அறநெறி தவறாத அரசி
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னாளில் தமிழ்நாட்டிலே ஒரு பெண்ணா அரசாட்சி செய்து கொண்டிருந்தாள். அவள் மிகவு கண்டிப்பானவள். அவள் தன்னுடைய உடன் பி, தான் ஒருவனை உயரிய அதிகாரத்திலே அமர்த் யிருந்தாள். அவன் தீயொழுக்கம் உடையவன்.
தன்னுடைய அக்காள் தான் அரசியாயிற் நம்மை என்ன செய்துவிடுவாள் என்னும் எண்ண துடன் மக்களுக்குப் பல அல்லல்களை உண்டாக்கினால் ஒரு மாதினுடைய கணவனைத் துன்புறுத்தினால் அவனைக் கொலை செய்துவிட்டு அம் மாதைத் து புறுத்தவும் முடிவு செய்தான்.
அம் மாது மிகத்தொலைவிலிருந்து கால் நடையா நடந்து சென்று அரசியைக் கண்டாள். அவளுடை தம்பியின் தொல்லைகளையெல்லாம் விவரமாகக் கூ னாள். அரசி உடனே தன்னுடைய தம்பியை அழைத் உசாவினாள். அவனுடைய பதிலில் இருந்து அவ கொடுமைகள் புரிவது உண்மைதான் என் அரசி உணர்ந்தாள். அவனைத் தூக்கிலே போடுமா கட்டளை பிறப்பித்து அவ்வாறே செய்துவிட்டா அவளுடைய நேர்மையான போக்கைக் கண்ட மக்க அவ்வரசியை மனம் உவந்து வாழ்த்தினார்கள்.
“ஓரஞ் சொல்லேல்” (இ – ள்.) ஓரம் – ஒருதலைப்பக்கமான தீர்ப்பை , சொ லேல் – யாதொரு வழக்கிலும் பேசாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955