கதையாசிரியர் தொகுப்பு: விசாலம் முரளிதரன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

பண்டாரச்சாமி

 

  எங்கூருக்குள்ளாற வந்து ஜமீன் வூடு எங்கன்னு கேட்டாக்க கை சூப்புர பச்சப் புள்ளக் கூடோ வாயிலே இருக்குற கைய எடுத்துபுட்டு சொல்லிபுடும் . எங்கய்யா அம்புட்டு பிரபலம். நாங்க இங்க சொந்தமா மச்சு வூடு கட்டின மொதக் குடும்பம் வூடு கட்டும் போதே பக்கத்துல இருக்குற அரசமரத்த வெட்டச் சொல்லி நம்ம மேஸ்திரி சொல்லி இருக்காரு. ஆனா எங்கையா ‘இல்ல இது புள்ளையாரு மரம். இந்த வூட்டுக்கு வர வேளை அந்த சாமி கண்ண தொறந்து


உற்றத் தோழி

 

  அண்ணா நகரில் ஒரு மல்டி ப்ளெக்ஸ் அபார்ட்மெண்டில் குடியிருப்பு. கணவன் ஒரு பெரிய ஆட்டோமொபில் கம்பெனி சி .இ .ஒ . எனக்கு அண்ணா நகரின் அருகில் உள்ள ஒரு பிரபல cbse பள்ளியில் நல்ல வேலை.ஒரே மகள் அபர்ணா. 10 வயது அபர்ணா . எங்கள் ஒரே மகள். வட்ட முகத்தில் எப்போதும் சிரிப்பு . ஒரு குட்டி பந்து போல் எப்போதும் ஓடி கொண்டே இருக்கும் சுறுசுறுப்பு . எல்லோரிடமும் பிரியம்.யாரவது கஷ்டப்பட்டால்


ரியாலிட்டி செக்

 

  லண்டன் ப்ரோக்ராம் முடித்து விட்டு இப்போது தான் சென்னையைத் தொட்டு இருந்தான் சந்தீப். ஏர்போர்டில் லக்கேஜ் வருவதற்கு காத்திருந்த போது தன்னைச் சுற்றி நின்றவர்கள் பார்வை தன்னை ஒரு முறைக்கு இரு முறை தடவிச் செல்வதை கவனிக்க முடிந்தது. இரண்டு பேர் அவன் கிட்டே வந்து ‘நீங்க ‘பயங்கர தமாஷ்’ ப்ரோக்ராம் பண்ற சந்தீப் தானே? எங்களுக்கு உங்க ப்ரோக்ராம் ரொம்ப பிடிக்கும் ” என்ற போது பெருமிதம் தாங்க வில்லை அவனுக்கு. 6 மாதம்


கண்ணு பட போகுது

 

  ‘நான் ஒரு வாரத்துல திரும்பி வந்துருவேன் கண்ணு. உன்னோட போட்டிக்கு இன்னும் 2 மாசம் இருக்கு. ஏன் இப்படி அலுத்துக்கிற ??’ அப்பாவை அழுகையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள் குமுதா. ‘ நீங்க ஊருக்கு போய்ட்டா என்ன யாரு ப்ராக்டிசுக்கு கூட்டிகிட்டு போவாங்க.? நான் ஒரு வாரம் போகலீனா கோச் கண்டபடி திட்டுவாறு .’ ‘இவ்ளோதானா விஷயம். நான் கூட நீ என்னவோ என்ன பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தான் அழுவுறியோனு நெனைச்சுட்டேன் கண்ணு.’ சிரித்தபடி


குழந்தை

 

  ‘அதென்ன யாரை பார்த்தாலும் குழந்தைன்னு கூப்பிடற பழக்கம் ?’ கற்பகம் கத்திக் கொண்டு இருந்தாள் .’ காதுல மிஷின் மாட்டுங்கோ.ரொம்ப சௌரியமா நான் பேசும் பொதுக் கழட்டி வெச்சா எதுவும் கேட்க வேண்டாம்னு நினைப்பா ? அப்படீல்லாம் ஈசி யா தப்பிக்க முடியாது.?’ விஷயம் இது தான் .நானும் அவளும் கோவிலில் எங்க ஊர் மாமா ஒருவரை பார்த்தோம்.என் அம்மாவிற்கு தூரத்து உறவு.அவளுக்கு அவரை பரிச்சயம் இல்லை.குசல விசாரிப்பு முடிந்து கற்பகத்தை அறிமுகபடுத்தியபின் நான் அவரிடம்