ஆதித்யாவும் அவனது தேநீர் விருந்தும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 12, 2026
பார்வையிட்டோர்: 1,416 
 
 

இந்த சனி,ஞாயிறு விடுமுறையில் தனது ஐந்து நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்திருந்தான் ஆதித்யா.

அதனால் சனிக்கிழமையன்று ஆதித்யாவின் வீட்டில் அவனது நண்பர்கள் அனைவரும் அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டனர், வந்தவர்களுக்கு ஒரு டம்ளரில் டீ கொடுத்தான் ஆதித்யா.

டீயை வாங்கிய அவனது நண்பர்களில் ஒருவனான மாதேஷ், டீயின் வண்ணத்தைப் பார்த்துவிட்டு ஆதித்யாவிடம் இவ்வாறு கேள்வியெழுப்பினான்.

“என்ன ஆதித்யா? இந்த டீ நீல வண்ணத்தில் இருக்கு, ஃபுட் கலர் ஏதும் சேத்திட்டியா?” என்று கேட்கவும், அவனுக்கு அருகிலிருந்த ஜெஃபினாவும்,

“ஹே!ஆமாம்பா, உனக்கு நீல கலரில் இருக்கு எனக்கு ரெட் கலரில் இருக்கு, ஆனா டேஸ்ட் டிஃபரென்ட்டாக இருந்தாலும் சூப்பரா இருக்கு, சொல்லு இதுல என்ன சேத்திருக்க?” என்று அவளும் கேட்க, மற்ற நண்பர்களும் அவளோடு சேர்ந்து அதே கேள்வியை ஆதித்யாவிடம் எழுப்பினர்.

“அட! இருங்கப்பா,சொல்றேன்.ஃபிரண்ட்ஸ் இது நார்மல் டீ கிடையாது,இது ஒரு பூவில் செய்த டீ” என்று சொல்ல, மாதேஷ் ஆச்சரியத்துடன் இவ்வாறு கேள்வியெழுப்பினான்

“என்னது பூவில் செய்த டீயா? பூவில் டீயெல்லாம் செய்யலாமா?” என்று கேட்டான், அதற்கு ஆதித்யா

“ம்! செய்யலாம்,அதுவும் இது எந்த பூவால் செய்ததுன்னு தெரியுமா?சங்குப்பூவால் செய்த டீ,அப்புறம் ஜெஃபினா,நீ குடிச்ச டீ ஹைபிஸ்கஸ்னு சொல்லப்படுற செம்பருத்திப் பூவால் செய்த டீ” என்று சொல்லவும் ஜெஃபினாவும் ஆச்சரியத்தில் வாயடைத்துப்போனாள்.

“உங்களில் ஐந்து பேரில் மாதேஷ்,சூர்யா,ரஹீம் இவங்க மூனு பேருக்கும் சங்குப்பூவால் செய்த டீயை கொடுத்தேன்,அப்புறம் ஜெஃபினா,நிஷா உங்க ரெண்டு பேருக்கும் செம்பருத்திப்பூ டீ கொடுத்தேன்” என்று சொல்ல,சூர்யாவோ சிறிது பயத்துடன்,

“என்னடா? நீ வேற சங்குப்பூ?அந்தப் பூ?அப்படின்னு சொல்ற, இதை குடிக்கிறதுனாலே உடலுக்கு பாதிப்பு ஏதும் வராதுதானே?” என்று கேட்டான், அதற்கு ஆதித்யாவோ

“அதெல்லாம் ஒரு பாதிப்பும் வராது, இதை குடிக்கிறதுனால நம்ம உடலுக்கு ரொம்ப நல்லது” என்று கூற,இடையில் ரஹீமோ ஆதித்யாவிடம்

“சரி இந்த சங்குப்பூடீ குடிக்கிறதுனால நமக்கு என்ன பெனஃபிட் சொல்லு பாக்கலாம்!”

“சொல்றேன்,கேட்டுக்கோங்க.இந்த சங்குப்பூவை சித்த மருத்துவத்தில் கூட யூஸ் பண்ணுவாங்க,அந்தளவுக்கு இது மருத்துவ குணம் நிறைஞ்சது.மேலும் இந்த சங்குப்பூ டீயானது படிக்கிற மாணவர்களுக்கு ரொம்பவும் ஹெல்ப் பண்ணும், குறிப்பா இது பிரெய்னில் உள்ள அசெட்டைல்கோலைன் (Acetylcholine) அப்படின்னு சொல்லப்படுற நியூரோட்ரான்ஸ்மிட்டரை அதிகரிக்க உதவுவதோடு,கார்ட்டிஸல் அப்படின்னு சொல்லப்படுற ஸ்ட்ரெஸ் ஹார்மோனை குறைக்க உதவுது,இப்படி இதனுடைய பெனஃபிட்டை சொல்லிக்கிட்டே போகலாம்”

“சரி இதை யார்னாலும் குடிக்கலாமா?” என்று இடையில் கேள்வியெழுப்பினான் சூர்யா.

“யார் வேணும்னாலும் குடிக்கலாம்னு சொல்ல முடியாது,பிரெக்னன்ட்டாக இருக்கிறவங்க,லோவ் பிபி உள்ளவங்க இவங்க இந்த டீயை டாக்டரின் அட்வைஸ்படி எடுத்துக்கிடனும்,ஆனா ஸ்டூடெண்ட்ஸ்,பெரியவங்க இவங்க எடுத்துக்கிட்றதுல எந்தவொரு பிரச்சினையும் இல்லை” என்று கூறி முடித்தான்,தொடர்ந்து

“அதே மாதிரிதான் இந்த செம்பருத்திப்பூ டீயும்.இது நம்ம இதயத்தில் இருக்குற கெட்ட கொழுப்பான எல் டி எல் (LDL CHOLESTRAL)அப்படின்னு சொல்லப்படுற கெட்ட கொழுப்பை குறைக்க உதவுது, அதோடு விட்டமின் சி+ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைஞ்சதால் சளி,காய்ச்சல் இதெல்லாம் வராம பாதுகாக்க உதவுது அண்ட் இதையும் ப்ரெக்னென்ட்டாக இருக்கிறவங்க டாக்டரின் அட்வைஸ்படி எடுத்துக்கிடுரது நல்லது”

என்று அந்த பூவின் மருத்துவ குணத்தை கூறி முடித்தான்.அந்த தகவல்களைக் கேட்ட ரஹீமோ,மிகுந்த ஆச்சிரியத்துடன்

“அடேங்கப்பா, ஒரு பூவுக்கு பின்னாடி இவ்ளோ மருத்துவ குணம் இருக்கா,கேக்கும்போதே புல்லரிக்குதே!”

“சரி, சரி, நீங்க டீ குடிச்சிக்கிட்டிருங்க நான் இதோ வந்துட்றேன்”

என்று சொல்லிவிட்டு ஒரு அறைக்குள் சென்றான்,சிறிது நேரம் கழித்து அவன் வெளியே வந்தான் கையில் ஒரு சில துணிகள் அவனிடமிருந்தது அதைப் பார்த்த அவனது நண்பர்கள் அவனிடம்,

“எதுக்கு இந்த துணிகளை எடுத்துக்கிட்டு வந்துருக்க?” என்று வினவ,அதற்கு அவனோ

“எல்லாம் ஒரு காரணமாத்தான்!” என்று சொல்லி தான் வைத்திருந்த துணிகளில் ஒன்றை ரஹீமின் கண்ணில் கட்டிவிட்டான்,தனது கண்ணை கட்டிவிட்டதைப் பார்த்து ரஹீம்,

“டேய்! என்னடா பண்ற?”

“வெய்ட், வெய்ட்” என்று சொல்லிவிட்டு மற்ற நண்பர்களுக்கும் தான் வைத்திருந்த துணியால் கண்ணை கட்டிவிட்டான்.

கண்ணை கட்டிவிட்டதும் அவர்கள் அனைவரையும் வரிசையாக ஒருசேர அழைத்துச் சென்றான்.

எதற்கு? இப்படி கூட்டிக்கிட்டுப் போகுற? என்று அவன் நண்பர்கள் கேட்டதற்கு,ஆதித்யாவோ

“எதுவும் பேசாம சைலண்ட்டாக வாங்க!” என்று அவர்கள் பேசுவதற்கு தடைப் போட்டான்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை வந்தடைந்ததும் துணியால் கட்டியிருந்த அவர்களின் கண்ணை அவிழ்த்துவிட்டான்.

கண்ணை அவிழ்க்கப்பட்டவர்களின் கண்கள் இப்போது ஆச்சரியத்தால் நிறைந்திருந்தது.

அப்படி அவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர்கள் என்ன கண்டார்கள்? என்று அவர்களுடன் சேர்ந்து அடுத்த கதையில் நாமும் பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *