அவாவறுத்தல்
கதையாசிரியர்: ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 2,586
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
ஆசையை ஒழித்தல்
அனிந்திதை, கமலினி என்ற இரு மாதரையும் ஆலாலசுந்தரர் கண்டு ஆசைப்பட்டார். இந்த ஆசையே காரணமாக ஆலாலசுந்தரர் திருநாவ லூரில் வாழ்ந்த சடையனார்க்கு மகனாராகப் பிறந்தார். கமலினி என்பவள் திருவாரூரில் பிறந்து பரவையார், என்ற பெயரைப் பெற்றாள். அனிந் திதை என்பவள் ஞாயிறு என்னும் ஊரில் உள்ள ஞாயிறு கிழவர்க்குப் புத்திரியாய்த் தோன்றிச் சங்கிலியார், என்ற பெயரைப் பெற்றாள். இவர்கள் பிறப்பிற்குக் காரனம் ஆசையே ஆகும். இதனால், “மெய்ஞ்ஞானம் பெற்ற ஒருவரைத் திரும்பவும் பிறவியில் புகுத்திக்கெடுக்க வல்லது ஆசையே ஆகும். அதனால் அந்த ஆசைக்குப் பயந்து அவ்வாசை உண்டாகாமல் காப்பதே தர்மமாகும்” என்று வள்ளுவரும் கூறினார்.
அஞ்சுவ தோரு மறனே; ஒருவனை
வஞ்சிப்ப தோரு மவா.
ஒருவனை = (மெய்ஞ்ஞானம்பெற்ற) ஒருவனையும்
வஞ்சிப்பது = (திரும்பவும் பிறவியில் புகுத்திக்) கெடுக்கவல்லது
அவா = ஆசையேயாகும். ஆதலால்
அஞ்சுவது = அந்த ஆசைக்கு அஞ்சி அது உண்டாகாமல் காப்பதே
அறன் = தர்மம் ஆகும்.
கருத்து: மக்கள் ஆசைக்குப் பயந்து ஆசை உண்டா காமல் வாழ்தல் வேண்டும்.
கேள்வி: வஞ்சிப்பதாகிய அவாவை மேலோர் யாது செய்தல் வேண்டும்?
ஒரும்; என்பன இரண்டும் அசைகள்.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026