அலாவுதீன் அதிசய விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 99 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அலாவுதீன் அதிசய விளக்கை விரலால் தேய்க்க வேண்டியதுதான், வேண்டிய அனைத்தையும் ஒரு தேவதை கொண்டு சேர்த்துவிடும். பட்சணம் வேண் டுமா? பட்டுத்துணியா? பளிச்சிடும் பதக்கமா? எது வானாலும் உடனே கிடைக்கும். அவ்வளவு மகத்தான மாய விளக்கு அது.

வேதப்புத்தகமாகிய விளக்கும் அப்படித்தான். பிரார்த்தனையோடும், பயபக்தியோடும் சிந்தித்து வாசிக்கும்போது, “மறைவிடங்களில் இருக்கும் புதை யல்களையும், வெண்கலக் கதவுகளையும், உடைத்து, இரும்புத்தாழ்ப்பாள்களை முறித்து அந்தகாரத்தில் லிருக்கிற பொக்கிஷங்களையும் உனக்குக் காட்டுவேன், கொடுப்பேன்” என்று ஏசாயா தீர்க்கன் மூலம் கூறுகிறார்.

ஒருநாள், அலாவுதீன் அரண்மனையில் இல்லாத வேளையில் வேறொரு மந்திரவாதி வந்தான்.

“பழைய விளக்குக்குப் புதிய விளக்கு” என்று தெருவழியே கூவி இரைந்தான்.

அரண்மனையிலிருந்த கிழவி, பழைய விளக்கைக் கொடுத்துவிட்டுப் புதிய விளக்கு வாங்கினாள்.

அரண்மனையும்-அரசவாழ்வும் அடியோடு மாய மாய் மறைந்தன.

ஏதேன் தோட்டத்தில் நடந்ததும் இதுதானே. இறைவன் கொடுத்த பழத்திற்குப்பதில் சாத்தான் அழகான வேறு பழத்தைக் கொடுத்தான்.

ஆதாமும்-ஏவாளும் தோட்டத்தை விட்டுத் துரத்தப்பட்டார்கள்.

பழசும்-புதுசும் பரிமாறுவதில் மக்கள் விழிப் பாயிருக்க வேண்டும்.

“வழிகளில் நின்று பூர்வபாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து நல்வழி எங்கேயென்று பார்த்து அதிலே நடவுங்கள்’ (எரேமியா 6:16)

“உங்களை ஏமாற்ற எவனுக்கும் இடங்கொடாதீர்கள்”. (1 யோவான் 3:7)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *