கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீராம் விக்னேஷ்

8 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு முழு நாவல்

 

 பத்திரிகைத்துறையில் எனது பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் திரு.கங்காதரன் போன்ற ஒரு விமர்சகரைப் பார்த்ததேயில்லை. சொல்லப்போனால், எனது பள்ளிக் காலத்திலிருந்து, பல்கலைக்கழக நாட்களிலும், பின் பத்திரிகை நிருபராகப் பணிபுரிந்த வேளையிலும், தொடர்ந்து அவரது விமர்சனங்களை அவ்வப்போ, பல பத்திரிகைகளில் படித்திருக்கின்றேன். ஆனால், தற்போது…. மூன்று ஆண்டுகளாகப், பொறுப்பாசிரியராய் நான் சென்னையிலே பணியாற்றும் “சிறகுப்பேனா” வாரப்பத்திரிகைக்கு அவரிடமிருந்து விமர்சனங்கள் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்தான், அவரைப்பற்றிய விபரங்களை என்னால் அறியமுடிந்தது. கங்காதரனுக்கு வயது எழுபது. மனைவியை இழந்தவர். திருநெல்வேலி


அன்னக் குட்டி

 

 எனக்கு நல்லா நினைவிருக்கு….., இருவத்தஞ்சு வரியமாகுது…. தைப்பொங்கல் கழிஞ்சு மற்றநாள் மாட்டுப்பொங்கல் அண்டைக்குத்தான் எங்கடை அன்னக்குட்டியும் பிறந்தது. “அன்னக்குட்டி…….” ஓமோம்…. நான் அப்படித்தான் கூப்பிடுவேன். அன்னக்குட்டியிலையிருந்து நான் பத்து வயது மூப்பு. என்னோடை கூடப்பிறந்த பொம்பிளைபிள்ளையள் ஒருத்தரும் இல்லையே எண்டதாலையும் , அது என்ரை அம்மம்மா யாழ்ப்பாணத்திலையிருந்து ஆசையாய் வாங்கி அனுப்பிவிட்ட மாட்டின்ரை முதல் பசுக்கண்டு எண்டதாலையும், அன்னலச்சுமி எண்ட அவ பேரை வைச்சோம். என்னைப் பொறுத்தமட்டிலை, அன்னக்குட்டி எங்கடை குடும்பத்திலை ஒருத்தி. என்ரை தங்கச்சி…..! “அன்னக்குட்டி


விசுவாசம்

 

 “நாட்டில நடக்கிற தப்புகளையெல்லாம் என்னால முடிஞ்சவரைக்கும் தடுக்கணும்…. சம்மந்தப்பட்டவங்களைப் புடிச்சு சட்டத்துக்கு முன்னால நிக்கவெச்சுத் தண்டிக்கணும்…. இந்த ஒரே நோக்கத்துக்காகத்தான் நான் இந்தப் போலீஸ் வேலையை விரும்புறேனே தவிர, வேற எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது ஐயா….” பணிவோடு பேசினேன் நான். என் பேச்சுக்குள் பொதிந்து கிடந்த கம்பீரத்தையும், எதிர்காலத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கப் போவதுபோல, அதன்மேல் தெரிந்த களையையும், அன்பழகன் ஐயா உள்ளூர எடைபோடுவதை என்னால் உணர முடிகின்றது. அறுபது வயதைக் கடந்துவிட்டபோதும், இன்னமும் துடியாட்டமாய் செயல்படும்


பேராண்டி…!

 

 பெளர்ணமி நிலவின் ஆக்கிரமிப்பு மீண்டும் ஒரு பகலை உருவாக்கியிருந்தது. பனிக்காலத் தொடக்கத்தின் மெல்லிய வருடலினால், உடம்பை இலேசாக நெளித்துக்கொண்டேன். என்னைத் தோளில் சுமந்தபடி நடந்துகொண்டிருந்த தாத்தாவின் கம்பீரம் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது. தெற்கே இரண்டு மைலுக்கப்பால், ரயில் பாதையில் புகையைக் கக்கிக்கொண்டு குமுறிச் செல்லும் “கூட்ஸ்” வண்டியின் ஒலி தெளிவாகக் கேட்டது. “பேராண்டி…. மணி ரண்டு ஆயிடுச்சுல…. சினிமா முடிஞ்ச உடனே கிளம்பியிருக்கணும்…. ரொட்டிக்கடைக்குப் போனதால லேட்டாயிடிச்சு…. சரி…. சரி…. நல்லா கெட்டியா உக்காந்துக்க…. தூங்கிக் கீங்கி விழுந்துடாதல….


நான் – அம்மா புள்ளை!

 

 அதிகாலை ஐந்துமணி. அறையின் கதவு தட்டப்படும் சத்தம். எரிச்சலாக இருந்தது. சட்டைகூட போடாமல், பெனியனுடன்சென்று கதவைத் திறந்தேன். அங்கே… அறிமுகமில்லாத ஒரு சிறுவன். “யாரப்பாநீ…. காலங்காத்தால வந்து கதவைத்தட்டி உசிரைவாங்குறே… எதுக்கு…? ’’ கொட்டாவி விட்டபடி கேட்டேன். தெருவில் பால்க்காரர்களின் சைக்கிள் ’பெல்’ ஒலி…. இட்லிக்கடையில் ஒலிக்கும் பக்திப்பாடல்….. ஆகியன வைகறையை வரவேற்றன. அந்தச்சிறுவன், என்னை ஏறஇறங்க நோக்கினான். வலக்கரம் நெற்றிக்குச்சென்றது. ‘’சலாம்’’ போட்டான். “வணக்கம்சார்…. எம்பேரு சுப்புறுமணியன்… வயசுபன்னிரண்டு… எல்லாரும்என்னய “சுப்புறு”ண்ணு கூப்பிடுவாங்க… வீடுவீடாய்ப் போயி