அன்னதானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2025
பார்வையிட்டோர்: 281 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அழகாபுரி – மதுராபுரிண்டு ரெண்டு ஊரு, போடி – தேனி மாதிரி, சோடியா இருக்குது. ரெண்டு ஊரு ராசாவுக்கும் பிள்ளைக இல்ல. ரெண்டு பேரும் ஒரு மரத்தடியில இருந்து பேசிக்கிட்டிருந்தாங்க. பேசிக்கிட்டிருக்கயில, அந்த வழியா பார்வதியும் – பரமசிவனும் வராங்க. வந்து, அந்த மரத்தடில் நிக்கிறாங்க. அப்ப, அந்த ரெண்டு ராசாக்களும் ரொம்ப வருத்தப்பட்டுப் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க மொகவாட்டத்தக் கண்டு, ஏ…. வருத்தமா இருக்கீங்கண்டு கேக்குறாங்க. அதுக்கு அவங்க, கொழந்த இல்லாத கொறய மறக்க முடியல, அதா வருத்தம்ண்டு சொல்றாங்க. 

அதுக்குப் பார்வதியும் – பரமசிவனும் ஆயுசு இல்லாத ஆம்பளப் பிள்ள வேணுமா? அஞ்சாநா சாகுற பொம்பளப்பிள்ள வேணுமாண்டு கேக்குறாங்க. 

அப்ப, ஆயுசு இல்லாத ஆம்பளப் பிள்ள வேணும்ண்டு மதுராபுரி ராசா கேக்குறாரு. அஞ்சாநா சாகுற பொம்பளப்பிள்ள வேணும்ண்டு அழகாபுரி ராசா கேக்குறாரு. 

கேக்கவும், அங்கிட்டு இருந்த மாமரத்தக் காட்டி, அதுல இருக்ற பழத்தக் கொண்டு போயி, பொண்டாட்டிகிட்டக் குடுங்கண்டு சொல்லிட்டு பார்வதியும் – பரமசிவனும் மறஞ்சுகிறாங்க. 

பார்வதியும் – பரமசிவனும் சொன்னபடி, மாம்பழத்தப் புடுங்கிட்டுப் போயி, பொண்டாட்டிக்கிட்டக் குடுத்தாங்க. குடுக்கவும் மதுராபுரி ராசாவுக்கு ஆம்பளப் பிள்ளயும், அழகாபுரி ராசாவுக்குப் பொம்பளப் பிள்ளயும் பெறந்துருச்சு. வளத்து வராங்க. வளத்து வரயில, மதுராபுரி ராணி, தன் மகனுக்கு எண்ண தேச்சுக் குளிப்பாட்டுரா, குளிப்பாட்டயில், அவ கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்து, மகனோட தொடையில விழுகுது. ஏ…ம்மா அழுறண்டு மக கேக்குறா. பதிலுச் சொல்லாம அற்ப ஆயுசுலேயே போகப் போறீயேண்டு அழுகுறா. 

எதுக்கும்மா அழுகுறண்டு பெறகுங் கேக்குறர். ஒனக்கு இன்னுங் கொஞ்ச நாள்ல ஆயுசு முடியப் போகுதேண்டு கவலப்பட்டே. அதான் அழுக வந்துச்சு. வேறொண்ணும்ல்ல மகனேண்டு சொல்றா. 

அதுக்கு மக, அம்மா!! எனக்கு தயிர்ச்சோறு கட்டிக்குடு. நா காசிக்கு யாத்திர போயிட்டு வாரேண்டு சொன்னா. 

வேணாம் மகனே! நீயோ சின்னப் பைய! ஒனக்குத் தெக்க வடக்க தெரியாது. தப்பிப் போவண்டு, தாயி சொல்றா. மக கேக்கல. 

சரி – போயிட்டு வாண்டு, தயிர்ச்சோறு கட்டிக் குடுத்தா. தன்னோட தம்பியயும் தொணக்கிப் போகச் சொன்னா. 

மாமனும் – மருமகனும் போறாங்க. போற வழியில, ஒரு ஆறு குறுக்க போகுது. அகோரப் பசி. ஆத்தங்கரயில வச்சுக் கட்டுச் சோத்த திண்டுபிட்டு, தாய் மாம மடியில தலய வச்சு சின்னப் பய நல்லா ஒரங்கிட்டர். மாமன் என்னா செஞ்சுட்டர். லேசாத் தலய எறக்கித் தரயில வச்சிட்டு, ஓடிப் போயிட்டர். யாரு? தாய் மாமன், தொணக்கிப் போனவ். 

பெறகு, ரெம்ப நேரங்கழிச்சு எந்திருச்சு, நடந்து போயிக்கிட்டிருக்கா. போகயில, அங்கிட்டு ஒரு ஊரு இருக்கு. 

அந்த ஊருல ஒரு விழா நடக்குது. என்னா விழா நடக்குதுண்டு ஒரு பாட்டிகிட்டக் கேக்குறர். அப்ப அவ, அழகாபுரி ராசா மகளுக்கு மாப்பிள்ள தேடுராங்கண்டு பாட்டி சொல்றா. 

சொல்லிக்கிட்டிருக்கயில, ஆன மாலயக் கொண்டு வந்து, இவங்கழுத்துல போட்டுட்டுப் போயிருச்சு. மாலயப் போடவும் அழகாபுரி ராசா தன் மகள, இவனுக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்திட்டாரு. 

அண்ணக்கி ராத்திரில, பாம்பு ஒண்ணு படுக்கையறைக்கு வரும், அதக் கும்பிடணும்ண்டு பொண்டாட்டிகிட்டச் சொல்றா. அவளுந் சரித்தேண்டு சொல்றா. அப்டித்தர் படுத்துக் கெடக்கயில, சொன்ன மாதிரியே ஒரு பாம்பு வருது. வரவும், அவளும் வணங்கினா. வணங்கவும் தீர்க்க சுமங்கலியாயிருண்டு சொல்லிட்டுப் பாம்பு போயிருச்சு. 

ராசா செத்துப் போவாருண்டு நெனச்சவங்க, அவரு உசுரோட இருக்கவும் எல்லாரும் மகிழ்ச்சியடையுராங்க. 

தன் பொண்டாட்டிகிட்டயும், தன்னோட மாமங்கிட்டயும் காசிக்குப் போறேண்டு சொல்லிட்டு, நர் வர்றதுக்கு நாலு வருசமாகுண்டு சொல்றா. 

அப்ப நிய்யி, வர்றதுக்கு என்ன அடையாளம்ண்டு பொண்டாட்டி கேக்குறா. 

நானு வர்ர அண்ணக்கி மல்லிகப் பூப் பூக்கும். உலக்க நேரா நிக்கிம்ண்டு சொல்லிட்டு, நர் வர்ற வரைக்கும் அன்ன தானஞ் செய்யுங்கண்டு சொல்லிட்டுப் போறா. 

அழகாபுரி ராசா மகள் அன்னதானம் செய்யுறா. செய்யும் போது வர்றவங்களுக்கு, குளிக்கிறதுக்கு எண்ண, சீவக்கா குடுத்துக் குளிக்க விட்டு, சாப்பாடு போட்டு அனுப்பி வச்சுக்கிட்டிருக்கா. 

இப்டி, அன்னதானம் செஞ்சுகிட்டிருக்கயில அழகாபுரி ராசாவுக்கும் ராணிக்கும் கண்ணு தெரியாமப் போயிருது. 

இப்டி இருக்கயில, ஒருநா, மல்லிகப் பூப் பூக்குது. ஒலக்க நேரா நிக்குது. இதப் பாத்ததும், புருச் வரப் போராருண்டு தெரிஞ்சுக்கிறா. 

இந்த அறிகுறி தெரிஞ்ச கொஞ்ச நாளயில், புருச் வீட்டுக்கு வாரர். அன்னதானம் கேக்குறவங்களப் போல வந்து, தம் பொண்டாட்டிகிட்டயே குளிக்க எண்ண கேக்குறா. அவ தர மாட்டேங்குறா. தம் மாமங்கிட்டப் போயி சொல்றர். மகளக் கூப்பிட்டு ராசா கேக்குறாரு.

அழகாபுரி ராசா, காரணங் கேக்கயில, அவரு எம் புருச். நா எப்டி அவருக்கு எண்ண குடுப்பேண்டு சொல்லிப்பிடுறா. 

திரும்பி வரவும் ரெண்டு பேருக்கும் ரெண்டாந் தடவையுங் கல்யாணத்தச் செஞ்சு வக்கிறாங்க. 

அப்ப, பார்வதியும் – பரமசிவனும் வராங்க. வந்து, ஓ… விரதத்துல கொற இருக்கு. அதுனாலதா, ஒ… மாமனுக்கும் -அத்தைக்கும் கண்ணுத் தெரியாமப் போச்சுண்டு சொல்றாங்க. 

பெறகு, புருசனும் பொண்டாட்டியும் மதுராபுரிக்கு வராங்க. மருமக விரதமிருந்து தாயிக்கு மையக் கண்ணுல தடவுனா. அழகாபுரி ராசாவுக்கும் ராணிக்கும் பார்வ வந்திருச்சு. எல்லாருஞ் சந்தோசமா வாந்தாங்களாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *