கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 10, 2022
பார்வையிட்டோர்: 13,532 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அண்மையில் என் நண்பரான ஓர் அரசியல்வாதியைச் சந்தித்தேன். மிகவும் கவலையோடு காணப்பட்டார்.

“என்ன காரணம்?” என்று கேட்டேன்.

“என் சொந்தக்காரன் ஒருத்தன் உடம்பு சுகமில்லாம் ஆஸ்பத்திரியில் இருக்கான்!”

“சரி.. போய்ப் பார்த்துட்டு வர வேண்டியதுதானே?”

“முடியாதே. அவன் வேற கட்சியில யில்ல இருக்கான்.”

“கட்சி எதுவா இருந்தா என்ன…சொந்தம் இல்லன்னு ஆயிடுமா?”

“இது உங்களுக்குத் தெரியுது… எங்க தலைவருக்குத் தெரியலையே! நான் போய் அவனைப் பார்த்தேன்னு தெரிஞ்சா போதும்… எங்கள் கட்சிக்குள்ளே பெரிய விவகாரமாயிடும்!”

அரசியல், நட்யையும் உறவையும்கூட பிரித்து விடுகிற அதிசய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!.

அந்தக் காலத்தில் புதுக்கோட்டை ராமையா என்றொருவர் பத்தாண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். ஆனாலும் கடைசி வரையில் அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இல்லை. பிற்காலத்தில் அவர் இந்திரா காங்கிரஸில் சேர்ந்தார்.

அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி இப்போது நினைவுக்கு வருகிறது…

சென்னை விமான நிலையம்.

எல்லாம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் இந்திராகாந்தி வரப் போகிறார்.

காமராசரும் அவர் பக்கத்தில் சு.ராசாராமும் நின்று கொண்டிருக்கின்றனர். இந்தச் சமயத்தில் ஒரு பெரிய மாலையைத் தூக்கிக் கொண்டு ராமையா அங்கே ஓடி வருகிறார். இதைப் பார்த்த ராசாராம், காமராசரிடம், “இவ்வளவு பயபக்தியுடன் இருக்கிறாரே… இவரை ஏன் உங்க கட்சியிலேயே வைத்துக் கொள்ளாமல் இந்திரா காங்கிரஸில் சேர விட்டீர்கள்!” என்று கேட்கிறார்.

அதற்கு காமராசர் “ராமையாகிட்டே காலணாகூட இல்ல…யாருகிட்டேயாவது சொல்லி அவருக்கு மாசம் 500 ரூபாய் கொடுக்க ஏற்பாடு செய்யலாம், தலைவர் பதவியும் கொடுத்து, மாதம் 15000 ரூபாய் செலவுக்கும் கொடுப்பதாக இந்திரா காங்கிரஸ் கட்சி கூறியதாக என்னிடம் சொன்னார்.”

“சரி… அதுக்காக”

“நான்தான் போய்ச் சேருங்கள் என்று சொன்னேன். அந்த அளவுக்குக் காசு இங்கே கொடுக்க முடியாதே! அதனால நான்தான் அவரை அனுப்பி வச்சேன்!”

(பேசலாம்)

– 30-01-2005, தெம்புக்குப் படிங்க – 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *