அறிஞரும் இளம்பூதனும்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரிலே இளம்பூதன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் சில நூல்களைப் படித் துணர்ந்திருந்தான். ஆயினும் அதற்குத் தகுந்தபடி யாக அவன் ஒழுக்கத்தை மேற்கொள்ளவில்லை. தீய வர்களுடன் சேர்ந்து தீயவனாகி நின்றான். அவனிட மிருந்த சில நல்லியல்புகளும் மறைந்துவிட்டன.
இளம்பூதன் தீயவர்களுடன் சேர்ந்து கொண்டு சீட்டாடுதலையும் புகைப் பிடித்தலையும் மற்றும் பல இழிவான செயல்களைப் புரிதலையும் ஒரு பெரியவர் கண்டார்; அவர் அவனைத் தனியே அழைத்து, ”உன் னுடைய முகத்தைப் பார்த்தால் அருள்வழிகிறது. மிகப் பெரியவனாகக் கூடிய அறிகுறிகள் உன்னிடம் காணப் பெறுகின்றன. அவ்வாறாக நீ சிறியவர்கள் ளுடன் சேர்ந்துகொண்டு இழிதொழிலைப் புரிகிறாயே! இது நினக்குத் தகுமா? நீ தீச்செயல்களை யெல்லாம் விட்டுவிட்டு நல்லவனாக இருப்பாயானால் பிற்காலத்தில் மிகவுஞ் சிறந்து விளங்குவாய்,” என்று அறிவுரைகள் கூறினார்.
பெரியவர் கூறிய அறிவுரையைக் கேட்ட இளம் பூதன் திருந்தினான். அப்பெரியவர் நம்முடைய நன்மையின் பொருட்டே அவ்வாறு சொல்லுகிறார் என்று உணர்ந்தான். பெரியோர்களையே அடுத்துப் பழகத் தொடங்கினான். நாளடைவில் இளம்பூதன் நல்லவனாகி இறுதியிற் சிறந்த மனிதர்களுள் ஒருவனா னான். ஒவ்வொருவரும் நல்லவர்களாக இருத்தற்கு முயல வேண்டியது கட்டாயமாகும்.
“உத்தம னாயிரு” (இ – ள்.) உத்தமனாய் -உயர்ந்த குணமுடையவனாகி, இரு – வாழ்ந்திரு.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955