையும் சொன்னார்
“அதெல்லாம் அந்தக் காலம் தம்பி.. இப்ப வாறேல்லை…”
அவனுக்குப் புதிராயிருந்தது – இப்போ பிள்ளைகளெல்லாம் எதில் எழுதிப் பழகுகிறார்கள்?
கடைக்காரர் ஆறுதலாயிருப்பது போலப் பட்டது. அவரையே கேட்டான்.
அவர் சிரித்துவிட்டுச் சொன்னார், “கொப்பிதான்”
“அப்ப, ஓரிடமும் எடுக்கேலாதோ?”
“கிடைக்காது” என்றார் முதலாளி, உறுதியாக.
சிலேற். சிலேற்றும் பென்சிலும். அப்போது புத்தகங் களை வைத்து அடுக்குவதற்கு ஒரு அடிப்படையாயிருந்தது போல, சின்ன வயது நினைவுகளுக்கும் ஒரு பலமான அடிப் பெரியது, கறுப்பு, படையாகிவிட்ட சிலேற். சின்னது. பெரியது, கறுப்பு, சாம்பல் பூத்தது – என்று எத்தனை வகை. பென்சிலும், சிலேற் றும் அவரவர் ‘லக்’கைப் பொறுத்தவை என்ற சின்ன வயது நம்பிக்கை. எவ்வளவுதான் விழுந்தடித்தாலும் உடையா தவை சிலருக்கும், தட்டுப்படமுன் கோழி முட்டை மாதிரி நொருங்கி விடுபவை சிலருக்கும் வாய்த்தன. இதேபோல். மாதிரி சிலேற்றில் கிறுக்குகிற பென்சில்களும் சோக்கட்டி மாதிரி கரைந்து விடுகிற பென்சில்களும் வாய்த்தன. கல்லிற் தேய்த்தால், ஊசி மாதிரி கூராகிற பென்சில்கள், முளை விட்ட சண்டியன்களின் முதல் ஆயுதங்கள்.
மரமணம் அடிக்கிற சட்டங்கள் இருந்து விட்டு நாலு துண்டுகளாயின. இதற்காக, சில பேர் மூலைகளுக்கு ஆணி தைத்தார்கள். மேற் சட்டத்திலிருந்த துவாரம், பென்சி லைக் கட்டி வைக்கவா என்று இன்னமும் இருக்கிற சந்தேகம். என்ன இருந்தாலும் இந்தச் சட்டங்களில் அழிந்து விடாமல் பெயர் எழுதி வைக்க முடிந்தது. வகுப்பு வேலைக்கு வாத்தியார் கோழி முட்டை போட்டு விட்டால் வீடு போக முன் அதை நைசாக அழிய விடுகிற வசதி சிலேற்றில் இருந்தது. இதே போல கூடுதலாக வாங்கி விடுகிற நேரங் களில் எப்படியாவது அழிந்துவிடாமல் காப்பாற்றி விடவும் முடிந்தது
அநேகமான சிலேற்றுகள் – முக்கியமாக சின்ன வகுப் புகளில் எச்சில் மணத்திருந்தன. சுத்தமான பிள்ளைகள் விரலளவு சீசாக்களில் நீர் கொண்டு வந்தார்கள். கடற் பஞ்சு, தண்ணீர்ப் புல்லு, ஈரப்பலாவிலைக் காம்பு – இப்படி, முன்னோடிகளாற் கண்டு பிடித்து வைக்கப்பட்டிருந்த புது மைகள் சில, வேறு.
சிலேற்-பென்சிலின் ஸ்பரிசத்தில் எப்போதும் முனகுகிற சிலேற். தம்பி, தன்னிலும் பத்து வயது இளையவன் – இப் போது வயது இருபத்திநாலு -படிக்கும் போது கூட, சிலேற் இருந்ததே.
அதற்குப் பிறகு யாரிடமிருந்து என்று நினைத்துப் பார்க்க முயன்றான்.
இந்தக் கடைக்காரர் தெரியாமல் சொல்லியிருக்கக் கூடு மென்றுபட்டது. கொஞ்சந்தள்ளி இன்னொரு கடையில் நுழைந்தான்.
“சிலேற்றோ?” முன்னுக்கு நின்ற பெடியன், விளங்காமற் திகைத்துப் பின் சிரித்தான்.
“அதெல்லாம் இல்லை.”
இந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலம், ஒரு பெருந் தவற்றை இவன் செய்திருக்கிறான் என்பது போல் அந்தப் பெடியன் பார்த்தான்.
தெருவிலிறங்கியபோது, நீண்ட நித்திரையிலிருந்து திடீரென விழித்தது மாதிரி இருந்தது,
– மல்லிகை, 1983.
– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.