அது ஒரு நிலாக்காலம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 13, 2025
பார்வையிட்டோர்: 7,629 
 
 

(2010ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

எனக்கும் சுகந்தாவுக்கும் இடையே மலர நேரிட்ட இந்தக் காதலுறவின் துவக்கத்திலே ஒரு விசித்திர சிக்கலை நாங்கள் இருவருமே மனப்பூர்வமாக முடிந்து விட்டிருந்தோம். 

வழி வழியாக ஆசாரம் மிகுந்த பிராமண குடும்பத்தில் பிறந்தவள் சுகந்தா. அவளுக்கு ஒரு மூத்த சகோதரியும், இரண்டு இளைய சகோதரர்களும், ஓர் இளைய சகோதரியும் உடன் பிறந்தவர்கள். வேற்று ஜாதிப் பையனை மணந்து வீட்டை விட்டு ஓடிப் போவதற்கு முன்னால் தன் மூத்த சகோதரி கௌசல்யாவுக்குத் திருமணமாகி விடுவது நல்லது என்று சுகந்தாவுக்கு ஓர் உண்மையான நியாய உணர்வு ஏற்பட்டது. அவளுடைய உணர்வு நியாயமானதுதான் என்று எனக்கும் தோன்றியது. சிறிதும் அழகற்ற, எந்த வேலையிலும் அமர்ந்திராத கௌசல்யா, இருபத்தைந்து வயதாகியும் திருமணமாகாத நிலைமையில் வீட்டில் இருக்கையில் சுகந்தா ஒரு பிராமணன் அல்லாத மனிதனுடன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவது, மேலும் கௌசல்யாவின் திருமண பாக்கியத்தை வெகுவாகத் தள்ளிப் தள்ளிப் போகப் செய்து விடலாம். அல்லது முற்றிலுமாகவே அந்த பாக்கி யத்தை அழிந்து போக வைத்துவிடலாம். அதனால் கௌசல்யா கல்யாணம் முடித்துவிட்டால்- மறுநாளே என்னுடன் வந்துவிட சுசுந்தாவுக்கு எந்த ஆட் சேபணை யும் இல்லை. ஆனால், அப்போது எனக்கும் ஓர் இறுமாப்பு வந்துவிட்டது! எனக்கும் என் தங்கை தமிழரசியின் திருமணம் பற்றி பெரிய ஆதங்கம் இருப்பது போல நானும் காட்டிக் கொண்டேன். ஆனால் என்னுடைய ஆதங்கம் பொய்! 

தமிழரசி என் சுடைசி தங்கை. அவளுக்கு முன் என் னுடைய இரண்டு தங்கைகளுக்குத் திருமணமாகி விட்டது. அவர்களும் பெரியகுளத்திலேயே வாழ்க்கைப் பட்டிருந் தார்கள். என்னுடைய இரண்டு சகோதரர்கள், ஊரில் அப்பாவுடன் பஞ்சு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பக்கத்து ஊரான தேனியில் ஒரு ஜின்னிங் ஃபேக்டரி வேறு வைத்து ஏராளமாகப் பணம் திரட்டிக் கொண்டிருந் தார்கள். என் அப்பா மேலக்காடு மாடசாமி பெயரைச் சொன்னாலே அந்த வட்டாரத்தில் பிறந்த குழந்தை வாயை மூடும்! ஆனால் நான் ஒரு நிமிடம்கூட வாயை மூடியதில்லை! பிறந்த ஜாதி; பெற்ற தகப்பன் என்ற உறவு முறைகளின் நிர்ப்பந்தங்கள் சிறுவயதிலேயே என்னிலிருந்து உதிர்ந்து விட்டன. பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள் என்ற அபிமானங்கள் என்னை விட்டு விலக வில்லை. ஆனால் ஏதோ ஒர் இழையில் நான் அவர்களிடமிருந்து விலகி வந்து விட்டேன் அவர்களின் பஞ்சுக் கடையில் சில காலம் நானும் உட்கார்ந்திருந் சார்லஸ் தாலும் என்னுடைய கையில் இருந்தவை டிக்கன்ஸும் தாஸ்தாவஸ்கியும்தான்! மனத்தில் இருந்தவை தாமஸ் ஹார்டியும் ஜீன்பால்சாத்ரேயும்தான்! என் இருதயத்தின் ஒரு முக்கியமான பரிமாணம் உலகத்தின் பல்வேறு இசைகளாலும் மிகமிக மென்மை கொண்டிருந்தது. பெரியகுளம் பெண்களுக்கு என் மென்மை புரியவில்லை! சென்னை நகரத்துப் பெண்களுக்கு என் வலிமை பிடிக்கவில்லை. சுகந்தாவுக்குப் பிடித்து விட்டது. பிறந்த ஊரிலோ, சொந்த ஜாதியிலோ எனக்குப் பெண் தேவையில்லையென்று பெரியகுளத்தில் நான் நோட்டீஸ் அச்சடித்துச்-சுவரெல்லாம் ஒட்டி வைத்தது சுகந்தாவுக்கு அதை விடப் பிடித்து விட்டது! 

“நீங்க செஞ்ச மாதிரி இதுவரைக்கும் யாருமே செஞ்சிருக்கமாட்டா! ரொம்பதான் தைரியம் ராம்ஜி ஓங்களுக்கு…” என்றாள் சுகந்தா. 

”நீதான் சொல்ற தைரியம்னு, எங்க ஊர்க்காரனுங்க கிராக்குத்தனம்னு சொல்றாங்க! தெரியுமா ஒனக்கு?” 

“அவாளுக்குக் கிராக்குத்தனமாத்தான் தோணும்!”

”ஒரு வழியில அப்படி அவனுங்களுக்குத் தோணினது எனக்கு வசதியாகத்தான் போச்சு!” 

“அப்படியா?” 

“என்னை ஒரு மாதிரி கேஸ்னு ஒதுக்கி வெச்சிட் டானுங்களே! இல்லாட்டா இந்த மாதிரியெல்லாம் இஷ்டத்துக்கு மெட்ராஸ்ல என்னை சுத்தவிட்டிருப் பாலுங்களா? அன்னிக்கே ஒரு அமுக்கு அமுக்கி எவளை யாவது எனக்குக் கட்டி வெச்சிருப்பாங்க. நானும் அவளை ஞாயிற்றுக்கிழமை வைகை மடம் கூட்டிட்டுப் போய் நல்லா புளி யா தரை தின்னுக்கிட்டு இருந் திருப்பேன். அதுல இருந்து தப்பிச்சது எவ்வளவு நல்லதா போச்சு பார்! ஜோரா மெரீனா பீச்! பக்கத்துல என்னை விட அதிகமா படிச்ச ஓர் அழகான பொண்ணு! சாப்பிடறதுக்கு ஃபர்ஸ்ட் க்ளாஸ் சாக்கோ பார்… எவ்வளவு ப்யூட்டிஃபுல்லா இருக்கு இந்த லைஃப்…!” 

“நீங்க இப்படி அவாளயெல்லாம் விட்டுட்டு வந்த துக்கு ஒங்க அப்பா அம்மா ஒண்ணும் சொல்லலையா ராம்ஜி?” 

“இது உருப்படாத கேஸ்னு தலை முழுகிட்டாங்க- வித் ஒரே ஒரு கண்டிஷன்”- இது பொய்! 

“என்னது கண்டிஷன்?” 

“நான் எவளை வேணுமானாலும் எந்த ஜாதியில் பொறந்தவளை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா அப்படி நான் பண்ணிக்கிறது எங்க தமிழரசிக்குக் கல்யாணம் முடிஞ்ச அப்புறம்தான்! இந்த கண்டிஷனை எங்க அம்மாவுக்காகவும் தமிழரசிக்காகவும் தான் ஒத்துக்கிட்டேன்,” 

”அவா சொல்றதும் நியாயம்தானே ராம்ஜி? அதே மாதிரி என்னால எங்க கௌஸி கல்யாணமும் நின்னுப் போயிடக்கூடாது…” 

“கரெக்ட், அதனால் நாம ரெண்டு பேரும் ஓர் அக்ரிமெண்ட் மாதிரி போட்டுக்கலாம்…” 

“ஓயெஸ்…” 

அந்த ஒப்பந்தம் தான் சுசுந்தா-ராம்குமார் இவர் களின் திருமணத்தின் குறுக்காக ஒரு சங்கடமான சுவராக எழுப்பப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கடற்கரையில் குழந்தைகள் கட்டும் விளையாட்டு மண் சுவர் போலத் தான் இந்தச் சுவரும் எழுப்பப்பட்டாலும், நாளடைவில் இதுவே ஓர் இரும்புச் சுவராக இறுகி உயர்ந்துவிட்டது. 


பஸ்ஸிலிருந்து இறங்கி சரோஜினி தெருவில் நடக்கத் தொடங்கிய போதுதான் சுகந்தா பரிசளித்த பைப்பை கடற்கரை மண்ணிலேயே விட்டு விட்டு வந்து விட்டது தெரிந்தது. ஒரு நிமிஷம் என்ன செய்வதென்று தெரியா மல் தெருவிலேயே நின்றேன். எரிச்சலாக வந்தது. உடனே திரும்பிப்போய்த் தேடிப் பார்க்கலாமாவென்ற யோசனை வந்தது. வேகமாக அறைக்குப் போனேன். பக்கத்து அறை மாணவன் ராஜசேகரையும் அழைத்துக்கொண்டு ஸ்கூட்ட ரில் வெறிபிடித்தவன் போல மெரீனா நோக்கிப் பறந் தேன். 

இருட்டில் மணலில் துழாவித் துழாவிப் பார்த்தோம்; பைப் கிடைக்கவில்லை. எங்கேயோ தொலைந்து விட்டது. இது எனக்குப் பெரிய அபசகுனமாகத் தெரிந் தது. சிறு விஷயத்துக்கும் உணர்ச்சிப்பிழம்பாகி விடுகிற நான் உடனே அமைதி இழந்து விட்டேன். 

மறுநாள் ஆபீஸுக்குப் போனதும் சுசுந்தாவுக்கு போன் செய்தேன். 

”என்ன ராம்ஜி?” 

“நீ நேத்திக்குக் குடுத்த பைப்பைக் காணோம் சுகந்தா.” 

“வெளையாடாதேள்!” 

“வெளையாட்டு இல்லை சுகந்தா. நெஜமாத்தான் சொல்றேன் – நல்லா தேடிப் பார்த்துட்டேன். காணவே காணோம்.” 

என் குரலில் இருந்த பதட்டம் அவளுக்குத் தெரிந்து விட்டது. 

“போனாப் போறது. வேறே வாங்கித் தரேன்! ஓகே?” 

சுகந்தா போனை வைத்து விட்டாள். தடாலென்று ரிஸீவரை வைத்தேன். பஸ்ஸரை அழுத்தினேன். 

கண்ணன் வேகமாக வந்தான். 

“கண்ணன், முனுசாமி இல்லே?” 

“இருக்கான் சார்…” 

”அவனை சிகரெட் பாக்கெட் ஒண்ணு வாங்கிட்டு வரச் சொல்லு…அப்புறம் நீ ஒரு வேலை பண்ணணும் கண்ணா…” 

“சொல்லுங்க சார்…” 

“தூத்துக்குடி எக்ஸ்ப்ரஸ்ல எனக்கு ஒரு டிக்கெட் ரிசர்வ் பண்ணணும்…” 

*கொடைக்கானல் ரோடுக்குத்தானே சார்?” 

“யெஸ். பத்தாம் தேதிக்குப் பண்ணிடு…” 

“ஓகே சார்…” 

“வைத்தியலிங்கம் பாங்க் போயிட்டு வந்துட்டாரா?” 

“இன்னும் வரலை சார்…” 

“வந்ததும் எனக்கு ஓர் ஆயிரம் ரூபாய் வேணும். கொண்டாந்து தரச் சொல்…” 

“சொல்றேன் சார்…” 

‘”அவ்வளவு தான்…”

”ஓகே சார்…” 

சிகரெட் பாக்கெட் வந்தது. ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தேன். டெலிபோன் ஒலித்தது. 

“ஹலோ… யாரு?” 

“ஸீலியா பேசறேன் பாஸ்…”

“என்ன விஷயம்?” 

“ரோஸ்மேரி எய்ட்த் அன்னிக்குக் கிளம்பி வருது பாஸ் – அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தான் லெட்டர் வந்தது…” 

“உடனே கிளம்பிட்டாளா? ரைட், வரட்டும்… ஒரே வாரத்ல அவளுக்கு ஒரு ஜாப் பார்த்துடலாம்…” 

“உன்னை ரொம்ப விசாரிச்சு எழுதியிருக்கு பாஸ்.”

“ஏன்… என்னைப் பத்தி அவளுக்கு எழுதியிருந்தியா நீ?”

“நெறய எழுதியிருந்தேன்… இன்னிக்கு வர்றீயா பாஸ் வீட்டுக்கு?” 

“வந்தாலும் வருவேன். நிச்சயமா சொல்ல முடியாது…” 

பைப் காணாமல் போன பதட்டம் முற்றிலும் உணர்வுகளிலிருந்து வடிந்திருந்தது. ரோஸ்மேரி என்ற மற்றொரு இளம் பெண்ணைச் சந்திக்கப் போகிறோம் என்ற உவகை மனத்தில் பரவி இருந்தது. நாற்காலியில் சிகரெட்டைப் புகைத்தபடி சாய்ந்து உட்கார்ந்தேன். 

வைத்தியலிங்கம் வந்து பணிவுடன் ஆயிரம் ரூபாயை நீட்டினார். வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். மயிலாப்பூர் ராசி மாளிகையில் என் தங்கைக்குப் பிறந்த நாள் பரிசாக எண்ணூறு ரூபாயில் அழகான பட்டுப் புடவையைத் தேர்வு செய்து வாங்கிச் கொண்டேன். பிறந்த நாளுக்காக மட்டுமல்லா மல், மாதம் ஒரு முறை நான் என் அம்மாவையும் தங்கை தமிழரசியையும் பார்த்து வரப் பெரியகுளம் போகிற போதெல்லாம் தமிழரசிக்கு அருமையான புடவைகளை வாங்கிப் போவது வழக்கம். 

சுசுந்தாவுடன் எனக்குக் காதலுறவு மலரத் துவங்கிய ஆரம்பு கட்டத்தில் எது வாங்கிப் போகாவிட்டாலும் தங்கைக்குப் புடவைகள் மட்டும் வாங்கிப் போகத் தவறாத என் சுபாவம், சுகந்தாவின் பெண் மனத்தை மிகவும் நெகிழச் செய்து விட்டது. சில சமயங்களில் என் தங்கைக்கு நான் புடவை வாங்கப் போயிருக்கிற வேளை களில் சுகந்தாவும் என்னோடு வந்திருக்கிறாள். புடவை தேர்ந்தெடுக்கும் என் ரசனையே அவளை மிகவும் சந்தோஷப்படுத்தும். 

‘இவ்ளோ ஜோரா புடவை செலக்ட் பண்ண எங்கே கத்துண்டேள்?” 

“இதெல்லாம் கத்துக்கிட்டு வர விஷயமா, சுகந்தா?” 

“எப்படி உங்க கடைசித் தங்கைகிட்ட மட்டும் இவ்வளவு பாசம் வெச்சிருக்கேள் ராம்ஜி?” 

“உன் கிட்டே ஏன் இவ்வளவு பாசம் வெச்சிருக்கேன்?” 

“தெரியலையே…” 

“அதே பதில்தான் நீ என்னைக் கேட்டதுக்கும்…”

“எனக்கு ஒவ்வொரு சமயத்ல்-தோணும்-பேசாம நானும் உங்களுக்குத் தங்கையாவே பொறந்திருக்க லாம்னு…” 

சுகந்தாவின் இந்த நூதன காதல் வெளிப்பாட்டில் உறைந்திருந்த அவளின் வாஞ்சை என் மனத்தை வெகு வாகக் சுனியச் செய்துவிட்டது. ஏனோ அந்த நிமிஷம் என்னைக் கொஞ்சம் வதைத்து விட்டது. 

‘”சுகந்தா, இப்படியெல்லாம் என்கிட்ட நீ அன்பு காட்டறதுக்கு எனக்கு யோக்யதை இல்லையோன்னு சில சமயத்து ஏனோ மனசு வெக்கப்படுது…” 

நான் இப்படிச்சொன்னதும் கண்ணம்மாலின் கண்கள் பரிவு நிலா வெளிச்சம் போல ஜொலித்தது. 

‘”அப்படியெல்லாம் நீங்களா, கற்பனை பண்ணிக்காதேள். சும்மா அது ஓர் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உங்களுக்கு! வேற ஒண்ணுமில்லை…” 

“இல்லை சுசுந்தா. இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் மாதிரி கிடையாது…ஸம் ஸார்ட் ஆஃப் கில்ட்டி காம்ப்ளெக்ஸ் உன் எதிரில் வந்திடுது எனக்கு…” 

“ஏதாவது தப்புப் பண்ணியிருந்தாத்தான் கில்ட்டி காம்ப்ளெக்ஸ் வரும்! நீங்க என்ன பெரிசா தப்பு செஞ்சிருக்கேள்?” 

“செஞ்சிருக்கேன் சுகந்தா…மோசமான தப்பெல்லாம் செஞ்சிருக்கேன் நான்! சொல்லிடட்டுமா அதையெல்லாம்?” 

“சொல்லக் கூடியதா இருந்தா மட்டும் சொல்லுங்கோ!” 

“ஃபர்ஸ்ட் திங்- நான் ஒரு வர்ஜின் பாய் கிடையாது…” 

குப்பென்று சுகந்தாவின் முகம் மாறுதலுற்றது.

“என்னோட சின்ன வயசிலே நான் தப்பு பண்ணி யிருக்கேன். அதுவும் கண்ட கண்ட பொம்பிளைங்க கிட்டேயெல்லாம்…” 

சுகந்தாவின் விரல்கள் என் வாயை இறுக மூடி விட்டன. நான் வலிந்து அவளின் விரல்களை விலக்கி விட்டுத் தொடர்ந்தேன்… 

“…ப்ளீஸ் தடுக்காதே சுகந்தா-கொஞ்சமாவது என் மனசைத் தெறந்து இன்னிக்குப் பேசினாத்தான் மனசு ஆறும் எனக்கு…அந்த அளவுக்கு என் மனசு கெடந்து உள்ளுக்குள்ள கஷ்டப்படுது… இதுவரைக்கும் நான் சந்திச்சிருக்கிற எந்தப் பெண் கிட்டேயுமே எனக்குத் திருப்தி வந்தது கிடையாது. ஏதோ ஒண்ணு எனக்குப் பொம்பளைங்கக் கிட்டே பிடிக்கலை! ஏதோ ஒண்ணு அவளுங்க கிட்ட இல்லை சுசுந்தா! அந்த ஏதோ ஒண்ணு எனக்கு உன்கிட்ட கெடைச்சிருச்சி! அது தெரிஞ்சிதான் உன்கிட்ட நான் பார்த்த நிமிஷத்திலேயே சுருண்டு விழுந்திட்டேன். ஆனா…ஸாரி முழுமையா நான் என்ன நெனைக்றேங்கறதை சொல்ல முடியலை…! 

“எனக்குத் தெரியறது ராம்ஜி நீங்க என்ன நெனைக்கிறேள்னு…” 

“அதான் சுகந்தா, எனக்கு வேண்டியது வர்ஜின் பாடியில்லை. வர்ஜின் மனசு! எந்தக் கறையும் படாத ஓர் அற்புதமான மனசுதான் வேணும் எனக்கு. உனக்கு இருக்கு அந்த மனசு. இந்த மாதிரியான ஒரு மனசைத் தான் நான் நாய் மாதிரி தேடி அலைஞ்சிக்கிட்டு இருந்தேன். ஆனா அப்பேர்பட்ட மனசு கெடைச்ச அப்புறம் இப்பேர்ப்பட்ட மனசு எனக்குக் கிடைக்கறதுக்கு ஏதாவது யோக்யதை இருக்கான்னு நினைச்சு ஒரு கில்ட்டி காம்ப் ளெக்ஸ் வந்திருச்சி எனக்கு…!” 

“அந்த யோக்யதை ஒங்களுக்கு நிச்சயமா இருக்கு ராம்ஜி. சத்தியமா இருக்கு. அவளோ ஈஸியா நான் என் மனசை யாருக்கும் தந்துட மாட்டேன். ‘ஐ’ம் வெரிடஃப்! உங்ககிட்டே மட்டும் தான் எனக்கு ஈகோ கிடையாது! ஸ்டெல்லா மேரீஸ்ல நான் படிச்சிட்டு இருந்தப்ப ஹண்ட்ரட்ஸ் ஆஃப் பாய்ஸ் என் பின்னாடி சுத்தியிருக்கா! லட்டர் போட்டிருக்கா! மண்டி போட்டு அழக்கூடச் செய்திருக்கா! அவாள்ள ஒருத்தர் கூட என்னோட மனசைத் தொட்டதே இல்லை. தெரியுமா? என் மனசைத் தொட்ட முதல் மனுஷர் நீங்க தான் ராம்ஜி! யூ ஆர் மை பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்மேன்…! இந்த உண்மை தெரிஞ்சுக்காம சும்மா மனசைப் போட்டு வதைச்சுக்காதேள்… நீங்க எனக்குக் கெடைச்ச ஜெம்…! அவ்வளவுதான் எனக்கு சொல்லத் தெரியும்…” 

சொல்லத் தெரிந்ததை சுகந்தா சொல்லி முடித்து விட்டாள். தொடர்ந்து எதுவும் சொல்லத் தெரியாமல் நானும் மெளனமாக இருந்து விட்டேன்…ஆனால் விதி மௌனமாக இருந்து விடவில்லை. மாதம் ஒரு முறை நான் என் தங்கைக்குப் புடவைகள் வாங்கிக் கொண்டு போன சம்பவங்களில் கூட அது புகுந்து நீச விளையாட்டு விளையாடி விட்டது! 

அத்தியாயம் – 8

ஒன்பதாம தேதி. மத்யானம் சாப் பாட்டுக்குப் பின் குன்னூரிலிருந்து வந்திருக்கும் ரோஸ்மேரியைப் பார்த்து வரலாமென்று செயின்ட் தாமஸ் மவுண்ட் போய்ச் சேர்ந்தேன். 

தாமரைப் பூக்களால் ஓர் உயிருள்ள சிற்ப வடிவமாகச் சமைத்து லார்த்தெடுத் தது போன்ற மென்மையோடும் திண்மை யோடும்- சற்று வயதுக்கு மீறி வளர்ந்து விட்ட ஆரோக்கியமான குழந்தையின் இனிய சாயலில்-ரோஸ்மேரி. 

மரக் கதவுகளை விலக்கித் தோட்டத்தில் நான் நுழைந்ததுமே -ஹாலில் உட்கார்ந் திருந்த ரோஸ்மேரி வேகமாக எழுந்துவந்தாள். 

”ஐ’ ம் ரோஸ்மேரி…” 

“ராம்குமார்…” 

மிக மிக உண்மையாகச் சொல்வதென்றால் – திடு மென எனக்கு இருபது வயதில் ஒரு புதல்வி கிடைத்து விட்டாற் போலதான் இருந்தது ரோஸ்மேரியைப் பார்த்ததும்! என்ன குழந்தைத்தனமான கண்கள்… எத்தனை ரோஜா வர்ணத்தில் அவளுடைய நகங்கள்… எவ்வளவு அநாயசமான பொன் வண்ணக் கூந்தல்… 

நான் அருகிலிருந்த சோபாவில் உட்கார்ந்தேன். ரோஸி கண்களில் வியப்பும் பயமும் கலந்து தெரிய ஒருவித பக்தி உணர்வுடன் என் எதிரில் நின்று கொண்டிருந்தாள்.

“உட்கார் ரோஸி, ஏன் நிக்கறே ?” என்றேன்.

“பரவால்ல பாஸ்…” 

”நோ நோ. உட்கார்ம்மா. உக்கார்… நானென்ன ஒனக்கு முதலாளியா இல்லே வாத்யாரா? உட்கார்…” 

தயக்கத்துடன் நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்தாள். 

“நலலா சாஞ்சு உட்கார்.” 

சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். 

“நான் நெனைக்கவே இல்லை ரோஸி- நீ இவ்வளவு சின்னக் குழந்தை மாதிரி இருப்பேன்னு.” 

ரோஸ்மேரியின் முகத்தில் சந்தோஷம் வந்தது. கவுன் பட்டனைத் திருகிக் கொண்டே சொன்னாள்: 

“எனக்கு அதான் பாஸ் ஆசை. எப்பவும் சின்னக் கொழந்தையாகவே இருக்கணும்…” 

“ஒன்னைப் பாத்த நிமிஷமே எனக்கு மனசில என்ன தோணுச்சு தெரியுமா ரோஸி ? திடீர்னு கடவுள் இருபது வயசில எனக்கொரு டாட்டரைக் குடுத்துட்டாப் போலத் தான் இருந்துச்சி!” 

ரோஸ்மேரி வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். காலின் பெருவிரலால் தரையைக் கீறிக் கொண்டிருந்தவளைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்தக் கணம் எனக்கு என்னுடைய இளமையும் வாலிபமும் கசப்பாக இருந்தது. என் தலைமுடியெல்லாம் நரைத்து ஒரு வயோதிகனாகத் தளர்ந்துவிட வேண்டும் போலிருந்தது. கைத்தாங்கலாக ரோஸ்மேரி எனக்குக் கனிவுடன் வழியுதவி செய்யவேண்டும் போலிருந்தது. என்றைக்காவது குறைந்த பட்சம் அவளை என் ஸ்வீகார புத்திரியாகவாவது இந்த உலகத்துக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்! 

“டென் டேய்ஸ்ல ஒனக்கு ஒரு ஜாப் வாங்கித் தந்துடறேன், என்ன?” 

“சரி பாஸ்!” 

“ஆனா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வச்சிக்க. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் ஸீலியா சில விஷயங்கள்ல சரியில்லை ! அவளைத் தேடி வர்ற சில பசங்களும் சரியில்லை! அதனால நீ கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும். புரியுதா? ஒருவேளை நீ இங்க இருக்கறத அவ்வளவு சரியில்லேன்னு எனக்கு எப்பவாவது தோணிச்சுன்னா ஒன்னைக் கொண்டு போய் ஏதாவது ஹாஸ்டல்ல சேத்துடுவேன், சரிதானா?” 

“சரி…” 

ரோஸ்மேரி இன்னும் பயபக்தி கலையாமலேயே விரலில் நகத்தைக் கடித்தபடி உட்கார்ந்திருந்தாள். 

“நகத்தைக் கடிக்கக்கூடாது.” 

உடனே நகம் கடிப்பதை நிறுத்திக் கொண்டாள்.

“ரோஸி, என்கிட்ட உள்ள முக்கியமான குணம் என்ன தெரியுமா? என்னைக்குமே என் பேச்சை அப்படியே கேக்கறவங்களைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் !” 

“நீ என்ன சொன்னாலும் நான் கேக்கறேன் பாஸ்” – ரோஸ்மேரி மகிழ்ச்சியுடன் சொன்னாள். 

“வெரிகுட்! குட்கேர்ள்!” விகற்பமே இல்லாமல் கவுனைத் துடையிடுக்கல் செருகிக் கொண்டு உட்கார்ந்தாள். 

“ரோஸி, அப்படியே கொஞ்ச தூரம் வாக்கில் போயிட்டு வருவோமா?” 

”ஓயெஸ்…” 

”சரி, ஆண்ட்டிகிட்ட சொல்லிட்டு வா ஒரு பதினைஞ்ச நிமிஷம் சின்ன வாக் போயிட்டு வருவோம்…” 

“ஒன் மினிட்…” 

நான் சிகரெட் பற்ற வைத்தபடி வெளியில் காத்திருந்தேன். ரோஸ்மேரி ஓடிவந்தாள். நிஜமாகவே என் மகள் ஓடி வருவது போலத்தான் இருந்தது எனக்கு. என்றைக்காவது இவளை அழைத்துப்போய் சுசுந்தாவிடம் அறிமுகம் செய்து வைக்க வேண்டுமென்று நினைத்தேன். எனக்கு மகள் என் சுகந்தாவுக்கும் மகள்தானே! 

உயர்ந்த மரங்கள் வளர்ந்த வீதியில் நடமாட்டம் இல்லை. மரக்கிளைகளில் குயில்களின் குரல்கள் கேட்டன. மரங்களை நிமிர்ந்து பார்த்தேன். உச்சியில் கொக்கு இனத்திலேயே சற்று மாறுபட்ட வக்கா பறவைகள் கும்பல் கும்பலாக அமர்ந்திருந்தன. 

“வெரிகுட், இங்கே இவ்வளவு வக்கா இருக்குதுங்களா? ஊருக்குப் போயிட்டு வந்ததும் ஒரு நாள் என்னோட துப்பாக்கியை எடுத்திட்டு வந்திடவேண்டியது தான். சுட்டுச் சாப்பிட்டா ஏ ஒன்னா இருக்கும்” என்றேன். ரோஸியும் நிமிர்ந்து பார்த்தாள். தன்னுடைய இனத்தைப் பார்த்தாற்போல அவளின் கண் இமைகள் சிறகுகள் போல அடித்துக் கொண்டன… 

“ப்ளீஸ்… வேணாம் பாஸ். பேர்ட்ஸை கொல்லக் கூடாது..” 

“சாப்டறதுக்கு ரொம்ப ஜோரா இருக்கும் ரோஸி!”

“நோ பாஸ். பார்… எவ்ளோ ஹேப்பியா அந்த பேர்ட்ஸ் சுத்திட்டு உக்காந்திருக்கு. ப்ளீஸ்… டோண்ட் கில்…” 

“சரி வா, நடக்கலாம்…” 

சிறிது தூரம் நடந்த பின் ரோஸ்மேரி கேட்டாள்:

“பாஸ், அந்த ஹண்ட்ரட் ரூபீஸ் எப்ப நான் திருப்பித் தரணும்?” 

சட்டென்று ரோஸ்மேரியின் முகத்தைப் பார்த்தேன். அவளின் கண்களில், கடன்பட்ட நெஞ்சம் தெரிந்தது. 

“சீச்சீ! உன்கிட்ட நான் அந்தப் பணத்தைத் திருப்பியா கேட்டேன்?” 

“நீ கேக்காவிட்டாலும் அது உன் பணம் இல்லையா ?” – சிறுமிக்கு உரிய மருட்சியுடனே கேட்டாள். ஒரு நிமிடம் நான் உணர்ச்சி வசப்பட்டேன். ஆதரவுடன் ரோஸ்மேரியின் உச்சிதனை முகர வேண்டும் போலிருந்தது. பாரதியின் கண்ணம்மா பாடல்கள அனைத்தும் என் நெஞ்சில் மோதின. அவளின் தோள்களில் அவளுக் கொரு பாதுகாப்புப் போல என் கைகளை அரவணைத்து நடந்து சென்றேன்… 

என்னுடைய கை சொந்தத்துடன் அவளுடைய தோள்களில் படர்ந்து கொண்டதை உடனடியாக இணக்கத்துடன் ஆனந்தத்துடன் ஏற்றுக் கொண்ட தன்மையில், ஒரு பரிவுமிக்க ஆண் என்ற பாதுகாப்புக்கு ரோஸ்மேரியின் மனம் எத்தனை காலமாகக் காத்திருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. 

“உன் டாடி உயிரோடு இருந்து உனக்குப் பணம் தந்தாக்கா அவருக்கு நீ பணத்தைத் திருப்பியா கொடுப்பே?” 

‘இல்லை…” 

“தட்ஸ் ஆல்…” 

சிறிது தூரத்துக்குப் பேசாமல் நடந்தோம். 

“நல்லா சந்தோஷமாக இரு. ஜாலியா இரு. ஒனக்கு என்ன வேணும்னாலும் என்னைக் கேளு, நான் வாங்கித் தரேன். எங்கே போகணும்னாலும் சொல்லு, கூட்டிட்டுப் போறேன். எங்கே இப்போது போகணும்?” 

“லைட் ஹவுஸ்…?” 

“சரி, வேற…” 

“ம்யூஸியம்…” 

“சரி, அடுத்து?” 

“மூர்மார்க்கெட்… மெரீனா பீச்…மிருகக்கண்காட்சிச் சாலை….” 

“அப்ப ஒண்ணு பண்ணவேண்டியது தான் ரோஸி… நாளைக்கு நான் எங்க ஊருக்குப் போறேன்…” 

“எப்ப வருவ பாஸ்…?” 

“ஒரே வாரத்துல வந்திடுவேன். வந்ததும் ஒரு வாரம் எல்லா இடத்தையும் சுத்திப் பார்த்திடலாம். சுத்திப் பார்த்த அப்புறம் வேலையில் ஜாயின் பண்ணு. ஜாயின் பண்ணிட்டு மூர்மார்கெட் பாக்கப் போறேன், மெரீனா பீச் பார்க்கப் போறேன்னு போய் லீவ் கேட்டா ஒன்னை வீட்டுக்குப் போயிடு தாயின்னு சொல்லிடுவான். தெரியுதா…?” 

ரோஸ்மேரி ‘சரி’ யென்று தலையை ஆட்டினாள்.

”ரைட் வா, திரும்பிப் போகலாம்.” 


நான் ஆபீஸை அடைந்ததும் கண்ணன் சொன்னான்: “சுகந்தா போன் பண்ணினாங்க சார்.” 

“எதுவும் சொன்னாங்களா…” 

“உங்களை போன் பண்ணச் சொன்னாங்க…” 

உடனே சுகந்தாவுக்கு போன் பண்ணினேன். “என்னம்மா. போன் பண்ணியா?” 

“பைப் கெடைச்சுதா, இல்லையா?” 

‘”அது அவ்வளவுதான். எந்தப் பய கையில கெடைச்சுதோ… நமக்கும் பைப்புக்கும் ராசியில்லை…” 

“போனாப் போறது அது… நீங்க நாளைக்கி ஈவினிங் தானே ஊருக்குப் போறேள்?” 

“ஆமா, வாரியா நீயும்?” 

“எப்போ வரணுமோ அப்போதான் வருவேன். சரி, நாளைக்கு சனிக்கிழமை… அரை நாள் தான் ஆபீஸ். மத்யானம் ரெண்டு மணிக்கு வந்துடறேளா?” 

“ஓயெஸ்…” 

“பேசிண்டு இருந்துட்டு அப்படியே நீங்க ஈவினிங் ஊருக்குக் கிளம்பிடலாம்…” 

“அப்ப நாளைக்கு சரியா ரெண்டு மணிக்குப் பார்ப்போம்…” 

“ஓயெஸ்…” 

மறுநாள் சரியாக மதியம் இரண்டு மணிக்கு தம்புச் செட்டித் தெருவின் முனையில் நின்றேன். சுகந்தா அவளுடன் பணிபுரியும் ஜானகியுடன் வந்தாள்… 

“ஹலோ ஜானகி! எப்படி இருக்கீங்க?” – உடனே ஜானகி வெட்கப்பட்டாள். 

“நீங்க எப்படி இருக்கீங்க ராம்குமார்? எப்பத்தான் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?” – வெட்கப்பட்டுக் கொண்டே கேட்டாள். 

“அவளைக் கேளுங்க. அவ சரின்னு சொன்னா இப்பவேகூட தாலி கட்றதுக்கு நான் தயார்…” 

அவ்வளவுதான். ஜானகிக்கு இன்னும் வெட்கம் வந்தது! 

“அப்ப நாள் வரேன் சுகந்தா…” – ஜானகி விடை பெற்றாள். 

“நீயும் வேணா வாயேன் ஜானகி” – சுகந்தா ஜானகியைக் கூப்பிட்டாள். எனக்கு எரிச்சலாக இருந்தது! அறுவை! 

”ஐயையோ! நான் எதுக்கு? நீங்க ரெண்டு பேரும் போங்க…” 

நானும் சுகந்தாவும் டாக்ஸியில் ஏறி உட்கார்த்தோம்.

“ட்ரைவ் இன் போப்பா…” 

டாக்ஸி கிளம்பியதும் சுகந்தாவை ஒரு கிள்ளு கிள்ளினேன். 

“திமிரா ஒனக்கு? அந்த அறுவையைப் போய்க் கூப்பிடறியே!”

“ஸாரி ஸாரி’ சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்குக் கூப்பிட்டேன்! உடனே அதைப் பெரிசா எடுத்துக்காதேள்… தமிழரசிக்குப் புடவை வாங்கிட்டேளா?” 

“நாலு புடவை வாங்கியிருக்கேன்…”

“பணம் காச்சுக் குலுங்கறது போல.. ஜமாய்ங்கோ…!” 

சிகரெட்டுக்காக பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டேன். சிகரெட் பாக்கெட்டை ஆபீஸிலேயே விட்டு விட்டு வந்திருந்தேன். 

”சே! வரவர எனக்கு ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தி யாயிடுச்சி.” 

“எதிலேயும் கொஞ்சம் நிதானமா இருந்தாத்தானே – உடனே அவசரம். படபடப்பு. ஒரே கோவம்…” 

டாக்ஸி சென்ட்ரவைத் தாண்டிக் கொண்டிருந்தது. சில நாள்களுக்கு முன் சுகந்தா என்னுடைய சிகரெட் பாக்கெட்களை எடுத்துக் கொண்டு போயிருந்தாளே – அந்த ஞாபகம் வந்தது. 

”ஒரு சிகரெட் வேணும்.” 

“சிகரெட் இல்லியே சார்!”-பட்டென்று டாக்ஸி டிரைவர் திரும்பிப் பார்த்துச் சொன்னான். நானும் சுகந்தாவும் குதூகலமாகி விட்டோம். 

“சிகரெட் உன்னைக் கேக்கலைப்பா, இந்த அம்மா கிட்ட தான் நான் சிகரெட் கேட்டேன்! பெரிய செயின் ஸ்மோக்கர் இவங்க…” 

சுகந்தா பலமாக என்னைக் கிள்ளினாள். “நீங்க சொல்றதை நெஜம்னு நம்பிடப் போறார்!” 

”நெஜம்தானே! சரி, ஒரு சிகரெட் குடு!” 

தன்னுடைய பேக்கைத் திறந்து சுசுந்தா சிகரெட் பாக்கெட்டை எடுத்தாள். 

“டிரைவர், இங்கே பாரப்பார் பாக்கெட் பாக்கெட்டா வெளியில் வருது…” டிரைவர் எங்களின் அந்நியோன்னியம் தெரிந்து சிரித்துக் கொண்டான். 

”நீ ஆயிரம் சொல்லிக்க சார். ஆனா நான் நம்பமாட்டேன்!” 

“போச்சு. நீ ஏமாந்துட்டே இந்த அம்மா கிட்ட!”

“ஸ்மோக் பண்ற பொம்பளைங்க மூஞ்சி ஒன்னைவிட எனக்கு நல்லா தெரியும் சார்…” 

”போறுமா?”- சுகந்தாவுக்கு ரொம்பவும் குஷி, இறங்கும் போது டாக்ஸிக்கு அவள்தான் பணம் கொடுத்தாள். 

”டிரைவருக்கு லஞ்சமா?” 

ட்ரைவ்-இன்னில் சப்போட்டா மரத்தின் கீழ் அமர்த் தோம்.உட்கார்ந்த நிமிடத்தில் சுகந்தாவின் முகம் மாறியது. எங்களுக்குச் சிறிது தள்ளி தன்னுடைய நண்பர்களுடன் சுகத்தாவின் உறவினர் ஸ்ரீவத்ஸன் உட்கார்ந்திருந்தான். சுகந்தாவின் காதலைப் பெறவும் அவளையே மணந்து கொள்ளவும் முறைப் பையன் என்ற வழியில் அவளை அணுகி அணுகித் தோற்றுப் போளவன் – அந்தக தோல்வியின் புகைச்சல் கண்களில் வழிய எங்களையே பார்த்தான், ‘ஓ இவன் கூட சுத்தறியா?’ என்பது போலச் செருக்காக நோக்கினான். 

இகழ்ச்சியான சிரிப்பை வரலழைத்தபடி சுகந்தாவைக் கேட்டான் : “எங்க இப்படி ?” 

அவரமாக ஒரு புதிய சிகரெட்டைப் பற்ற வைத்தபடி மிகச் செருக்குடன் கேட்டேன் : “நீ இங்கே இப்படி?” 

நான் இப்படிக் கேட்பேன் என்பதை அவனும் அவனுடைய நண்பர்களும் சிறிதும் எதிர்பாராததால் அதிர்ந்து போனார்கள். சில விநாடிகள் கழித்து ஸ்ரீவத்ஸனும் செருக்குடன் சொன்னான், “நான் சுகந்தாவைக் கேட்டேன், உன்னை இல்லே.” 

“இங்கெல்லாம் அவ ஒனக்குப் பதில் சொல்ல மாட்டா!” – கொஞ்சம் உரத்த தொனியில் அவனை எச்சரிப்பது போல் சொன்னேன். சுகந்தா அச்சத்துடன் என்னைத் தொட்டாள். பயப்படாதே என்பது போல, நானும் அவளை லேசாகத் தொட்டேன். 

ஸ்ரீவத்ஸன் அவனுடைய நண்பர்களுக்குச் சொல்வது போல எனக்குச் சொன்னான் : “அவ எனக்கு உறவு!” 

“அதெல்லாம் இங்கே வேணாம். வேற எங்கேயாவது போய் வெச்சுக்க!” – நான் மிரட்டினேன். 

“நீயும் வேற எங்கேயாவது போய் வெச்சிக்க!” – திமிரோடு கொஞ்சம் பயத்தோடு சொன்னான் ஸ்ரீவத்ஸன். 

அடிபட்ட நாகம் போலச் சீறி எழுந்து விட்டேன் : “வேற எங்கேயும் வெச்சிக்க வேண்டாம். இங்கேயே வெச்சிருக்கலாம். வாடா எந்திருச்சி!” 

பலரும் திரும்பிப் பார்த்தார்கள். அந்த இடத்தின் நளினம் சலனம் அடைந்தது. சுகந்தா இரங்கத்தக்க வகையில் தலை குனிந்திருந்தாள். சினத்தைத் தணித்துக் கொண்டு சொன்னேன். “இவளுக்காக வுடறேன் உன்னை… இல்லை கை வேற. கால் வேற கழட்டிடுவேன் கழட்டி… யார் கிட்ட காட்றே உன் வேலையெல்லாம்…” என்றபடி உட்கார்ந்தேன். இடம் நிசப்தமாகியிருந்தது. 

சர்வர் என்னிடம் பயந்து கொண்டே வந்தார்.

“ரெண்டே ரெண்டு பீச்மெல்பா.” 

சர்வர் போனதும் சுகந்தாவிடம் கேட்டேன் : “நீ வேற எதுவும் சாப்பிடறீயாம்மா?” 

”வேணாம் ராம்ஜி” – மெல்லிய குரலில் சொன்னாள்.

“இவனுக்கெல்லாம் போய் ஏன் பயப்படறே?” 

“பயப்படலை.”- சொல்லிச் சிரிக்க முயன்றாள். 

“ஈஸியா இரு. பொட்டைப் பயலுங்க தின்னு முடிச்சிட்டுத்தான் உக்கார்ந்திருக்கானுங்க… இப்ப எழுந்து போயிடுவானுங்க…” 

அதே மாதிரி சுகந்தாவைப் பார்த்துக் கொண்டே மிகவும் ஸ்டைலாக அவர்கள் எழுந்து போனார்கள். 

“இனிமே ஒன்னைக் கோஷா போட்டுத்தான்ம்மா கூட்டிட்டு போகப் போறேன்…” 

சுகந்தா பிரியமுடன் கிள்ளினாள். 

“பப்ளிக் ப்ளேஸ்ல காட்டான் மாதிரி கத்திட்டேன்னு வருத்தமா இருக்காடா கண்ணம்மா?” 

”யெஸ்! ஆனா ரொம்ப ஆம்பிளைத்தனமா நடந்துண்டேள்னு ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கு…” 

“அப்படித்தான் இருக்கணும்.” 

“அப்ப ஜாலியா ஊருக்குப் போறேளாக்கும். நீங்க ஒரு விஷயம் ஊர்ல இருந்து வர்ரச்சே மறந்திடப்படாது. தெரியுதா?”

“ஸாரி, நீ என்ன சொல்றேன்னு புரியலை…”

“மறந்துடுத்தா? ரெண்டு மூணு தடவை நீங்க ஊருக்குப் போறச்செல்லாம் கேட்டனுப்பிச்சேனே…” 

சில நிமிஷங்கள் யோசித்துப் பார்த்தேன். சுசுந்தா என்ன கேட்டாள் என்பதை என்னால் ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியவில்லை… 

“இந்த வயசில் என்னதான் ஞாபக மறதியோ! உங்க தமிழரசி போட்டோ கேட்டேனே…” 

“ஆமா… அவ போட்டோ நீ கேட்டே இல்லே மறந்தே போச்சு…” 

”ஒன் வீக்ல வந்திடுங்கோ ராம்ஜீ…” 

”சொல்ல முடியாது… அதுக்கு முன்னாடியே வந்தாலும் வந்திடுவேன்….” 

”உங்க ஊர்ல ஏதாவது நல்ல கோயில் இருக்கா ராம்ஜி…?” 

“என்ன விஷயம் ?” 

“நம்ம கல்யாணம் சீக்கிரமே நல்லபடியா நடக்கணும்னு அந்தக் கோயில்ல-ப்ளீஸ் வேண்டிக்கணும் நீங்க…” 

“ஸாரி! என்னால கோயிலுக்கெல்லாம் போய் இந்த மாதிரி வேண்டிக்க முடியாதும்மா… எனக்கும் சேத்து நீ வேணா வேண்டிக்க..”. 

“நான் வேண்டிண்டாச்சு…” 

“எந்த சாமிகிட்ட… ?” 

“ஆஞ்சநேயர்!” 

“சரியான சாமியாத்தான் பிடிச்சிருக்க ! என்ன வேண்டிக்கிட்டே?” 

“வர வருஷமே நமக்குக் கல்யாணம் ஆயிட்டா ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் பண்றதா வேண்டிக் கிட்டிருக்கேன்…” 

“ரொம்ப சரி…” 

“திரும்ப ஞாபகப்படுத்தறேன்… இந்த தடவை தமிழரசி படம் மறக்காம கொண்டு வரணும்…” 

“கண்டிப்பா மறக்க மாட்டேன்…” 

ஆனால், அந்தத் தடவையும் நான் என் தங்கை தமிழரசியின் போட்டோவை வாங்கி வர மறந்து விட்டேன். அந்த மறதி எப்பேர்ப்பட்ட விஷ விதையாக சுகந்தாவின் அறிவில் விழுந்து விட்டது! 

அத்தியாயம் – 9

ஒரு வாரத்துக்கு முன்பாகவே வந்து விடுவேனென்று சொல்லி விட்டுப்போய் வழக்கம் போல பத்து நாள்கள் கழித்துத்தான் அந்தத் தடவையும் திரும்பினேன். 

நேராக மாம்பலம் போகாமல் தாம்பரத்தில் இறங்கி மின்சார ரயிலுக்கு மாறிசெயின்ட் தாமஸ் மவுண்ட்டில் குதித்து விட்டேன். 

பிரதான சாலையிலிருந்த பேக்கரியில் இருந்து ஆபீஸ்க்கு ரிங் பண்ணினேன். 

‘”ஹலோ! மிஸ்டர் சங்கரனா?” 

“ஆமா சார்: ஊர்ல இருந்து எப்போ வந்தீங்க?” 

“மார்னிங்தான் வந்தேன். ஆபீஸ்ல என்ன விசேஷம்?” 

சங்கரன் விசேஷங்களைச் சொன்னார். 

“சரி, இன்னிக்கி நான் ஆபீஸ் வரமாட்டேன். யாராவது கேட்டா நான் ஊர்ல இருந்து வரலைன்னு சொல்லிடுங்க!” 

“சரி சார்…” 

போன் பேசிவிட்டு ஸீலியாவின் வீட்டை அடைந்தேன். தோட்டத்தில் நின்று ரோஸ்மேரி பல் துலக்கிக் கொண்டிருந்தாள். பொன் வண்ணக் கூந்தல் நெருப்புக் கற்றை போல் சிதற ரோஸ்மேரி என்னைப் பார்த்ததும் குதியாய்க் குதித்தாள். 

”சின்னக் கண்ணம்மா; எப்படி இருக்கே?” 

“ஃபைன் பாஸ்.” 

”ரோஸி, ஒனக்கு எங்க அம்மா எள்ளு உருண்டை, அதிரசம் எல்லாம் செய்து சீதனம் கொடுத்தனுப்பிச்ச மாதிரி குடுத்து விட்டிருக்காங்க! சாப்பிட்டுப் பார் எல்லாத்தையும்…” 

ரோஸ்மேரி ஓடிப்போய் வாய் கழுவி விட்டு வந்தாள். சிறிதும் சுபடமில்லாமல் என்னை நெருங்கி உட்கார்ந்தாள். 

“ஸீலியா இல்லையா…?” 

“ஆபீஸுக்கு போயிட்டா பாஸ்.” 

ரோஸ்மேரி அதிரசத்தை எடுத்துத் தின்று பார்த்தாள். 

“இன்னிக்கு நீ ஆபீஸ் போசுலையா பாஸ்?” 

“இல்லே. இங்கேயே சாப்பிட்டு விட்டு ரோஸியைக் கூட்டிட்டு இன்னிக்கி ஒரு ரவுண்ட்.” 

“ஹையா…!” 


குளித்து, சாப்பிட்டு முடித்து ரோஸியின் படுக்கையில் வெகு நேரத்துக்கு ஒருவிதத் துயரத்துடன் படுத்திருந்தேன். எனக்குப் பணிபுரியக் காத்திருக்கும் ஒரு தாதி போல, நகம் கடித்தபடி என் பக்கத்திலேயே ரோஸ்மேரி நின்று கொண்டிருந்தாள். உடம்பின் எந்த அவயத்திலும் எலும்புக் கணையே நெருடாத தாமரை மொட்டாகத் தெரிந்த ரோஸ்மேரியை அருகில் உட்கார வைத்துக் கொண்டேன். ஏனோ அந்தக் கணத்தில் சுகந்தாவுடன் எனக்கு இருக்கும் உறவெல்லாம் ஏதோ ஒரு கேவலமான சரசம் போலத் தான் தெரிந்தது. நானும் அவளும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ என்றுகூடச் சந்தேகம் வந்தது! உண்மையில் எனக்கும் சுகந்தாவுக்கும் உள்ள உறவின் அடிப்படை என்னவென்ற குழப்பம் ஏற்பட்டது! நானும் சுகந்தாவும் ஒருவரிடம் ஓர் ஆழமான ஒருவர் ஏதோ வழியற்றுப் போய்ச் சிக்கிச் சிறைப்பட்டுக் கிடக்கிறோமோ என்றுகூடச் சஞ்சலம் தோன்றியது; எனக்கு ஏன் இந்த சுகந்தாவும் அவளுடைய உறவும் என்ற கேள்விகூட எழுந்தது! இதெல்லாம் வாழ்க்கையின் மிகமிசு மேற்பரப்புக் குமிழிகள் என்றுதான் தோன்றியது. கணத்தில் தோன்றி மறைந்துப் போகப் போகும் இந்தக் குமிழிகளுக்குத்தானா இந்த அவஸ்தைகளும் ஆர்பாட்டங் களும்? சட்டெனக் கை தவறி என் சிந்தனை எங்கோ ஆழங்களை நோக்கி விழுந்து விட்டாற் போலிருந்தது. பல நிமிஷங்களுக்கு என் பிரக்ஞை காணாமல் போயிருந்தது! 

“என்ன பாஸ், ஒண்ணுமே பேசாமெ இருக்கே?”- ரோஸ்மேரி தயங்கிக் கொண்டே கேட்டாள். 

நான் பெரியதாக மூச்சுவிட்டபடி சொன்னேன்: ”ஒண்ணுமில்லே ரோஸ்மேரி… ஒரு புது உலகத்ல அஞ்சு நிமிஷம் காலை வெச்சிட்டு வந்த மாதிரி இருக்கு! சரி, நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்க, கிளம்பலாம்…” 

“முதல்ல மூர்மார்க்கெட்தானே பாஸ்?”

“ஆமா…” 

மூர்மார்க்கெட்டில் ரோஸ்மேரி கேட்டதெல்லாம் வாங்கித் தந்தேன். பேட்மிண்ட்டன் செஸ், ஒட்டுப்படம், ஸ்டிக்கர், சிக்லெட், வாட்டர் கலர், பைனாகுலர், கலர் பென்சில், இரண்டு கவுன். இரண்டு ப்ரா.. 

ப்ரா வாங்கும்போது மட்டும் வேண்டாமேயென்று சொல்ல என் மனம் மெலிதாக ஆசைப்பட்டது. ரோஸ்மேரி ஒரு சின்னக் குழந்தை. அவளுக்கு எதற்கு அதெல்லாம் என்று கேட்கலாம் போலத்தான் இருத்தது. ஆசைப்பட்டு வாங்குகிறாள். சரி, வாங்கிக் கொள்ளட்டுமே என்று பேசாமல் இருந்துவிட்டேன். 

கடைசியில் ஒரு பழைய புத்தகக் கடையில் பயாக்ரபி ஆஃப் ஃப்ளரென்ஸ் நைட்டிங்கேல் வாங்கிக் கொண்டாள். அப்போதுதான் என் மனத்தாவரம் அதீதமாகவே சிலிர்த்துக் கொண்டது. மூர்மார்க்கெட்டையே வாங்கி ரோஸ்மேரிக்குச் சமர்ப்பித்துவிட என் உணர்வலைகள் மிகையாகவே ஆடின… 

“நைட்டிங்கேல் ஒனக்குத் தெரியுமா ரோஸி?”

“அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும் பாஸ்.”

“எதனால்?” 

“எனக்கும் ஃப்ளரென்ஸ் நைட்டிங்கேல் மாதிரி புவர் பீப்பிளுக்கு சர்வீஸ் பண்ணணும் பாஸ். நர்ஸிங் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். முடியாம போயிடுச்சி!” 

“இப்ப படி…” 

“இனிமே முடியாது பாஸ்…” 

“நான் உன்னைப் படிக்க வைக்கிறேன் ரோஸி,”

“வேணாம் பாஸ் இப்பவே நான் ஸீலியாவுக்குத் தவுஸன் ருபீஸ் குடுக்கணும்!” 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

“ஆயிரம் ரூபாயா? எதுக்கும்மா?” 

“டாடியோட பணமெல்லாம் செலவழிச்சாச்சு பாஸ். எல்லாம் காலி. மம்மி லண்டனுக்குப் போயிருச்சி. குன்னூர்ல அங்கிள் வீடல மந்த்லி என் சாப்பாட்டுக்கு ஸிக்ஸ் மந்த்ஸா ஸீலிதான் எனக்குப் பணம் அனுப்பிச்சது…” 

‘”சரி, அந்தப் பணத்தையெல்லாம் நீ அவளுக்குத் திருப்பியா கொடுக்கணும்?” 

“ஆமா பாஸ். வேலை கெடைச்சதும் திருப்பிக் குடுத்துடணும்னு ஸீலி கண்டிச்சு சொல்லிருக்கு… 

ஸீலியாவை ஒரு கணம் வெறுப்புடன் நினைத்தேன்.

“தவுஸன் ருபீஸா ரோஸி?” 

“ஆமா பாஸ்…” 

“நாளைக்கே அவ மூஞ்சியில தூக்கி எறியறேன் பார். நீ கவலைப்படாதே…” 

சில கணங்களுக்கு மௌனமாக இருந்து விட்டு ரோஸ்மேரி நன்றியுடன் கேட்டாள், “இதுக்கெல்லாம் உனக்கு நான் என்ன கைம்மாறு செய்றது பாஸ்?” 

“ஒண்ணும் பண்ண வேண்டாம். எனக்கு நீ மகளா இருந்தா போதும்… மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்…” 

“சீக்கிரமா ஒரு ஜாப் வாங்கித் தந்திரு பாஸ்…” 

“ரெண்டே நாள் பொறுத்துக்க, வேலை உன் வீடு தேடி வரும். ஆனா நீ வேலை பார்த்துத்தான் சாப்பிடணும்னு நெனைச்சுக்காதே. சும்மா பொழுது போறதுக்காகப் போ… என்ன?'” 

“சரி பாஸ்…” 


மறுநாள் ஆபீசுக்குப் போனதும் சுகந்தாவுக்குப் போன் செய்தேன். 

“என்னம்மா, டெய்லி போன் பண்ணிக் கேட்டுட்டே இருந்தியாமே…?” 

“மார்னிங் வந்தேளா?” 

”ஆமா. செளக்கியமா?” 

“ஓயெஸ்… நீங்க?” 

“நல்ல சௌக்கியம்…” 

“தமிழரசி ?” 

“அவளுக்கென்ன, ஜம்னு இருக்கா. மேலக்காடு மாடசாமி ஒன்னை ரொம்பக் கேட்டார்!” 

“வேற எங்கேல்லாம் போயிருந்தேள்?” 

“தேக்கடி ஒரு நாள். கொடைக்கானல் ஒருநாள். வேற எங்கேயும் போகலை…” 

“ராம்ஜி, சௌகார்பேட்ல எனக்கொரு ஃப்ரெண்ட் இருக்கா அவளுக்கு உங்களை நன்னா தெரியும்… நேத்திக்கு ஈவினிங் உங்களை மூர்மார்க்கெட்ல ஒரு ஃபாரின் கேர்ள் கூடப் பார்த்தேன்னு சொன்னா! எனக்கு ஒரே ஆச்சரியம். இன்னும் நீங்க ஊர்ல இருந்து வரலைன்னு சொன்னேன். அவளுக்கும் ஒரே ஆச்சரியம்! அந்த ஆள் அசல் உங்களைப் போலவே இருந்தானாம்!” 

“உன் ஃப்ரெண்ட் யாரைப் பார்த்தாளோ! நான் இன்னிக்கு மார்னிங் தான் ஊர்வே இருந்து வரேன்…!” 

“நேத்திக்கு எனக்கே ஒரு மாதிரியாயிடுத்து. நைட் டெல்லாம் சரியாகவே தூங்கலை…” 

“உன்கிட்ட போய் இந்தச் சின்ன விஷயத்ல பொய் சொல்வேனா டார்லிங்?” 

“அப்போ ஈவினிங் பார்க்கலாம் ராம்ஜி…”

“ஓயெஸ்… ” 

என் மார்பில் நிறைய வியர்வை கசிந்திருந்தது! அப்பா, தப்பித்தேன். 

வழக்கம் போல மாலையில் மெரீனாவில் அமர்ந்திருந்தோம். 

“சரி, நான் கேட்டதைக் கொண்டு வந்திருக்கேளா ?”

“என்னது…?” 

சட்டென சுசுந்தாவின் முகத்தில் எரிச்சல் வந்தது. 

“பேசாம எனக்கு எழுந்து போயிடலாம் போல இருக்கு!” என்றாள். 

சுகந்தாவின் இந்தச் சொல் என் அகங்காரத்தை முள் போலத் தைத்தது. 

“ரொம்பத்தான் அலட்டிக்காதே..! எங்க தமிழரசி போட்டோ தானே கேட்டே… ஸாரி, கொண்டு வர மறந்துட்டேன்!” 

சுகந்தா சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். நான் சிகரெட் புகைத்தபடி உட்கார்ந்திருந்தேன். 

“ஓங்க தங்கையோட மேரேஜ் ஒண்ணும் இன்னும் முடிவாகலையா?” – எங்கேயோ பார்த்தபடி கேட்டாள். 

“இல்லை…” 

“ஏன், என்ன ப்ராப்ளம்.?” 

“அடுப்புக்கரி மாதிரி இருக்காளே!  அதான் ப்ராப்ளம். வேற என்ன? உங்க லீட்ல என்ன ஆச்சு – கௌசல்யா கல்யாணம் ஏதாவது தெரியுதா?…” 

“பார்த்திண்டிருக்கா…”. 

வெகு நேரத்துக்கு இருவரும் மௌனமாகவே இருந்தோம். 

“சுகந்தா, நாம ஒரு காரியம் பண்ணலாமா?” 

பதில் சொல்லாமல் என்னைப் பார்த்தாள். 

“ஒங்க கௌசல்யா; எங்க தமிழரசி – ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தா நடக்கட்டும்; இல்லே, நடக்காமலே போகட்டும்! பேசாமே நாம ரெண்டு பேரும் பண்ணிக்க வேண்டியதுதான். என்ன சொல்றே?” 

சுசுந்தா ஒன்றும் சொல்லாமலே இருந்தாள்.

“சொல்லு சுகந்தா. ரிஜிஸ்தர் மேரேஜ் பண்ணிப்போமா?” 

“ஸாரி ராம்ஜி. சட்டுனு என்னால இதுக்குப் பதில் சொல்ல முடியாது. நன்னா யோசிக்க வேண்டிய விஷயம் இது…!” 

“இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு ?”

“எனக்கு இருக்கே!” 

எனக்கு எரிச்சலாக இருந்தது. 

“வாழ்க்கை பூரா யோசிச்சிட்டே இருக்க வேண்டியது தான்!” 

சுகந்தாவின் முகபாவனை நான் சிறிதும் எதிர்பாராமல் சிவந்து இறுகியது: “ஆமா, ஒரு தடவைக்குப் பல தடவை நான் நன்னா யோசிச்சுத்தான் பார்க்கணும் ! நேருக்கு நேரா மூர்மார்க்கெட்ல ஒரு ஃபாரின் கேர்ள் கூடப் போறதைப் பார்த்திட்டே கேக்கறச்சே, வாய் கூசாமே இன்னிக்கித்தான் ஊர்ல இருந்து வந்ததா பொய் பேசறவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதா, வேண்டா மான்னு ஒருத்தி யோசிக்கப்படாதோ ?” 

சவுக்கால் தாக்கியது போலிருந்தது எனக்கு! கையும் களவுமாக அவளிடம் மாட்டிக் கொண்டது அவமானமாக இல்லை, பெரும் கோபமாக இருந்தது. ஆனால் அந்த நிமிஷமே ஜாமீனில் வெளியில் வந்துவிட உதவுவது போல ஒரு தந்திரம் என் அறிவில் பளிச்சென்று மின்னியது! 

“சுகந்தா, நீ ரொம்ப கெட்டிக்காரின்னு நெனைப்பு ஒனக்கு! நேருக்கு நேரா மூர்மார்க்கெட்ல பார்த்திட்டு நீ மட்டும் பார்க்காத மாதிரி போயிடுவே! அந்த மாதிரி போனதும் இல்லாமே பெரிய ட்ராமா வேற ஆக்ட் பண்ணுவே! நாங்க மட்டும் உன்கிட்டே ஆக்ட் பண்ணக் கூடாது, பொய் சொல்லிடக் கூடாது! ஒனக்கு ஒரு சட்டம், எனக்கொரு சட்டம்…!” 

இதை சுகந்தா எதிர்பார்க்கவே இல்லை! அவள் கண்கள் கலங்கிச் சிவந்தன. 

“அழு அழு, நல்லா அழு! நீ ரொம்ப ஆனஸ்ட்டான பொம்பளையா இருந்தா மூர்மார்கெட்ல என்னைப் பார்த்ததுமே ‘ஊர்ல இருந்து எப்ப வந்தீங்க’ன்னு கேட்டிருக்கணும்…” 

“உங்ககூட வேற ஒரு கேர்ள் வரச்சே எப்படி நான் வந்து உங்ககிட்டே பேசறது?” – சுகந்தாவின் குரலில் அழுகை தழும்பியது. 

”எவ என்கூட வந்தா ஒனக்கென்ன. நான் ஒன்னோட ஆள்! ஒன்னோட மேன்! எதுக்கு ஒனக்கு இந்த காம்ப்ளெக்ஸ் எல்லாம்?” 

சுகந்தா உடைந்தே விட்டாள். நான் நீண்ட நேரம் குறுக்கிடவே இல்லை உடைந்து நொறுங்கட்டும் என்ற ஒரு வன்மத்துடன் அவளின் கண்ணீரைப் பார்த்துக் கொண்டே பேசாமல் இருந்தேன். ஓடுகிற பஸ்ஸில் முதல் முதலாகப் பார்த்து வியந்து போனேனே – அந்த நவநாகரிக யுவதி சர்வ சாதாரண பெண் பிள்ளையாக மகிமை இழந்து போய் என் எதிரில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது துயரமாகவும் இருந்தது, சந்தோஷ மாகவும் இருந்தது. இப்படி அவளைக் கண்ணீர் வழிய விட்டதுதான் என்னுடைய மகிமையாகவும் தெரிந்து கொஞ்சம் எனக்குச் செருக்காகவும் இருந்தது. 

நெடுநேரம் கழித்துக் கேட்டேன்: ‘அழுது முடிச்சாச்சா, கண்ணையெல்லாம் தொடச்சு விடட்டுமா?” 

எங்கள் உறவின் காதல்புறம் இயங்கத் தொடங்கியது! 

“எனக்குத் தெரியும்- தொடச்சிக்க!” 

“சரி, நீ எங்கே அந்த நேரத்ல – அதுவும் ஆபீஸ் அவர்ல மூர்மார்க்கெட் பக்கம் வந்தே?” 

“எதுக்கோ வந்தேன்!?” 

“நீ மட்டும் ஒண்டியாத்தான் வந்தீயா, இல்லே யார் கூடேயாது வந்தீயா?” 

“யார் கூடவோ வந்தேன்!” 

“பாய் ஃரெண்டோடயா?” 

“இல்லே, என்னோட பாய் ஃப்ரெண்டைப் பார்க்கறதுக்கு!” 

சுகந்தாவின் காதல் மகிமை பரிமளிக்கத் துவங்கியது!

“அந்தப் பொண்ணு யாரு, பட்டுத் தலையணை மாதிரி இருந்தா?” 

“நெஜமாவே ஓங்கப்பா மேல சத்தியமா, ஒங்கம்மா மேல சத்தியமா – அவ எனக்கு டாட்டர்தான். நானே ஒரு நாள் அழைச்சிட்டு வந்து ஒனக்கு இண்ட்ரட்யூஸ் பண்ணி வைக்கிறேன்…” 

“எனக்கொண்ணும் இண்ட்ரட்யூஸ் பண்ணி வைக்க வேண்டாம்!” 

“பொறாமையா?” 

“சரி, நான் கேட்டது கொண்டு வந்தேளா?”

“என்னது…?” 

“தமிழரசி போட்டோ…” 

‘நறுக்’கென்று என் தலையில் குட்டு வைக்கலாம் போலிருந்தது. குட்டிக் கொண்டேன். 

“சே! மறந்து மறந்து போயிடுதும்மா!” 

“அதெப்படி மறந்து போயிடும்?” 

“மறந்து போச்சே!” 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இன்னைக்கு எனக்கு ஒங்க தங்கையோட போட்டோ வேணும்…” 

”போட்டோதான் வாங்கிட்டு வரலையே – அப்புறம் எப்படி இன்னிக்கே தர முடியும்?” 

“தந்தே ஆகணும்!'” 

“அப்படியா… சரி… போட்டோ ஸ்டுடியோ வச்சிருக்கிறவன் எத்தனையோ பேர் எனக்கு ஃப்ரெண்டா இருக்கான். ஒரு சின்னப் பொண்ணோட போட்டோ ஒண்ணு குடுங்கடான்னு கேட்டா உடனே தரப்போறான்! இம்மீடியட்டா அதை உன்கிட்டே குடுத்து இதான் எங்க தமிழரசின்னு சொன்னா பேசாம நம்பிடப்போறே! இது ஒரு பெரிய கஷ்டமான காரியமா?” 

சுகந்தாவுக்கு உடனே ஒரு பொய்க் கோபம் வந்து விட்டது! 

“இன்னமே உங்ககிட்டே தமிழரசி போட்டோ தாங்கோன்னு நான் சுேக்கப் போறதும் இல்லே, நீங்க காட்டினாலும், நான் பார்க்கப் போறதும் இல்லே…!” 

“ஆளை விடு!” 

இதெல்லாம் வேடிக்கை போலத்தான் நிகழ்ந்தன. ஆனால், இறுதியில் எனக்கும் சுகந்தாவுக்கும் காதல் முறிவு நேரிட்ட பின் தான் தெரிந்தது. ஒவ்வொரு வேடிக்கையுமே ஒவ்வொரு வினையாக சுகந்தாவின் அறிவில் புழுவாக நெளிந்து கொண்டிருந்தது என்று! 

– தொடரும்…

– ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது.

– அது ஒரு நிலாக்காலம் (நாவல்), முதற் பதிப்பு: 2010. கலைஞன் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *