ஆங்கிலம் தெரிந்தால் மட்டும் வேலை




“நாம்” பிறந்தவுடன் அழுதல் வேண்டும் அதாவது ஒரு குழந்தை தன் தாய்யின் கருவரையை விட்டு வெளியேறும் போது அக்குழுந்தையின் முதல் வேலையே அழுதாகவேண்டும். அப்பொழுதுதான் நல்ல ஆரோக்கியமான குழுந்தையாக கருதப்படுகிறது. இதுவே காலத்தில் கட்டாயமும்கூட. அந்த குழுந்தையின் பணிகளை ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு வேலைச் செய்கிறது. அதை தாய் தந்தையாக இருப்பவர்கள் கட்டாயம் பார்த்து இரசித்து இருப்பிர்கள். ஆனால் இதுதான் இந்த குழுந்தையின் வேலை என்று நம் மனத்தில் தோன்றியதே இல்லைதானே..!
இது ஒரு குழுந்தையின் இயல்பு இப்படிதான் இருக்கும் என்று நமது மனம் ஆரம்பமுதலே நம்பிவிடுகிறது. பின் எப்படி நம் மனம் இதையெல்லாம் ஆராய்ச்சி செய்யும் ?
இப்படி நமக்கு தொடக்கத்திலிருந்தே நமக்கானப் பணிகளை தந்துள்ளார் கடவுள். இதற்கும் நான் சொல்லவருதற்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. அதை படியுங்கள், பின்பு உங்ளுக்கு தானாகவே புரியும். சரி நாம் கதைக்கு போய்விடுவோம்.
ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளியில் மற்றும் அரசு கல்லூரிலும் படித்துவிட்டு வேலைத் தேடும் ஒர் இளைஞர் தான், இராஜ்.
இராஜ் தன் பெயரில் மட்டுமே தான் இராஜ், தனது பள்ளி பருவத்தில் இருந்து கல்லூரி வரையிலும் படிப்பு அரைகுறை தான். கூச்சசுபாவம் கொண்டவன், நண்பன் என்றால் உயிர். நண்பர்களுக்கு உதவி செய்யவதென்றால் குருவியாகப் பறப்பான். நன்றாகப் பழக தெரிந்தவன், எந்த வேலையாக இருந்தாலும் துரிதமாக செய்யும் தன்மையுடையவன். யாரிடமும் அவ்வளவு எளிதில் பேசமாட்டான். அப்படி பேசினாலும், அவர்களின் மனநிலைகளைப் புரிந்துக் கொண்டே பின், தன்னை எதாவது நினைத்துவிடுவார்களோ என்று ஒர் வலையதின் உள்ளேயே தன்னை நிலைபடுத்தி பேசும் குணம் கொண்டவன்.
கல்லூரி முடிந்து முன்று மாதங்களிலேயே , தனது கிராமத்தில் ஒர் ஒட்டலில் காசாளராக வேலையில் சேர்கிறான். மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளத்திர்க்கு. இன்று வறை கிராம நகரங்களில் இதான் சம்பளம். இது நம்மில் பாதி நபர்களுக்குத் தெரியாது. ஒட்டல் வேலையில் இருப்பது நல்ல வேலைதான். ஆனால் ஓட்டல் வேலை என்றாலே, நாம் அனைவரும் கேவலமாகத் தானே நினைக்கிறோம். அங்கிருந்த கிராமத்து ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் விதிவிளக்கா என்ன ?
இராஜை பார்த்து கிண்டல் செய்வார்கள். கல்லூரியில் படிக்கும் போது நான் அரசாங்கப் பணியில் பதவியில் நான் நல்லப் பதவியில் இருப்பேனென்று அடிக்கடி தனது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்லிக் கொண்டே இருப்பான். ஆனால் இப்போதோ இவன் படித்துவிட்டு ஓட்டலில் வேலைபார்கிறான். இதர்க்கு ஏன் படிக்கவேன்டும் என்று அவனை அவமானம் செய்தார்கள். இருப்பினும் தன் சுழ்நிலை கருதி ஓட்டலில் இரண்டு வருடங்கள் முடியும் நிலையில் தான் இராஜ்க்கு மனம் நெருப்பாய் கணத்தது. அரசாங்கத்துறையில் எப்படியாவது சேர்ந்துவிடவேண்டும் என்று அதற்கு நம் கிராமத்தில் இருந்து முயற்சி செய்யவேண்டாம் என்றும் முதலில் இந்த ஓட்டல் வேலையை விட்டுவிடுவோம், இதைவைத்துதானே நம்மை கேவலப்படுத்துகிறார்கள் என்று சிந்தித்து இவர்களுக்கு பாடம் கற்பிப்போம்னு நினைத்தான் .
ஒட்டல் வேலையை விட்டு நாம் சென்னையில் சென்று ஒர் தனியார் துறையில் வேலையை பார்த்துக் கொண்டு அரசாங்கத் தேர்வுக்கு தாயாரகவேண்டும் என்று மனதில் தோன்றியது.
மீண்டும் இந்த ஒட்டல் வேலைகளில் நாம் சேராமல் நல்லத் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தால் தான் நமக்கு மரியாதை கிடைக்கும் என்று நினைத்தான். இதை மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டான், அதில் அனைவருமே அவரவர்களுக்கு தோன்றியதை சொன்னார்கள். இறுதியாக சென்னையிக்கு போகவேண்டும் என்று முடிவெடுத்தான்.
இராஜ் தனது மனதில் தோன்றியதைப் போல் ஒட்டல் வேலையை விட்டு சென்னை வருகிறான். தனது நண்பனின் உதவியால் எப்படியாவது இங்கு ஒர் வேலையில் சேர்ந்து விடவேண்டுமேன்று சென்னையில் இருக்கும் நண்பர்களிடம் தன் நிலைமையை சொல்லி உதவிகளை கேட்டான். அவர்கலும் தன்னுடன் இராஜை தங்கவைத்துக் கொண்டார்கள், சில உதவிகளும் செய்தார்கள். இன்றைக்கு சென்னையில் வேலை கிடைப்பது சற்று கடிணம்தான், ஏன் என்றால் ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும். இராஜ்க்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. ஆகையால் வேலை தேடுவதில் நிறைய கஷ்டங்களை சந்தித்தான்.
வேலைத்தேடி போகும் இடமேல்லாம் உனக்கு Reference இருக்கா என்று கேட்கிறார்கள், இல்லை என்றால் அதன் முதல் வாயிலின் வெளியவே விரட்டிவிடுகிறார்கள். அப்படி உள்ளே சென்றாலும் உனக்கு ஆங்கிலம் தெரியவில்லை நீ போகலாம் என்று துரத்திவிடுகிறார்கள். இப்படியாக மூன்று மாதம் சென்றது. தன் கையிருப்பும் கரைந்தது, தினமும் ஒருவேலை உணவிற்கே மிகுந்த கஷ்டங்களை சந்தித்துக் கொண்டுருந்தான்.
ஒருநாள் ஒர் தனியார் நிறுவனத்திர்க்கு Interview இருப்பதை பார்த்து, முதல் நாளே அந்த நிறுவனத்திற்கு சென்று அதன் முகப்பின் முன்பே காத்திருந்தான். அங்கே வேலை செய்யும் நபர் ஒருவர் வெளிவே வந்தார், அவரிடம் தன் நிலமையை எடுத்து சொல்லி அவரின் ஆதரவை பெற்று மறுநாள் அந்நிறுவனத்திர்க்கு சென்றான்.
அங்கு Interview அறைகளில் இருக்கும் சகநபர்களை பார்க்கும்போது புதிதாக இருந்தது. அப்பொழுது அங்கு நடந்த சிலவற்றை பார்த்து கோபமும் வந்தது . எந்த ஒரு reference ம் இல்லாம வரும் நபர்களுக்கு தனியாக Interview (போட்டி) நடத்துகிறார்கள். அதுவே Reference மூலமாக வரும் நபர்கள் மற்றும் Agency முலமாக வரும் நபர்களுக்கு தனியாக Interview (போட்டி) இருப்பதை பார்த்து கண்களங்கி நின்றான். இருப்பினும் தன் திறமையை காட்டி விடவேண்டும் என்று மனதில் நினைத்து தைரியமாகப் போட்டியில் கலந்துக்கொள்கிறான்.
அவனது முதல் Interview முழுக்க ஆங்கிலத்தில் மட்டுமே பேசவேண்டும். அங்கு வந்த நபர்கள்அனைவரும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் அல்ல, இருப்பினும் அவரவர்களுக்குகென்று ஓவ்வொரும் Reference வைத்துள்ளார்கள். சிலர் நேரடியாக வந்தவர்கள். எப்படியாவது இங்கு இவ்வேலையில் சேர்ந்துவிடவேண்டும் என்ற எண்ணம் மனதில் வலுப்பெற்றது.
முதல் சுற்றில் நேரடியாகப் போட்டியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெறவில்லை. அடுத்ததாக reference உள்ள நபர்களை அழைத்தார்கள், அதில் முதலில் இராஜ் தான் முழு நம்பிக்கையொடு போட்டி அறையில் சென்றான். ஆனால் போட்டியில் வெற்றிப் பெறவில்லை. காரணம் இராஜ் சரியாக ஆங்கிலம் பேசவில்லை.
இராஜ் கண்கலங்கியப் படியே வெளியேறுகிறான். பின் தனது தவறை உணர்கிறான். எந்த வேலையில் இருந்தாலும் சரி நாம் அந்த வேலையில் முழுமையாக தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும், அதிலும் மாற்று வேலை கிடைத்தப்பின் தான் இவ்வேலையை விட்டியிருக்கவேண்டும் என்று உணர்ந்தான். அதிலும் மற்றவர்கள் கேவலமாகப் பேசுகிறார்கள் என்பதால் தன் நிலையை மறந்து கோபத்தாலும் ஆசைகள் பல வந்தாலும் முதலில் நாம் எதை செய்யவேண்டும் என்பதனை தெளிவாகப் புரிந்தப்பின்னும் அதற்கானத் பணவசதிகள் உள்ளதா என்றும் பார்த்து அதற்கான வழிகள் கிடைக்கும் வரையில் அமைதியாக சிந்திக்க வேண்டும். ஆனால் இதை செய்யாமல் விட்டோம் என்று அழுதான் இராஜ்.
என்னதான் சரியாக யோசித்தாலும் அதை முறையாக முயற்சி செய்தாலும் சரி, நமக்கான தகுதியை அடைய வேண்டுமானால் நாம் மற்றவகளின் உதவியை நாடதான் வேண்டும்.
இப்பொழுது காலம் மாறவில்லை, மனிதர்கள் தான் மாறிவிட்டார்கள். திறமை அனுபவம் இவை இருந்தாலும் நிலை இதுதான் என்பதை உணர்ந்தான் இராஜ்.
என் ஆசைகள் நிறைவேற எனது முழு மனதோடு போராடுவேன் என்றும் என்னிடம் இல்லாதவை எதையோ அவை அனைத்துமே நான் மீண்டும் கற்பேன் என்று தன் மனதில் சபதம் செய்து வெளியேறினான்.